14 மே, 2011

ஒரு தீர்ப்பை எழுதி முடித்திருந்த போது...

நான் ராஜாவாகவும் இருந்த
ரா.. ஜ்..ஜி..யத்தில்
எனது கட்டுப்பாட்டுக்குள் இல்லை
மக்கள்
எனது மக்கள்..

கொத்து கொத்தாய்க்

கொன்று முடித்தபோதும்
வாளாவிருந்தேன்
குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தின்
குடும்ப நலனுக்காக..

வக்கனையாய்

வசனம் எழுதினேன்
வரிவரியாய் வீரம் பேசினேன்
விசிலடித்து, கைதட்டி
பின்னே நின்றது தமிழ் கூட்டம்
ஓட்டம் எடுத்தது
ஆரியர் கூட்டம்..

மூத்த இளவரசன்

பட்டத்துக்கு ஆசைப்பட
உரிமை இளையவன் வெதும்பி நிற்க
இளவரசியோ வழக்கில் சிக்க
இன்னொருமுறை
காவு கொடுக்க கம்பி வேலிக்குள்
மிச்சம் இருப்பான்..

தமிழ்தான் நான்

நான்தான் தமிழ்
குஷ்பூவின் தமிழ்
மானாட மயிலாட மயக்கம் வரும்
தமிழ்..

குடி

நன்றாகக் குடி
உன் கூலி முழுவதையும் குடி
கஞ்சிக்கு உத்தரவாதம் தருகிறேன்
அதையும் குடித்துவிட்டு
தொலைக்காட்சியில் களி
களைத்து விழுந்தபின்
108 வரும்
காப்பீட்டால் காப்பாற்றப்படுவாய்
செத்தாலும் தருவேன் பணம்
என்ன தரவில்லை நான் ..

சும்மாவா கேட்டேன்

ஓட்டு
இந்தக் கையில் துட்டு
அந்தக் கையில் ஓட்டு ..

சொந்தமாக எதுவுமில்லை

இருந்த வீட்டையும்
எழுதி வைத்துவிட்டேன்
என் மனைவியுடையதும்
பிள்ளைகள்,
பேரப் பிள்ளைகளுடையதும்
உங்கள் கண்களை உறுத்தினால்
இருக்கவே இருக்கு
வாசன் ஐ கேர்..

இத்தாலி அன்னை கைவிட

இருந்த பாபா போய்விட
யாரிடம் போவேன் நான்
இனி யாரிடம் போவேன் நான்..

என்ன கொண்டு வந்தேன்

என்ன கொண்டு போகப் போகிறேன்..

ஒப்பற்ற தலைவனே

ஒப்பாமல் போனாயே
இனி எப்போதும் தப்பாது
தப்பாகவும் இருக்காது
தமிழனின் வாக்கு..

25 கருத்துகள்:

srinivasan சொன்னது…

அருள் அவர்களை தூக்கு மாட்டி தொங்குமாறு கேட்டு கொள்கிறோம் :)))))))

Unknown சொன்னது…

அண்ணே, கவிதை அவர் எழுதுன மாதிரியும் கடைசி பாரா நீங்க எழுதுன மாதிரியும் இருக்கு...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீட்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஸ்டாலின் கழகத்தை கைப்பற்றினால்.. மீண்டு வருவார்கள் என நினைக்கிறேன்..

admin சொன்னது…

Wonderful Kavithai.. Keep up writing..

அஞ்சா சிங்கம் சொன்னது…

தமிழக மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துள்ளார்கள் .
ஒய்வு முடிந்து மீண்டும் வருவோம் ..............................மு. கருணாநிதி
--------------------------------------------------------------------------------------------------------------
இது அவ்ளோ சீக்கிரம் அடங்காது ..
எதிர்கட்சியாக கூட இருக்க லாயக்கு இல்லை என்று தமிழக மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் .................

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தமிழக மக்கள் எனக்கு ஓய்வு கெர்டுத்து விட்டாதாக அறிவித்திருக்கிறார். கலைஞர்.

ஏன் இலங்கை தமிழர்களுக்காக இப்போது பேராட்டம் நடத்த இவருக்கு உரிமையில்லையா... நேரமில்லையா..

தோல்வி என்றவுடன் ஓய்வு என்றதுக்கு பதில் தமிழீழத்திற்கு ஆதரவாக போராட தமிழக மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்று சொல்லியிருக்கலாமே?

ஆட்சியில் இருக்கும்போது பதவி பயம் இப்போதும் இப்போது எனன் பயம்..?

சசிகுமார் சொன்னது…

//# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
தமிழக மக்கள் எனக்கு ஓய்வு கெர்டுத்து விட்டாதாக அறிவித்திருக்கிறார். கலைஞர்.

ஏன் இலங்கை தமிழர்களுக்காக இப்போது பேராட்டம் நடத்த இவருக்கு உரிமையில்லையா... நேரமில்லையா..

தோல்வி என்றவுடன் ஓய்வு என்றதுக்கு பதில் தமிழீழத்திற்கு ஆதரவாக போராட தமிழக மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்று சொல்லியிருக்கலாமே?

ஆட்சியில் இருக்கும்போது பதவி பயம் இப்போதும் இப்போது எனன் பயம்..?//

இது போல சொன்னா இருக்கிற 20 எம்.எல்.ஏ காரி மூஞ்சியில துப்புவானுங்க ஹா ஹா ஹா.....

அவரு நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ஹா ஹா ஹா

சசிகுமார் சொன்னது…

//பட்டாபட்டி.... கூறியது...
ஸ்டாலின் கழகத்தை கைப்பற்றினால்.. மீண்டு வருவார்கள் என நினைக்கிறேன்//

அவர் சீட்ட கைப்பற்றவே ரொம்ப அல்லாடிபோயிட்டாறு இதுல கழகத்தை எங்க கைபற்றது

Unknown சொன்னது…

திருக்கை வாலை வருட கணக்கில், நல்லெண்ணையில்
ஊறவைத்து எடுத்து சுளீர் சுளீர் என அடித்தாற்போல் அமைகிறது ஒவ்வொரு வார்த்தையும். பலரின் மனக் குமுறலை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் அண்ணன். மிக்க நன்றி
-Sabari

Unknown சொன்னது…

திருக்கை வாலை வருட கணக்கில், நல்லெண்ணையில்
ஊறவைத்து எடுத்து சுளீர் சுளீர் என அடித்தாற்போல் அமைகிறது ஒவ்வொரு வார்த்தையும். பலரின் மனக் குமுறலை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் அண்ணன். மிக்க நன்றி
-Sabari

Unknown சொன்னது…

Annan, How it change my profile name here, I dont know what is
"Kaplan_ICT306" (::)
-Sabari

raja சொன்னது…

வைகைப்புயல் வடிவேல் எனும் அரசியல் மேதையின் தீர்க்கதரிசனம் எப்படி தோற்றுபோனதுதான் எனது ஆச்சர்யம்.(ஏண்டா இன்னுமோ இந்த ஊர் நம்பல நம்புது...அவ்வவ்வவ்வவ்வவ்வவ்வ)

பெயரில்லா சொன்னது…

ஒரு கல் ஒரு கண்ணாடி.....வருமா?

rajamelaiyur சொன்னது…

PMK, DMK,VC, CONGRES nu solrankalay apatena ena?

Unknown சொன்னது…

நிதர்சனமான வார்த்தைகள்

ராஜ நடராஜன் சொன்னது…

உரைநடைக் கவிதை ஜொலி ஜொலிக்குதே!

மதுரை சரவணன் சொன்னது…

//ஒப்பற்ற தலைவனே
ஒப்பாமல் போனாயே
இனி எப்போதும் தப்பாது
தப்பாகவும் இருக்காது
தமிழனின் வாக்கு..//

நல்ல எதார்த்தமானக் கவிதை.. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

அருமை

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

அருமை அண்ணே ,,,,

ரோஸ்விக் சொன்னது…

யாரும் வந்து திடீர் கவிஞர்... குபீர் கவிஞர்-னு சொல்லலையா?? :-)))

Madhavan Srinivasagopalan சொன்னது…

அருமையான, ஆழமான கருத்துள்ள கவிதை..
வாழ்த்துக்கள்..

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

தாத்தாவின் உளறல் இப்படிதான் இருந்து இருக்கும்..அருமை....

Karuthu Kandasamy சொன்னது…

படித்ததில் பிடித்தது....


@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!

ஈரோடு கதிர் சொன்னது…

அதுக்குள்ளே ஓட்டு எண்ணி தீர்ப்பு சொல்லிட்டாங்களா!!!?

அய்யகோ தேர்தல் ஆணையம் இப்படி பழிவாங்கிடுச்சே!?

:)