20 மே, 2010

பாழாய்ப் போகும் நிலங்கள் (ஒரு பின் நவீனத்துவ கவிதை?)

சென்னை மாநகரப் பேரூந்தின் அன்றாடப் பயணி 
ஒருவன் சில்லரைகளுக்கான காத்திருப்பின் தவிப்பை 
உணர முடியாத நடுத்தர வாசியின் ஷேர் ஆட்டோ 
பயணத்தின் அடைசலில் சிக்கி இறங்கியபின் உடை கலைந்த 
வருத்தங்கள் பற்றி கவலைப் பட தேவையற்ற கார் 
வைத்திருப்பவனின் அலுவலக நேரம் முடிந்தபின் 
பாருக்குப் போகும்பொது மனப்பாடம் செய்த பொய்யை 
சொல்ல வேண்டிய அவசியமற்ற பணக்கார முதலாளியின் 
விமானப் பயணத்தில் தாமதம் அறிந்தும் கவலை கொள்ளாத
வெளிநாட்டு வாடிக்கையாளன் கொடுக்கும் மரபணு மாற்ற 
விதையை பயன்படுத்தும் ஒரு அப்பாவி ஏழை விவாசாயியின் மகனாகிய 
நான் சென்னை நோக்கி வருகிறேன் புதிய வேலை தேடி..

20 கருத்துகள்:

Chitra சொன்னது…

வெளிநாட்டு வாடிக்கையாளன் கொடுக்கும் மரபணு மாற்ற
விதையை பயன்படுத்தும் ஒரு அப்பாவி ஏழை விவாசாயியின் மகனாகிய
நான் சென்னை நோக்கி வருகிறேன் புதிய வேலை தேடி..


.....mmmm..... reality bites!

பெயரில்லா சொன்னது…

பாழாய்ப் போகும் பயணங்கள் :
இப்படி புல்ல்லியே வைக்காமல் எங்கள் வாயில் கொள்ளியை வைக்கும் அண்ணன் செந்தில்லின் சிங்கபூர் பயணம் ஏன் இப்படி கவிதையாய் கொட்டுகிறது என்பது பின் நவீனத்துவ கவிதையா ?

ஹேமா சொன்னது…

மூச்சு விடாம வாசிச்சேன்.
பாதி புரிஞ்சு ,பாதி மூச்சோடயே போச்சு !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு அப்பாவி ஏழை விவாசாயியின் மகனாகிய
நான் சென்னை நோக்கி வருகிறேன் புதிய வேலை தேடி..//

nice

Unknown சொன்னது…

//....mmmm..... reality bites!//

இனிமே அப்படிதான் வாழ துவங்க வேண்டும்...

Unknown சொன்னது…

//பாழாய்ப் போகும் பயணங்கள் :
இப்படி புல்ல்லியே வைக்காமல் எங்கள் வாயில் கொள்ளியை வைக்கும் அண்ணன் செந்தில்லின் சிங்கபூர் பயணம் ஏன் இப்படி கவிதையாய் கொட்டுகிறது என்பது பின் நவீனத்துவ கவிதையா ?//

நானும் அதைதான் கேட்கிறேன் வசந்த் ...

Unknown சொன்னது…

//மூச்சு விடாம வாசிச்சேன்.
பாதி புரிஞ்சு ,பாதி மூச்சோடயே போச்சு //

எங்காவது இன்னு மூச்சு வாங்கிட்டு வாங்க ..

Unknown சொன்னது…

//nice//

ஒரே கமென்ட் எல்லா பதிவுக்கும் போடுற ஆள் நீங்கதான்,

மாத்தி யோசிங்கப்பா... என் பின் நவீனத்துவம் மாதிரி ..

Philosophy Prabhakaran சொன்னது…

/* சென்னை மாநகரப் பேரூந்தின் அன்றாடப் பயணி
ஒருவன் சில்லரைகளுக்கான காத்திருப்பின் தவிப்பை
உணர முடியாத நடுத்தர வாசி */

இந்த வரிகள் என்னுடைய பேவரிட்... ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்...

கமலேஷ் சொன்னது…

பின் ந.வீ..ன.ம்.....
நல்லா இருக்கு...

மங்குனி அமைச்சர் சொன்னது…

வாங்க , வாங்க இது வந்தாரை வாழவைக்கும் பூமி

Unknown சொன்னது…

நன்றி..மங்குனி அமைச்சர்....

வால்பையன் சொன்னது…

எதோ கவிதைன்னு சொன்னிங்களே, அது எங்க!?

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

எதோ கவிதைன்னு சொன்னிங்களே, அது எங்க!?
தல, தேடித் பாருங்க கிடைக்கும் ....

Karthick Chidambaram சொன்னது…

கடைசி வரிகளில் மனம் வலித்தது. இந்த கவிதையை நேற்றும் படித்தேன் இன்றும்.
சோற்றுக்கும் சோற்று விதை நெல்லுக்கும் அடுத்தவனை நம்பும் தேசம் எங்கே செல்கிறதோ ?
ஊரெல்லாம் வீடாகிவிட்டால் - நாளை
சோறெல்லாம் கிடைக்காது!
இது புரியாமல் ஒரு தேசம். கண்ணிற் சிந்துகிறேன். நண்பரே.

கார்த்திக்
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க.

Unknown சொன்னது…

//கவிதை நல்லாயிருக்குங்க. //

நீங்களே சொல்லிட்டீங்க... ரொம்ப நன்றி அண்ணா ......

Unknown சொன்னது…

//இது புரியாமல் ஒரு தேசம். கண்ணிற் சிந்துகிறேன். நண்பரே..//

நன்றி கார்த்திக் ..

Unknown சொன்னது…

//வாழ்த்துக்கள்//

நன்றி யாதவன் ...