எச்சமிட்ட
விதை வளர்ந்து கனியாகி
இன்றைய என் போதைக்கு
ஊறுகாய் ஆனது..
புன்னகையை தவறவிட்ட ஒருவனின்
தாயை
அர்ச்சனை செய்த
வார்த்தைகளை பகிர்பவனிடம்
இரண்டு மாத அறைவாடகை
தர வேண்டும்
பொதுக் கழிப்பிடத்தில்
அவசரத்திற்கு நுழைந்தவனாய்
பதிவுலகின் அரசியல் கண்டு
ஓடி ஒளிகிறேன்
எல்லாக் கோவில்களும்
குறை தீர்க்கும் சாமிகளும்
மீடியேட்டர் ஐயர்களும்
வாசல் பிச்சைக் காரர்களும்
என்
செருப்பைக் களவாண்டவனின்
முகம் அறியாதவர்கள்
மன வீட்டில் உலவும்
புலி ஒன்று
பசிக்கு புற்களை மேய்கிறது
கூடடையும்
பறவைகள் அறிவதில்லை
இரைக்கு காத்திருக்கும்
பாம்புகளை....
30 கருத்துகள்:
வருத்தமாக இருக்கிறது. சமுதாயத்துக்கு நியாயம் சொல்பவர்கள் தமக்குள் துவேஷம் பாராட்டுவது மிகைமுரண். எங்கே செல்லும் இந்தப் பாதை?
:( கேபிள் சங்கர்
//பொதுக் கழிப்பிடத்தில்
அவசரத்திற்கு நுழைந்தவனாய்
பதிவுலகின் அரசியல் கண்டு
ஓடி ஒளிகிறேன்
//
:))
நன்றி..
ஜானகிராமன்.நா
கேபிள் சங்கர்
ரமேஷ்..
பொதுக் கழிப்பிடத்தில்
அவசரத்திற்கு நுழைந்தவனாய்
பதிவுலகின் அரசியல் கண்டு
ஓடி ஒளிகிறேன் ]]
இதுதான் வழி..
//பொதுக் கழிப்பிடத்தில்
அவசரத்திற்கு நுழைந்தவனாய்
பதிவுலகின் அரசியல் கண்டு
ஓடி ஒளிகிறேன்///
உண்மை...எதில் தான் அரசியல் இல்ல...
நன்றி..
புன்னகை தேசம்.
அஹமது இர்ஷாத் ....
கர்ஜனையாய் இருக்குங்க கவிதை.
தெளிவாய் உரத்து சொல்லியுள்ளீர்கள் செந்தில்
நல்ல கவிதை
நல்ல கவிதை செந்தில்
நன்றி...
சி. கருணாகரசு
சிவா (கல்பாவி)
வேலு
யோவ் இன்னும் நான் உனக்கு கமெண்ட்ஸ் போடவே இல்லை அதுக்குள்ளாற ஓடுற? இருய்யா இரு இதுக்கெல்லாம் ஓடுனா எப்பிடி? இன்னும் நிறைய இருக்குடி மாப்ள....வெயிட்...
தொடர்ந்து எழுதுங்க சாமியோவ்... நாங்க இருக்கோம்ல...
இதனாலயே நான் நிறைய மொக்கையா போடுரேன். எதுக்கு வம்பு.
//இன்னும் நிறைய இருக்குடி மாப்ள....வெயிட்...//
அய்யோ போதுன்னே..அல்லாரும் நிறுத்திக்குவோம்..
//தொடர்ந்து எழுதுங்க சாமியோவ்... நாங்க இருக்கோம்ல..//
கெடா வெட்டு..
//எதுக்கு வம்பு//
வாங்க ஜெய்லானி...
'கொடுமை, கொடுமைன்னு,
கோயிலுக்குப் போன,
அங்கவொரு கொடுமை,
அம்மணமா ஆடுக்கிட்டிருந்திச்சாம்'னு
கிராமத்துல வளமை சொல்லருது
இப்ப பதிவுக்காரவுகளுக்கு பொருந்திப் போச்சு.
எல்லாத்துக்கும், எல்லாருக்கும் புத்தி இலவசங்கிற
இவுக இங்கயே விவரிச்சு காமிச்சிட்டாங்கள்ல,
அவுக அவுக பிறப்பு, வளப்பு
எழுத்து, நடை, வகை, தொகை எல்லாத்தையும்.
முதலில் மனிதர்களாய் இருங்க, அப்புறம் ஆகலாம்
பதிவாளர்களாய்.
புரியுது........ஆனா புரியலை!....
இது கவிதை.
குமுறலை அப்படியே கொட்டியிருக்கீங்க..
கவிதை நல்லா இருக்கு..
நடப்புக்கள் அவ்வளவு நல்லா இல்லை.. :(
LOSHAN
http://arvloshan.com/
செந்தில் இரண்டு நாளாக அறிகிறேன் பதிவுலக அரசியல் !கவிதை கக்குகிறது.புரிந்துகொண்டேன்.
வருத்தப்பட வேண்டிய விசயம்தான் (-:
//முதலில் மனிதர்களாய் இருங்க, அப்புறம் ஆகலாம்
பதிவாளர்களாய்//
வரவேற்கிறேன் வாசன் சார் ..
நன்றி...
நேசன்
ஜோதிஜி
LOSHAN
ஹேமா
இராமசாமி கண்ணண்
T.V.ராதாகிருஷ்ணன்
செந்தில் நானும் இதே போன்று ஒரு பதிவு எழுதி உள்ளேன் . நேரம் இருந்தால் பாருங்கள்
//செந்தில் நானும் இதே போன்று ஒரு பதிவு எழுதி உள்ளேன் . நேரம் இருந்தால் பாருங்கள்//
அண்ணே உங்களை வரவேற்கிறேன் ..
பொதுக் கழிப்பிடத்தில்
அவசரத்திற்கு நுழைந்தவனாய்
பதிவுலகின் அரசியல் கண்டு
ஓடி ஒளிகிறேன்
எல்லா இடத்திலும் அரசியல் இருக்கிறது...
நன்றி சௌந்தர் ..
:(
கருத்துரையிடுக