9 மே, 2010

என் தெரு..




பல 
நூற்றாண்டுகளை பார்த்த என்
பாட்டன் 
முப்பாட்டன் வாழ்ந்த  
இந்த தெரு

என் பால்ய 
விளையாட்டுகளில் 
வயதொத்த தோழர்களுடன் 
புழுதிகளில் புரண்டு 
அம்மாவிடம் 
அடிவாங்கவைத்த 
இந்த தெரு 

என் அத்தனை 
சொந்தங்களும் 
வசிக்கும் 
இந்த தெரு 

இந்த உலகத்தின் 
எந்த முனையில் இருந்தாலும்  
என் தேடல் புரிய  வைத்த  
இந்த தெரு  

என் தகப்பனின் 
இறுதி ஊர்வலம் நடந்த 
இந்த தெரு 

இன்று மாலை  ஆறு மணிக்கு
எல்லோரும் பார்க்கும்படி என்
சகோதரன் 
சொத்திற்காக 
துடிக்க.. துடிக்க..
என்னை 
வெட்டிக் கொன்ற
இந்த தெரு 

உங்கள் ஊருக்கும் 
வரக்கூடும்.......

21 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இன்று மாலை ஆறு மணிக்கு
எல்லோரும் பார்க்கும்படி என்
சகோதரன்
சொத்திற்காக
துடிக்க.. துடிக்க..
என்னை
வெட்டிக் கொன்ற
இந்த தெரு //

இதுக்குதான் எங்கப்பா சொத்தும் சேத்து வைக்கல. சகோதரனையும் சேத்து வைக்கல...

Unknown சொன்னது…

//இதுக்குதான் எங்கப்பா சொத்தும் சேத்து வைக்கல. சகோதரனையும் சேத்து வைக்கல//

இது ஒரு உண்மைக் கவிதை ரமேஷ் ,,

செந்தில்குமார் சொன்னது…

நல்லாயிருக்கு

கே.ஆர்.பி.செந்தில்

இந்த தெரு.........

Unknown சொன்னது…

நன்றி... செந்தில்குமார்

Unknown சொன்னது…

//இனிவரும் பதிவுகளுக்கான எதிர்பார்ப்புகளுடன் ..//

நன்றி தருமி ஐயா ....

பெயரில்லா சொன்னது…

//இன்று மாலை ஆறு மணிக்கு
எல்லோரும் பார்க்கும்படி என்
சகோதரன்
சொத்திற்காக
துடிக்க.. துடிக்க..
என்னை
வெட்டிக் கொன்ற
இந்த தெரு

உங்கள் ஊருக்கும்
வரக்கூடும்.......
//

ஏங்க இப்டி பயமுடுத்தறீங்க?

மத்தபடி கவிதை நல்லா இருக்கு செந்தில்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்லாயிருக்கு தெரு

Unknown சொன்னது…

//மத்தபடி கவிதை நல்லா இருக்கு செந்தில்//

நன்றி மது

Unknown சொன்னது…

//நல்லாயிருக்கு தெரு//

நன்றி ஐய்யா..

பெயரில்லா சொன்னது…

அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

நிர்வாக குழு,

தகவல் வலைப்பூக்கள்.....

http://thakaval.info/blogs/magazines

vinthaimanithan சொன்னது…

இதான் செத்து செத்து வெள்ளாட்றதா??!!

ny சொன்னது…

//உங்கள் ஊருக்கும்
வரக்கூடும்//

வெகு அழகு!!

Paleo God சொன்னது…

உயிரோடிருப்பவனை துடிக்கச்செய்யும், இறந்தவனின் கவிதை. :(

அருமை செந்தில்.

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

இந்தத் தெரு இந்தத் தெரு என நெகிழ வைத்து முடிவில் அதிர வைத்து விட்டீர்களே!

Chitra சொன்னது…

வேதனையான உண்மையை, அருமையாக கவிதையில் வடித்து இருக்கிறீர்கள்.

Unknown சொன்னது…

நன்று.

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு செந்தில்.

ஹேமா சொன்னது…

பணம் பத்தும் செய்யும்.
பாசத்தைக் கொலையும் செய்யும்.
அழகா உணர்வோட சொலியிருக்கீங்க செந்தில்.

Unknown சொன்னது…

நன்றி...

தலைவன்
தகவல்
விந்தைமனிதன்
கார்டின்
சங்கர்
ராமலெட்சுமி
சித்ரா
கலாநேசன்
பா.ராஜாராம்
ஹேமா

சுந்தரா சொன்னது…

கவிதை அழகாக ஆரம்பித்து இறுதியில் அதிரவைத்தது.

Unknown சொன்னது…

நன்றி..சுந்தரா