4 மே, 2010

The Losers - ஆங்கிலப்படம்


கடந்த நான்கு நாட்களாக மலேசியாவில் இருந்தேன் அங்கு கடலுக்கு அடியில் வந்த இணைய ஆப்டிகல் பைபர் கேபிளில் ஏற்பட்ட தடங்களால் இணைய தொடர்புகள் சரியாக கிடைக்கவில்லை. அதனால் எனக்கு ஆணி கம்மி, மேலும் என்னோட பாசு ராஜாராமன் சிலிண்டர் கதையில் பிசியானதால் என்னை தொந்தரவு செய்யவில்லை, அதனால் முதல்நாள் இரவு தம்பி ரமேஷ் தந்த பிறந்தநாள் பார்டியில் மட்டையானேன். மார்டேல் கோக்னக் அதில் இலேசாக சுடவைக்கபட்ட வெந்நீர் கலவை பிரமாதம். தம்பி அடிக்கடி பார்ட்டி வையுங்க.

நான் இங்கு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்தால் கின்னஸ் ஸ்டவுட் பியர்தான் அடிப்பேன். நன்றாக கசக்கும் மேலும் அதன் சுவை ஒருமுறை அனுபவித்தால் அப்புறம் அடிமைதான். மறுநாள் முதல் கின்னஸ்தான். நார்மல் பியர்களில் ஹெயிநிக்கன் நன்றாக இருக்கும் கால்ஸ்பேர்க் ஓகே, மற்றபடி நம்ம கே.எப் மற்றும் தவுசன்கள் கிடைக்கிறது. கின்னஸ் போலவே ABC என்ற பெயரில் ஒன்று இருக்கும் அது சுமார்தான். எல்லா நாட்டு பியர்களும் சிங்கப்பூரில் கிடைக்கும்.

இடையில் ஒருநாள் சன்வே பிரமிட் வந்தோம் அங்கு சுறா ஹவுஸ்புல்லாக ஓடிகொண்டிருந்தது???.. நாங்கள் லூசர் என்ற ஆங்கிலப்படம் பார்த்தோம். சுமாரான படம். இது ஒரு காமிக்ஸ் சீரிஸ் அதனை இதே பெயரில் தழுவி இருக்கிறார்கள். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு. படத்தின் ஆரம்ப காட்சிகள் அருமை. வில்லன் மாக்சை அழிக்க சி.ஐ.ஏ வால் அனுப்பப்பட்ட குழுவொன்று அவன் மறைவிடத்தை கண்டுபிடித்து தாக்க தயாராகும்போது அங்கு அடைக்கப்பட்ட சிறுவர்களை மீட்கிறார்கள், மீட்ட சிறுவர்களை பத்திரமாக அனுப்பும்போது அந்த ஹெலிகாப்டரை அழித்து விடுகிறார்கள். அதனால் ஏற்பட்ட கோபம் அதன் விளைவுகள் இதுதான் கதை. மாக்சை என நினைத்து வேறொரு ஆளை சுட்டுவிடுவார் ஹீரோ. செத்தவரின் மகள்தான் ஹீரோயின்.

ஜெப்ரி டீன் மோர்கன், சூ சல்டான, மற்றும் பலர் நடித்திருக்கின்றனர், கதா நாயகி சூ நன்றாக சண்டை போடுகிறார், சுமாராக படுக்கையில் புரள்கிறார்( சரியா காட்டலைங்க), கதை பொலிவியாவில் ஆரம்பிக்கிறது, அங்கிருந்து துபாய்,மும்பை,மையாமி, நியூ மெக்ஸிகோ, அப்புறம் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பயணம் செய்கிறது, நம் மும்பை ஆள் வில்லனின் ஆளிடம் நூறு மில்லியன் அவன் வைத்திருக்கும் பயலோஜிகள் ஆயுதத்துக்காக கேட்பான், அதற்க்கு அவ்வளவு பணத்தை என்ன செய்வாய் என்பான், அது உனக்கு தேவையில்லை. இது ஆயுதம், நீ அமைதியை விரும்பினால் ஹிந்துயிசம் படி, தியானம் செய். ஆயுதம் வாங்க வராதே என்று சொல்லிவிட்டு கிளைமேக்ஸில் செத்துபோவான்.

முடிவு வில்லன் தப்பித்து விடுவான் (இரண்டாம் பாகத்துக்கு), அதன்பிறகு நடக்கும் ஒரு ஆபரேசன் செண்டிமெண்டுக்காக, வர வர இவனுங்களும் தமிழ் சினிமா பாத்து கெட்டுப் போயிட்டானுங்க, அப்புறம்  லூசர்களுடன் கதாநாயகியும் சேர்ந்து சந்தோசமாக பொழுதை கழிப்பார்கள்.

தயாரிப்பு: வார்னர் பிரதர்ஸ் இயக்கம்:சில்வின் ஒயிட் ஒளிப்பதிவு:ஸ்காட் கீவன் 

எப்படியும் தமிழுல மொக்கை போட வரும். தலைப்பு அனேகமாக இப்படிதான் வைப்பார்கள் "ஆறு சுறாக்கள்"

16 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

செந்தில், விமர்சனம் அருமை. மட்டையானதுக்கு அப்புறமும் எப்படி தெளிவா விமர்சம் எழுத முடியுது??
மதுமணி,
அபுதாபி

Unknown சொன்னது…

மணி எப்ப அபுதாபி போனீங்க...?

Chitra சொன்னது…

எப்படியும் தமிழுல மொக்கை போட வரும். தலைப்பு அனேகமாக இப்படிதான் வைப்பார்கள் "ஆறு சுறாக்கள்"


....ha,ha,ha...

Unknown சொன்னது…

நன்றி சித்ரா ..

Paleo God சொன்னது…

ஆறு சுறாக்களா? ஆனாலும் குசும்பு! :)

Unknown சொன்னது…

நன்றி சங்கர் சார் ...

vinthaimanithan சொன்னது…

/என்னோட பாசு ராஜாராமன்//
இந்த லொள்ளு தானே வேண்டாங்கிறது...

"ஆறு சுறாக்கள்"..//
. எப்டி இப்டில்லாம் அசராம அதிர்வேட்டு வெடிக்கிறீங்க?

//வில்லன் தப்பித்து விடுவான் (இரண்டாம் பாகத்துக்கு),//

அடங்கொன்னியாங்....

Unknown சொன்னது…

வாங்க பாசு ... சிலிண்டர் என்ன ஆச்சு..?

ஹேமா சொன்னது…

செந்தில் ஒரு சுறாவயே வறு வறுன்னு வறுக்கிறோம்.ஆறு சுறாக்கள் வந்தா !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்த பதிவு சினிமா விமர்சனத்துக்கா இல்லை நீங்க குடிச்சுட்டு மட்டை ஆனதுக்கா?

Unknown சொன்னது…

அதையும் வறுத்துட வேண்டியதுதான் ஹேமா

Unknown சொன்னது…

ரெண்டுக்குந்தான் ரமேஷ்

கமலேஷ் சொன்னது…

பதிவு ரொம்ப நல்லா இருக்கு , கின்னஸ் நோட் பண்ணிக்கிறேன்.

Unknown சொன்னது…

நன்றி...கமலேஷ்

pichaikaaran சொன்னது…

" எப்படியும் தமிழுல மொக்கை போட வரும். தலைப்பு அனேகமாக இப்படிதான் வைப்பார்கள் "ஆறு சுறாக்கள்" "

superb,,,,.. enjoyed

Unknown சொன்னது…

நன்றி.. பார்வையாளன்