31 மே, 2011

முத்தம்...


உன் 
முதல் முத்தத்திற்கே 
மொத்த ரத்தமும் 
முகத்தில் வந்து நிற்க 
மறுபடி முத்தமிட்டு 
இதயத்தை நிறுத்திச்சென்றாய்..

திருமண வீடொன்றின் 
அதிகாலை இருட்டில் 
அழுத்தமாய் முத்தமிட்டு 
அவசரமாய் விலகிச்சென்றாய்..

முத்தத்தால் காதல் சொன்ன
முதல் ஆள் நீயாகத்தான் இருப்பாய்..

அதன்பின் 
எத்தனயோ சந்தர்ப்பங்கள் 
ஏராளமாய் முத்தங்கள் 
கொடுத்து.. வாங்கி 
வாங்கி.. கொடுத்து 
தருவதிலும்..பெறுவதிலும் 
உனக்கும் அலுக்கவில்லை 
எனக்கும் சலிக்கவில்லை..

முத்தங்களால் 
ஆடை போர்த்தும் வித்தைகள் 
நித்தம்.. நித்தம்..
நாவின் ஒரே பயன் 
சுவை.. 
மேலும்.. மேலும் 
சுவை..
சுவைத்து சுவைத்து 
சுவை..

ஆனாலும் 
முதன்முதலாய் 
யான் பெற்ற ஈரங்கள் 
இரண்டைப் போல் 
எப்போதும் இல்லை 
கொடுத்ததும் 
பெற்றதும்..

நதிகளைப்  பருகியவன் நான் 
மழைத்துளிகளால் 
தீர்க்க முயல்கிறாய் என் 
தாகத்தை..

தாகம் 
தாபம் 
மோகம் 
முடிவிலா சாபம் 
முத்தங்களால் தீர்ப்போம் வா!..

15 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உதடுகளை உரசி விட்டு வருகிறேன்..

Unknown சொன்னது…

முத்தம் முத்தம் முத்தமா....
மூன்றாம் உலக யுத்தமா....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முத்தத்தால் சண்டையிடுங்கள் நீடித்திருக்கும் வாழ்க்கையின் சுவையும்..
கனவுகளின் ஈரமும்...

முதல் முத்தம் எப்போதும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது...


இனி வரும் முத்தங்களில் தேடிப்பாருங்கள் அது கிடைக்கிறதா என்று...

அசத்தல் கவிதை..
ரசித்தேன்....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, அந்த முதல் முத்தமல்லவோ முத்தம். அதில் இருக்கும் த்ரில்லும் ஜோரும் தனிதான். அருமையான கவிதை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்பு செந்தில், அருமையான கவிதை. உங்களின் உணர்வுகள் மிக ஆழமாய் பதிந்திருக்கிறீர்கள். சற்றும் எதிர்ப்பாரா அதிர்ச்சி இது எனக்கு. நல்ல வளமையான எழுத்துத் திறமை இருக்கிறது உங்களிடம். தொடர்ந்து ஆழம் குறையாமல் எழுதுஙகள்.

rajamelaiyur சொன்னது…

Photo super . . I said photo quality. . . He . . He. . He. .

ராஜா பேசுகிறேன் ... சொன்னது…

என்ன மாமா படம் செம பொருத்தமா இருக்கு!!!!!!!!!!

SOS சொன்னது…

நதிகளைப் பருகியவன் நான்
மழைத்துளிகளால்
தீர்க்க முயல்கிறாய் என்
தாகத்தை..

ரசிக்க வைத்த வரிகள்.

Thekkikattan|தெகா சொன்னது…

:) ரசனை! அழகான கவிதை...

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நதிகளைப் பருகியவன் நான்
மழைத்துளிகளால்
தீர்க்க முயல்கிறாய் என்
தாகத்தை..//

சூப்பர் பாஸ் :-)

சசிகுமார் சொன்னது…

கவிதை அருமை அண்ணே

பெயரில்லா சொன்னது…

வரிகள் அருமை..
புகைப்படம் வேறு வைத்திருக்கலாமே..

erodethangadurai சொன்னது…

முதல் முத்தத்திற்கே
மொத்த ரத்தமும்
முகத்தில் வந்து நிற்க
மறுபடி முத்தமிட்டு
இதயத்தை நிறுத்திச்சென்றாய்..



அருமையான கவிதை வரிகள்.

சூன்யா சொன்னது…

படத்தை மாற்றுங்களேன்.. ப்ளீஸ்..!

www.soonya007.blogspot.com

Bibiliobibuli சொன்னது…

சரி, சரி, சாபம் தீர்க்கிறவங்க எல்லோரும் இனி புதியவழி கண்டுபிடிக்க கிளம்பு போறாங்க.

செந்தில், நீண்ட நாட்களின் பின் உங்கள் தளத்தின் பக்கம் தலைகாட்டியிருக்கிறேன். ஏனோ தெரியவில்லை பல சமயங்களில் உங்கள் தளத்தின் இணைப்பு கிடைக்க சிரமப்படுகிறேன். இழுத்துக்கொண்டு இருக்கும். அதே போல் விந்தை மனிதனின் தளமும்.