5 பிப்., 2009

''ரத்தம் சரணம்''


இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பவுத்த பிக்குகளை அனுசரிக்காமல் ஆட்சி நடத்த முடியாது. தற்போது நடந்துகொண்டிருக்கும் நான்காம் ஈழப்போரில் கொல்லப்படுவது, விடுதலைப்புலிகளோடு, அப்பாவி தமிழர்கள் மட்டுமல்லாது, பெருமளவில் ராணுவத்தினரும்தான், இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் கணக்கில் அடங்காதவர்கள்,இந்தியாவில் பிறந்த புத்தரின் கொள்கைகள் இந்தியாவில் பரவவில்லை ஆனால் சீனா, தாய்லாந்து, இலங்கை, கம்போடியா, ஜப்பான் போன்ற நாடுகளில் முழுதுமாக பரவியது, அன்பையும், அஹிம்சையையும் போதித்த புத்தரின் வழிவந்தவர்கள் கொல்லுவதை தர்மமாக செய்கிறார்கள்.மேலும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு ஆதரவாக இலங்கை இருந்ததால் தற்போது ஜப்பான் பெரும் அளவில் பொருளாதார உதவிகளை செய்கிறது, மற்றொரு புவுத்த நாடான சீனாவோ ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை காட்டும் முயற்சியில் இந்தியாவிற்கு போட்டியாக ராணுவ உதவிகளை செய்கிறது, கொன்றொழித்தல் சேவை செய்யும் புத்தம் இல்லாது போகட்டும்..
ஈழத்தின் ஐம்பது வருட போராட்டத்தில் இந்தியாவின் பங்கு மாறி மாறி முடிவெடுக்க வைத்திருக்கிறது,புலிகளை வளர்த்துவிட்ட இந்தியாவின் ராவே தற்போது இலங்கை ராணுவத்துக்கு மூளையாக செயல்படுகிறது,இந்தியாவை பொறுத்தவரை ஆட்சியாளர்களை பொறுத்துதான் நிலைமை,பி.ஜெ.பி யின் சென்ற ஆட்சியின்போது ஜார்ஜ் பெர்னான்டஸ் அமைச்சராக இருந்தார் அவர் புலிகளின் ஆதரவாளர் அதனால் இலங்கை அரசாங்கத்தால் இந்தியாவின் உதவியை முடியவில்லை, அந்த சமயம்தான் இலங்கை அரசாங்கம் சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்தது .
தற்சமயம் சோனியாவின் ஆசிர்வாதத்தோடு இந்திய இராணுவம் புலிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டு அப்பாவி தமிழர்களையும் சேர்த்தே அழிக்கிறது.இந்தியாவின் வெளியுறவு செயலர் மேனன் மற்றும் ராணுவ அமைச்சர் எ.கே.அந்தோனி இருவரும் மலையாளிகள், அவர்களை பொறுத்தவரை தமிழன் தனி நாடு அடைந்துவிடக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
தன்மானத்தலைவன் , தமிழின காவலன் என்று அடிவருடிகளால் வர்ணிக்கபடுகிற கருணாநிதி தன் ஆட்சியை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். மருத்துவர் மகனின் மந்திரிபதவி வேண்டும் அதே சமயம் தமிழனின் ஆதரவும் வேண்டும் என இரட்டை வேடம் போடுகிறார்.
திருமாவும் , வைகோவும் , நெடுமாறன் அய்யாவும் இல்லையென்றால் இங்கே சொரணைகெட்ட எந்த தமிழனும் குரல் கொடுக்கமாட்டான்.
தமிழக கிராமங்களில் இன்னும் வெள்ளநிவாரணம் வழங்கப்படுவதால் . கழக கண்மணிகளுக்கும் மற்றும் மாற்று கட்சியினரும் கவனிக்கபடுவதால் எல்லோருக்கும் அதைப்பற்றித்தான் பேச்சு, நாளிதழ் படிக்கும் வழக்கொழிந்து போன கிராமங்களில், தொலைக்காட்சி மட்டுமே பார்க்கும் கிராம மக்களுக்கு இலங்கையின் உண்மையான நிலவரம் தெரியாமல் போய்விட்டது, எந்த ஊடகமும் தமிழின அழிப்பை மக்களுக்கு எடுத்துசெல்லவில்லை. எந்த மக்களின் பணத்தில் தின்று கொழிக்கிறார்களோ, அதே இன மக்களின்அழித்தொழிப்பிற்கு நாமே உதவுவது எந்த விதத்தில் சரியாகும்?
இதனால் கிராமத்து மக்களுக்கு எதுவுமே சரியாக போய்சேரவில்லை, அவர்களும் அரசாங்கம் சில ஆயிரங்களுக்காக தங்களது பெருத்த மறந்து, அரசாங்க மதுகடைக்களில் வாங்கிய பணத்தை செலவழித்துவிட்டு, அடுத்த கடன் தள்ளுபடிக்கு எதிர்பார்த்துக்கொண்டு, ஒரு ரூபாய் அரிசியில் காலம் தள்ளுகின்றனர். ஆனால் ஆரம்பகட்ட போராளிகளின் பயிற்சிகள் கிராம மக்களாலே முன்னெடுத்து செல்லப்பட்டது, போராளிகளின் பயிற்சிக்கு தேவையான இடம் கொடுத்து , மேலும் உணவு வசதிகளையும் அவர்களே செய்து கொடுத்தனர், ஈழபோராட்டத்தில் ஆரம்பகட்ட நிதி கிராம மக்களிடம் இருந்தே திரட்டப்பட்டதுஆனால் இப்போதோ முன்னேடுத்துசெல்லக்கூடிய அரசியல் கட்சிகள் சோனியாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டதால் யாருக்கும் அக்கறை இல்லை,
என்னைபோல் இணையத்தில் தன் ஆதங்கத்தை எழுதும் நண்பர்களை, கேலி செய்யும் கூட்டமொன்று இருப்பது இன்னும் வேதனை,
எம்மைபொறுத்தவரை உயிர் எல்லோருக்கும் பொதுவானது, அது சிங்களனோ, தமிழனோ, காசா இஸ்லாமியனோ எல்லோருடைய உயிரும் ஒன்றுதான்,இந்த பரந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும்.புத்தம் தழைத்த ஊரில் செய்வார்களா?

10 கருத்துகள்:

ஆதி சொன்னது…

ஆனால் இப்போதோ முன்னேடுத்துசெல்லக்கூடிய அரசியல் கட்சிகள் சோனியாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டதால் யாருக்கும் அக்கறை இல்லை,
nalla pathivu. neengal solvathu pol media kkal thirinthinal mattumae anaithu makkalukkum unmai seithi theriya varum

பெயரில்லா சொன்னது…

Nalla sonnenga. Most of them were not knowing the truth.

பெயரில்லா சொன்னது…

மருத்துவர் மகனின் மந்திரிபதவி வேண்டும் அதே சமயம் தமிழனின் ஆதரவும் வேண்டும் என இரட்டை வேடம் போடுகிறார்.

-- Thavaru.

Ramadass doing both things correctly. He is the one who bringing the genocide to all people through Makkal TV. First you start watching makkal TV.

I don't want to talk about some Idiot & Selfish Old man here.

- Unmai Tamilan

Unknown சொன்னது…

நன்றி ஆதி,

Unknown சொன்னது…

நன்றி அரசு ..

Unknown சொன்னது…

உண்மை தமிழன் அவர்களுக்கு, நான் பார்க்கும் ஒரே தமிழ் தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான், ஆனால் மருத்துவர் அவர்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். அவர் ஒரு தீவிரமான போராளியாகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர், தன் சொந்த மக்களுக்காக போராடி சமூகத்தில் பெரிய அங்கீகாரம் வாங்கித்தந்தவர், ஆனால் இன அழிப்பில் அவருடைய பங்கு வெகு குறைவு என்பதுதான் என்னுடைய கருத்து, வருகைக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

rajathanthiratthukku artham theriyathavarkal than indiya arasai alpavarkal.italy karikitta natta kodutha ippadithan.
raja vignesh

பெயரில்லா சொன்னது…

மன்னிக்க வேண்டும் என் ரத்தங்களே......... மன்னிக்க வேண்டும்.....

உலக தமிழ் தலைவனின் நிலை :

1. எதிர் கட்சி யா இருக்கும் போது : போராட்டம், பொது கூட்டம், உண்ணா விரதம் எல்லாம்
2. ஆளுங் கட்சி யா இருக்கும் போது : வெறும் அறிக்கை, தீர்மானம் ... எல்லாம் காகிதத்தில் மட்டுமே. இவர் எண்ணம் எல்லாம் ஆட்சி, பதவி, பணம், குடும்பம், சொத்து மட்டுமே....
3. இவர் மிக பெரிய நடிகர் .... ராஜா தந்திரி ...
4. இவருக்கு இப்போதைய பட்டம் : தமிழின துரோகி .....

புரட்சி தலைவி நிலை ; தொழில் செய்ய நல்ல இடம் தமிழ் நாடு. வந்தமா ... சம்பதிச்சம ... எம். ஜி.ர படத்த தேர்தல் முன்னாடி காமிச்சி ஒட்டு வங்குனமா ... அவ்ளோ தான். இவருக்கு தமிழர் பத்தி கொஞ்சம் கூட எள் அளவும் எண்ணம் இல்லை. மேல் தட்டு மகாராணிக்கு மக்கள் கஷ்டம் எப்படி புரியும் ?.


அன்னை சோனியா : கணவனை கொன்றதுக்கு ஒரு இனத்தையே அழிக்கிறார் இவர் என எல்லோரும் சொல்வதற்கு ஏற்ப இந்திய உதவி செய்கிறது இலங்கைக்கு ....

காங்கிரஸ்காரர்கள் நிலை : இவர்கள் தமிழன் தனா இல்லை வேற்று நாட்டவரா இல்லை வேற்று மாநிலத்தை சேர்ந்தவரா ? கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாமல் .. வெறும் பதவி காக எல்ல வற்றையும் விட்டு கொடுத்து .... ச்ச .... இதில் மேடை பேச்சு வேறு ... மக்களை திசை திருப

்ப பேரணி வேறு ... காந்தி யுன் காங்கிரஸ் இவ்வளவு கேவல படுத்து .... பதவி மட்டுமா இவர்கள் குறி...
தமிழன் வெக்க பட வேண்டிய நிலை , கேவல பட வேண்டிய நிலை .......

முட்டாள் தமிழன் ...செம்பரி ஆடாய் வெறும் சோற்றுக்கும், சாராயத்திற்கும் கொடி பிடிக்கும் வரை .....நம் தலையை செருப்பாய் யார் வேணுமானாலும் அணிவார்கள் .... அவர்களை சொல்லி குத்தமில்லை ....


மன்னிக்க வேண்டும் என் ரத்தங்களே......... மன்னிக்க வேண்டும்.....

முட்டாள் தமிழன்

பெயரில்லா சொன்னது…

நன்றி ராஜா

பெயரில்லா சொன்னது…

நன்றி தமிழன்... மறத்தமிழன் இப்போது மரத்தமிழன் ஆகிவிட்டோம் ...