27 மே, 2010

தேவதைக் கதைகள் "தமிழ்செல்வி"

தன் திருமணத்திற்குபின் துயரங்களை மட்டுமே சுமக்கின்ற ஒரு தாயின் கதை இது.

அம்மாவின் மூத்த மகன் சரவணன் எனது பாசமிகு சகோதரன். நான் மதுக்கூரில் வாழ்க வளமுடன் அறக்கட்டளை மூலம் தியானம் பயின்றபோது அறிமுகமானான். நல்ல அறிவுத்திறன் மிகுந்தவன் என்பதால் இவன்மீது அப்போதே எனக்கு தனிப்பட்ட பிரியம் இருந்தது. மதுக்கூர் பஸ் நிலையம் அருகே இவர்களுக்கு சொந்தமான தேனிர் கடையில் எப்போதும் சிரித்த முகத்துடன் அம்மா வியாபாரம் செய்வார். அப்போது அம்மாவும், சரவணனின் தம்பிகளும் ஒன்றிரண்டு சந்திப்புகளுடன் என் அறிமுகம் நின்றுபோனது.

பின்னாளில் சரவணன் சென்னை வந்தபின் அவ்வப்போது எங்கள் சந்திப்பு நடக்கும். அப்போதெல்லாம் பரஸ்பரம் நலம் விசாரிப்போம். சரவணன்  வேலைக்கு போனபின்பு சிரமப்பட்டு தம்பிகளையும் படிக்கவைத்தான். அதில் ஒரு தம்பி சபரி வேலைக்கு போனபின்பு அம்மாவை தேனிர் கடையை மூடிவிட்டு தங்களுடனே வந்து இருக்க சொல்லிவிட்டனர். இந்த காலங்களில் அவர்கள் பெங்களூரில் இருந்தனர்.

எனக்கு தெரிந்தவரை இந்த காலகட்டங்களில் மட்டுமே அம்மா மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. சரி சரவணனுக்கு ஒரு திருமணத்தை நடத்திவிடலாம் என முடிவு செய்து, நல்ல பெண்ணாக இருந்தால் சொல்லும்படி என்னிடமும் சொன்னார்கள்.

சரவணனை பற்றி சொல்லவேண்டுமானால் எந்த குறையும் சொல்லமுடியாது. நல்ல குணம் , எந்த தவறான பழக்கமும் இல்லாதவன், மிகுந்த நேர்மையானவன். எனவே இவனுக்கு ஒரு நல்ல பெண்ணாக அமையவேண்டும் என நானும் பார்கிறவரிடத்தில் எல்லாம் சொல்லிவைத்தேன்.

அதன்பின் வேலையை சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்துவிட்டான். அந்த நேரங்களில் நான் ஏற்றுமதி விசயமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று விடுவதால் சந்திக்கும் வாய்ப்புகள் இல்லை. இப்படி இருக்கும்போது அவன் என்னை தொலைபேசியில் அழைத்து அண்ணா இந்த ஞாயிற்றுகிழமை அவசியம் வீட்டுக்கு வாருங்கள் பெண் வீட்டில் இருந்து வருகின்றனர் நீங்கள் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்றான்.

நான் அன்று சரவணன் வீட்டிற்கு போனேன், பெண் வீட்டினர் மிகவும் அன்பாக பழகினர், எல்லோரும் சாப்பிட்டவுடன் பெண்ணின் அப்பா என்னோடு தனியாக பேசினார். மாப்பிள்ளை  சரவணன் வரதச்சினை எதுவும் வேண்டாம் என்கிறார், நான் ஒரு பெண்தானே வைத்திருக்கிறேன் அதனால் தயவு செய்து நானாக செய்வதையாவது வாங்கிகொள்ளசொல்லுங்கள் என்றார். நான் சரவணனை அழைத்து ஏன்பா பிரச்சினை பண்றே, அவர்களாக செய்வதை செய்யட்டும், அவர்கள் பெண்ணுக்குத்தானே செய்கிறார்கள் அதனால் மறுக்கவேண்டாம் என்றேன். அவனோ அண்ணே உங்களைபார்த்துதான் நான் வரதச்சினை வாங்ககூடாது என முடிவு செய்தேன். அண்ணியை திருமணம் செய்யும்போது நீங்கள் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என மறுத்தது எனக்கு தெரியும். சரி உங்களுக்காக ஒத்துகொள்கிறேன், ஆனால் கடன் எதுவும் வாங்காமல் கையில் இருப்பதை மட்டும் செய்ய சொல்லுங்கள் என்றான். அதன்பின் கிளம்பும்போது அடுத்தவாரம் நிச்சயம் வைத்திருக்கிறோம் அண்ணியுடன் கட்டாயம் வாருங்கள் என வழியனுப்பி வைத்தான்.

அடுத்தவாரம் நிச்சயத்துக்கு அவன் கூப்பிடவில்லை, சரி வேலைபளுவில் மறந்திருப்பான் என விட்டுவிட்டேன். திருமண அழைப்பிதழ் எனக்கு மெயிலில் வந்தது. போன் செய்து விசாரித்தேன். மிகுந்த வேலைகளுக்கு இடையில் நேரில் வர இயலவில்லை. திருமனத்திற்கு அவசியம் அண்ணியுடன் வந்துவிடுங்கள் என்றான். சரி தம்பி வேலையை பாருங்கள் கட்டாயம் வருகிறேன் என்றேன்.

முதல்நாள் வரவேற்பிற்க்கு சென்றிருந்தேன், மண்டபம் களை கட்டியிருந்தது. சரவணன், சபரி, தினேஷ் மூவரும் அன்புடன் வரவேற்றனர், அம்மாவும் சந்தோசமாகத்தான் இருந்தது. நான் கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டு வரவேற்ப்பு நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தேன். மேடையில் நடந்து கொண்டிருந்த நிகழ்வுகள் என்னுள் மெல்லிய கவலையை உண்டு பண்ணியது.

வீட்டிற்கு வந்தவுடன் தம்பி குமாரும், காமாட்சியும் வரவேற்ப்பு நல்லபடியாக முடிந்ததா எனகேட்டனர். ஆம் என்று மட்டும் சொல்லிவிட்டு சாப்பாடு செய்யும்படி காமாட்சியிடம் சொன்னேன், ஏங்க கல்யாண வீட்டில் சாப்பிடலையா என்றாள். இல்லம்மா மனசு சரியில்ல அதனால் சாப்பிடமால் வந்திட்டேன் என்றேன். என்னங்க யாரும் சரியாய் கவனிக்கலையா? நீங்கதான் அத பத்தியெல்லாம் நெனைக்க மாட்டிங்களே என்றாள். அப்படியெல்லாம் இல்லை, எனக்கு சரவணனை நினைத்துதான் கவலை, ஏனென்றால் அந்தபெண்ணை இன்றுதான் பார்த்தேன் அவள் ஆண் தன்மையுடைய பெண், அவளுக்கு பெண் தன்மையுடைய ஒரு ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். ஆனால் சரவணன் யாருக்கும் கட்டுபடாதவன் இருவருக்குள்ளும் எப்படி ஒத்துபோகும் என நினைத்தேன் அதான் மிகுந்த கவலையை அளிக்கிறது என்றேன். சரி நாளைக்கு எத்தனை மணிக்கு திருமணத்துக்கு போகவேண்டும் என்றாள், இல்லம்மா போகவேண்டாம், எனக்கு மனசு சரியில்லை என்றேன். சரவணன் தப்பா எடுத்துவாருங்க நீங்க மட்டுமாவது போயிட்டு வாங்க என்றாள். சரி பார்க்கலாம் என சொல்லிவிட்டு தூங்கபோய்விட்டேன் மறுநாள் நான் போகவும் இல்லை.

அதன்பிறகு ஒரு ஆறு மாதம் கழித்து சரவணனிடம் இருந்து அழைப்பு வந்தது. அன்று அவன் பேசியதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அதனை அடுத்து  எழுதுகிறேன்

19 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

i guess, you are the only writer, writing only real stories. but this have very good coherence, its is great!! i am proposing to give you the "NEXT CHARU" title (any objection!).

Unknown சொன்னது…

"NEXT CHARU" title (any objection!).

அண்ணே நான் நல்லருக்கிறது, உங்களுக்கு பிடிக்கலையா ..

Unknown சொன்னது…

யாருப்பா தொடர்ந்து என் எல்லாப் பதிவுகளுக்கும் மைனஸ் ஓட்டு போடுறது,

ஏன்னு ஒரு கமென்ட் போடுங்க..

Ahamed irshad சொன்னது…

கதை அருமையா இருக்கு..தொடருங்கள்...

சௌந்தர் சொன்னது…

என்ன இப்படி முடிசசிடிங்க. என்னக்கு என்ன நடந்ததுன்னு தெரியணும்...

sethucharan சொன்னது…

annaa naanum madukkur than naan pattukkottai poly ill padiththa pothu saravananai therium appuram naan avangala santhikka vaaipu kidaikkala yenna nadanthathunnu sollunga rommba aaarvamakavum kavalaiyaakavum irukken..

மணிஜி சொன்னது…

சாரு...............

ஹேமா சொன்னது…

அட்டகாசமாய்த் தொடங்கியிருக்கீங்க செந்தில்.தொடருங்கள்.

Syed Vaisul Karne சொன்னது…

I like this story and your writing style too.
Thalivare! When will you write the story of our Drunken Programmer who could not drink even a drop of water?

நேசமித்ரன் சொன்னது…

ம்ம் !

நல்லா இருக்கு!

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார் , கதைமாதிரியே இல்ல , தொடருங்கள்

Chitra சொன்னது…

இது கதைதானா? கதையாக மட்டுமே இருக்கட்டும்... மனதில் ஒரு வலி .....

ஜெயந்தி சொன்னது…

படிக்கும்போது அவங்க அம்மாவுக்கு ஏதும் சிரமம் வந்துவிடக்கூடாது என்று தோன்றியது.

Anisha Yunus சொன்னது…

என்ன ஆச்சுன்னு கேக்கறதுக்கு முன்னாடியே பட‌க்குன்னு கதைய முடிச்சிட்டீங்க? இனி எப்போன்னும் போடலை. எல்லாம் நல்லா இருந்தா சரி.

க ரா சொன்னது…

சீக்கிரம் தொடருங்கள். கதை ரொம்ப நல்லாருக்கு.

Unknown சொன்னது…

எதிர்பார்ப்பை தூண்டும் நல்ல துவக்கம்.

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நன்றி

அகமது இர்ஷாத்..

சௌந்தர் அடுத்த அத்தியாயம் படிங்க

சீதா இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியாது ..

மணிஜி... அண்ணே ஆள விடுங்க..

ஹேமா

சயேத் நிச்சயம் எழுதுவேன்..

நேசமித்திரன்

மங்குனி அமைச்சர் உண்மை...

சித்ரா எனக்கும் வலி ...

ஜெயந்தி சிரமம்தான்

அன்னு இப்போ பரவாயில்லை

இராமசாமி கண்ணன்

கலாநேசன்

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி ..

பனித்துளி சங்கர் சொன்னது…

மிகவும் சிறப்பு நண்பரே . பகிர்வுக்கு நன்றி !

ஜெய்லானி சொன்னது…

இது கதைவே இருக்கட்டும். நிசத்தில வேண்டாம்.