10 மே, 2010

கடவுள் பேசுகிறேன்

பரபரப்பான 
காலை வேளையொன்றில் 
கடைவீதியின் டீ கடையில் 
அரசியல் விவாதங்களோடு 
புகைந்து கொண்டிருக்கும் 
விரல்களுடன் நிற்கையில் 
எங்கள் முன்  தோன்றினார்
கடவுள்
வெறுமனே உற்றுப் பார்த்த 
அவரிடம் 
டீ வேணுமா என்றான் நண்பன் 
தலையாட்டிவிட்டு 
உரிமையுடன் இரண்டு வடைகளும் 
எடுத்துக்  கொண்டார் 
நண்பன் நீட்டிய சிகரெட்டை 
மறுத்து 
டீ வந்தவுடன் 
பீடியுடன் குடித்தார்
அதன்பின்  
எங்காவது எதிர்ப் படுவார்  
கொடுக்கும் காசை 
வாங்கிக்  கொண்டு சிறிய புன்னகை 
தருவார் 
பின்னொரு நாளில் 
டாஸ்மாக் வெளிப்புறமாக 
முகமெல்லாம் 
ஈக்கள் விளையாட 
இறந்து கிடந்தார்... 
கடவுள் !

20 கருத்துகள்:

Chitra சொன்னது…

good one. Whenever you have time, check out the video and lyrics for the song: "What if God was one of us?" You may like it.
http://www.dailymotion.com/video/xbyyl_joan-osborne-what-if-god-was-one-of

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

God is great??
why the beggars are born?/

sorry சித்ரா, எனக்கு கடவுள்மேல்(இருந்தால்?) மிகுந்த கோபம் உண்டு ....

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

இவ்வளவு அருமையான கவிதையில் திருஷ்ட்டிப் பொட்டாக எழுத்துப்பிழைகள் இருக்கலாமா??

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கூடுமானவரை சரி பண்ணியிருக்கிறேன் அப்துல்லா அண்ணன், இன்னும் மாற்ற வேண்டியிருந்தால் மாற்றி அனுப்புங்கள்,
நன்றி அண்ணா ( ஒற்றுபிழைகளைத்தான் கையாள தெரியவில்லை)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்லா இருக்கு.

சி. கருணாகரசு சொன்னது…

கவிதை மிக வலிமை.... பாராட்டுக்கள்.

ஹேமா சொன்னது…

நினைச்சுப் பார்த்தா ஒரு சின்ன நிகழ்வு.அதை எப்படிச் சிந்தித்துக் கவிதையாக்கிக் கடவுளும் ஆக்கிவீட்டீர்கள் செந்தில்.அருமை.

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார், சூப்பர் , ரொம்ப டச்சிங்

தருமி சொன்னது…

present sir !

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//நல்லா இருக்கு//

நன்றி...ரமேஷ்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//கவிதை மிக வலிமை.... பாராட்டுக்கள்.//

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//நினைச்சுப் பார்த்தா ஒரு சின்ன நிகழ்வு.அதை எப்படிச் சிந்தித்துக் கவிதையாக்கிக் கடவுளும் ஆக்கிவீட்டீர்கள் செந்தில்.அருமை.//

வணக்கம் ஹேமா, உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு என் நன்றிகள் ..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//present sir !//

நன்றி ஐயா...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//சார், சூப்பர் , ரொம்ப டச்சிங்//

வாங்க அமைச்சரே ....

ஆதிரா சொன்னது…

இன்னும் ஒரு புதுமைப் பித்தன்.. மனதை அழுத்தும் அருமையான கவிதை செந்தில்..

கமலேஷ் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி ஆதிரா, அவர் legend நான் ஒரு சாதாரண வழிப்போக்கன் ...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி...கமலேஷ்

பெயரில்லா சொன்னது…

neengal solvathai pol kadavul thinamum iranhukonduthan irukkirar.

தியாகு சொன்னது…

தம்பி செந்தில்

எனக்காக நீங்கள் வினவில் பேசியமைக்கு
நன்றிகள்
ஆனால் பாருங்கள் யார் புரிந்து கொள்ளவே மாட்டார்களோ
அவர்களிடம் பேசி இருக்கிறீர்கள்

மற்றபடி நீங்களாவது புரிந்து கொண்டீர்களே ஒரு சிலர்களில்
ஒருவராக

நன்றி
தியாகு