18 மே, 2010

தாய்மையுடைத்து ..

புனிதர்களின் சந்தேகங்கள் தீர்க்கமானவை
பழய மொந்தையில் புதிய கள்
தலையாட்டு, பின் பற்று, 
பற்றுகள் இருந்தால் எழுதிவை .

அயோத்தியின் தீ 
சீதையை  சலவை செய்து 
ராமனை அழுக்காக்கியது,
கறைபட்ட கணவனால் கைவிட்ட 
காரிகை ஒற்றைத் துணியுடன் ,
இழுத்து வாவென்றவன் கொடையாளி.

பதி, வதியின் காதல் கொன்ற 
மதி கெட்ட மன்னன்.,மெரினாவில் 
பார்த்தால் மிரட்டிவை என்றான்.

அமாவாசை, பவுர்ணமி 
அலையும் மனதின் கூச்சல் 
பைத்தியம் என்று பெயரிடு.

மார்க்கம் சொன்ன மார்க்கம் 
கணவனின் மனைவிமார்கள்,

பாதிரிமார்கள் புனிதர்கள், 
இன்னொரு மீட்பன் வருவான்
கன்னியாஸ்த்ரீகளின் கருப்பையில் 
பிறப்பெடுக்க.

ஆதி சிவன் பாதி தந்தான்
பெண்மை தாய்மை..
கொண்டாடி கொன்று போடு...

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நடக்கும் கொடுமைகள் பார்த்து நக்கலாய்ச் சிரிக்கும் குழந்தையின் படமே ஒரு கவிதை சொல்கிறது.
கவிதையின் வரிகளில் உங்கள் ஆதங்கம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nice

Unknown சொன்னது…

நன்றி

ஹேமா

ரமேஷ்

Karthick Chidambaram சொன்னது…

அயோத்தியின் தீ
சீதையை சலவை செய்து
ராமனை அழுக்காக்கியது

Kalakkal varigal nanbare.

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

vasan சொன்னது…

க‌விதையையே விஞ்சிய‌,
குழ‌ந்தையின் எள்ள‌ல், துள்ள‌ல்.

Unknown சொன்னது…

நன்றி

கார்த்திக்

வாசன் சார்

அன்புடன் அருணா சொன்னது…

புரிகிறது வெறுப்பு.நன்றாக வெளிபடுத்தியிருக்கிறீர்கள்.

Unknown சொன்னது…

நன்றி ... அருணா