நீங்கள் அடிக்கடி ரேசன் அரிசிக் கடத்தலும் அதைக் கண்டுபிடித்த செய்திகளும் படித்து இருப்பீர்கள், அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அரிசிக் கடத்தல் இது..
ஆந்திராவில் சில்கி என்ற பெயரிலும், கர்நாடகாவில் சோனா மசூரி என்ற பெயரிலும் விளையும் அரிசி நம் தமிழகத்தில் விளையும் பொன்னி அரிசி மாதிரியே இருக்கும். இதனை அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு போடும் வரை தஞ்சை பொன்னி என்ற பெயரில் , அரபு மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு நிறைய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன.
சன்ன ரக அரிசியான இதனை பெரும்பாலும் வெளிநாட்டில் வேலை செய்யும் நம் ஊர்க் காரர்கள் மட்டுமே பயன் படுத்தி வந்தனர், அவர்கள் வேறு அரிசி வகைகளை சாப்பிட மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் நம் மத்திய அரசு பாசுமதி அரிசி நீங்கலாக மற்ற அனைத்து அரிசி வகைகளுக்கும் ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. உள்நாட்டில் உணவு விலைகள் குறையாமல் இருப்பதற்கு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் அரிசியை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தது. இதனைக் கண்டு சந்தோசப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
தடை விதிக்கப்பட்டவுடன் இந்த வகை அரிசிக்கான விலைகள் சிங்கப்பூரில் தாறு மாறாக ஏறிவிட்டது. பதுக்கி வைத்தவர்கள் மட்டும் கொள்ளை லாபம் பார்த்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து அரிசி கிடைக்காது என்று அங்கு உள்ள நம்மவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது தாராளமாக அரிசி கிடைக்க ஆரம்பித்தது.
எந்த அரிசி இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை செய்யப் பட்டதோ அதே அரிசி பாசுமதி அரிசி என்ற முத்திரையுடன் உள்ள மூட்டையில் தாராளமாக கிடைக்கிறது.
நான் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தேன் அங்கு இதைப் பற்றி விசாரித்தபோது துபாய்க்கு கப்பலில் அனுப்பி அங்கிருந்து சிங்கப்பூர் வருவதாக சொன்னார்கள். அதிலும் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அரிசி அங்கு தாராளமாக கிடைக்கிறது.
இப்படி கொள்ளைலாபம் பார்ப்பது யார்? ஏன் தடை செய்த மத்திய அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை? தடை செய்ததே இப்படி குறுக்கு வழியில் சம்பாதிக்கதானா? அப்படிஎன்றால் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார்? விடை தெரியா கேள்விகள்....
இந்திய அரசின் மெத்தனத்திற்கு இது ஒரு முக்கிய சாட்சி....
34 கருத்துகள்:
இது இந்தியா.
இது தான் இந்தியா.
இதற்கு தான் இந்தியா.
//இது இந்தியா.
இது தான் இந்தியா.
இதற்கு தான் இந்தியா. //
என்னமோ போங்க.. ரொம்ப வருத்தமா இருக்கு..
நன்றி தமிழ் உதயம் ..
திடுக்கிட வைக்கின்றன தகவல்கள். :-(
//திடுக்கிட வைக்கின்றன தகவல்கள். :-( //
அங்கு நான் பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்..
நன்றி சேட்டைக்காரன் ..
செய்திகள்...செந்தில்.
நன்றி.
//செய்திகள்...செந்தில்.//
நன்றி. .ஹேமா
இதையெல்லாம் மாத்த முடியாது பிரதர்...
//இதையெல்லாம் மாத்த முடியாது பிரதர்..//
அப்ப நாம மாறிக்கலாம் ..
நன்றி ரமேஷ் ..
" தடை செய்ததே இப்படி குறுக்கு வழியில் சம்பாதிக்கதானா? "
அப்படித் தான் நானும் நினைக்கிறேன் தோழர் ...
// இந்திய அரசின் மெத்தனத்திற்கு இது ஒரு முக்கிய சாட்சி.... //
பதிவர்களின் விழிப்புணர்வுக்கு உங்கள் பதிவு சாட்சி ....
இது சிங்கப்பூரில் மட்டும் அல்ல... இங்கு ஐரோப்பாவிலும் நாங்கள் கண்கூடாக காண்பது.
//பதிவர்களின் விழிப்புணர்வுக்கு உங்கள் பதிவு சாட்சி ....//
நன்றி நியோ...
//இது சிங்கப்பூரில் மட்டும் அல்ல... இங்கு ஐரோப்பாவிலும் நாங்கள் கண்கூடாக காண்பது//
தமிழ்நாட்டின் அரசியல் புள்ளி ஒருவரின் ஆதரவோடு இது நடை பெறுவதாக சொல்கிறார்கள்..
நன்றி பிரேம் ..
எப்படியெல்லாம் சிந்திக்கிறாய்ங்க.
இதெல்லாம் ஒரு மேட்டரா?, எங்களுக்கு அடுத்த ஐ.பி.எல் எப்ப வரும், எந்திரன் எப்ப வரும், நித்தியானந்தா பத்தி புதுமேட்டர், தமன்னாவோட வால்பேப்பர்ஸ் இதப்பத்தித்தாங்க எங்க எண்ணமெல்லாம். அதான் கலைஞர் 1 ரூபா அரிசி போடுறார்ல... வீட்டுக்கு சுமோ அனுப்பவா?
ஊடகங்களில் தவறிய செய்தியை ஊரறிய செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.
அலிபாபா.காமிற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ?
பயனுள்ள பதிவு
இந்தியாவுக்கு உள்ளேயும் ஏராளமா நடக்குதுங்க.
நம்ம ஊரு பொன்னி இங்க 44 ரூபாய்
//ஊடகங்களில் தவறிய செய்தியை ஊரறிய செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.
அலிபாபா.காமிற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ?//
இருக்கலாம்...
நன்றி நீச்சல்காரன் ....
நன்றி...
காமராஜ் அண்ணே ..
//வீட்டுக்கு சுமோ அனுப்பவா?//
அண்ணே எனக்கு சைக்கிள் கூட அனுப்ப முடியாதுன்னு கருணாநிதி ஏற்கனவே சொல்லிட்டாரு...
நன்றி ஜானகிராமன் அண்ணே ..
//நம்ம ஊரு பொன்னி இங்க 44 ரூபாய்//
அதையும்ல வாங்கி சாப்புடறோம்....
இது ஆந்த்ராவுல கிலோ 22 ரூபாய் ...
நன்றி கலாநேசன் அண்ணே ..
முதலாளித்துவ நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். வீதிக்கு வீதி கம்மியுனிஸ்ட்களும் DYFI அமைப்பினரும் என்னதான் கூட்டம் போட்டு பேசினாலும் அதிலும் உள்குத்து நடந்து இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது!
//முதலாளித்துவ நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.//
எங்களுக்கு அடுத்த ஐ.பி.எல் எப்ப வரும், எந்திரன் எப்ப வரும், நித்தியானந்தா பத்தி புதுமேட்டர், தமன்னாவோட வால்பேப்பர்ஸ் இதப்பத்தித்தாங்க எங்க எண்ணமெல்லாம். அதான் கலைஞர் 1 ரூபா அரிசி போடுறார்ல...
ஜானகிராமன் சொன்ன பதில்தான் ..
நன்றி உதயகுமார் ..
யாராச்சும் சொல்லனும்ல
சட்டத்துல ஓட்டை இருக்கற வரைக்கும் ஊழல் பேய்கள் கொளுத்து கொண்டே தான் இருக்கும்
இப்படியெல்லாம் நடக்குதா?
அதிர்ச்சியான தகவல்கள் நண்பரே. இன்னும் என்னவெல்லாம் புதிது புதிதாய் யோசித்து நம்மை ஏமாற்றுவார்களோ..
நன்றி ..
நேசமித்திரன்
கணபதி
ஜெயந்தி
சரவணக்குமார்
சரியான உட்டாலக்கடி வேலை...
எத்தனை காலம்தான் ஏமாற்றுஆர் இந்த நாட்டிலே?
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
கொய்யாலா அசந்தா கோக்கணத்தையும் உருவிட்டுப் போயிடுவாங்க பார்த்து இருக்கணும் சாமியோ
!!!!!!
செந்தில்,
இதே செய்தியை கடந்த மாதம் நானும்,
ஜெர்மனியில் தொழில் புரியும் நண்பர்
சொல்லக் கேட்டுக் அதிர்ந்து விட்டேன்.
இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ரகங்கள்
'பாசுமதியாக' துபாய் வழியாக ஐரோப்பா
நாடுகளில் விற்பனை ஆகிறதாம்.
வடநாட்டு தலைதான் டர்பன் கட்டிக்கிட்டு
இந்த அரிசி ஆட்சி நடத்துவதாகவும் தகவல்.
இந்த பூனையும்.. கதைதான்.
அன்பின் செந்தில்
இதுதான் இன்றைய நிலை - ஒன்றும் செய்ய முடியாது
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
பகிர்விற்கு நன்றி
கருத்துரையிடுக