ஒரு கருத்தை சொல்ல
விளைவுகள் விஷமாகி
அப்படி சொல்லவில்லை
எனப் பின் வாங்க ...
ஒரு காதலை சொல்ல
வளர்ந்த காதல்
தளரும்போது
ஒருவர்
மற்றவரின்மேல் சுமத்தும்
குற்றச் சாட்டுகளை....
ஒரு திருமண முறிவின்
தொடக்க அத்தியாயத்தில்
சிறிய குறைகள்
முடிவுரையில்
பெரிய சுமைகள் ...
ஒரு கட்சி ஆரம்பிக்க
ஒரே கொள்கை
கூட்டணி சேர
ஆயிரம் விளக்கம் ...
ஒரு நட்பு துளிர்க்கிறது
சோகம் சுமக்கையில்
நிதி பரிமாற்றங்களில்
உடைந்து போகிறது
கேலிப் பேச்சுகளில்
மீளாக் கடன்களில் ...
ஒரு சொல்
கோபமாக
சந்தோசமாக
துக்கமாக
கேலியாக
இரக்கமாக
வெளிவரும்போது
சில
இதயங்கள்
நெருங்கவோ
விலகவோ செய்கின்றன....
இப்படித்தான்
ஆரம்பிக்கும் ஒரு
சொல்
எப்படி எப்படியோ
மாறிவிடுகிறது...
16 கருத்துகள்:
//ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது//
சொற்களில் சுழலும் உலகம் மட்டுமல்ல... சொற்களே உலகமாக மாறிச் சுழல்கின்றன.
என் வாழ்வின் பிரதிபலிப்பை உங்கள் கவிதையில் உணர்கிறேன்
//ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது//
தேவன் தன் சொல்லால்
சிலுவையில்
அறையபட்டான் ..
இன்னும் வரவில்லை
இன்னொரு மீட்பர்
நட்பு துளிர்க்கும் சொல்லாக சொல்கிறேன்,
இக்கவிதையின் எந்த சொல்லை என்ன சொல்லி பாராட்டுவதென தெரியவில்லை.!
//நட்பு துளிர்க்கும் சொல்லாக சொல்கிறேன்,
இக்கவிதையின் எந்த சொல்லை என்ன சொல்லி பாராட்டுவதென தெரியவில்லை.//
நன்றி..தமிழ் மீரான்
நல்லா இருக்குங்க செந்தில்!
:)
--
டெம்ப்ளேட் மாத்தலாமே?
//டெம்ப்ளேட் மாத்தலாமே//
மாத்திடுறேன் சார் ..
ஒரு நட்பு துளிர்க்கிறது
சோகம் சுமக்கையில்
நிதி பரிமாற்றங்களில்
உடைந்து போகிறது
கேலிப் பேச்சுகளில்
மீளாக் கடன்களில் ...
..... very nice..... உண்மையை, கவிதை வரிகளில் அருமையாக காண முடிகிறது...
அருமை செந்தில்.ஒரு சொல்லில்தானே நஞ்சும் விஷமும்.அந்தச் சொல் மனதில் அணுகும் தன்மையைப் பொறுத்தது !
நல்லா இருக்குங்க
மனதை தோட்ட கவிதை
நன்று.
இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் .
அன்புடன்
கலாநேசன்
//..... very nice..... உண்மையை, கவிதை வரிகளில் அருமையாக காண முடிகிறது.//
நன்றி சித்ரா, எல்லாம் அனுபவம்தான் ..
//ஒரு சொல்லில்தானே நஞ்சும் விஷமும்.அந்தச் சொல் மனதில் அணுகும் தன்மையைப் பொறுத்தது !//
உண்மைதான் ஹேமா..
//நல்லா இருக்குங்க//
நன்றி அண்ணே ..
//மனதை தொட்ட கவிதை//
நன்றி ரமேஷ் ..
//இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் .
அன்புடன்
கலாநேசன்//
நிச்சயம் பூர்த்தி செய்வேன் அண்ணே....
கருத்துரையிடுக