11 மே, 2010

கண்ணீர்அம்மா பாசத்தில் 
அப்பா இயலாமையில் 
அண்ணன் பாகத்தில்
அக்கா அவசியத்தில் 
தங்கை ரகசியத்தில்

தம்பி தவறுகளில் 
கணவன் பிரவசத்தில்
மனைவி அவசரத்தில்
உறவுகள் மரணத்தில் 
நட்பு பிரிவில் 
காதலி கைவிடலில் 
காதலன் நிராகரிப்பில் 

குழந்தை பசியில்
முதலாளி நஷ்டத்தில் 
தொழிலாளி கஷ்டத்தில் 
போராளி வெற்றியில் 
மாணவன் தோல்வியில் 
அரசன் அழிவில் 
அடிமை இழிவில் 
வீடற்றவன் மழையில் 

விழும்  கண்ணீரில் 
வழிகிறது 
ஆயிரம் அர்த்தங்கள் ....

6 கருத்துகள்:

Chitra சொன்னது…

வீடற்றவன் மழையில்

விழும் கண்ணீரில்
வழிகிறது
ஆயிரம் அர்த்தங்கள் ....


......அருமையாக கவிதை வந்து இருக்கிறது. பாராட்டுக்கள்!

சி. கருணாகரசு சொன்னது…

கண்ணீருக்கான... காரணங்கள்... மிக பொருள் பொதிந்த கவிதை. பாராட்டுக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி....Chitra

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி....சி. கருணாகரசு

ஹேமா சொன்னது…

ம்...உண்மைதான் செந்தில்.
சந்தோஷத்தில்கூட கண்ணீர் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nallaa irukku