கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயண் எழுதி “உ”பதிப்பகத்தால் வெளியிடப்படும் அவரின் ஐந்தாவது புத்தகம் இது. சங்கர் நாரயணுக்கு என்று ஒரு ராசி உண்டு. அவரின் இரண்டாவது புத்தகமான “சினிமா வியாபாரம்” மற்றும் “கொத்து பரோட்டா” தவிர்த்து மற்ற மூன்று ப்த்தகங்களான “லெமன் ட்ரீயும் இரண்டு ஷட் டக்கீலாவும்” நாகரதனா பதிப்பகத்துக்கு முதல் புத்தகம், “மீண்டும் ஒரு காதல் கதை” எங்களின் “ழ” பதிப்பகத்துக்கு முதல் புத்தகம். இப்போது இவரின் “தெர்மக்கோல் தேவதைகள்” உலகநாதனின் “உ” பதிப்பகத்துக்கு முதல் புத்தகம்.
இப்படி முதல் புத்தகமாக சங்கர் நாராயணின் புத்தகத்தை வெளியிட்டதில் இதுவரை யாரும் புத்தக விற்பனைக்காக சிரமப்பட்டதே இல்லை. காரனம் சங்கரின் வாசகர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். எங்கள் “ழ” பதிப்பக நிறுவனர் ஓ.ஆர்.பி.ராஜா “கொத்து பரோட்டாவை” புத்தகமாக வெளியிடலாம் என்று சங்கரை கேட்டபோது அவர் முடியாது என மறுத்துவிட்டார். ஆனால், ராஜா பிடிவாதமாக அதனை வெளிக்கொண்டு வந்தார். இப்போது கைவசம் ”கொத்து பரொட்டாவை” மற்ற புத்தகங்கள்தான் இருக்கிறது. ஈரோடு சென்றபோது நண்பர் கார்த்திகை பாண்டியனை சந்தித்தபோது ஒரு தகவலை சொன்னார். சென்னை வந்த அவர் நண்பர் வாங்கிவந்த புத்தகங்களில் “கொத்து பரோட்டாவும்” இருந்ததாக, அவரின் நண்பருக்கு கேபிளையும், அவரது வலைப்பக்கத்தையும் பரிட்சயம் இல்லை. ஆனாலும் அவர் “கொத்து பரொட்டாவை” வாங்கி வந்ததாக சொன்னார்.
கேபிளின் கதைகளுக்கு முதல் ரசிகன் நானும், நண்பர் ”விந்தைமனிதன்” ராஜாராமனும்தான். காரனம் அவரின் பெரும்பாலான கதைகளை எழுதுவதற்கு முன்பே எங்களிடம் சொல்லியிருக்கிறார். அவரின் எல்லா கதைகளும் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அவரின் மற்றும் அவரின் நண்பர்களின் அனுபவங்களை கதைகளாக்குவதில் சமர்த்தர். ஒவ்வொரு கதைக்கும் அதில் வரும் ஒருசில இடங்கள்தான் அவரின் கற்பனையாக இருக்கும். அந்த கற்பனைதான் கதைக்கு முக்கியமான திருப்பத்தை தரும்.
”தெர்மக்கோல் தேவதைகள்” தொகுப்பில் மொத்தம் பதினெட்டு சிறுகதைகள் இருக்கிறது. முதல் கதையில் ஒரு உதவி இயக்குனரின் பார்வையில் நகர்கிறது. சினிமா உலகத்தில் இவரும் ஒருவராக இருப்பதால் சுயஎள்ளல் மிக நன்றாக வருகிறது. இப்படி ஒவ்வொரு கதையாக கேபிள் நம்மை இன்னொரு உலகத்திற்க்குள் அழைத்துச்செல்கிறார். இவரின் கதைகளில் வரும் பெண்களைப்பற்றி தனி ஆய்வே செய்யலாம். நுணுக்கமான பெண்களின் உலகிற்க்குள் இவர் அந்த பெண்களின் மனநிலையோடு கதைகளை விவரிக்கிறார்.
தெர்மக்கோல் எப்போதும் உள்ளிருக்கும் தன்மையை அதன் இயல்பிலேயே வைத்திருக்கும், அது வெப்பமோ, குளிர்ச்சியோ எதுவாக இருந்தாலும் அதன் தன்மை மாறாமல் காப்பாற்றும். அதேபோல் வெளியில் இருக்கும் வெப்ப மாறுதல்களை உள்ளே அனுமதிக்காது. அதேபோல்தான் இவரின் கதைகளில் வரும் பெண்மக்களும் தங்கள் இயல்புகளில் உறுதியாக இருக்கிறார்கள். இதற்கு மேல் ஒவ்வொரு கதையாக நான் விவரிப்பதைவிட வாங்கிப் படித்து நீங்களே திரு.சங்கர் நாராயணிடம் உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்.
மிக அருமையான கதைகள், மிக அருமையான தொகுப்பு அவசியம் படித்து, மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யவேண்டிய புத்தகம்.
இவரின் புத்தகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது..
தெர்மக்கோல் தேவதைகள்
விலை : ரூ.50
வெளியீடு: “உ” பதிப்பகம்
அதன் விபரங்கள் :
அரங்கு எண் : 160,161 ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்
அரங்கு எண் : 334 டிஸ்கவரி புக் பேலஸ்
அரங்கு எண் : 281,282 வனிதா பதிப்பகம்
இந்த அரங்குகளில் எங்களின் “ழ” பதிப்பகம், மற்றும் உலகநாதனின் “உ” பதிப்பக வெளியீடுகளும் கிடைக்கும்
10 கருத்துகள்:
விமர்சனம் அருமையாக இருக்கிறது, இந்தியா வந்தது வாங்கி படிக்கணும் நன்றி...!!!
கேபிளாருக்கு வாழ்த்துகள்!
படிக்க தூண்டும் விமர்சனம் நன்றி
அருமையான விமர்சனம்
பகிர்வுக்கு நன்றி
தொடரவாழ்த்துக்கள்
த.ம 2
தலைப்பில் ஒரு கவர்ச்சி.வாசிக்கத்தூண்டும் நிச்சயம் !
நன்றி தலைவரே!
//
அவரின் மற்றும் அவரின் நண்பர்களின் அனுபவங்களை கதைகளாக்குவதில் சமர்த்தர்
//
itha nama ethana thadava pathurukkom....
உங்க கதையும் ஒண்ணு பாக்கி இருக்கு:))
சகோ செந்தில்,
கேபிள் சங்கரின் "மீண்டும் ஒரு காதல் கதை" என்ற புத்தகத்தை நான் படித்துள்ளேன். நிஜமாகவே நன்றாக எழுதி இருந்தார்.அண்ணன் கேபிள் பற்றி நான் ஆச்சரியப்படும் விஷயம், அவரின் புத்தகத் தலைப்புகள். வாவ்... வொண்டர்புல். குறிப்பாக "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" மற்றும் "தெர்மாக்கோல் தேவதைகள்". தலைப்பை பார்த்தவுடன் வாங்கத் தோன்றுகிறது.
அருமை விமர்சனம் .
Please check my blog ,for
தெர்மக்கோல் தேவதைகள் - பின்நவீனத்துவ(குன்சான) அறிமுகம்
நன்றி
கருத்துரையிடுக