28 மே, 2010

தேவதைக் கதைகள் " தமிழ்செல்வி" இரண்டாம் பாகம்


வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் நேர்கையில் நிலைகுலைந்து போகாமல் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் சுலபமாக எதிர்நீச்சல் போடமுடியும். ஆனால் தன் வாழ்வில் தீவிர நேர்மையை கடைபிடித்த அம்மா தன் மகனுக்கு நேர்ந்த கொடுமைகளால் தவித்துப் போனார். அன்று சரவணன் என்னிடம் சொன்னவற்றை நான் அச்சில் ஏற்ற விரும்பவில்லை.ஆனால் அதைக் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பவர்கள் இந்த பதிவை படியுங்கள். தன்னுடைய எல்லா சிரமங்களும் முடிந்துவிட்டன என நினைத்த அந்த தாயை நினைத்து அப்போது பெரிதும் கவலைபட்டேன்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு "பெண் எடுக்கும்போது குடும்பத்தை பார்த்து எடு" கொடுக்கும்போது மாப்பிள்ளையை பார்த்து கொடு என்று" தவறான ஒரு குடும்பத்துக்குள் சரவணன் மாட்டிகொண்டுவிட்டான் எனத் தெரிந்தது. சரி நான் வேண்டுமானால் அவர்களிடம் சென்று பேசிப்பார்க்கவா  என்றேன். இல்லை அண்ணா, எல்லாம் முடிந்துவிட்டது, இனி பேசி பயன் இல்லை, நான் பிரிந்து விடவே விரும்புகிறேன் என்றான்.
இதற்க்கு என்ன பதில் சொல்வது என அன்று நான் குழம்பிபோனேன், சரி ஒரு ஆறுமாதத்துக்கு பிரச்சினைகளை விட்டு விலகு, அதன் பிறகு பேசுவோம் என்றான், ஆனால் மறுநாளே பிரச்சினை பெரிதானது, அவன் சென்று ஒளியும் இடங்களெல்லாம் விரட்டி சென்று அவனை தொந்தரவு செய்தனர், வேறு வழியே இல்லாமல் யாருக்கும் தெரியாமல் அவன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டான்.


அவனைத் தேடி கண்டு பிடிக்க முடியாத அந்த கும்பல் பெங்களூரில் இவர்கள் தொல்லையே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த அம்மாவையும், தம்பியையும் தேடிக் கண்டு பிடித்து அவர்கள் மேலும் வரதச்சினை கேஸ் போட்டு கைது செய்து சிறையில் வைத்தனர். தன் பிள்ளைகளை நேர்மையாக மட்டுமே வாழவேண்டும் என்று கட்டுபாட்டுடன் வளர்த்த அந்த தாய், தன் பிள்ளைக்காக ஒரு மாதம் சிறையில் வாடினார். எந்த குற்றங்களும் செய்யாத ஒரு அப்பாவி பெண்மணியை, குற்ற பின்னணி உள்ள ஒரு நபர் தன் அரசியல் மற்றும் பண செல்வாக்கினை பயன்படுத்தி சிறையில் வைத்தார். தன் பெண் வாழ்க்கையை இப்படி நாசமாக்க துணிந்த குடும்பத்தையும் அப்போதுதான் நான் பார்த்தேன்.


அருண்மொழி 

சிறை விட்டு வெளியில் வந்ததும் என் வீட்டில்தான் தங்கியிருந்தார், அப்போது அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் எனக்கு செய்த உதவிகளுக்கு நான் அம்மாவுக்கு வாழ்நாள் முழுதும் கடைமைப் பட்டுள்ளேன், அந்த சமயத்தில் என் மனைவி கருவுற்று இருந்தாள், சற்று பிரச்சினையான உடல்நிலையுடன் இருந்த என் மனைவியை தன் மகள் போல் பார்த்துக் கொண்டார், பிரசவ தினத்தன்று என்னிடம் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்தது, மருத்துவமனையில் வைத்து 20000 ரூபாய் கொடுத்தார், என் இரண்டாவது மகன் அருண்மொழி எந்தக் குறையும் இல்லாமல் பிறந்தான் என்றால் அம்மா மட்டுமே காரணம். சில மாதம்  கழித்து தன் மற்றொரு மகன் சபரியுடன் சென்று தங்கிவிட்டார். இப்போதும் தன் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரே ஆறுதல் தியானம் மட்டுமே, இப்போது வாழ்க வளமுடன் அறக்கட்டளையில் துணை பேராசிரியர் ஆக இருக்கிறார், இப்போதும் பிரச்சினைகளுக்குள் தவிப்பவர்களை அரவணைத்து நல்வழிப் படுத்தி அவர்களின் துயரங்களில் பங்கு கொண்டு சேவையாற்றி வருகிறார். இந்த உலகம் எல்லாவற்றையும் பணத்தால் மட்டுமே தீர்மானித்து கொண்டிருக்கிறது. அந்த பணத்தை சம்பாதித்துகாட்ட வேண்டும் என்ற தணியாத கோபத்துடன் தம்பிகள் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர்.

நாளைக்கு அவர்கள் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வருவார்கள், மீண்டும் அவர்களின் வாழ்வில் வசந்தம் மலரும். ஆனால் காலம் ஒரு தாயை இப்படி தடுமாற வைத்த வேதனையை அவர்களால் மறக்க முடியுமா என்றுதான் தெரியவில்லை.

தம்பிகள் சபரியின் மூலமும், தினேஷின் மூலமும் அம்மா மீண்டும் சந்தோசமாக வாழ்வார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்..

14 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வரதட்சணை வைத்து ஏமாற்றும் பெண்கள் மீது பயங்கர நடவடிக்கை எடுக்கணும்

Unknown சொன்னது…

அந்த தாயும், தம்பிகளும் நிறைவாய் வாழ வேண்டுகிறேன்

Unknown சொன்னது…

நன்றி..

ரமேஷ்

கலாநேசன்

Chitra சொன்னது…

இப்போது வாழ்க வளமுடன் அறக்கட்டளையில் துணை பேராசிரியர் ஆக இருக்கிறார், இப்போதும் பிரச்சினைகளுக்குள் தவிப்பவர்களை அரவணைத்து நல்வழிப் படுத்தி அவர்களின் துயரங்களில் பங்கு கொண்டு சேவையாற்றி வருகிறார். இந்த உலகம் எல்லாவற்றையும் பணத்தால் மட்டுமே தீர்மானித்து கொண்டிருக்கிறது. அந்த பணத்தை சம்பாதித்துகாட்ட வேண்டும் என்ற தணியாத கோபத்துடன் தம்பிகள் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர்.



...... ரொம்ப கஷ்டப் பட்டு விட்ட அந்த நல்ல உள்ளம் கொண்ட தாய், வளமுடன் வாழட்டும். :-)

சௌந்தர் சொன்னது…

வரதச்சனை சட்டம் தவறாக பயன்படுத்த படுகிறது...

Unknown சொன்னது…

நன்றி ..

சித்ரா

சௌந்தர்

ஜெயந்தி சொன்னது…

அந்தத் தாயும் மகனும் பாவம். நல்லவர்களுக்கு இப்படித்தான் அமைகிறது. உங்கள் நண்பரை நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்ளச் சொல்லலாமல்லவா?

Unknown சொன்னது…

//அந்தத் தாயும் மகனும் பாவம். நல்லவர்களுக்கு இப்படித்தான் அமைகிறது. உங்கள் நண்பரை நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்ளச் சொல்லலாமல்லவா?//

அவன் நொந்து போய் வேறு திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டான் ..

நேசமித்ரன் சொன்னது…

வலி :(

பெயரில்லா சொன்னது…

see.. how logical the following dialogs are :)

ஜிகினாஸ்ரீ : நான் உங்களிடம் முக்கயமாக பேசவேண்டும் நான் ஒருதரை ஆறு மாதமா sincere ரா love பண்றேன் உங்கள என்னால் hubby யா think பண்ண முடியல

உங்கள எனக்கு 2 months சாதான் தெரியும் அவர எனக்க 6 months சா தெரியும். நீங்களே என்மிது இவ்வளவு பிரியமா இருக்கும் போது அவரு என்மேல எவ்வளவு பிரியமா இருப்பாறு...?

நான் : இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல நான்தான் பொண்ணு பாக்க வரும்போதே கேட்டேன்ல

ஜிகினாஸ்ரீ : அப்போ எல்லாரும் பக்கத்துல இருந்தாங்க அதான் சொல்லல

நான் : ஒரு மாசமா daily உன்கிட்ட phone ல பேசிக்கிட்டு இருக்கேன் அப்பொதாவது சொல்லிருக்கலாம்ல... ok ரொம்ப நல்லது இப்பயாவது சொன்னயே ரொம்ப சந்தோஷம் சரி

Anisha Yunus சொன்னது…

இன்ஷா அல்லாஹ்,

இறைவன் அத் தாய்க்கு ஆதரவை தருவானாக‌

ஹேமா சொன்னது…

கண் கலங்க வைத்த பதிவு செந்தில்.
நல்லவர்களுக்கு எப்பவுமே குறையிருக்காது.

ஜெய்லானி சொன்னது…

என்ன சொல்றதுன்னே ஒரு நிமிஷம் புரியல ..!!

Unknown சொன்னது…

நன்றி..

நேசமித்திரன் சார்

வசந்த்

அன்னு

ஜெய்லானி

ஹேமா ...