19 மே, 2011

எளிய முறையில் "ஆப்பு" வைக்க எட்டு யோசனைகள் ..


1. எல்லோருக்கும் இலவசமாய் தொலைக்காட்சி கொடுத்துவிட்டு 
    பார்க்க விடாமல் கரண்ட் கட் செய்வது. 

    அதே தொலைகாட்சியில் ஸ்பெக்ட்ரம் பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டது.

2. ஈழத் தமிழனுகோ, இந்திய மீனவனுக்கோ பிரச்சினை என்றால் 
    கடிதம் எழுதுவது. 
   
    அதே தன் மகளுக்கு பிரச்சினை என்றால் இந்தியாவின் 
    அதிக விலை வக்கீலை வாதாட வைப்பது.

3. தேர்தல் முடிந்தபிறகு அ.தி.மு.க அப்படீன்னு ஒரு கட்சியே 
    இருக்காதுன்னு சவால் விடுவது. 

   தேர்தல் முடிந்தபின் தன் கட்சி உயிரோடு இருக்கா? என்று தேடுவது.

4. 13 ந்தேதி என்ன பண்றேன்னு பாருங்கன்னு BUZZ, TWITTER, BLOG
     எல்லாத்திலயும் சவால் விடுறது. 

    ஆனா அபீட்டாயிட்டு அடுத்த அஞ்சு வருசத்துக்கப்புறம் 
    நாமதான்னு அவங்களுக்கு அவங்களே (நமக்கு நாமே திட்டம் மாதிரி௦) 
    ஆறுதல் சொல்லிக்கிறது.

5. கருணாநிதி பி.ஜெ .பி க்கு சப்போர்ட் பண்ணப்ப சூப்பர் என்பது. 

    சீமான் மோடிய பத்தி சொன்னா கரசேவைக்கு செங்கல் தூக்குறார் 
    என கிண்டல் அடிப்பது.

6. தமிழக மீனவர்களுக்காக காங்கிரஸ் கட்சி இலங்கை தூதரகம் முன்பு 
    ஆர்ப்பாட்டம் செய்வது.
   
      இத்தாலிக்காரம்மாவை தலிவரா ஏத்துகிட்டு இந்திய 'பொறை'யான்மை 
      பத்தி ஊளையிடுவது.

7. எல்லோரும் தமிழில் படிக்க வேண்டும் எனப் பேசுவது. எஞ்சினியரிங் உட்பட..
   
   ஆனா தனது பேரப் பிள்ளைகளை தமிழ் ஆங்கிலவழிக் 
   கல்வி பயில அனுப்புவது.

8. பணம் கொடுத்துட்டா ஒட்டு போடுவானுங்கன்னு நெனச்சது. 
   
    மக்கள் பணம் வாங்கிட்டு மாத்தி ஒட்டு போட்டது.

20 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

இதனால் தான் மக்கள் அமைதியாக ஆப்பு வைச்சிட்டாங்க...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

..13 ந்தேதி என்ன பண்றேன்னு பாருங்கன்னு BUZZ, TWITTER, BLOG
எல்லாத்திலயும் சவால் விடுறது. ..

சவால் விட்டவங்க யாரும் அன்னிக்கு காணவில்லை என்று பேச்சு...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//பணம் கொடுத்துட்டா ஒட்டு போடுவானுங்கன்னு நெனச்சது.

மக்கள் பணம் வாங்கிட்டு மாத்தி ஒட்டு போட்டது.

//

ஆக தெளிவா இருக்கவங்க தமிழகத்தில் மக்கள் மட்டும் தான்...

மக்களுக்கு இருக்கற தெளிவு பழைய மந்திரிகளுக்கும், அரசியல் சாணக்கியர்களுக்கும் தெரியாமல் போச்சே...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அது......

பெயரில்லா சொன்னது…

////ஈழத் தமிழனுகோ, இந்திய மீனவனுக்கோ பிரச்சினை என்றால்
கடிதம் எழுதுவது.

அதே தன் மகளுக்கு பிரச்சினை என்றால் இந்தியாவின்
அதிக விலை வக்கீலை வாதாட வைப்பது./// அப்புறம் டெல்லிக்கு பறப்பது

rajamelaiyur சொன்னது…

Unmai! Unmai!!

அஞ்சா சிங்கம் சொன்னது…

செம நக்கல் ................

சசிகுமார் சொன்னது…

அருமை

மாதேவி சொன்னது…

:)

vasu balaji சொன்னது…

அதெப்புடி
//குற்றம் சாட்டப் பட்டதாலேயே குற்றவாளி இல்லைன்னு முதல்ல சொல்வது.

மவ மாட்டிக்கினதும் அவந்தான் திருடன்னு சொல்லச் சொல்வது //

மறந்து போச்சு:))

Unknown சொன்னது…

ஏன் இந்த கொலை வெறி, வெந்த புண்ணுல வேல பாச்சதீங்க சாமீ. பொழச்சு போகட்டும் மன்னிச்சு விட்டுடுங்க.

ராவணன் சொன்னது…

இப்படியெல்லாம் நடக்குமா?

இல்லை நடந்ததா?

எனக்கு எதுக்கு வம்பு?

ஓரமா ஒக்காந்து பார்க்கலாமா?

ஈரோடு கதிர் சொன்னது…

எல்லா யோசனையும் ஏற்கனவே பாஸ் மார்க் வாங்கிடுச்சு!!!

:)))))

...αηαη∂.... சொன்னது…

:) :) ..,
கரெக்டா சொன்னிங்க...

அமுதா கிருஷ்ணா சொன்னது…

நிஜம்.

நிரூபன் சொன்னது…

சகோ, சின்னப் பையனின் கைவிரல் பல சேதிகளைச் சொல்லுதே...

அவ்....

நிரூபன் சொன்னது…

இது தான் அவங்க தலையிலை, அவங்களே சொந்த செலவில் சூனியம் வைக்கிறது என்பதோ..
அவ்...
உங்களின் வரிகள் ஒவ்வொன்றும் நச்..நச்...

RK நண்பன்.. சொன்னது…

செம ஆப்பு....

ஆமா நீங்க சொன்ன போல மே13 வரை காத்திருக்க சொன்ன பல பேர் ஆளையே காணோம்..

Yaathoramani.blogspot.com சொன்னது…

எட்டும் செம கொட்டு
(பாவம் விடுங்க அவங்களே
மண்டை வீங்கிக் கிடக்காங்க)
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

vasan சொன்னது…

ம‌க்க‌ளை முட்டாளாய் நினைத்த‌து,
ம‌க்க‌ள் மவுன‌ப் புர‌ட்சி செய்த‌து.
அது அம்மாவுக்கும் உறைக்க‌னும்.
ச‌சிக‌லா கும்ப‌ல் வேலை தொட‌ர்ந்தா
மறுப‌டி, ஏறுவ‌து வேற‌ ப‌டிக‌ளாய் இருக்கும்.