8 மே, 2011

இந்தியாவின் பட்டினியாளர்கள் - எங்கே போகிறது இந்தியா? - பகுதி - ஆறு...

இந்தியாவை வல்லரசாக்க கனவுகான சொன்னவர் முன்னால் ஜனாதிபதி கலாம் அவர்கள். கவனிக்க அவர் கனவு மட்டும்தான் கானச்சொன்னார். காங்கிரஸ் பேரியக்கம் இந்தியாவை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவருகிறது. இன்றைக்கு உலகமே பொருளாதாரத்தில் முன்னோக்கி நடைபோடுகிற அதே வேளையில் இந்திய தேசம் ஊழல் மலிந்து ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கேவலமான அரசியல் விளையாட்டை சந்தித்து விட்டது.

முக்கியமாக மிகுதியான மக்கள் நமக்கென்ன மனைநிலையில் இருப்பதால்தான் இந்த அவலநிலை மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது. நாம் எல்லாம் கிடைத்துவிட்டது என பெருமையாக கோக் சாப்பிட்டுக்கொண்டே IPL match பார்க்கும் அதே அரங்கத்துக்கு வெளியேதான் ஒருவேளை உணவுக்கு பழைய பேப்பரும்,பிளாஸ்டிக்கும் பொறுக்கி வயிறு கழுவும் கூட்டமும் வசிக்கிறது. நம் நாட்டில்தான்  நேர்மையான விசயங்களை செய்யவே காசுகொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பட்டினிக்காலம் இருந்தபோது அதனைப்போக்க M.S. சுவாமிநாதன் தலைமையில் விவாசாயப் புரட்சி தொடங்கப்பட்டு பன்னாட்டு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விளைநிலங்களில் மிகுதியான விளைச்சல் காணப்பட்டு பசி போக்கப்பட்டதாக இன்னும் கதை பேசிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நடந்துகொண்டிருக்கிறது என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட என்டோசல்பான் போன்ற பூச்சிக்கொல்லிகளை மிகத்தாரளமாக இந்தியாவில் விற்பனை செய்துகொண்டு இருக்கின்றன. இந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்டவர்களை இந்தியர்களைக் கொண்ட படையணிகளை வைத்தே விரட்டினான் வெள்ளைக்காரன். அப்படிப்பட்ட தூய இனம்தான் நம் இந்திய இனம். இப்போதும் சுவாமிநாதன் போன்ற காசுக்கு சோரம்போன ஆட்களால் இந்தியாவின் விவசாய வளம் அழிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கிடங்குகளில் வீணாகும் உணவுபொருட்களை இலவசமாக கொடுக்க முடியாது என்றார் நமது பொருளாதார மேதையான தலைப்பாகட்டு. இதே ஆசாமிதான் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிடமுடியாது என்றும் சொன்னார். இன்னொரு விசயமும் சொன்னார் அதாவது பத்திரிகைகள் சொல்லும் அளவு நான் தவறு செய்யவில்லை என்று. இதெயல்லாம் கேட்டுவிட்டு காங்கிரசுக்கு ஒட்டு கேட்கும் அவலமும் கேட்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும் இந்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம், தமிழக அரசின் ஒரு ரூபாய் அரிசித்திட்டம் போன்றவற்றை நாம் பாராட்டியே ஆகவேண்டும். இதில் ஒரு ரூபாய் அரிசிக்காகத்தான் டாஸ்மாக் கடைகளை திறந்திருக்கிறோம் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். நூறு ரூபாய் கொடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கிக் குடிப்பவன் அந்தப்பணத்தில் நான்கு கிலோ உயர் ரக அரிசி வாங்கி சாப்பிட முடியும் என்பது புள்ளிவிவரப் புலியான அவரின் மண்டைக்கு உரைக்காததன் மர்மத்தை மதுச்சாலை அதிபர்களே அறிவார்கள்.

அமெரிக்காவின் டியூபான்ட் நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட நெல்விதைகளை இந்தியாவில் விற்பனை செய்ய முயன்று வருகிறது. பெங்களூரு வேளாண் பல்கலைகழகத்துடன் இணைந்து ஏற்கனவே தன் பணிகளை துவங்கிவிட்ட அது மெல்ல மொத்த பாரம்பரிய விதைகளையும் முடக்கிவிடும் அபாயம் இருக்கிறது. இதற்காக இந்திய அரசால் மரபணு பொறியியல் ஏற்புக் குழு துவங்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவான நிலையை கொண்டுவர முயல்கிறது. இப்போதைக்கு கர்நாடக விவசாயிகள் இதனை எதிர்த்தாலும் மானியம், இலவசம் என எதையாவது கொடுத்து சரிகட்ட முயல்வார்கள்.

இந்த தேசத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்குமேல் ஊட்டச்சத்து குறைவாகவும், முப்பது கோடிக்கும் அதிகமான மக்கள் மூன்று வேலை உணவு கிடைக்காமல் அவதியுறுகின்றனர். பொதுவிநியோக சங்கிலி முறையாக கவனிக்கப்படாமல் பாதிக்கும் மேலான உணவுப் பொருட்கள் கள்ள சந்தைக்கு மாற்றப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களிலும், கிராமங்களிலும் இப்படி பொது விநியோக பொருட்கள் குறிப்பாக அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை நேரிடையாகவே உணவகங்களிலும், இட்லி, தோசை மாவு விற்கும் கடைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

நடுத்தர மற்றும் நடைபாதை உணவுக்கடைகள் அத்தனையும் சுகாதாரம் ஒரு சதவீதம் கூட கடைபிடிக்காமல் நடத்தப்படுகின்றன. சுகாதார குறைபாடுகள் பற்றிய வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்றே தெரியவில்லை. இந்தியா போன்ற இயற்கை வளம் மிகுந்த நாட்டில்தான் இன்னமும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, உடை,இருப்பிடம் என இந்த மூன்றில் முதலாவதில் மட்டும் கூட இன்னும் தன்னிறைவு அடையாத தேசமாகத்தான் இந்தியா இருக்கிறது.

சாலை ஓரங்களில் இந்தியா முழுமைக்குமே குறைந்தது 200 பேராவது தினசரி பட்டினியால் அனாதையாக செத்துப்போகிறார்கள். அடிப்படையாக இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட குடியிருப்புகளாக மாற்றும் திட்டங்களை ஏற்பாடு செய்யும் ஆட்சியாளர்களை வைத்திருந்தால் தண்ணீருக்காக தவிக்கும் நிலை கூடிய விரைவில் பெரிய அளவில் வரக்கூடும் அபாயம் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி நாம் இன்னமும் சுகாதாரத்தில் பின்தங்கித்தான் இருக்கிறோம்.

மேலும் நாம் பயன்படுத்தும் மருந்துகள் அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்துகளில் பெரும்பாலானவை தரமில்லாதவை. கடைகளில் கிடைக்கும் செட் மாத்திரைகள் இந்தவகையை சேர்ந்தவைதான். அடிப்படை உணவுமுதல் ஆடம்பர உணவு வரை இன்றைக்கு கலப்படமில்லாத பொருள்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. நாமும் வேறு வழியின்றி அதற்கு பழகிவிட்டோம். ஆனால் எதிர்கால நமது வாரிசுகள் அதனை அனுபவிக்கும்போது இந்த தேசமே செத்துப்போகும் அபாயம் வெகுதூரத்தில் இல்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

India State Hunger Index

Global Hunger Index

INTERNATIONAL FOOD POLICY RESEARCH INSTITUTE


10 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

அண்ணே அச்சு அசல் நம் இந்தியாவின் நிலைமையை தங்களின் கட்டுரை வெளிப்படுத்துகிறது.

சசிகுமார் சொன்னது…

//நூறு ரூபாய் கொடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கிக் குடிப்பவன் அந்தப்பணத்தில் நான்கு கிலோ உயர் ரக அரிசி வாங்கி சாப்பிட முடியும் என்பது புள்ளிவிவரப் புலியான அவரின் மண்டைக்கு உரைக்காததன் மர்மத்தை மதுச்சாலை அதிபர்களே அறிவார்கள்.//

சும்மா நச்சுன்னு இருக்கு.

சசிகுமார் சொன்னது…

//அதாவது பத்திரிகைகள் சொல்லும் அளவு நான் தவறு செய்யவில்லை//

ஹா ஹா ஹா

சசிகுமார் சொன்னது…

//ஒரு ரூபாய் அரிசிக்காகத்தான் டாஸ்மாக் கடைகளை திறந்திருக்கிறோம்//

அப்போ ஜெயலலிதா இந்த திட்டத்தை கொண்டு வந்தபோது ஆ ஊ ன்னு கத்தினாரே, ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடி விடுவோம்னு சொன்னாரே அதெல்லாம் நாடகம் தானா?

raja சொன்னது…

நீங்கள் சமூக பொறுப்போடு எழுத..நாங்கள் படிக்க...வறிய மக்கள் பட்டினியால் மடிந்து சாக... அந்த நாதாறிகள் செழித்துக்கொண்டேயிருக்க... நாட்கள் போய்கொண்டேயிருக்கிறது...

a சொன்னது…

//
நடுத்தர மற்றும் நடைபாதை உணவுக்கடைகள் அத்தனையும் சுகாதாரம் ஒரு சதவீதம் கூட கடைபிடிக்காமல் நடத்தப்படுகின்றன. சுகாதார குறைபாடுகள் பற்றிய வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா
//
”மாநகராட்சி ஆட்கள் திடீர் சோதனை செய்து பறிமுதல் செய்ததாக ”பேப்பரில் போட்டோ வருமே.... அவ்ளோதான் ரீயாக்‌ஷன்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//ஆனால் எதிர்கால நமது வாரிசுகள் அதனை அனுபவிக்கும்போது இந்த தேசமே செத்துப்போகும் அபாயம் வெகுதூரத்தில் இல்லை.//

மிகவும் வேதனை தரும் வரிகள்.

hariharan சொன்னது…

//இந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்டவர்களை இந்தியர்களைக் கொண்ட படையணிகளை வைத்தே விரட்டினான் வெள்ளைக்காரன். அப்படிப்பட்ட தூய இனம்தான் நம் இந்திய இனம்.//

நன்றாகச் சொன்னீர்கள்..

Sankar Gurusamy சொன்னது…

அருமையான அலசல். யாருக்கு வந்த விருந்தோ என்று இருக்கும் அரசியல்வாதிகளும், பொதுஜனமும் இருக்கும் வரை இதற்கு ஒரு விடிவுகாலம் இருக்கப்போவதில்லை. எல்லாம் விதி.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

Rathinam Padmanaban சொன்னது…

"சுவாமிநாதன் போன்ற காசுக்கு சோரம்போன ஆட்களால் இந்தியாவின் விவசாய வளம் அழிக்கப்பட்டு வருகிறது"

உண்மையை நேரடியாக உரக்க சொல்லிருக்கேங்க. எதற்க்கெடுத்தாலும் சாமிநாதனிடம் கருத்து கேப்பதை அரசு நிறுத்த வேண்டும். அவருடைய சமுக தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து வரும் நிதி உதவியை நிறுத்த வேண்டும். அவர் மேலை நாட்டு நிறுவனத்தின் பங்காளி ஆகி ரொம்ப வருடங்கள் அகிவேட்டது.