8 ஜன., 2012

நான் ஏன் போராளியாகவில்லை?...

ஒரு போராளியாய் 
மாற முடியாது என்னால் 
நான்
எனது குடும்பம் 
எனது சந்தோசம்
எனது தலைவன்
இப்படியாக 
ஏகப்பட்ட 
”எனது”க்களுக்காக
வாழவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு 
எம் தலைவர்கள்
குறைந்தது இரண்டு மனைவிகளை உடையவர்கள்
எனது கடவுள்களும்
எனது வழிகாட்டிகளும் அப்படித்தான் 
என் தலைவர்களைப் போலவே
ரகசிய ஆசைகளும் 
வாரிசுகளின் வாழ்வும் 
எனக்கு முக்கியம் 
மேலும் 
எனது ஜாதி
எனது ஊர்
எனது மாநிலம் 
எனது மொழி
எனது....
எனது ....
இப்படியாக 
மேலும் பலப்பல 
”எனது”க்களுக்காகவும்
நான் வாழவேண்டியிருக்கிறது
ஆகவே 
என்னால் 
ஒரு போராளியாக மாறவே முடியாது
மாறாக 
அவர்களை 
பாராட்டவோ
திட்டவோ
அல்லது 
அவர்களின் தியாகத்தை வைத்து 
ஆதாயம் தேடவோ
பழகிக்கொண்டுவிட்டதாலும் 
என்னால்
ஒரு போதும் போராளியாக
மாறவே முடியாது..
மாறவே முடியாது ...

மாறவே முடியாது ....

13 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

சராசரி மனிதனின் வெளிப்பாடு சொன்ன விதம் அருமை

பெயரில்லா சொன்னது…

பிரிவோம்.. சந்திப்போம் - சிறுகதை http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-post_08.html

vinthaimanithan சொன்னது…

இந்த மாதிரி கொலைவெறிக் கவிதைகள் சமைத்தாலே போதும். ஒவ்வொருவனும் போராளியாகி விடுவான். போராளிகளைச் செதுக்கும் சிற்பியே! நீ வாழி! நின் குலம் வாழி! நின் குற்றம்.. ச்சே.. கொற்றம் வாழி!

நாய் நக்ஸ் சொன்னது…

Vanakkam thali....

Unmai than....
Ulagam surungi vittathu....
Naan enkira
vattathukkul....

vinthaimanithan சொன்னது…

//Ulagam surungi vittathu....// உலகம் மட்டுந்தானே சுருங்குனிச்சி? விடுங்க நாய் நக்ஸ். இதெல்லாம் பெரிய விஷயமா என்ன? :))

சிராஜ் சொன்னது…

சகோ செந்தில்,
எனது...எனது.. எனது.... பெரும்பான்மையான மக்களின் குணத்தை பிரதிபலிக்கிறது உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள்.

சிராஜ் சொன்னது…

இன்னொரு விஷயம். நல்ல வேலை நீங்கள் போராளி ஆகவில்லை. பிழைத்து போகட்டும் போராட்டம். இப்படியே இருந்துவிடுங்கள்.

சிராஜ் சொன்னது…

இன்னொரு விஷயம். நல்ல வேலை நீங்கள் போராளி ஆகவில்லை. பிழைத்து போகட்டும் போராட்டம். இப்படியே இருந்துவிடுங்கள்.

ஹேமா சொன்னது…

செந்தில்...இதுதான் கொலைவெறி.தலைப்பு,படம் சூப்பரப்பு !

goundamanifans சொன்னது…

//நீ வாழி! நின் குலம் வாழி!//

Vindhai kanla sikkunaa gaali.

பெயரில்லா சொன்னது…

a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/

Unknown சொன்னது…

பெரிய அரசியல் தலைவர்களே போராளியாக விரும்பவில்லை நான்(நீங்கள்) மட்டும்....ஏன் போராளியாக வேண்டும்,
நாம் யாராலும் அடிமைபடுத்தாத
அடிமைகள் அவல குரல்களையும்
ஈனஸ்வரத்தில்தான் முனக வேண்டும்,
அதிகம் சத்தம் வந்தால்
குரல்வளைகளை நாமே நசுக்கிக்
கொள்வோம்....இயலாமையின் வெளிப்பாடுதான்
இந்த கவிதையோ?அருமை

ஜோதிஜி சொன்னது…

வெகு நாளைக்குப் பிறகு உண்மையான வார்த்தைகள்.