7 டிச., 2010

எங்கே போகிறது இந்தியா - பகுதி மூன்று...

Cinema in India is like brushing your teeth in the morning. You can't escape it.Shahrukh Khan

முதல் இரண்டு பகுதிகளில் இந்தியாவின் மோசமான நிலைக்கு முதற்காரணம் அரசியல்வாதிகளும், அதற்கடுத்து தனி மனித ஒழுக்கம் இன்மையும்தான் என சொல்லியிருந்தேன். இந்த பகுதியில் இந்தியாவின் சாதகமான விசயங்களை அதில் இப்போது இருக்கும் குறைபாடுகளை அலசலாம்.

நம்மிடம் அறுபது சதவீதம் இளைஞர்கள்தான் இருக்கின்றனர். இது ஒரு வரபிரசாதம் ஆனால் இத்தகையோர் பெரும்பாலும் விளையாட்டில் கிரிகெட் பின்னும், சினிமா என்றால் நடிகர்கள் பின்னும் இருகின்றனர், இருபது வயதுக்கு பின்னும் பெற்றோர் காசில் வாழும் அவலமும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அளப்பரிய சுதந்திரத்தை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பதின்மவயதில் காதல் வலை வீசுவதிலும், வெட்டியாய் ஊரை சுத்துவதிலும் கழிப்பதால் பணம் பண்ணும் கலையை பற்றி அறியாமல் அடிமாட்டு நிலைக்கு ஆளாகி குறைந்த சம்பளத்தில் வெறுப்புடன் வேலை பார்த்து பல நிறுவனங்கள் தாவுகின்றனர். இந்த தேசத்தில் பெரும்பாலான இளையோர் இப்படிதான் வாழ்கிறார்கள். நகரங்களில் இப்படி என்றால் கிராமங்களில் பெண்கள் எல்லாம் பட்ட படிப்புகளை தாண்டிவிட ஆண்கள் எல்லாம் பனிரெண்டாம் வகுப்பில் தங்கிவிட அதற்கடுத்து வெளிநாட்டில் சென்று கட்டிட வேலைக்கோ வேறெந்த வேலைக்கோ சென்று அந்த நாட்டை முன்னேற்ற அரும்பாடுபடுவார்கள். இது மாற வேண்டும் எனில் பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பு படிக்கும்போதே எதிர்கால திட்டமிடல் ஒன்றை எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும். அடுத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை டாக்டர், எஞ்சினியர் கனவுகளுடந்தான் வளர்கின்றனர். இது களையப்பட்டு புதிய துறைகளை அடையாளம் காட்டவேண்டும். ஒரு சிறந்த ஆக்க சக்தி நம்மிடம் இருக்கிறது, அதனை சரியான வழிகளில் கொண்டு செல்லும் வழிகாட்டிகள் நம்மிடத்தில் இல்லை.

ஒரு நாட்டின் முதுகெலும்பு அதன் உள்கட்டமைப்பு ஆனால் ஒருநாள் மழைக்கே வெள்ளம் பெருகி வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடும், இதற்க்கு காரணம் திட்டமிடல் இல்லாமல் செய்யப்படும் நகர விரிவாக்கம்தான். மழை நீர் வடிகால்கள் இப்போது சாலையோரங்களில் அமைப்பதே இல்லை. அமைக்கப்பட்ட வடிகால்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டு மூடிவிட்டது. நகரங்களில் புதிதாக நீர் சேகரிப்புக்கு என எந்த திட்டமும் இல்லை என்றாலும். பழைய கோவில் குளங்கள், ஏரிகள் அனைத்தும் பராமரிக்கப்படாமல் ஒவ்வொன்றாக காணாமல் போய்கொண்டு இருக்கிறது. அதனை தடுத்து நிறுத்தினால் ஏராளமான நீர் சேகரிப்புகள் கிடைக்கும். அடுத்து போக்குவரத்து, ஒரு ஒழுங்கற்ற போக்குவரத்து விதிகளையும், போதுமான வசதிகளை உடைய சாலைகளையும் நாம் பெற்றிருக்க வில்லை. நடைபாதைகளில் கடைவிரிக்கும் ஆட்கள் நாம். மதுரை போன்ற நகரங்களில் ஆடுமாடுகள் உடப்பட அனைத்தும் நடு சாலையில் நடக்க வாகனமோட்டிகள் தடுமாறித்தான் செல்வார்கள். மேலும் யாரும் சாலை விதிகளை முழுவதுமாக அறிந்துகொண்டு வாகனம் ஒட்டுவதில்லை. இந்தியாவின் பெருநகரங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இதற்க்கு மிகப்பெரிய விழிப்புணர்வு தேவைபடுகிறது. நகர மயமாதல் பற்றி கவலைப்படும் வல்லுநர் குழுவும், அரசியல்வாதிகளும் கிராம மேம்பாடுகளைப் பற்றி கவலைபடுவதில்லை. அது காந்தியோடு அவரின் கொள்கைகளையும் சேர்த்து புதைத்து விட்டதைப்போல், கிராம மேம்பாடு பற்றி அவர் சொன்னதையும் புதைத்து விட்டோம். இந்த்யாவின் என்பது சதவீத மக்கள் இன்னும் கிராமங்களில்தாம் வசிக்கின்றனர். ஆனால் பள்ளிக்கூடம், சுகாதார நிலையம் போன்ற அடிப்படையான வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் அறுபது சதவீதம் இன்னும் இருக்கின்றன. 

அரசியல் விழிப்புணர்வு இப்போது யாருக்குமே இல்லை.  இந்திய தேசம் கட்டி எழுப்பபட்டதே இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான். அதற்கு முன்  நிறைய நாடுகளாகவும், சமஸ்தானங்களாகவும் பிரிந்து கிடந்தவர்கள் நாம். நில அமைப்பில் முந்தைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டிருந்த இந்தியாவின் பண்டைய அமைப்பு போர்களாலும், வறுமையாலும், மதங்களாலும் பிரிந்து இப்போதைய இந்தியாவில் கூட இன்னும் ஏகப்பட்ட குளறுபடிகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் செல்வாக்கு இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது அந்த குடும்பத்தின் பெயர்களில் இருக்கும் காந்தி எனும் பிற்பாதி மட்டுமே இன்னும் அவர்களை காந்தியவாதிகளாக காட்டுகிறது. காந்தி என்கிற பிற்பாதி அடையாளத்தை அவர்கள் கைவிடாதவரைக்கும் இந்தியாவின் மன்னர்கள் அவர்கள்தாம். பிராந்திய அரசியலை எடுத்துகொண்டாலும் வாரிசுகள் கோலோச்சும் காலம் இது. இதற்க்கு முக்கிய காரணம் படித்த யாரும் ஓட்டு போடப்போவது இல்லை. அவர்களுக்கு காலையில் நாளிதழ் படிப்பது கூட டாய்லெட் ஒழுங்காக போக வேண்டும் என்பதற்கு மட்டுமே. மற்றபடி அவர்களைப் பொறுத்தவரை ராமன், ராவணன் இருவரும் அவர்களின் மற்றோர் பிம்பங்களே. பெரும்பாலும் கிராமப்புற இளயோர்தான் அரசியலில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த ஆர்வம் கூட முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்து தங்கள் திரை பிம்பங்களுக்கு கோசமிடுவதில் துவங்கும், அதன் அடுத்த நிலை அரசியல், இந்த அரசியலில் சேரும்போதே கட்சியில் தனக்கு என்ன பதவி கிடைக்கும் என்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். இன்றைய நாளில் அரசியல் கட்சியில் சேரும் அத்தனை தொண்டர்களும் பிரதமர், முதல்வர், அமைச்சர் கனவில்தான் சேருகிறான். ஆனால் ஜனநாயக உலகில் இதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றாலும் ஜனநாயகத்தை ஆளும் பணநாயகம் இவர்களுக்கு எந்தகாலத்திலும் வழி விடாது. 

இன்றைக்கு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும் உள்ளூர் அரசியல்வாதிமுதல் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெருந்தலைகள் வரை ஊழலில் முக்குளித்தவர்கள் என்று. இரண்டு தேர்தல்களுக்கு முன்புவரை கூட எரிகிற கொள்ளியில் கொஞ்சம் நல்ல கொள்ளி என்று தலையில் சொருகிக்கொண்டவர்கள். இப்போது யார் அதிகம் பணம் தருகின்றனரோ அவர்களுக்கு ஐந்து வருடம் அடிமை சாசனத்தில் முத்திரை குத்தி விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியிலும் சமூக ஆர்வலர்கள் போட்டியிட்டு வருகிறார்கள், தயவு செய்து வருகிற தேர்தல்களில் நடுநிலையாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளியுங்கள். இங்கு நடுநிலையாலர்கள்தாம் அதிகம்பேர் இருக்கிறோம். நம்மால் நிச்சயம் ஒரு சிறந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இது வழி வகுக்கும். 

அரசாங்க வேலைக்கு நேர்மையான அதிகாரிகள் நிறைய வரவேண்டும், உதாரனத்திற்க்கு இந்திய ஆட்சிப்பணி எனப்படும் முதல்வகை அதிகாரிகள் நல்லவர்களாக தங்கள் பதவியேற்கும்போது செய்து கொடுத்த சத்தியத்தின்படி நடந்து கொண்டாலே போதும். முக்கியமாக காவல்துறை, வக்கீல்கள் நேர்மையாக இருந்தாலே நாடு சடுதியில் மேலெழும்பும். 

அடுத்த அத்தியாயத்தில் கல்வி, மருத்துவம் இரண்டிலும் களையவேண்டிய குறைபாடுகளை பாப்போம்... 

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்...

40 கருத்துகள்:

அருள் சொன்னது…

விஜயகாந்த் ஒரு கிறித்துவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_07.html

பெயரில்லா சொன்னது…

//ஜனநாயகத்தை ஆளும் பணநாயகம் இவர்களுக்கு எந்தகாலத்திலும் வழி விடாது. //
ரொம்பச் சரியாய் சொல்லியிருக்கீங்க அண்ணே.
எனக்குத் தெரிந்து சிலர் தங்கள் கட்சியில் ஆரம்பத்திலிருந்து விசுவாசமாய் இருந்தும் கடைசியில் பிழியப் பட்ட சக்கையாய் வெளியேற்றப் பட்டனர்.

THOPPITHOPPI சொன்னது…

இருபது வயதுக்கு பின்னும் பெற்றோர் காசில் வாழும் அவலமும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அளப்பரிய சுதந்திரத்தை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பதின்மவயதில் காதல் வலை வீசுவதிலும், வெட்டியாய் ஊரை சுத்துவதிலும் கழிப்பதால் பணம் பண்ணும் கலையை பற்றி அறியாமல் அடிமாட்டு நிலைக்கு ஆளாகி குறைந்த சம்பளத்தில் வெறுப்புடன் வேலை பார்த்து பல நிறுவனங்கள் தாவுகின்றனர்.
---------------------------------
நச்

Unknown சொன்னது…

//தயவு செய்து வருகிற தேர்தல்களில் நடுநிலையாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளியுங்கள்.//

மாப்ளே, நான் தேர்தலில் நிற்கும்போது தயவு செய்து இந்தப் பதிவை மீள் பதிவு செய்யவும்!

செல்வா சொன்னது…

// விளையாட்டில் கிரிகெட் பின்னும், சினிமா என்றால் நடிகர்கள் பின்னும் இருகின்றனர், இருபது வயதுக்கு பின்னும் பெற்றோர் காசில் வாழும் அவலமும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது//

உண்மைதான் அண்ணா ., நிறைய இளைஞர்கள் நிலை அப்படித்தான் இருக்கிறது. சில படித்த இளைஞர்கள் வேலை தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். இது பெரிய குறை கிடையாது. ஆனால் அதைவிட பல இளைஞர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. 16 அல்லது 17 வயதிலேயே குடிப்பழக்கம் போன்ற பழக்கங்களுக்கு அடிமை ஆகி அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரிதும் பிரச்சினையாக உள்ளார்கள் என்பது வேதனையான விஷயம் .!

வைகை சொன்னது…

விளையாட்டில் கிரிகெட் பின்னும், சினிமா என்றால் நடிகர்கள் பின்னும் இருகின்றனர்,//////////


எதற்கும் ரசிகனாய் இருப்பது தவறில்லை, ஆனால் தன் பொறுப்புகளை மறந்து வெறியனாய் இருப்பதுதான் வருத்தமளிக்கிறது!!

செல்வா சொன்னது…

//அந்த ஆர்வம் கூட முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்து தங்கள் திரை பிம்பங்களுக்கு கோசமிடுவதில் துவங்கும், அதன் அடுத்த நிலை அரசியல், இந்த அரசியலில் சேரும்போதே கட்சியில் தனக்கு என்ன பதவி கிடைக்கும் என்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். //

அடுத்து என்னை பதவி கிடைக்கும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை . ஆனால் அந்தப் பதவிக்கு தேவையான தகுதிகள் இருக்கிறதா அதனை வளர்த்துக்கொள்ள என்னை செய்திடவேண்டும் என்று எண்ணம் இருப்பதும் அவசியம் ..!!

Unknown சொன்னது…

//// இருபது வயதுக்கு பின்னும் பெற்றோர் காசில் வாழும் அவலமும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அளப்பரிய சுதந்திரத்தை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பதின்மவயதில் காதல் வலை வீசுவதிலும், வெட்டியாய் ஊரை சுத்துவதிலும் கழிப்பதால் பணம் பண்ணும் கலையை பற்றி அறியாமல் அடிமாட்டு நிலைக்கு ஆளாகி குறைந்த சம்பளத்தில் வெறுப்புடன் வேலை பார்த்து பல நிறுவனங்கள் தாவுகின்றனர். இந்த தேசத்தில் பெரும்பாலான இளையோர் இப்படிதான் வாழ்கிறார்கள்////அருமை..உண்மை.நாட்டில் இன்னும் பெரும்பாலான இளையோர் இப்படித்தான்...

சசிகுமார் சொன்னது…

//இன்றைக்கு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும் உள்ளூர் அரசியல்வாதிமுதல் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெருந்தலைகள் வரை ஊழலில் முக்குளித்தவர்கள் என்று.//

ஒரு ரேசன் கார்டுக்கு 2000 கொடுத்தால் போதும் கலைஞர் மிக நல்லவர் என்றும் அதுவே 5000 கொடுத்தால் கலைஞர் மகா உத்தமர் அவரின் கரங்கள் கரை படியாதது என்று கூவும் மக்கள் சார் இவுங்க. அதுக்கு அப்புறம் ஸ்பெக்டிராம் பத்தி எல்லாம் மறந்து போயிருப்பாங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்பச் சரியாய் சொல்லியிருக்கீங்க அண்ணே.

// விளையாட்டில் கிரிகெட் பின்னும், சினிமா என்றால் நடிகர்கள் பின்னும் இருகின்றனர், இருபது வயதுக்கு பின்னும் பெற்றோர் காசில் வாழும் அவலமும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது//

வேதனையான விஷயம்.. நச்..!

சங்கர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சங்கர் சொன்னது…

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
http://ta.indli.com/user/vaduvursomu

மாணவன் சொன்னது…

//அரசாங்க வேலைக்கு நேர்மையான அதிகாரிகள் நிறைய வரவேண்டும், உதாரனத்திற்க்கு இந்திய ஆட்சிப்பணி எனப்படும் முதல்வகை அதிகாரிகள் நல்லவர்களாக தங்கள் பதவியேற்கும்போது செய்து கொடுத்த சத்தியத்தின்படி நடந்து கொண்டாலே போதும். முக்கியமாக காவல்துறை, வக்கீல்கள் நேர்மையாக இருந்தாலே நாடு சடுதியில் மேலெழும்பும். //

மிகச் சரியாக சொன்னீர்கள்
சிறப்பான பதிவு தொடர்ந்து செல்லுங்கள்...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

///தயவு செய்து வருகிற தேர்தல்களில் நடுநிலையாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளியுங்கள்.//

சரியாச் சொல்லி இருக்கறீங்க...

பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடாமா நல்ல திட்டத்தை செயல்படுத்துபவர்களுக்கு ஓட்டு போடலாம்...

RK நண்பன்.. சொன்னது…

நல்ல அலசல் செந்தில் அண்ணா....

நிச்சயமாக நடுநிலையாளர்கள் நல்ல முடிவெடுத்தாலே மிகப்பெரிய மாற்றம் நடக்கும்...

மாற்றுவோம்.... அட்லீஸ்ட் கொஞ்சம் கொஞ்சமாகவாவது....

RK நண்பன்.. சொன்னது…

"""வெளிநாட்டில் சென்று கட்டிட வேலைக்கோ வேறெந்த வேலைக்கோ சென்று அந்த நாட்டை முன்னேற்ற அரும்பாடுபடுவார்கள். இது மாற வேண்டும்"""

எனக்கும் இங்கு இருக்க பிடிக்கவில்லை ரொம்ப ஜாஸ்தி படிக்கவும் இல்லை, ஏதோ சில விஷயங்களை ஷர்டா படிச்சி அனுபவதில் இங்கு வேளையில் உள்ளேன்... அங்கு வார ரொம்ப ரொம்ப ஆசைதான் ஆனாலும் பயம் , இத்தனை வருடம் இங்கு இருந்துவிட்டதாலஆ வேற எதுவுமா சொல்ல தெரில, ஆனால் உங்களுக்கு இந்த உணர்வுகள் நல்ல தெரியும்...

RK நண்பன்.. சொன்னது…

நீங்கள் சொன்னதுபோல இங்கே எல்லா(கிட்டதட்ட) அரசியல் வியாதிகளும் போக்கிரிகள், ஊலல்வாதிகள் என மக்களுக்கு மிக நன்றாக தெரியும் இருந்தும் ஏன் ஒரு நடுநிலையானவனுக்கு வாக்களிக்க வில்லை... வெறும் 500 க்கும் 1000க்கும் தன்மானதை அடகு வைக்கிறான் இந்த அப்பாவி...

இந்த 500உம் 1000ம தான் இன்னைக்கு ஒரு லட்சத்தி எலுபத்தி ஆறாயிரம் கோடியாக உள்ளது... எல்லாம் காலத்தின் கொடுமை..

என்று மாறுவாய் தமிழனே ??

dheva சொன்னது…

கிரேட் செந்தில்...

இது சராசரி பதிவுலகில் பத்தோடு கூடிய பதினோறவது கட்டுரையும் அல்ல.. என்னுடைய கமெண்டும் பத்தோடு ஒன்று கூடிய பதினோறாவது கமெண்டும் அல்ல...

மிகப்பெரிய கனவுகளோடு ஆற்றாமை கலந்து வந்திருக்கும் முத்துக்கள் கூடி இந்த கட்டுரை சமைந்திருக்கிறது.

சபாஷ்......!

நிறைய விழிகள் வந்து விழ வேண்டிய கட்டுரை....சர்வ நிச்சயமாய்....!

அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்.. விழிகள் விரித்து....

பெயரில்லா சொன்னது…

விளையாட்டில் கிரிகெட் பின்னும், சினிமா என்றால் நடிகர்கள் பின்னும் இருகின்றனர், ///

ரசிகன் சில சமயம் வெறியன் ஆகிவிடுகிறான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு நாட்டின் முதுகெலும்பு அதன் உள்கட்டமைப்பு ஆனால் ஒருநாள் மழைக்கே வெள்ளம் பெருகி வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடும், இதற்க்கு காரணம் திட்டமிடல் இல்லாமல் செய்யப்படும் நகர விரிவாக்கம்தான். மழை நீர் வடிகால்கள் இப்போது சாலையோரங்களில் அமைப்பதே இல்லை.///

இத பத்தி நானும் சொல்லிருக்கேன் வந்து பாருங்க...

வினோ சொன்னது…

/ ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியிலும் சமூக ஆர்வலர்கள் போட்டியிட்டு வருகிறார்கள், தயவு செய்து வருகிற தேர்தல்களில் நடுநிலையாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளியுங்கள். இங்கு நடுநிலையாலர்கள்தாம் அதிகம்பேர் இருக்கிறோம். நம்மால் நிச்சயம் ஒரு சிறந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இது வழி வகுக்கும்.

அரசாங்க வேலைக்கு நேர்மையான அதிகாரிகள் நிறைய வரவேண்டும், உதாரனத்திற்க்கு இந்திய ஆட்சிப்பணி எனப்படும் முதல்வகை அதிகாரிகள் நல்லவர்களாக தங்கள் பதவியேற்கும்போது செய்து கொடுத்த சத்தியத்தின்படி நடந்து கொண்டாலே போதும். முக்கியமாக காவல்துறை, வக்கீல்கள் நேர்மையாக இருந்தாலே நாடு சடுதியில் மேலெழும்பும். /

இப்படி செய்தால் மாற்றம் வரும் கண்டிப்பாக...

vinthaimanithan சொன்னது…

அடேங்கப்பா! எவ்ளோ பேரு கொந்தளிச்சிருக்காங்க! நாட்டுல சமூக அக்கறை ரொம்ப அதிகமாயிடுச்சிடோய்! எல்லாப் பதிவர்களும் கண்டிப்பா இனி கலப்பனி பெய்தாலும் களப்பணி ஆத்தணும்...

Chitra சொன்னது…

அரசாங்க வேலைக்கு நேர்மையான அதிகாரிகள் நிறைய வரவேண்டும், உதாரனத்திற்க்கு இந்திய ஆட்சிப்பணி எனப்படும் முதல்வகை அதிகாரிகள் நல்லவர்களாக தங்கள் பதவியேற்கும்போது செய்து கொடுத்த சத்தியத்தின்படி நடந்து கொண்டாலே போதும். முக்கியமாக காவல்துறை, வக்கீல்கள் நேர்மையாக இருந்தாலே நாடு சடுதியில் மேலெழும்பும்.


.....sweet dreams!

அன்பரசன் சொன்னது…

//தனி மனித ஒழுக்கம் இன்மையும்தான்//

இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மாற்றம் வந்தால்போதும். பலமாற்றங்கள் தானாக நிகழும் என்பது என் கருத்து.

Unknown சொன்னது…

//இருபது வயதுக்கு பின்னும் பெற்றோர் காசில் வாழும் அவலமும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அளப்பரிய சுதந்திரத்தை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பதின்மவயதில் காதல் வலை வீசுவதிலும், வெட்டியாய் ஊரை சுத்துவதிலும் கழிப்பதால் பணம் பண்ணும் கலையை பற்றி அறியாமல் அடிமாட்டு நிலைக்கு ஆளாகி குறைந்த சம்பளத்தில் வெறுப்புடன் வேலை பார்த்து பல நிறுவனங்கள் தாவுகின்றனர்.//

correct

Unknown சொன்னது…

//தயவு செய்து வருகிற தேர்தல்களில் நடுநிலையாளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை சமூக ஆர்வலர்களுக்கு அளியுங்கள்//
இதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இல்லையனில் ஊமை கண்ட கனவாகி விடும்..

Unknown சொன்னது…

பேச்சுப் போட்டிக்கு தயாரித்தது போல கருத்தாழமிக்க கட்டுரை.

ராஜன் சொன்னது…

சார், நமது பலம் + பலவீனம் = 100௦௦+ மக்கள் தொகை .

a சொன்னது…

//
முக்கியமாக காவல்துறை, வக்கீல்கள் நேர்மையாக இருந்தாலே நாடு சடுதியில் மேலெழும்பும்.
//
mika sariyana kanippu...... nadanthal nalla irukkum. mmmmmm......

வடுவூர் குமார் சொன்னது…

மழை நீர் வடிகால்கள் இப்போது சாலையோரங்களில் அமைப்பதே இல்லை.
பிரச்சனையின் ஆணி வேர்.

ராவணன் சொன்னது…

ஒழுக்கம் எப்போதும் தானாக வருவதில்லை.

சட்டங்கள் கடுமையாக இல்லாவிட்டால்,
அதை செயல்படுத்தும் அமைப்பும் சரியாக இல்லாவிட்டால், ஒழுக்கம் இல்லாமல் ஒழுங்கீனமாகவே அனைத்தும் இருக்கும்.

ஜோதிஜி சொன்னது…

பெரும்பாலும் நான் பார்த்தவரைக்கும் ஊழல் செய்பவர்களை கேவலமாக பார்க்கும் மனோபாவத்தில் எவருமில்லை. நமக்கு அந்த வாய்ப்பு இல்லையே என்று ஏங்குபவர்கள் தான் அதிகம்.

தமிழ் உதயம் சொன்னது…

அரசியல் விழிப்புணர்வு இருந்தாலும், பல காரணங்கள் மக்களை அடுத்த கட்டத்துக்கு செல்ல விடாம தடுக்குது.

Bibiliobibuli சொன்னது…

அரசியல், சினிமா, ஆன்மீகம் இவற்றினை தோலுரிக்கும் குறைந்தபட்ச நடுநிலைமையோடு கூடிய ஊடக சுதந்திரம். அப்பிடியே, வெளிநாட்டு கொள்கையையும் கொஞ்சம் மாத்தோணும். :))

Unknown சொன்னது…

நல்ல பதிவு

உண்மையில் எனக்கும் அரசியல் மாற்றம் நிகழ ஆசை உண்டு - அதட்க்காகதான் இந்த வெளி நாடு வேலை என்பேன்.

உண்மையில் 40 வயதுவரை மட்டுமே என் குடும்பத்துக்காக (கடமை) உழைத்தல். அதன் பிறகு என் நாட்டுக்காக எதாவது என்னால் முடிந்த சேவை ஆற்ற உள்ளேன். ( உயிர் -ஆண்டவன் இரண்டாவது முறையாக எனக்கு வாழ கொடுத்துள்ளான்)

தமிழ் உதயன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ் உதயன் சொன்னது…

உங்கள் எழுத்துக்களில் அனைத்தும் உண்மை உறைந்துள்ளது. அரசியல் என்பது வியாபாரமாகி போனது என்பது உண்மை ஆனால் இதை நீக்க வேண்டிய சமூக அரவலர்கள், கற்றவர்கள் அனைவரும் தயாராகமல் வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த நிலை மாற முதல் படியாக வருகிற சட்ட மேலவை தேர்தலில் மேற்கு பட்டதாரி தொகுதியில் நான் போட்டியிடலாம் என்று எண்ணியுள்ளேன். இதுவிஷயமாக விரிவான பதிவு மற்றும் கருத்து பரிமாற்றம் நிகழ்த்த உள்ளேன். பார்ப்போம் என்னதான் அனுபவம் கிடைக்க போகிறது என்று...

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

" பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பு படிக்கும்போதே எதிர்கால திட்டமிடல் ஒன்றை எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும். அடுத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை டாக்டர், எஞ்சினியர் கனவுகளுடந்தான் வளர்கின்றனர்."
இன்று எல்லாப்பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் கனவுகளை அவர்களே காணுகிறார்கள். பிள்ளைகளை கனவு காண விடுவதில்லை.
இந்தப்போக்கு கண்டிப்பாக மாறவேண்டும் .நல்ல பதிவு செந்தில் !

Thoduvanam சொன்னது…

நாட்டைப் பற்றிய கவலையுள்ள எல்லோருடைய ஆதங்கத்தையும் விரிவா சொல்லி இருக்கீங்க.
பாராட்டுக்கள்.இன்றைய இந்திய இளைய சமுதாயம், நமக்கு கிடைத்திருக்கின்ற பெரிய வரப் பிரசாதம்.அவர்களின் அறிவு மற்றும் உழைப் திறனை கூட்டினாலே.நாம்
பல மடங்கு முன்னேறலாம்.
பெற்றோர் டாக்டர்,என்ஜினீயர் என்ற கனவு காண்பதில் தவறில்லை.மற்ற தொழில்களைப் பற்றிய விழிப்புணர்வு,
நமக்கு இன்னும் வரவில்லை.
அடிப்படை வசதிகளுக்கே போராட
வேண்டிய நிலையில்,நாம் குழந்தைகளின் வருங்காலம் பற்றி அறிவுறுத்தி,அவர்களுக்கு ஏற்றமான கல்வியை அளித்தல் அனைவரின் கடமை.தொலைநோக்கு கொண்ட தன்னலமில்லாத, தலைவர்கள்
ஊக்குவிக்கப் படவேண்டும்.இது விஷயத்தில் ஒவ்வொருவரும் சிறு துரும்பையாவது நகர்த்தாமல்,
சும்மா "வெறும் பேச்சு வேலைக்காகாது", என்பது என் கருத்து.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நம்மால் நிச்சயம் ஒரு சிறந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இது வழி வகுக்கும்.//

சரியாக சொன்னீர்கள்....