25 டிச., 2010

பிசாசுகள் உலவும் நகரம்...

கிராமங்களின் நடு இரவுப்பிசாசுகள் 
பகலில் பெயர்கின்றன நகரம் நோக்கி
சிறிது இடைவெளிகளில் 
பேருந்துகளிலும்... 

அலுவலக மதிய உணவு நேரங்களில்...
ரங்கநாதன் தெரு கூட்ட நசுக்கல்களில்...
எங்கணும் உலவும் பிசாசுகளில்
பால்பேதங்கள் இருந்ததில்லை,
சிறிய உரையாடல்களில் 
கடந்து விடுகிற தருணங்களில்
சிதறப்படும்
சொற்களின் குரூரம் 
நள்ளிரவுகளில் 
இமைகளைத் திறந்து அமர்ந்துகொள்ளும்,

நேற்று அதிகாலை 
தன் கோரப்பற்களை காட்டி முறைத்தது 
கண்ணாடியில் 
நான் நன்கறிந்த ஒரு மாயப்பிசாசு...

21 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட...

vinthaimanithan சொன்னது…

நாளக்கி மெட்ராசு வாரப்ப நம்மூரு அங்காளம்மங்கோயில்ல துன்னூறு மந்திரிச்சி வாங்கியாரட்டா? :)))

vinthaimanithan சொன்னது…

இந்த மாதிரியெல்லாம் புரியாத மாதிரி கவிதை எளுதுனா எளக்கியவியாதி ஆயிடலாம்னு நெனப்பா? நடக்கட்டும் நடக்கட்டும்

Bibiliobibuli சொன்னது…

நீங்க பரவால்ல செந்தில் அதிகாலையில் மட்டுமே பிசாசை கண்ணாடியில் பார்க்கிறீர்கள். :))

Very good self reflection :)

க ரா சொன்னது…

உங்க கவிதயும் , அதற்கு விந்தை போட்ருக்கற கமெண்டும்.. என்னவோ போங்க.. நடத்துங்க ரெண்டு பேரும் :)

vinthaimanithan சொன்னது…

வெற்றி..வெற்றி...மாபெரும் வெற்றி! அண்ணனோட கவிதைய ஒருத்தங்க புரிஞ்சிகிட்டு பின்னூட்டம் போட்ருக்காங்க :)))

RK நண்பன்.. சொன்னது…

நான் நினைக்கிறேன், விந்தை மனிதன் அண்ணன் வீட்டுக்கு கூட விடிய காலைல வந்துருப்பார்னு...

விந்தை ஏன் இந்த மொக்கை.... அண்ணன் கவிதய விட நீங்க பெருசா பின்னூட்டம் போடுறீங்க..

அண்ணன் கவிதை எல்லாருக்குமே புரியுதுங்க...ஆனால் நீங்க கவிதை எனிர பேர்ல முதல்ல போட்டிங்களே அதன் கழுத ஒண்ணும் இந்த மண்டைக்கு ஏரல.. :-

vinthaimanithan சொன்னது…

@ RK நண்பன்..
அலோவ்... அது கந்தசஷ்டிக் கவசமுங்க :))))

ஜோதிஜி சொன்னது…

இந்த முறை தலைப்பு கவர்ந்த அளவிற்கு கொடுத்த தாக்கம் குறைவு.

செந்தில்குமார் சொன்னது…

கே.ஆர்.பி செந்தில்...
உண்மைதான் பிசாசு தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிரான்...எதை அடைய என்று தெரியாமல்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

வினோ சொன்னது…

அண்ணா புரிச்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...

கமலேஷ் சொன்னது…

உங்க கண்ணாடியில் மட்டுமா,, எல்லோர் வீட்டு கண்ணாடியிலும் மிக பழகிய ஒரு மாய பிசாசு தெரியதானன்னே செய்யுது. ஆனா அதை என்ன செய்றதுன்னுதான் தெரியலை....

ரொம்ப நல்லா வந்திருக்குன்னே..

மாணவன் சொன்னது…

//நேற்று அதிகாலை
தன் கோரப்பற்களை காட்டி முறைத்தது
கண்ணாடியில்
நான் நன்கறிந்த ஒரு மாயப்பிசாசு...//

நிகழ்வுகளை சொல்லிருக்கீங்க அண்ணே

பகிர்வுக்கு நன்றி

Philosophy Prabhakaran சொன்னது…

சத்தியமா புரியல.... இந்த மாதிரி டீஜண்டா ஒத்துக்கோங்களேன்பா...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

//நேற்று அதிகாலை
தன் கோரப்பற்களை காட்டி முறைத்தது
கண்ணாடியில்
நான் நன்கறிந்த ஒரு மாயப்பிசாசு..//

ஆஹா.. அருமை.. கண்ணாடிக்கு இந்தப்பக்கமா இல்ல அந்தப்பக்கமா? :))

அதைய ஒன்னும் பண்ண முடியாது.. விட்டுப் புடிச்சி விளையாட வேண்டியது தான். :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணனின் கவிதைக்கு மார்கழி மாத காலை கோவிலுக்குப் போயிட்டு வாரப்போ கந்தர் சஷ்டி கவசத்தைக் கேட்டுட்டு வந்தெல்லாம் பின்னூட்டம் போடப்படாது...

dheva சொன்னது…

கடைசி நாலு வரியில் உங்க உள்ளமைய சொல்றீங்கனு மட்டும் புரியுது........

மத்தபடி கிராம்த்திலிருந்து நகரத்துக்கு வந்த பிசாசு எது? அது ஏன் மதிய உணவு இடைவேளையிலும் ரங்கநாதன் தெருவிலும் உலாவி குரூரமான வார்த்தைகளை கொட்டி உங்களை அதிகாலையில் விழிக்கவைத்து..............இப்படி நீள்கிறது என் கேள்விகள்

உங்கள் சொந்த அனுபவமாயிருக்குமோ...........?

கவிதை விடுகதையாகிப் போனது போல எனக்குத் தோணுது செந்தில்.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தமிழ்மணத்தில் 2-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

எனக்குதான் புரியலையோனு நினைத்தேன்.ஆனால் நிறைய பேருக்கு புரியலன்னு பின்னூட்டம் பாத்து தெரிஞ்சுகிட்டேன்.உங்கள் விளக்கம் கொஞ்சம் உதவியது.உங்க கிரியேடிவிட்டி, கண்களை அதிகமாக விழித்து படிக்கதான் வைக்கிறது.

ஹேமா சொன்னது…

செந்தில்...அதிகாலையிலேயே கண்ணாடி பக்கம் என்ன வேலை உங்களுக்கு !