11 மார்., 2013

மாணவர்கள் VS டியெம்கே and ஏடியெம்கே முதலாளிகள்...#StudentsHungerStrike

வரும் நாடாளுமன்றத்தேர்தலை மனதில் வைத்து ஈழ அரசியலில் சமீபமாக ஆர்வம் காட்டி டெஷோவை உலக அளவில் கொண்டு சென்று சேனல் 4 காரனே பாராட்டு பத்திரம் அளித்த காட்சிகளை நாம் வேடிக்கை பார்க்கும்போதே, ஈழப்பிரச்சினையில் தொடர்ந்து தீவிரமாக செயல்படும் நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி போன்றோரை பின்னுக்குத்தள்ளி வெறும் 3 மணி நேர உண்ணாவிரதத்தில் போரை நிறுத்திக்காட்டிய டெஷோ தலிவரின் அடிபொடிகள் போட்ட வேஷத்தை ஜெயா சாதுர்யமாக சமாளிக்க யோசித்து காய்நகர்த்த யோசித்துக்கொண்டிருக்கும்போதே (இடையில் தஞ்சை விவசாயிகள் தற்காலிக அரசவைக் கவிஞர்களாக மாறி மேடத்தை மேகமாக மாற்றி பொன்னியின் செல்வியாக்கிய மாபெரும் நிகழ்வு இருந்ததால்) லயோலா மாணவர்கள் 8 பேர் காந்திய வழியில் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துவிட்டனர். டெஷோ தலிவர் ஐயகோ! என்னடா மாபெரும் பந்து ஒன்னுக்கு சொல்லி வச்சிருந்தோமே அதனை இந்த எட்டு பேர் ஒதைச்சு காலி பண்ணிடானுங்களேன்னு முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தை திசைதிருப்பி நீர்த்துபோகச்செய்த திருமாவை அனுப்பி செல்லமாக வாபஸ் வாங்குங்கள் என சொல்லிப்பார்த்தார். இதற்கிடையில் தங்கபாலு போயி  ஒற்றைக்காலணி மட்டும் தந்ததற்காக தன் அல்லக்கைகளுடன் ஒரு குட்டி போராட்டம் நடத்தினார்.

தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களுமே மன்னாராட்சியே நடத்துகிறார்கள். அதிகார போதையில் அப்பாவி காவல்துறையை(பாவம்தான் இவர்கள்) ஏவி எல்லாப்போரட்டங்களையும் நசுக்குகிறார்கள். முத்துக்குமார் இறந்தபோது ஒரு மாபெரும் மாணவர் போராட்டம் ஏற்பட்டிருக்கும். அதனால் அப்போதே ஈழமக்களுக்கான ஒரு தீர்வை இந்திய அரசாங்கத்தால் முன்னெடுத்துச்செல்ல வைத்திருக்க முடியும். ஆனால் அப்போதைய முதல்வரும் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்த கருணாநிதி அவர்கள் எல்லா பள்ளி, கல்லூரிகளையும் காலவரையின்றி மூடி ஈழம் என்ற வார்த்தையை உச்சரித்தாலே கைது செய்து தன் ஆட்சியை பறிகொடுத்து எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட நேற்று வந்த விஜயாகாந்திடம் பறிகொடுத்துவிட்டு இப்போது டெஷோவை தூசி தட்டியிருக்கிறார். தில்லுதொர நெஜமான அக்கறை இருந்தா மொதல்ல காங்கிரஸ் கூட்டணில இருந்து வெளில வரவேண்டியதுதானே.

ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் தவறால்தான் தனக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது எனப் புரிந்துகொண்ட ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலே இலங்கைக்கு எதிரான தீர்மானம், கட்சத்தீவு மீட்புக்கான வழக்கு, அகதிகளுக்கு வீடு, ரேஷன் பொருட்கள், மேற்படிப்புக்கான அனுமதி என தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் என்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார். அவரால் மீனவர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்த முடியாவிட்டாலும், கூடங்குளம் பிரச்சினையில் தொடர்ந்து அம்மக்கள் அமைதி வழியில் போராடுவதை அனுமதிப்பதில் மக்களின் மீதான அனுகுமுறையில் ஒரு மனமாற்றம் ஏற்பட்டவராகவே கானப்பட்டார். ஆனால் அமைதி வழியில் போராடிய லயோலா மாணவர்களை கைது செய்துவிட்டார்கள் என கேட்டபோது இவரும் முன்னவர் போலத்தானோ என எரிச்சல்தான் ஏற்பட்டது. ஆனால் போரட்ட களத்தில் மாணவர்களுக்கு உதவியாக இருந்த தமிழுணர்வாளர்களை தடுப்புக்காவலில் வைத்திருந்தாலும் காலையில் விடுவித்ததும்( இதுவே கருணாநிதியாக இருந்தால் சீமானுக்கு நேர்ந்த கதிதான் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்) நாளை 12.03.2012 நடக்கவிருக்கும் டெஷோ பந்தை காற்றுப்போக வைக்கும் ஒரு உத்தியாகவே தெரிகிறது. இவர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடாத வரைக்கும்தான்  இந்த நம்பிக்கையும்.  மேலும் தமிழகம் எங்கும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் மாணவர்களை காவல் துறையை வைத்து மிரட்டாமல் மத்திய அரசுக்கு ஒரு பெரிய அழுத்தத்தை தந்தால். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் மின்சார, விலைவாசி பிரச்சனைகளையும் தாண்டி மக்கள் யேடியெம்கேவுக்கே ஓட்டளிக்க வாய்ப்பிருக்கிறது.

மாணவர்கள் போரட்டத்தை மட்டுமல்லாது ஈழப்பிரச்சினையில் தொடர்ந்து எப்போதும் தனி ஈழ கோரிக்கையை முன்வைத்து போராடிவரும் வைகோ, நெடுமாறன், சீமான், கொளத்தூர் மணி, ராமதாஸ், தமிழருவி மணியன் போன்றோரை இணையத்தில் இயங்கும் நாலு புளியங்கொட்டைகள் கிண்டலடித்து வருகிறார்கள். தம்பிகளா ஒட்டு மொத்தமாக டி.யெம்,கேவை பின்னுக்கு கொண்டுபோகும் உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு போடாத பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நீங்கள் உங்கள் வாரிசுகளையாவது தன்மானத்துடன் வாழவிடுங்கள். ஏனெனில், பிரபாகரன் எனும் ஒப்பற்ற தலைவன் இனத்துக்காக களத்தில் தன்னையும், குடும்பத்தையும் பலிகொடுத்தார். உமது தலைவன் குடும்பத்துக்காக இனத்தையே பலிகொடுத்தவர்.

காலம் கடந்திருந்தாலும் சரியான சமயத்தில் போரட்டத்தை கையிலெடுத்திருக்கும் மாணவர் சமுதாயத்துக்கு எனது வணக்கங்கள்...

10 மார்., 2013

வண்ணத்துப்பூச்சிகள் ...

Photo : KRP Senthil
பத்தாம் வகுப்பில் 
உடன் படித்த 
ரேணு என்கிற ரேணுகாதேவி
சலவைத்தொழிலாளியின் மகள்
இப்போதும் மிகுதியாக 
சாதி பார்த்துப்பழகும் 
என் ஊரில்
அவளென்றால் 
யாவருக்கும் பிரியம்தான் 
அழகு தேவதை அவள்
ஒரு நாள் 
அவளும் நானும்
இன்னபிற தோழிகள் 
சூழ குழுமியிருந்தபோது
கடந்து போனதொரு 
வண்ணத்துப்பூச்சி
”அய்.. வன்னாத்திப்பூச்சி” யென்றேன்
சடாரெனக் கோபம் கொண்ட 
ரேணுகா
“அது வண்ணத்துப்பூச்சிடா” 
எனத்திருத்தினாள்..

பணிரெண்டாம் வகுப்பில்
அரையாண்டுத் தேர்வின் 
மத்தியில்
எங்கள் காதலை
கழிவறை சுவற்றில் 
உறுதிப்படுத்தினார்கள்
சக தோழர்கள் ..

எங்கள் உறுதியால் 
ஒரு சலவைத் தொழிலாளியின் 
குடும்பம் 
ஊரை விட்டு வெளியேறும் 
உத்தரவை ஏற்றுக்கொண்ட 
நாளொன்றின் நள்ளிரவில்
ஊர் கடந்தோம் 
இருவரும்
எல்லையைக் கடக்கும் முன் 
பிடிபட்டு 
உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டோம் 
மறுநாள் காலை 
அவளின் தற்கொலையுடன் விடிய 
அன்றிரவு நான்
தற்கொலை முயற்சியில் 
காப்பற்றப்பட்டேன்.
இப்போதும் 
ஊருக்குப் போனால் 
தனியறைகளில் இருக்கும் நேரம் 
எங்கிருந்தோ வருகிறது 
எனது அறைக்கு
வண்ணத்துப்பூச்சியொன்று 
ஏதோ ஒரு மூலையில் 
வெகு நேரம் தவமிருக்கும் 
பின் 
ஏதோ ஒரு பல்லிக்கு உணவாகி
செத்துப்போகும் 
ஒவ்வொரு முறையும் 
ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சி..

ஊருக்குப்போவதை 
நிறுத்திய பின்னரும் 
எப்போதாவது
இந்த நகரத்தின் கொடிய இரவுகளில் 
சாத்திய சன்னல்களையும் மீறி 
எப்படியோ வந்துவிடுகிறது 
ஒரு வண்ணத்துப்பூச்சி
எங்கிருந்தோ வந்து சேர்க்கிறது 
ஒரு பல்லி..

சமீப காலமாக
வண்ணத்துப்பூச்சிகளை
ரகசியமாக
தின்றுகொண்டிருக்கிறேன்...


7 மார்., 2013

நாட்டு நடப்பு 07.03.2013...

Photo : KRP Senthil
சமீப காலமாக வெறுமனே மொபைலில் சகலரின் கல்வெட்டுகளையும்(பதிவுகள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஸ்டேட்டஸ்) படித்து மகிழ்ந்து வெறுப்பாகி இன்னும் பலப்பல அவஸ்தைகளால் நொந்து உப்புமாவாகி எதுக்கு எழுதனும் என என் நெற்றிக்கு நேராக சுட்டுவிரலை(என்னுடையதுதான்) கேள்வி கேட்டபோது, நாமலும் அதே உப்புமாவைத்தானே கிண்டப்போகிறோம் என சகல ஒலகப் படங்களையும் (நெஜமாகவே) பார்த்து கேபிளுடன் தமிழ் சினிமாவை ஏன் குப்பைகளாகவே தருகிறார்கள்? எனக்கேட்டு அவரின் எக்கச்சக்க செல்பேசும் நண்பர்களுடனான அலையாடல்களின் ஊடே அவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மணி ஒன்னுக்குப் போயிருக்கும் (நள்ளிரவு). அதன்பின் வீடு வந்து சேர்ந்து மறுபடி ஒலக சினிமா, ஒலக அரசியல், உள்ளூர் மற்றும் ஒலக யாவரம் என கலந்து கட்டி முடிக்க அதிகாலை ஐந்தரைக்கு படுக்கைக்கு சென்றால் மறுபடி காலை பத்தரை மணி முதல் எனது லவ்கீக வாழ்க்கை துவங்கும். அப்புறம் ஏண்டா திரும்ப எழுத வந்துருக்கே? என்று முனகவேண்டாம். இதுவரைக்கும் ஏன் எழுதாம இருக்கீங்கன்னு? ஒரு பய,புள்ளை கூட மெயிலோ, மடலோ, அட்லீஸ்ட் குறுஞ்செய்தியோ அனுப்பாத கடுப்பில் மீண்டும் அதே உப்புமா!!
.................................
சமீபமாக தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் அவர்தம் அடிபொடிகளும் ஈழம் வாங்குவதற்காக சோறு, தண்ணி (டாஸ்மாக் தண்ணிதான்) இல்லாமல் நடுவீதிக்கு வந்து போராடும் தங்களை கைது செய்யாமலிருக்கும் அரசாங்கத்தை நோக்கி அறைகூவல் விடுக்கிறீர்கள். அதைக்கண்டு தமிழக மக்கள் அனைவரும் அதானே, போன தடவ நீங்க ஆட்சில இருந்தபோது ஈழம் என்கிற வார்த்தையை கேட்டாலே ஜாமீனில் வரமுடியாத அளவுக்கு தேசவிரோத குற்றங்களில் கைது செய்து உள்ளே அடைத்தீர்கள். அந்த வள்ளல்தன்மை இப்போதைய ஜெயலலிதா ஆட்சிக்கு இல்லாமல் போய்விட்டதை அறிந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என, பகல் கனவு கானும் டெ’ஷோ’ அப்பாடக்கர்களே கரண்டே கொடுக்காம ஜெயலலிதா எங்களை படுத்தினாலும்  ஒங்க நாடகத்தை நம்பி ஓட்டு மட்டும் போடவே மாட்டோம். இணையத்தில் புழங்கும் சில புளியங்கொட்டைகள் நமத்துபோன பட்டாசுகளை கொளுத்தி எங்களை நகைச்சுவை வெள்ளத்தில் நீந்த வைக்கிறார்கள். நீங்கள்லாம் மொதல்ல நாடகக்கொட்டகையில் இருந்து வெளில வாங்க தம்பிகளா!!
.....................................................
தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக ராமதாசும், சமீபமாக வைகோ, தமிழருவி மணியன், இப்ப பெரியவர் சசி பெருமாள் என பலரும் போராட ஆட்சியில் இருக்கும் ஜெயா அரசோ எதனையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போதே கருணாநிதி மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அறிக்கை விடுகிறார். மதுவிலக்கு ஏன் வேண்டும்? அரசு தயங்கும் காரனம் என்ன? பின்னால் இயங்குவது யார்? என புதுவலசை எனும் வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியிருக்கின்றனர். நேரமும், பொறுமையும், ஆர்வமும் இருப்பவர்கள் இணைப்பில் சென்று படித்துக்கொள்ளுங்கள் : மகாத்மாவின் கனவான மதுவிலக்கு நிறைவேறுமா?  ஆனாலும் என் போன்ற சாரு போன்ற மொத்த குடிமகன்களின் கோரிக்கை தரமான மதுவை கொடுங்கள் என்பதுதான். தமிழகத்தில் விற்கப்படும் எந்த சரக்கும் தரமே இல்லை. அருகில் இருக்கும் பாண்டியில், கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் ஒரிஜினல் சரக்கு அடித்து பழகி தமிழகத்தில் சரக்கு அடிப்பதை நிறுத்திவிட்டேன். இதுல டாஸ்மாக்ல வேலை பார்க்கும் பிச்சைக்காரர்கள் தனக்கான பிச்சைகளை எங்கள் அனுமதியை கேட்காமலே எடுத்துக்கொள்கிறார்கள். ஏன்றா? இப்படியென கேபிள் போல ஆட்கள் கேட்டால் அதிகாரி பிச்சைக்காரர்கள் வரை பங்கு கொடுக்க வேண்டியிருக்கிறது என புலம்புகிறார்கள்.  மான்புமிகு தமிழக முதல்வர், புரட்சித்தலைவி, அம்மா என ஏகப்பட்ட பட்டங்களை தாங்கியிருக்கும் ஜெயலலிதா இதற்காக ஆவன செய்யவேணும் என குடிமகன்கள் சார்பாக விண்ணப்பம் வைக்கிறேன் ( சரியாத்தான் சொல்லிருக்கேனா).
.............................
சென்னையின் மலிவுவிலை மாநகராட்சி உணவகத்தில் சமீபத்தில் நானும், சிவாவும் சென்று சாப்பிட்டோம். அதனை சுவையாக சிவாவே எழுதியிருக்கிறார் : அம்மா ஸ்பெஷல் மீல்ஸ்.
...........................................
லவ்கீக வாழ்வின் சுமை காரனமாக சொந்த ஊர் பக்கம் போயிடலானு யோசிச்சிங். பின்ன என்னங்க பெரிய பெரிய (ரெண்டு பெரியதான்) ப்ராஜக்டுதான் செய்வேன்னு அடம்புடிச்சி மூன்றரை வருஷம் ஓடிடுச்சு. கடன்கொடுத்த வள்ளல்கள் எப்ப கழுத்துல துண்டு போடுவாங்கன்னு தெரியல. இதுல என்கிட்ட வாங்கின மொத்த கோடீசுவரர்களும் நான் திருப்பிக்கேட்டா மட்டும் ஒடம்புக்கு முடியாம குடும்பத்தோட ஆஸ்பிடலுக்கு போனதா சொல்றாங்க. சமீபத்துல வெறுப்புல இருந்த என்கிட்ட தனவந்தர் ஒருத்தர் ஒங்களப்பத்தி கேள்விபட்டிருக்கேன் நல்ல ப்ராஜக்டா ஒன்னு சொல்லுங்கன்னு  கேட்டார். கொட்டாங்கச்சில இருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கிற ப்ராக்ஜக்ட் ஒன்னு இருக்குன்னு சொன்னேன்.  நெஜமாவே சாத்தியங்களான்னு ரொம்ப அப்பாவியா கேட்டார். பாவம் ஈமு கோழில முதலீடு போட்டவரா இருக்கும்போல!!
..........................................
கடேசியா ஒரு கவித:

விதிக்கப்பட்ட வாழ்வை,
வாழ்வதாக
சொல்லிக் கொண்டிருக்கிறோம்
சபிக்கப்பட்டிருந்தாலும்..

6 மார்., 2013

நல்லதோர் வீணை செய்தே...

Photo : KRP Senthil
யானே கள்வன்
யானே அரசன்
ஒரு பரம்பரையின்
கடைசி முகம்
என்னுடையதாக இருக்கட்டும்
உணர்ச்சிகளை
உடைத்துப்போடுகிற
சுயநல
பிசாசும் நானே
மீதமிருக்கும் மணித்துளிகள்
கடவுள் வேஷம் கலைத்து
என்னை
சாத்தனாக மாற்றுகிறது
ஒரு சுடெரென
மலர்ந்த அறிவு
கொள்ளிவாய் பிசாசின்
கண்களென தகிக்க
முடிவான இடம் தேடி
முடிவற்ற
கேள்விகளை விட்டுச்செல்கிறேன்
நம்பிக்கை துரோகங்களால்
பழக்கப்பட்ட நாய்க்குட்டியாய்
நான் இருந்தேன்
கைவசம் அவைதான் மிச்சமிருப்பதால்
உங்களிடத்தும்
அதனையே கொடுத்துச்செல்கிறேன்
நம்பிக்கைகளை வர்ணங்களாய்
மாற்றும் வித்தை
கைவரப்பெறாதவனுக்கு
எப்போதும் நிரம்பாது
வாழ்வு..


4 மார்., 2013

தலைவா!!!….


Photo : Ramesh veera
நாம் எல்லோருமே எதோ ஒரு செண்டிமெண்டுக்கு அடிமையாக இருக்கிறோம். பொதுவாகவே தொன்றுதொட்டு சகுனம் பார்த்தோ அல்லது நாள், நேரம் பார்த்தோ காரியங்களை தொடங்குவது நமது வழக்கம் என்பதால் இப்படி ஆகியிருக்கலாம். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களுக்கு இப்படியான செண்டிகள் அதிகம். ஜெயாவுக்கு பச்சையும், கருணாவுக்கு மஞ்சளும் போல. பெரியார் துக்கத்தின் அடையாளமாக கருதப்பட்ட கருப்பை பயண்படுத்தினார். அவர் வாரிசுகள் இப்போது மங்களகரமாக மாறிவிட்டனர்.
 
இங்கு தலைவர்களை காட்டிலும் தொண்டர்கள் நிலைதான் படுமோசம். தி.மு.கவில் இருக்கும் பழைய ஆட்களைத்தவிர புதியவர்கள் பக்திப்பழங்களாக மாறிவிட்டாலும். அ.தி.மு.கவில்தான் தலைவி முதல் அடிமட்ட கடைசித்தொண்டன் வரை தீவிர ஆன்மீகவாதிகளாகவோ அடிமைகளாகவோ இருப்பதில் பெருமை கொள்பவர்கள். பகுத்தறிவு பகலவன் முதற்கொண்டு ஏகப்பட்ட அடைமொழிகளை கூசாமல் பொய் சொல்லி வைக்கப்படும் ஃப்ளெக்ஸ்களுக்கு பின்னால் கிடைக்கப்போகும் காண்ட்ராக்டுகளுக்காகவோ, பதவிகளுக்காகவோதான் என பழக்கத்தில் இருக்கும் அரசியல் நண்பர் சொன்னார்.

இங்கு அத்தனை அரசியல் கட்சிகளுமே இந்த தேசத்தை முன்னேற்றுவதாகவும், ஏழை மக்களை பணக்காரர்களாக மாற்றுவதாகவும் தமது கொள்கைகளாக கொண்டவைகள்தான் ஆனால் படிப்படியான முன்னேற்றம் மட்டுமே சாத்தியம் என்பதால் முதலில் தலைவர், அவர்தம் குடும்பத்தினர், அப்புறம் அமைச்சர்கள், மாவட்டம், நகரம், ஒன்றியம் என ஒவ்வொரு தலைவராக அவர்தம் குடும்பத்தினராக வளர்வதற்க்குள் மாற்றுக்கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள். இந்த தேசமே ஊழல் வெள்ளத்தில் மிதந்தாலும், சாதரண மக்களின் பாக்கெட்டில் கைவிட்டு தைரியமாக வரி, விலைவாசியென பிடுங்கிக்கொண்டாலும் நமக்கென கிடைக்கும் போலி மதுக்களோடும் அதனை விற்கும் டாஸ்மாக் ஊழியன் குவாட்டருக்கு அஞ்சு ரூவாயும், பீருக்கு பத்து ரூபாயும் கூடுதலாக வசூலித்தாலும் கடை சாத்தும் கடைசி நேரம் வரைக்கும் கூட்டமாக குடித்து நமது தேசத்தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கோடிகளில் புரளச்செய்யும் கடமைகளை சரிவர செய்வதும் ஆச்சர்யம்தான்.

ஒட்டு மொத்த இந்தியர்களுமே பணவீக்கத்தின் படிகளில் இறங்கிக்கொண்டிருக்கிறோம். இந்திய பணமதிப்பு அதளபாதாளத்தை நோக்கி போகின்றது. ஒரு ரூபாய் இட்லியால் எல்லோருடைய பசியையும் போக்கிவிடும் அபாரமான திட்டங்களால் தமிழகம் மேலும் இருளில் மூழ்க. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கவோ அதன் தொகுப்பில் இருந்து மின்சாரம் தரவிடாமல் தடுத்துக்கொண்டு பார்த்தீரா அ.தி.மு.க ஆட்சியை என ஃபேஸ்புக்கில் பொங்கி வழிகிறது. எதிர்கட்சியாக இருக்கும் தே.மு.தி.க முகவரியை கானாமல் போனவர்கள் பட்டியலில்தான் தேடனும். அவதூறு வழக்குகளில் ஆஜாராவதும் அது சமயம் ஏதாவதொரு கோர்ட் வாசலில் நின்றுகொண்டு செயல்படாத ஆட்சி என செயல்படாத வி.காந்த் கொடுக்கும் பேட்டியைப் பார்த்தால் வருகிற நாடாளுமன்றத்தில் ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது.

ஆனால் இவர்கள் அததனை கட்சிகளையும் விட தமிழக காங்கிரஸ் தலைவர்கள்தான் நமக்கு உண்மையாக பொழுதுபோக வைக்கிறார்கள். அதிலும் 15 நாள் நாராயணசாமியை தலைவர் கவுண்டமணி இருந்தால் இன்னேரம் பின்னி பெடலெடுதிருப்பார். எப்படி இந்தாளு மட்டும் கூச்சப்படாம பொய் சொல்றாரு? மண்மோகன் பேசாம காமெடி செஞ்சா! இவரு பேசியே காமெடி செய்றாரு கூடவே துனைக் காமெடிக்கு ஞானதேசிகன்னு ஒருத்தர். இந்த மாதிரி அரசியல் தலைவரை எல்லாம் பாத்தபின்னும் அப்துல்கலாம் அப்படின்னு ஒருத்தர் நாம 2020ல வல்லரசா மாறுவோன்னு சொல்றாரு!!. நம்ம பவர் ஸ்டார வச்சு வல்லரசு படத்தை ரீமேக் வேனா பன்னலாம்.
நல்லக்கண்ணு போன்ற நேர்மையான அரசியல் தலைவர் பின்னாடி எந்த தொண்டனும் போறது கிடையாது. அவருக்காக கைக்காச போட்டு பேனர் எல்லாம் ஒரு பயலும் வைக்க மாட்டான். அவரே அராசங்க பஸ்ல போறப்ப நம்மையெல்லாம் சைக்கிளில்தான் போவச்சொல்வாருன்னு தெரியும். இப்படியாக சகல வியாதிகளிலும் இருந்து சொஸ்தப்படுத்தும் வைத்திய சிகாமணிகளாய் நமது அரசியல் தலைவர்கள் கடவுள்களாகும் நாள் காத தூரத்தில் இல்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி அலுத்துப்போன தமிழ்கூறும் நல்லுலகம் வாஸ்து, நியூமராலஜி, அல்லது இரவு நேர சேனல்களின் வருமானத்துக்குகாக டாலர் விற்கும் நவீன சாமியார்கள் வரை ஆயிரம் செண்டிமெண்ட்கள் நம்மை உய்விக்க எல்லாம் வல்ல நித்யானந்தா அருள் புரியட்டும்.

2 மார்., 2013

சதுரங்க முத்தங்கள்....

Photo : KRPSenthil
சதுரங்கப் பலகையில் 
எதிரெதிர் அமரும்போது 
நீ கவனமாக 
தேர்தெடுக்கும் வெள்ளைக்காய்கள்
ஒரு போதும் ஜெயித்ததில்லை 
நான் விரும்பி தோற்பதை ..
.
குதிரைகள் வீழும்போது 
உன் கண்களுக்கு தப்புவதில்லை 
எனது பிஷப்புகளும் 
ஆமென்.. 

கொடுத்தாலும் வாங்கினாலும் 
முத்தங்களுக்காய் பலியான 
சிப்பாய் நான்.. 

செக் வைத்த இறுமாப்பில்
உன்
வெற்றிச் சிரிப்பை
காற்றில் பரவவிட்டபோது 
உறைந்துபோன முத்தங்களால் 
இந்தக் கவிதை தன்னையே 
இன்னொரு முறை 
எழுதத்துவங்கியது ..

அடுத்த ஆட்டம் 
இன்னும் சிறிது நேரத்தில் 
ஒரு 
செவ்வகப் பலகையின் மேல்..
நான் ராஜாவாகவும் 
நீ ராணியாகவும் 
நான் ஜெயிக்க நீ தோற்க 
நீ ஜெயிக்க நான் தோற்க..

1 மார்., 2013

Google Buzz - ம், பின், முன்,நடு, ஓர நவீனத்துவ கருத்துகளும்...

ஒரு காலத்தில் கூகுள் Buzz -ல் நம்ம ஆளுங்க பிரமாதமா கலக்குவாங்க!. இப்ப புதுசா படிக்கிற மக்களுக்காக மீண்டும்...கேவிஆர் . - Buzz - Public
அகரம் படத்திலே நம்ம கேபிள் கலெக்டர் :-)
2 people liked this - Selvam Muniyandi and அருணையடி .
எம்.எம். அப்துல்லா - எந்த கலெக்ட்டர்? பில் கலெக்ட்டரா?? குப்பை கலெக்ட்டரா??

:))

எது என்ன பெரிய விஷயம். எதோ ஒரு படத்துல கேபிளை ஜட்ஜா பார்த்தேன். கேபிள்லாம் நாட்ல நீதி சொல்லி.... கொடுமைடா சாமி :(
3:38 pm
கேவிஆர் . - ஒரு சீனோட கலெக்டரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க :-)))3:41 pm
raguraman r - எதோ ஒரு படத்துல கேபிளை ஜட்ஜா பார்த்தேன்.!! என்ன படம் அது ?3:43 pm
எம்.எம். அப்துல்லா - பேரு தெரிஞ்சா நான் ஏன் ஏதோ ஒருபடம்னு சொல்லப்போறேன்?? நல்லாக் கேக்குறாய்ங்கய்யா டீட்டேலு.3:49 pm
raguraman r - பாஸ் உங்க சப் கான்ஷியஸ் மைன்ட் ல எதவாது மூலையில இருக்கும் .. நல்லா யோசிங்க பாருங்க :) :)3:54 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - நான் கேபிளை ஒரு படத்துல போலிஸ் கமிஷனரா பார்த்தேன்.3:55 pm
O.R.B Raja - வக்கீலா இருந்து எப்போ ஜட்ஜானாரு. இப்பத்தானே அவர வக்கீலா பாத்தேன்.3:55 pm
கேவிஆர் . - மூளையின் மூலையிலே இருந்தாலும் வெளில எடுக்க அது என்ன சிநேகா நடிச்சப் படமா?3:55 pm
Suresh @ Night Sky - நான் கேபிள் சார கனவில பார்த்தேன்:-)3:56 pm
raguraman r - கனவுல யாரோட பார்த்தீங்க :P3:56 pm
Suresh @ Night Sky - :_))))))))))))3:57 pm
விஜி . - நான் கூட ஒரு நாடகத்திலே பார்த்தேன், என்னவான்னு மறந்துட்டேன்3:57 pm
கேவிஆர் . - @ரகு :-))))))))))))3:58 pm
O.R.B Raja - நான் கேபிளை நேத்து நேர்ல பாத்தேன்...போங்கப்பூ..4:00 pm
Suresh @ Night Sky - எங்க வச்சு பார்த்தீங்க?4:06 pm
O.R.B Raja - @சுரேஷ் - அதெல்லாம் ரகசியம் ;) சாமி கும்புடுற எடத்துல பாத்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க?4:13 pm
Suresh @ Night Sky - ஹி ஹி ஹி, கூட யாரு சார்?4:16 pm
O.R.B Raja - சுரேஷ், ரொம்ப டீடேய்லு கேக்காதீங்க. ஒளரிடப் போறேன்...4:20 pm
மணிஜி கோபால் - நான் கேபிளை ஒரு படத்துல ஜாக்கியா பார்த்தேன்4:37 pm
ramesh subburaj - கேபிள் சுயேச்சை MLA படத்துல போலீஸ்4:37 pm
§en.. ™ - அகரம் பட டைட்டில கேபிள் பேர் போடாம இருட்டடிப்பு செய்த இயக்குனரை வண்மையா கண்டிப்போம்..4:44 pm
ராஜ வம்சம் - அகரம் படத்தில் ஹீரோவுக்கு கலெக்டர் ரோலா?4:58 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - அட ஆமாம்.. நிறைய பேர் போன் பண்ணி கேட்டாங்க.. எனக்குத்தான் பேர் மறந்து போச்சு.. நன்றி கேவிஆர்5:17 pm
கேவிஆர் . - சிங்கிள் ஷாட் வந்தாலும், கார் கிட்டே போய் திரும்பி ஒரு லுக்கு விடுவிங்க பாருங்க, ஜூப்பரு :-)5:19 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - நன்றி..நன்றி..5:23 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - கேவிஆர், சாருவோட விரல்கள் சூப்பரா நடிச்சிருந்தன அப்படின்னு ஒரு வாசகர் கடிதம் படிச்சேன். அதுதான் ஞாபகம் வந்துச்சு :)5:27 pm
கேவிஆர் . - சுந்தர் :-)5:29 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - நான் அந்த படத்தில் மூன்று காட்சிகள் நடித்ததாக ஞாபகம். ஆனால் எடிட்டிங்கில் போய்விட்டது.5:31 pm
४१ தோழி १४ - sankar narayan (கேபிள் சங்கர்) - நான் அந்த படத்தில் மூன்று காட்சிகள் நடித்ததாக ஞாபகம். ஆனால் எடிட்டிங்கில் போய்விட்டது. //

எப்பூடில்லாம் சமாளிக்கறாங்கப்பா..:)))
5:32 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - அட நிசமாவேங்க..இதுக்கெலலாம் நான் சமாளிக்கவே மாட்டேன். இதாவது பரவாயில்ல.. போக்கிரி படத்துல சுமார் 15 நாள் நடிச்சிட்டு, ஒரே ஒரு ஷாட் வந்தேன் அத என்ன சொல்றது. அது கூட இந்த படத்திலயாவது பார்த்து தெரிஞ்சுக்கலாம். ஆனா போக்கிரில நானே சொல்லி பாக்குறதுக்குள்ளே போயிரும். பதினைஞ்சு நாள் நடிச்சேன். ம்ஹும்5:34 pm
கேவிஆர் . - பாவம் கேபிள் & சாரு :-)5:35 pm
§en.. ™ - @கேபிள்.. போக்கிரில அந்த ஒரு ஷாட் நீங்க சரியா நடிச்சியிருக்க மாட்டீங்க... அதான் ரீடேக் ரீடேக் வாங்கி 15 நாள் நடிச்சியிருப்பீங்க...
;-)
5:36 pm
ராஜ வம்சம் - sankar narayan (கேபிள் சங்கர்) இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது என் நண்பன் ஒருவன் வருசகணக்கா ஒரே படத்தில நடிச்சான் படமே ரிலிஸ் ஆகல.5:38 pm
ராஜ வம்சம் - @४१ தோழி १४ இது பொது இடம் பெயர் சொல்லாமல் விடுவதே சரி.5:42 pm
४१ தோழி १४ - அவர் எனக்கும் நண்பர் தான் இல்லாம எனக்கு இந்த மேட்டர் எப்படி தெரியும்.. நான் இலங்கைல இருக்கேன்ல..

மன்னிக்கவும் காமெண்ட அழிச்சிட்டேன்..
5:45 pm (edited 5:46 pm)
யெஸ்.பாலபாரதி . - கேபிள்- குரல் உங்களுடையது தானா? #டவுட்டு.5:47 pm
ramesh subburaj - பாலா இப்போது இயக்கி வரும் அவன் இவன் படத்தில் நாயகிகளாக நடித்துள்ளவர்கள் மது ஷாலி்னியும் ஜனனியும். 10 காட்சியில் வரும் அளவுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.

பிறகு சொல்லியனுப்பும்போது வந்தால் போதும் என்று கூறி தேனி ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்தார்களாம்.

அவ்வளவுதான். அதன் பிறகு அவர்களை மறந்தே போனார் பாலா. காரணம், கதை முழுக்க ஹீரோக்களும் வில்லனுமே ஆக்கிரமித்துக்கொள்ள, ஹீரோயின்கள் அவசியப்படவே இல்லையாம்.

படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைக்கும்போதுதான் சொல்லியனுப்பினார்களாம் ஹீரோயின்களுக்கு.
5:47 pm
ராஜ வம்சம் - கேவிஆரும் குசும்பணும் படம் எடுக்க போரதா போனவாரம் பஸ்ஸுல பேசிக்கிட்டாங்க # பதிவுலகில் ரொம்பபேருக்கு நடிக்க சந்தர்ப்பம் உண்டு.5:48 pm
எம்.எம். அப்துல்லா - @ ராஜவம்சம் - பதிவுலகில அல்ரெடி பலபேரு நடிச்சிகிட்டுதானே இருக்காங்க :)5:51 pm
ராஜ வம்சம் - @எம்.எம். அப்துல்லா அண்ணா நா சினிமாவுல சொன்னேன் நீங்க எந்த நடிப்ப சொல்றீங்க.5:55 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - பாலபாரதி@ நான் தொடர்ந்து செல்வியிலிருந்து அந்த வக்கில் கேரக்டர் செய்து கொண்டு வந்தேன் முதலில் டப்பிங் ஆர்டிஸ்டை வைத்து குரல் கொடுத்துவிட்டார்கள் அதனால் தொடர்ந்து அவரே பேசினார்.6:09 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - அண்ணே.. நான் சினிமாவுல மட்டுமே நடிப்பவன்.6:10 pm
Sanjai Gandhi - //sankar narayan (கேபிள் சங்கர்) - அண்ணே.. நான் சினிமாவுல மட்டுமே நடிப்பவன்.//
தோடா.. சிம்புக்கு பக்கத்து வீட்டுக்காரர்.. :)
6:31 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - அஹா.. வந்திருச்சு.. வந்திருச்சு6:34 pm
Sanjai Gandhi - அய்ய.. பஸ்ல வேனாம்.. பாத்ரூம் போங்க..6:38 pm
எம்.எம். அப்துல்லா - உனக்கு வெளிய நடிக்க தெரிஞ்சிருந்தாத்தான் இந்நேரம் டைரக்‌ஷன் சான்ஸ் கிடைச்சிருக்குமே :((6:41 pm
ஸ்ரீதர் நாராயணன் - அட! வாழ்த்துகள் கேபிள்!6:43 pm
.............................................................................................................................................

jackie sekar - Buzz - Public
யாராவது பெங்களூர்ல பயணம் படத்துக்கு இன்று மதியாகட்சிக்கு என்னோடு வரமுடியுமா??? வண்டி வைத்து இருக்க வேண்டும்.... என்னை போல யாராவது வெட்டியாக இருந்தால் எனது செல்போன் எண் 09840229629க்கு எஸ் எம் எஸ் பண்ணவும்.. நான் கால் பண்ணறேன்... ஒரு மணிக்குள்ள பதில் சொல்லங்க...
1 person liked this - VARIndia Magazine
யுவ கிருஷ்ணா - ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணி கொடுத்தால் நானும், அதிஷாவும் உங்களோடு படம் பார்க்க தயார்.11:14 am
jackie sekar - கொய்யால எல்லா வழியாவும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்..லக்கி..11:15 am
கோ. கணேஷ் - ஜாக்கி PVR கிளாசிக்கில் போட்டிருக்காங்க... மடிவாலாலேர்ந்து நடக்கிற தூரம் தான்... அதுக்கு போய் வண்டி வேணும்னு பேசறது நியாயமில்லை...11:19 am (edited 11:20 am)
jackie sekar - உண்மைதான் டிக்கெட் செக் பார்த்தேன் சண்டித்தனம் பண்ணியது.. ரெண்டாவது இன்னைக்கு அங்க புல்லா இருக்க வாய்ப்பு இருக்குன்னு மச்சான் சொன்னான்.. அதான் அடுத்த ஆப்ஷன் பார்க்குறேன்...11:29 am
jackie sekar - ஐநாக்சில் டிக்கெட் தேடினால் 240, 350 என்று டிக்கெட் விலையை சொல்லி சினிமாவையே வெறுத்து போக வைக்கின்றார்கள்...11:34 am
jackie sekar - மார்த்தஹல்லி கிட்ட இருக்கும் இன்னோவேட்டிவ் மல்ட்டி பிளக்ஸ் பக்கத்துல மச்சான் ஆபிஸ் இருக்கு டிராப் பண்ணிட்டு போடான்னு சொன்னேன். அந்த தியேட்டருக்கு கெயிட்டி பராவயில்லைன்னு சொல்லறான்....11:36 am
jackie sekar - அஜந்தா தியேட்டர் நல்லா இருக்கும் ஆனா ரொம்ப தூரம் என்று சொன்னான்11:37 am
யுவ கிருஷ்ணா - சென்னை சத்யமிலேயே காத்தாடுகிறது. பெங்களூர் ஐநாக்ஸில் ஃபுல் ஆகிறதா? ஆச்சரியம்.11:37 am
கோ. கணேஷ் - இன்னோவேட்டிவ் மல்ட்டி பிளக்ஸா ...
அங்க போறதுக்கு சும்மாவே இருக்கலாம்...
11:37 am
கோ. கணேஷ் - ஆமா PVR Classicல் 03:40PM 09:20PM ரெண்டு ஷோவும் ஃபுல்....11:38 am
jackie sekar - அதேதான் கணேஷ்....11:40 am
மணிஜி கோபால் - //மதியாகட்சிக்கு//

புது கட்சியா ஜாக்கி?
12:29 pm
jackie sekar - குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்குங்கும் புலவர்கள் இருக்கின்றார்கள்.. மிஸ்டேக் கண்டுபிடித்து பேர் வாங்கும் நீர் எந்த இனத்தை சேர்த்தவரென்று எனக்கே விளங்கவில்லை...12:39 pm
எம்.எம். அப்துல்லா - ஜாகியண்ணே, குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கினால் புலவர். மிஸ்டேக் கண்டுபிடித்து பேர் வாங்கினால் பொயட்.12:42 pm
மணிஜி கோபால் - //சேர்த்தவரென்று//

சேர்ந்தவர்
12:42 pm
மணிஜி கோபால் - ////மதியாகட்சிக்கு//


இது உனக்கு மிஸ்டேக்கா ஜாக்கி?
12:43 pm
மணிஜி கோபால் - //வாங்குங்கும்/

3 மணிக்குத்தானே படம்?
12:44 pm
அகநாழிகை பொன்.வாசுதேவன் - யோவ்(மணி)ஜி, ‘சொரணை‘ய மாத்துங்க முதல்ல12:44 pm
மணிஜி கோபால் - அது கொஞ்சம் சூடு கம்மி வாசு12:44 pm
jackie sekar - போய்யா போ....12:46 pm
அகநாழிகை பொன்.வாசுதேவன் - அப்போ ஆறிப்போச்சா?12:46 pm
மணிஜி கோபால் - சதா தப்பு பண்றியே ஜாக்கி12:47 pm
jackie sekar - எல்லாம் இனிமே அப்படித்தான்....12:51 pm
subramanian rajaraman - சாதா தப்பு இல்லையா மணிஜி?# டவுட்டு12:55 pm
.........................................................................................................................................................

இதனை எத்தனை பேர் படித்தீர்கள் என்று தெரியவில்லை.

இந்த மாத சூரியக்கதிர் புத்தகத்தில் நடிகை ரஞ்சிதாவின் பேட்டி. அதில் ஒரு கேள்வி :

கேள்வி : எழுத்தாளர் சாருநிவேதிதா உங்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தீர்களா..? அதைப் பற்றி உங்களது கருத்தென்ன..?

ரஞ்சிதாவின் பதில் : நான் அவருடைய எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதைப் பற்றி நான் எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மக்கள் அதையெல்லாம் எப்படிப் படிக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

உங்களுக்கு மட்டுமா ஆச்சரியம்..? எங்களுக்கும்தான் அம்மணி..!
மணிஜி கோபால் - வேற என்ன கேள்வி கேட்டாங்க அண்ணே?2:42 pm
Suresh @ Night Sky - இதுல ஆச்சரிய பட என்ன இருக்கு, இவங்க நடிக்கறத அவரு எழுதராரு அவ்வளவுதான்..2:44 pm
உண்மைத்தமிழன் S. - பொஸ்தகம் வாங்கிப் படிண்ணே.. சாருவைப் பத்தி கேட்டிருக்கிறது இது ஒண்ணுதான்..!3:01 pm
S.Raja Priyan - எப்பா இது உலக மகா நக்கலு.......

இருந்தாலும் தல சாருவை விமர்சிக்க ரஞ்சிதாவுக்கு அருகதை இல்லை.......
3:07 pm
S.Raja Priyan - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் ரஞ்சிதா இருட்டடி வீரனுடன் "அஜால் குஜால்" செய்த ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இப்படி பேசுவது சரியில்லை.3:21 pm
Priya Siva - அப்டியே ரஞ்சிதா பத்திப் பேசறதுக்காக உங்களுக்கு வழங்கப்பட்ட அருகதைத் தகுதிச் சான்றிதழையும் இணைச்சுட்டீங்கன்னா... மத்தவங்களுக்கு ஈஸியா இருக்கும்...3:25 pm
S.Raja Priyan - நான் எவளோடு கள்ளத்தனமாக படுத்து மாட்டிக் கொண்டு இன்னும் என்னுடைய காணொளி வெளியாகவில்லை.... வெளியான பிறகு அந்த உரிமை எனக்கு மறுக்கப்படும்3:29 pm
Priya Siva - ||S.Raja Priyan - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் ரஞ்சிதா இருட்டடி வீரனுடன் "அஜால் குஜால்" செய்த ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இப்படி பேசுவது சரியில்லை.

S.Raja Priyan - நான் எவளோடு கள்ளத்தனமாக படுத்து மாட்டிக் கொண்டு இன்னும் என்னுடைய காணொளி வெளியாகவில்லை.... வெளியான பிறகு அந்த உரிமை எனக்கு மறுக்கப்படும்||

இப்டிப் பேசறவங்களுக்கே அந்த உரிமை இல்லைன்னு நான் நினைக்கறேன்...

VOMITS
3:30 pm
Vidhoosh . - ராஜப்ரியன்: ரஞ்சிதா போன்ற பொதுஜன சாதாரண வாசிப்பாளர்கள், ச்சாரு எழுத்தை விமர்சிக்க என்ன மாதிரியான தகுதி இருக்கணும்னு நினைக்கிறிங்க...3:32 pm (edited 3:32 pm)
Priya Siva - :)@விதூஷ்...3:32 pm
S.Raja Priyan - ஐயோ நான் இதவிட மோசமா பேசுவன் நண்பா.... ஒங்களுக்கு நான் ரொம்ப புதுசு....... வாந்தி எடுக்கறது தப்பு இல்ல........ டாக்டர்கிட்ட போங்க3:34 pm
Priya Siva - ஓ.. ஸாரி... குழந்தைன்னு தெரியாம பேசிட்டேன்... நல்லாருப்பா... ஆசீர்வாதம்...3:34 pm
S.Raja Priyan - நன்றிங்கண்ணா3:35 pm
Vasu Balaji - :))3:35 pm
Vidhoosh . - எஸ்.ராஜப்ரியன்: நீங்க சாம்ராஜ்ய பிரியன் தானே..3:36 pm
கேவிஆர் . - விதூஷ் - இல்லை. சாம்ராஜ்ய ப்ரியன் - தினேஷ் - Mr.R.Din :-)3:36 pm
S.Raja Priyan - @Vidhoosh .: அவுங்க பொது ஜன வாசிப்பாளரா விமர்சனம் பண்ணா தப்பில்ல.

அவுங்க .......... காரியத்துல ஈடுபட்டு மாட்டிக்கான அப்பறமும் வேஷம் போடறதுதான் தப்பு. இதனால அவுங்களுக்கு சாருவை விமர்சிக்க தகுதி இல்லை.
3:38 pm
S.Raja Priyan - @கேவிஆர் .:நன்றி அவரு ரொம்ப நல்லவரு3:39 pm
கேவிஆர் . - அவங்க வேஷம் போடறதுக்கும் சாரு எழுத்தை விமர்சிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? கிறுக்குத்தனமா இருக்கு ராஜப்ரியன்3:42 pm
Vidhoosh . - ராஜப்ரியன். ரஞ்சிதா சாருவை விமர்சிக்க நித்தியானந்தாதான் காரணம் என்று நீங்கள் நம்பினால், சாரு-வும் நித்தியானந்தாவை "குரு"வென்று சொன்னதில்லையா? குமுதத்தில் ஒரு பத்தி கூட அவருக்காக எழுதிக் கொடுக்க வில்லையா? எனக்கு ரஞ்சிதாவுக்கும், சாருவுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.3:43 pm (edited 3:44 pm)
S.Raja Priyan - Vidhoosh .: சாரு அதை எல்லாம் ஒத்துக் கொண்டு விட்டார். ஏமாந்ததாக பிறகு அது பற்றி எழுதியும் உள்ளார்3:44 pm
கேவிஆர் . - சாருவை விமர்சிக்கணும்ன்னா அவரோட புத்தகங்கள் நாலஞ்சு படிச்சிருக்கணும்ன்னு சொல்லுங்க, அது ஒகே. அதை விட்டுட்டு அவ யாரோட படுக்கணும், எங்கே படுக்கணும்ன்னுல்லாம் முடிவு பண்ணிட்டுத் தான் விமர்சிக்கணும்ன்னு சொல்றது ........3:45 pm
S.Raja Priyan - @கேவிஆர் : .நீங்க சொல்றது கூடம் ரொம்ப லூசுத் தனமாதான் இருக்கு.3:45 pm
சந்தோஷ் = Santhosh - அதான் தெளிவா அவங்களே சொல்லி இருக்காங்களே அவரோட படைப்புகளை படிச்சி இருக்கேன்னு..அப்புறம் என்னா அவரோட எலக்கியங்களை படிக்காம பேசுறாங்கன்னு ஒரு ஜல்லி...3:47 pm
கேவிஆர் . - @ராஜப்ரியன் - ரைட்டுங்க :-)3:47 pm
S.Raja Priyan - thank you :-)3:47 pm
கேவிஆர் . - @ராஜப்ரியன் - எதுக்குங்க?3:48 pm
Vidhoosh . - அப்போ நானும் சாம்ராஜ்ய ப்ரியனுக்கு sorry சொல்லணும்... இல்லையோ ...
sorry Mr.R.Din :-)
;P
:D
3:52 pm (edited 3:52 pm)
கேவிஆர் . - @விதூஷ் - தினேஷ் அப்பாவி :-))))3:54 pm
Suresh @ Night Sky - எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போகுது மேட்டரு??????3:54 pm
raguraman r - // கேவிஆர் . - @விதூஷ் - தினேஷ் அப்பாவி :-)))) //

:) :) இன்னுமா இந்த ஊர் அவன நம்புது :P
3:55 pm
Vidhoosh . - ரகு: கம்பேரிசன் யாரோடங்கரத பொறுத்து கே.வி.ஆர் மதிப்பீடு செய்திருப்பார். மற்றபடி, குட்டி டின்... நான் எதுவும் சொல்வதற்கில்லை.4:08 pm
raguraman r - விதூஷ் அந்த குட்டி டின்னை எனக்கு 7 வருடங்களாக தெரியும்.... ரொம்ப ரொம்ப அப்பாவி அவேன்.. Mr.R.Din :-) நன்பேண்டா :) :)4:14 pm
Vidhoosh . - ரகு: வேலிக்கு ஓணான் சாட்சி.. டண்டேலி போனவருதானே நீங்க... :))5:10 pm
கேவிஆர் . - ரகு, நான் என்னோட கம்பேர் பண்ணி சொன்னேன் :-)5:10 pm
raguraman r - @ விதூஷ் - நான் இனி ஒண்ணுமே பேசல :( :( டண்டனகான் தான் எனக்கு :P

கேவிஆர் . - அண்ணே அப்படியே உங்களோட என்னையும் கம்பேர் பண்ணி எவ்ளோ நல்லவன் வல்லவன்னு சொல்லுங்க :P
5:13 pm
கேவிஆர் . - @ரகு - உன்னை அப்படிச் சொல்ல முடியாது. ஏன்னா நீ டண்டேலி போனவன் #விதூஷ் வாழ்க5:17 pm
Vidhoosh . - http://www.ithutamil.com/content.aspx?user=raguraman86@gmail.com&postid=a633824a-01b5-400c-aadc-6a07396dee9b
டண்டேலி கதை இங்கே இருக்கு... கும்மலாம்... # ஸ்டார்ட் ம்யூசிக்
5:21 pm
raguraman r - நீங்களுமா :( :(5:22 pm
Vidhoosh . - நீச்சலே தெரியாம ராஃப்டிங்?5:23 pm
raguraman r - ஆமாம் விதூஷ்.. பயம் நீங்க தண்ணியில சும்மாவே குதிக்க சொல்லிட்டாங்க..5:25 pm
கேவிஆர் . - அதான் செய்வாங்க, தரைலேயே தவழ்ந்துகிட்டு இருந்தா நீச்சல் வந்துடுமா ;-)5:26 pm
raguraman r - இல்லீங்க அண்ணே .. கைடு கிட்ட துருவி துருவி எனக்கு நீச்சல் தெரியாது நம்பி வரலாமா safe தான அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தேன். அவன் கடுப்பாகி ஒன்னும் ஆகாது யா விழுந்தாலும் மேல தான் வருவா வேணும்னா குதுச்சி பார்ன்னு சொல்லிட்டான்5:30 pm
கேவிஆர் . - நீச்சல் தெரியாம தண்ணில குதிச்சா மேல போய் தான் ஆகணும் ;-)5:34 pm