9 மே, 2011

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்...

ஒருகாலத்தில் போர் என்றால் கத்தி, வாள், ஈட்டி, வில் முதலிய ஆயுதங்களோடும் ரத,கஜ,துர,பதாதிகள் எனப்படும் நால்வகைப்படைகளோடும் நடைபெறும் என்று படித்திருக்கிறோம். காலம் நவீனமாக, நவீனமாக துப்பாக்கிகளும், பீரங்கிகளும் போர்க்களத்தினை ஆக்கிரமித்தன. பிறகு அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் வந்தன. இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பயோகெமிக்கல் வார் என்கிற சொற்பதமும் புதிதாகச் சேர்ந்துகொண்டது. ஆனால் இப்போது நடைபெறும், இனி வருங்காலங்களில் நடைபெறப்போகும் போர் என்பது பொருளாதாரப்போர்! நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதார ஆக்கிரமிப்பாகவும், பொருளாதாரத்தடைகளாகவும் நடைபெறும் இந்தப்போரில் ஆதிக்கம் செலுத்தும் நாடுதான் உலக வல்லரசுச் சக்தியாக இருக்க முடியும். அது என்ன பொருளாதாரப்போர்?!

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல்,அந்நிய மூலதனம் என்ற கூச்சல் நம் செவிப்பறையை கிழித்துகொண்டிருக்கும் நேரம் இது. அந்நிய மூலதனமும், பன்னாட்டு நிறுவனங்களும்,சிறப்பு பொருளாதார மண்டலங்களும் சொர்க்கத்தை பாரத கண்டத்திற்கு இறக்குமதி செய்துவிடும் என்று நம்மை நம்பவைக்க ஊடகங்கள் ஒற்றைக்காலில் தவமியற்றிகொண்டிருக்கின்றன.

புத்தகத்தை பிரித்து முதல் பக்கத்தில் பதிப்புரையை வாசித்தால் அதன் முதல் பாராதான் மேலே இருப்பது. என் சோசலிஸ்ட் நண்பன் சொன்னான், நம்முடைய உண்மையான எதிரி அமெரிக்காவும், ஐரோப்பாவும்தான் அவர்கள் எப்போதுமே அவர்களின் சோதனைச்சாலை எலிகளாகத்தான் நம்மை நினைத்து உபயோகித்து வருகிறார்கள் என. அதுதான் அப்பட்டமான உண்மையும் கூட என நம்மிடம் சொல்லும் ஒரு அமெரிக்க அதிகாரியின் வாக்குமூலம்தான் இந்தப் புத்தகம்.

அமெரிக்க பெரியண்ணனை பொறுத்தவரை தன் செல்வாக்கினை உலகெங்கும் நிலைநிறுத்த என்னவேண்டுமானாலும் செய்யத்துணிந்த ஆள். அதற்காக செலவழிக்கும் தொகையை உலக மக்களின் வறுமையை இல்லாதொழித்துவிட முடியும். ஆனால் உலகின் ஒப்பற்ற தலைவனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அமெரிக்கா மூன்றாம், நான்காம் உலக நாடுகளை தனது பொருளாதார மாயவலையால் சிக்கவைத்து அடிமைப்படுத்தி விடுகிறது.

ஜான் பெர்கின்ஸ் என்கிற அமெரிக்க அதிகாரியினால் எழுதப்பட்டு இரா.முருகவேள் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்கிற நூலை படித்து முடித்தும் நம் இந்திய தேசமும் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறிவிட்ட அவலத்தை உணர முடிகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் 2005 நவம்பர் 12 ஆம் தேதி கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தம் மட்டும்தான் நமக்குத்தெரியும். அதே நாளில் இன்னொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது அது இந்திய அமெரிக்க வேளான்மைக்கல்வி, ஆரய்ச்சி, சேவை மற்றும் வணிகம் பற்றிய ஒரு ஒப்பந்தம்தான் அது. கிட்டத்தட்ட நமது மரபுசார்ந்த விதைகளை அழித்துவிட்டு மரபணு மாற்ற விதைகளை விற்பதற்கு வழிகோலும் ஒப்பந்தம் அது. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மட்டும் வாய்கிழிய பேசிய நம் இரண்டாவது ஒப்பந்தத்தை பற்றி பேசாமல் விட்டதன் பலனை அனுபவிக்கத்தான் போகிறோம்.

இனி கொஞ்சம் ஜான் பெர்கின்ஸ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
1963 ல் பிறந்த ஜான் பெர்கின்ஸ் படிப்பை முடித்தபின் மெய்ன் என்ற அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். ஆரம்பத்தில் தன் வேலைகளைப்பற்றி அதிகம் அறியாத அவர் போகப்போக தான் ஏற்றுக்கொண்ட பணியினை திறம்பட செய்யப்போக தான் ஒரு பொருளாதார அடியாளாக பணியாற்றுவதை உணர்கிறார். இவரின் மற்றும் இவர் அடங்கிய குழுவின் வேலையே எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள வளங்களை ஆராய்ந்து மெல்ல அந்நாட்டின் அரசியல்வாதிகளை, அதிகாரிகளை வளைத்து அவர்கள் உதவியுடன் முதலில் அந்நாட்டின் பொருளாதார, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது. இந்த உள்கட்டமைப்பு வசதிகள் என்பதே மின்சாரம், சாலைகள், துறைமுகம் சார்ந்தவையாக மட்டுமே இருக்கும். இதற்க்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்னவெனில் பின்னாளில் அமெரிக்காவின் நிறுவனங்கள் உள்நுழையும்போது அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முன்பே ஏற்ப்படுத்தி வைக்கத்தான்.

இப்படி ஆரம்பத்தில் செய்யப்படும் அனைத்து கட்டமைப்புக்களுமே உலகவங்கியால் சொற்ப வட்டியில் கடன் வழங்கப்படும். மக்களும் ஆகா முட்டாப் பசங்க இவ்வளவு குறைவான வட்டில தருகிறானே என அவனின் உள்நோக்கம் புரியாமல் ஏற்றுக்கொள்வார்கள். இந்த இடத்தில் இப்போது ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன் நமது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கொடுக்கும் கடனுக்கு வட்டி எவ்வளவு தெரியுமா? 0.01%. அதன்படி திட்டங்கள் செயலான பிறகு தங்கள் நிறுவனங்களை உள்ளே கொண்டுவரும் அமெரிக்கா. அடுத்தடுத்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வலைவிரித்து அப்போதைய மந்திரிமார்களை சரிகட்டி கடன் வாங்கவைக்கும் இந்தக் கடன்களுக்கான வடி கணிசமாக உயர்த்தப்பட்டு அதிகப்படியான கடன்களை வழங்கி மீளாக் கடனில் சிக்கவைத்து விடும்.

இப்படி ஆரம்பித்த இந்தோனேசிய அரசாங்கம் இன்றைய தேதிவரைக்குமே தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. இந்த அமெரிக்கர்களின் புத்திசாலிதனத்தை நாம் இங்கேதான் புரிந்துகொள்ள வேண்டும். தான் உள்ளே நுழைய மந்திரிமார்களுக்கு கொடுக்கும் லஞ்சப்பணத்தை சுவிஸ் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் போட்டுவிடும். பொதுவாகவே சுவிஸ் வங்கிகளில் நாம் வைத்திருக்கும் கள்ள கணக்குகளுக்கு நாம்தான் சேவைத் தொகை செலுத்த வேண்டும். ஆனால் அந்தப் பணத்தை அந்த வங்கிகள் வெளியில் வட்டிக்கு விட்டு சம்பாதித்துகொள்ளும். ஒரு முறை ஐரோப்பியர் ஒருவர் சொன்னார் "பணக்கார இந்தியா ஏழை ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் தருகிறது" என. அதாவது சுவிஸ் வங்கிகளிடமிருந்து கடனாக வாங்குவதே ஐரோப்பாவும், அமெரிக்காவும்தான்.

நமது இந்திய அரசியல்வாதிகளின் பணம் கிட்டத்தட்ட 72 லட்சம் கோடிகள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டு இருப்பதாக வந்திருக்கும் தகவல்களை இப்போது யோசித்துப்பாருங்கள். நம்மை எந்த அளவுக்கு இந்த அரசியல்வாதி பன்னாடைகள் அடகு வைத்திருக்கிறார்கள் என்பதை. இப்போது சில மாநிலங்களில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறையை நீக்க நிச்சயம் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனகள் உள்ளே நுழையப்போகின்றன. அதற்க்கான முன் ஏற்ப்பாடுகளைதான் இப்போதைய ஆளும் வர்க்கத்தினர் தன்னிறைவு திட்டங்களை தாமதமாக செயல்படுத்துகின்றனர். நம்மை அணுசக்தி மின்சாரத்தை எற்றுக்கொள்ளவைக்கும் சதியாகத்தான் இந்தப் புத்தகத்தை படித்தபின் நான் இதையும் பார்க்கிறேன்.

இந்தப் புத்தக ஆசிரியர் இந்தோனேசியாவின் கிராமங்களில் சுற்றியபோது அங்கிருக்கும் கம்யூனிஸ்டுகள் அப்போதே அமெரிக்காவுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். அவர்களுக்குப் புரிந்து இருந்தது. ஆனால் அவர்களின் புரிதல் வேறுவிதமாக இருந்தது என்கிறார். அதாவது அது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியரை அழிக்கப்போகிறார்கள் என்பதாகவே பரப்புரை செய்யப்பட்டு இருந்தது. இந்தோனேசியா முதலான அரபு இஸ்லாமிய நாடுகளை கபளீகரம் செய்வதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது என அவர்கள் கருதினார்கள் எனக்குறிப்பிடுகிறார். உண்மையில் அமெரிக்காவின் நோக்கமே வேறாக இருந்திருக்கிறது அது தன் பொருளாதார, ராணுவ, நிறுவனங்களின் வளர்ச்சியை அந்த நாடுகளில் நிலைநிறுத்துவதையே அது விரும்பியது.

இந்தோனேசியாவை விடவும் சவூதி அரேபியாவில்தான் அமெரிக்கா தன் இருப்பை வெற்றிகரமாக நிலைநாட்டியது. அங்கிருக்கும் அரச குடும்பங்களை எண்ணையிலிருந்து கிடைத்த பல்லாயிரம் கோடி டாலர்களையும் அமெரிக்க முதலீடு செய்யவும் அதில் கிடைக்கும் வட்டியைக்கொண்டு நீர் விநியோக முறைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், பெரு நகரங்கள், விமான தளங்கள் ஆகியவற்றை அமைக்க அமெரிக்க நிறுவனங்களையே அமர்த்தியது.    

இவர்கள் தோல்வியடைந்த திட்டங்களும் இருக்கவே செய்கிறது, பனாமா மற்றும் ஈரானிடம் இவர்கள் பருப்பு வேகவில்லை. ஈராக்கை தந்திரமாக குவைத்தை பயன்படுத்தி வெற்றி கண்டாலும் அதற்காக அமெரிக்கா கொடுத்த விலை அதிகமே. இப்போது ஆப்கனில் தன் இருப்பை நிலைநாட்டும் அமெரிக்காவின் முக்கிய இலக்கே எண்ணெய் வளம்தான்.

இந்தியாவில் அடிமைகள் சல்லிசாக கிடைப்பதால் அமெரிக்காவுக்கு பிரச்சினையில்லை. இந்தியா தனக்கு எதிர்ப்பாக இருந்தவரைக்கும் பாகிஸ்தானை ஆதரித்த அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து இந்தியாவிற்குள் தன் காலடியை எடுத்துவைத்தது. ஆரம்பத்தில் தனக்கு சாதகமாக இருந்த பி.ஜெ.பி.யை விடவும் சோனியா சிறந்த தேர்வாக தெரிந்ததும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அதன் இருப்பை தீர்மானித்தது. சிதம்பரம் போன்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் செயிக்க வைக்கப்பட்டதற்க்கு இருக்கும் அசாத்தியமான வலைப்பின்னலை அறியாமல் கைமாறிய கோடிகளைப் பற்றிய கதைகளை ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்தே கைமாறிய பெருமையாக பேசிக்கொள்கிறோம். இன்றைக்கு இந்தியாவுக்கே முன் மாதிரியாக தமிழகத்தில்தான் ஓட்டுக்கு பணம் தருகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த ஒரு பொருளைப் பற்றியே பேசமுடியாத நமக்கு ஐந்து வருடங்கள் கேவலம் நூறுக்கும், ஐநூறுக்கும் விலைபோகிறோம்.

ஒரு கேவலமான செயலை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தின் அடுத்த ஆட்சிக்காக காத்திருக்கும் கருணாநிதி சாகும்வரைக்கும் ஆட்சியில் இருந்து மிச்சமிருக்கும் ஈழத்தமிழனை காவு கொடுக்கவும், இந்தியத் தமிழனை குடிகாரனாக்கவும் முயன்றுவருகிறார். இதற்க்கு போட்டியாக வரும் மிடாஸ் ஆத்தா என்னென்ன செய்ய காத்திருக்கோ.

இப்படியாக உலக தாதாக்களிடமும், உள்ளூர் தாதாக்களிடமும் அடிமையாக கிடக்கும் நாம் ஒருபோதும் சுதந்திரமாக வாழ வாய்ப்பே இல்லை என்பதை இந்தப்புத்தகம் முழுமையாக நமக்கு உணர்த்துகிறது. சமூக அக்கறை உள்ள ஒவொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.


ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ் தமிழில்: இரா.முருகவேள்
வெளியீடு: விடியல்  பதிப்பகம் , கோவை
விலை:ரூ.150 /-
மின்னஞ்சல்: sivavitiyal@yahoo.co.in

13 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

இப்பத்தான் இந்த புத்தகம் படிக்க முடிந்ததா? ஆச்சரியமாய் சற்று விரிவாக எழுதியுள்ளீர்கள்.

கருணாநிதி சாகும்வரைக்கும் ஆட்சியில் இருந்து மிச்சமிருக்கும் ஈழத்தமிழனை காவு கொடுக்கவும்

அடுத்து விருச்சி மூலம் உங்கள் பெயரை போட்டு ஒரு பதிவு வரும் போல?

அஞ்சா சிங்கம் சொன்னது…

அடுத்து விருச்சி மூலம் உங்கள் பெயரை போட்டு ஒரு பதிவு வரும் போல?.........//////////////////
/////////////
கண்டிப்பாக வரும் ஆவலுடன் எதிர்பார்கிறேன் .............

சசிகுமார் சொன்னது…

// "பணக்கார இந்தியா ஏழை ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் தருகிறது"//

மிகச்சரியான வரிகள் அண்ணா, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாம் அடிமைகளாகவே ஆக்கப்படுவோம்.

விடுதலை சொன்னது…

அந்த புத்தகத்தை ஒட்டி வந்த மிக முக்கிய புத்தகம் இது

அமெரிக்கப் பேரரசின்

ரகசிய வரலாறு,

ஜான் பெர்க்கின்ஸ்

தமிழில்: அசோகன் முத்துசாமி,

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-18.

பக்கங்கள் 400, விலை ரூ.150/

விடுதலை சொன்னது…

“உறுத்தும் நிஜங்களோடு நெஞ்சை உலுக்கும் புத்தகம் ஒன்றை நீங்கள் படிக்க வேண்டுமா?

http://rootsredindia.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

சிசு சொன்னது…

அமெரிக்க ஒப்பந்தம், நல்லுறவு, கடன் போன்றவற்றை வெறும் மேலோட்டமாக மட்டுமே நான் பார்த்திருக்கிறேன் என்பதை உணர்த்துகிறது கட்டுரை.... இவ்ளோ உள்ளடி வேலைகள் நடக்குதா? என என்னை(யும்) சிந்திக்கத் தூண்டியிருக்கிற நல்ல பதிவு...

நன்றி செந்தில்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இவ்வளோ உள்ளடி வேலைகள் நடக்குதா? என சிந்திக்கத் தூண்டியிருக்கிற நல்ல பதிவு...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

இந்த புத்தகம் குறித்து பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.உங்கள் பகிர்வு அவசியம் வாசிக்கச் சொல்கிறது.

கருணாவோ மிடாசோ, மக்கள் விழிப்புணர்வு அடையாத வரைக்கும் பொருளாதார அடியாள்களின் கரங்கள் நீண்டு கொண்டே தான் செல்லும் ...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

அண்ணா!

ட்விட்டரில் உங்களை பின்தொடர்கிறேன். எனது ஐடி www.twitter.com/AMuthuPrakash

Indian சொன்னது…

//நமது இந்திய அரசியல்வாதிகளின் பணம் கிட்டத்தட்ட 72 லட்சம் கோடிகள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டு இருப்பதாக வந்திருக்கும் தகவல்களை இப்போது யோசித்துப்பாருங்கள். //

Black money: Legitimise it by paying 15% tax, park it in India

There's some delightful news for those with Swiss bank accounts. Indians , who opted for such numbered account service, have a way to mislead anyone trying to hunt them down. For them, a new window in the tax law has flung open just when some of the doors are about to shut. The law of the land has made it possible for them to bring back the money , legitimise it by paying 15% tax, and park it in any account with a bank in India. No questions will be asked. The taxman won't harass them because it's money on which tax has been paid.

Officials at the enforcement directorate can't slap a summon because it's authorised transfer of funds from an overseas firm to a company in India through official banking channels. There are certain expenses involved as lawyers and accountants have to be hired to make the money transfer look genuine. You can't really ask your Swiss banker to send the money straightaway to your savings account with the State Bank's Santacruz branch. The man may think you have finally lost it.

There are other foolproof ways of going about with such business. A new company has to be set up in one of the tax havens, money has to be moved out from the secret numbered account to the account of the newly-formed company with another bank and then pay the amount as dividend to an Indian company. Ask your chartered accountant; he knows all about it, and even if he doesn't , he will give you the telephone number of a professional who does. Such a professional will guide you through the maze of foreign exchange and tax rules to help you bring back the money that is rightfully or wrongfully yours.

Take one step at a time: Step 1: Set up a company in Dubai. It's easier than setting up one in India : Apply for a name with Dubai authorities and submit a simple memorandum . It will cost a few lakhs and will be done in a week. You will get an address, bank account and directors pooled in from an army of 'service providers' floating around in Dubai. (In a recent seminar, one of the Dubai state officials promised all assistance to Indian companies setting up arms in UAE). An Indian firm controlled by the Swiss bankaccount holder floats the Dubai subsidiary . This new subsidiary has a single purpose: to hold the money that will move out of Switzerland to Dubai, before it travels to India.

Step 2: Now, the money lying with the Alpine bank has to be transferred to a Dubai Bank, where the newly set-up company has an account . Let's call this firm Fei Qian - the Chinese term for flying money. Since it's unlikely that any company in Dubai will carry such a name, authorities in UAE will take little time in giving the permission. Hours after the Swiss bank receives instruction , money flows out of the numbered account to Fei Qian's account in Dubai.

Indian சொன்னது…

Fei Qian poses as a global consultant with clients across Europe , and the money that has just flown into its Dubai account are fees from these clients. Swiss banks will never say why and where they transfer funds, while Dubai survives by instructing their banks not to ask such silly questions. Step 2 is over. What follows is the last leg of the money flow - the passage to India.

Step 3: The Indian parent of Fei Qian receives the money as dividend income from its subsidiary in Dubai. The money may travel in tranches with decent intervals to avoid needless suspicion. Indians with Swiss bank accounts couldn't have asked for a better deal from New Delhi. Pay a 15% one-time tax and everything is forgotten and forgiven. Dubai has no tax. So, Fei Qian pays no tax - neither when it 'earns' the money nor when it distributes dividends to the Indian parent . The only tax that's paid is 15% of the money after it comes to India.

It's a tax rate that's 2-3 % lower than Singapore's , and half of what firms and individuals in India pay. More and more individuals are beginning to spot the beauty of the 15% tax rule. It's nothing but a backdoor amnesty scheme. A full-blown amnesty scheme, particularly calling it 'amnesty' , would have stirred a hornet's nest: bad press, hue and cry from the Opposition, public interest litigations filed by righteous individuals and embarrassing questions from Supreme Court judges.

Why turn things ugly? Lower the tax on certain inflows from abroad and let smart guys figure out the rest. What's more, once the Dubai subsidiary is up and running, the Swiss bank account holders do not have to snap their ties with the banks that have guarded their secrets for years. All they have to do is close the numbered account and let the Dubai company open a new account with the Swiss bank. The money that's not sent to India as dividend can come back to the new account in Switzerland.

If the Indian government fishes for details on certain individuals after January 1 when the now-famous Indo-Swiss treaty comes into force, Swiss banks are not bound to talk on accounts that have already been closed. Numbered accounts will be history while new accounts opened by some Dubai firms will pass off as normal corporate business. Like Dubai, Switzerland too needs our money.

a சொன்னது…

தெரியாத பல விசயங்கள்....

RK நண்பன்.. சொன்னது…

வணக்கம் தல, நல்ல விளிப்புணர்ச்சி பதிவு, எப்போதான் மாறும், இந்த அரசியல் வியாதிகள் எப்போதான் திருந்துவாணுக??

பேசாம பிரிட்டிஷ் இல்லாட்டி அமெரிக்கா கைள நம்ம நாட்டை லீஸ்க்கு விற்றலாம்...

இவிங்க பந்த்ராதுக்கு அவிய்ங்க பெட்டர் போல..
தமிழ்மணம் & இண்ட்லி போட்டச்சி...