31 ஜூலை, 2012

காமத்திலிருந்து கடவுளுக்கு...

முதலில் 
அறிமுகம் 
கொஞ்சமாய் சினிமாவை 
அலசியபின் 
செக்ஸ் பற்றிய 
தடுமாற்றமான துவக்கம்
மெல்ல 
பாதுகாப்பான உறவில்
கைவசம் 
காண்டம் இல்லாமலும்
முடியும் என்றேன்
கண்களை ஊடுருவிய 
கண்கள் நிலைக்க
ஆக்ரோஷமான காமத்தை
விரும்புகிறவள் நீ என்றாய்
ஒரு 
பறவையைப் போல் 
என் காமத்தை 
அவசரப்படுத்த முடியாது 
நான் பாம்பு 
உன்னையும் 
பாம்பாக பற்றிக்கொள்ளத்தான்
முடியும் என்றேன்
அவளின் புன்னகை
எமது 
கைகளை பற்றிக்கொண்டது
நெற்றியில்
கண்களில்
உதடுகள் 
நாக்கு 
கைகள்
அனிச்சையாய்
ஆடைகளை கலைக்கத் துவங்கின
ஒவ்வொரு துளியாய்
உயிர் பருகினோம் 
உச்சம்
கடவுளாய் மாறினோம்...

30 ஜூலை, 2012

மலே..மலே.. மலேசியா...

இம்முறை மலேசியாவில் பிசினஸ் வாய்ப்பினை தேடலாம் என முடிவு செய்து இப்பயணத்துக்கு முன்பாக ஒரு முறை அதற்கான வாய்ப்புகளை சென்று கண்டறிந்து அதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு வந்தேன். அதனை இரண்டு மாதங்களுக்குப் பின்தான் கிடைக்கப்பெற்றேன். என்னுடைய நண்பர் மூலமாக ( இவர் ஒரு டிராவல் ஏஜெண்ட்) சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்தில் அதற்கான விசாவை ஸ்டம்பிங் செய்ய கொடுத்திருந்தேன். ஆனால் விசா காப்பி ஒரிஜினல்தான் வேணும் இல்லையெனில் ரூ.3500 ஆகும் என்றார். திரும்பவும் மலேசியாவுக்கு பேசினால் அங்குள்ள நண்பர் அண்ணே ஒரிஜினல் காப்பி அனுப்பினால் வந்து சேர ஒரு வாரம் ஆகும் பரவாயில்லையா என்றார். எதற்கும் ஒரு விசாரனையை செய்து பார்க்கலாம் என நானே நேரடியாக மலேசிய எம்பசிக்கு போனேன். அங்கு போனால் வெறும் ரூ.800 க்கு டி,டி எடுத்து அப்ளை செய்யுங்கள் ஒரிஜினல் காப்பி தேவையில்லை என்று சொன்னார்கள். மறுநாள் அப்துல்லா அண்ணனின் சகோதரி மகள் திருமணத்துக்கு அதிகாலையே கிளம்பத் திட்டமிட்டதால் (அதிலும் பாண்டிச்சேரி வழியாகப் போவதாக திட்டம்) வேறு யாரையாவது அப்ளை செய்ய சொல்லலாமா என அங்குள்ள அதிகாரியிடம் கேட்டேன். ஒன்னும் பிரச்சினையில்லை என்றார். நண்பரிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு கேபிள்,மற்றும் ஸ்பான்சர் ஓ.ஆர்.பி ராஜாவுடன் வண்டி கட்டிவிட்டேன். ஆனால் விதி வலியது. அதற்கடுத்து ஒரு வாரம் கழித்துதான் பாஸ்போர்ட் கிடைத்தது. முக்கியமாக அதற்கான காரனங்களை இங்கு எழுத முடியாது!!!

வரிசையாக மூன்று முறை டிக்கெட்டை கேன்சல் செய்தாகிவிட்டது. கைவசம் வைத்திருந்த பணம் கரைந்துவிட்டது. டிக்கெட் திடீரென எக்கச்சக்கமாக விலையேறிவிட வழக்கம்போல் சிங்கை நண்பன் பணம் அனுப்பி பிரச்சினையை தீர்த்தான் என்றாலும் வீட்டு செலவுக்கு கொஞ்சமாவது பணம் கொடுக்க வேண்டுமே என யோசித்து இன்னும் குறைந்த விலையில்  டிக்கெட் கிடைக்குமா என ஆராய ஸ்ரீ லங்கன் விமானத்தில் வாய்ப்பு இருக்கு ஆனா மறுநாள்தான் போய்ச்சேருவீங்கன்னு நண்பன் சொன்னான். இறுதிக்கட்ட ஈழப்போருக்குப் பின் அவ்விமானத்தில் பயணம் செய்வதில்லை என்றபோதிலும் கையிருப்பு லட்சியத்தை கைவிட வைத்தது. இதற்கிடையில் நான் தற்காலிகமாக பதிவுலகத்தை விட்டு தற்காலிகமாக நீங்கியது தனிக்கதை. 

ஏப்ரல் 13 அன்று மாலை 4.50 க்கு சென்னை டு கொழும்பு மாலை ஆறு மணிக்கு இறங்கினேன். அடுத்த விமானம் நள்ளிரவுதான் எனவே ட்ரான்சிஸ்ட் லாஞ்சில் ஓரமாக ஒரு இருக்கையை தேடி ஒரு புத்தகத்தை தொடர்ந்தேன். இரவு 9 மணிக்கு டின்னர் வவுச்சர் தந்தனர். ஒரு சாண்ட்விச் மற்றும் ஒரு கேக்குடன் ஸ்ப்ரைட். அப்போதுதான் எனது விமானத்தின் சக பயணிகள் சிலரை சந்தித்தேன். அவர்களிடம் அளவளாவியதில் நேரம் விரைவாக கடந்தது. அவை அனைத்தும் பத்து பதிவுகள் எழுதலாம் அவ்வளவு சுவாரஸ்யம் ஆனால் மற்றவர்களின் அந்தரங்கம் கருதி அதனை வெளியிட முடியாது. 

ஆனால் அங்கு ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது துபாயில் இருந்து வந்த கேரள பயணி ஒருவர் போதையில் தன் சென்னை விமானத்தை தவற விட்டுவிட்டார். அவர் அதிகாரிகளை மிக மோசமாக அலைகழித்தார். அங்குள்ளோர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் மட்டையாகிவிட்டார். அதிகாரிகள் அவரது உடமைகளை எடுத்து சென்றுவிட்டனர். நாங்கள் கிளம்பும் நேரம் அவர் போதை தெளிந்து உடமைகளை தேடினார். அதிகாரிகள் கைவிரித்தனர் யாரும் அவருக்கு உதவவில்லை. ஒரு மலையாளிக்கும், சிங்களர்களுக்கும் நடந்த அந்த விளையாட்டை அதற்கு மேல் ரசிக்க முடியவில்லை. 

அங்கிருந்து தாமதமாக கிளம்பிய விமானம் மறுநாள் காலை 7மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தது. ஒரு மணி நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூர் வந்தடைந்தது. இமிக்ரேசனில் நீண்ட வரிசை. 11 மணிக்கு சுமாராக வெளியே வந்து லக்கேஜை தேடினால் கிடைக்கவில்லை. அதிகரினியின்(பெண்) உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு பேரூந்து நிறுத்தம் வந்தால் பந்திங் பஸ்சுக்கு இன்னும் அரைமணி நேரம் என்றார்கள். விமானத்தின் மட்டமான உணவு பசியைக் கிளப்பியது. ஆனால் நிலையத்தில் இருந்த உணவகம் மூடிகிடந்தது.

பந்திங் பஸ் அரை மணித்தியாலங்கள் கழித்து வந்து இன்னொரு பத்து நிமிடம் காத்திருந்து புறப்பட்டது. எனது லக்கேஜை சரியாக வைக்க முடியாமல் அவதிப்பட்டேன். ஒரு தமிழ் பேரிளம்பெண் இடிக்காமல் வைய்யுங்கண்ணே! என்றார். பந்திங் வருவதற்குள் ஒரு தூக்கம் முடிந்தது. பந்திங் பேரூந்து நிலையத்திலும் உணவு கிடைக்கவில்லை பிசாங் கொரிங் ( வாழைப் பழ வருவல்) வாங்கி சாப்பிட்டுவிட்டு கிள்ளான் பேரூந்தில் தொற்றிக்கொண்டேன். மதியம் 2 மணிக்கு கிள்ளான் வந்தேன். அங்கிருந்து தம்பியின் வீட்டிற்கு கூட்டிப்போக நண்பர் வெங்கட் தனது வாகனத்துடன் தயாராக இருந்தார். கிராமத்தின் உள்ளே நுழையும்போது ஒரு பக்க சாலையை அடைத்தவாறு நூறுக்கும் மேல் மோட்டார் சைக்கிள்களிலும், ஐம்பதுக்கும் மேல் கார்களும் அணிவகுத்துச் சென்றன. மோட்டார் சைக்கிள்கள் அனைத்திலும் இரண்டு நபர்கள். யாரும் ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் அமர்ந்திருந்தவர்கள் கைகளில் ஒரு மஞ்சள் கொடி அதில் 80 எனப் பெரிதாக எழுதியிருந்தது. அதன் நடுவில் ஒரு அலங்கார வண்டி. கடைசியாக ஒரு போலீஸ் கார். நண்பர் வெங்கட் மற்றும் எதிர்வரிசை வாகனம் அனைத்தும் ஓரங்கட்டிக் கொண்டன. வெங்கட்டிடம்  விசாரித்தால் ”அது ஒரு தமிழ் டானின் மரண ஊர்வலம். அவர்களின் அடையாள எண் கோசம் எட்டு(08)” என்றார். ”அண்ணே அவங்க 80 ந்னுதானே எழுதிருக்காங்க?” அவரோ “அது நாம் பாக்கும்போதுதான் 80, அவங்க சைடுலேர்ந்து பாத்தா 08” என்றார். நான் ஒரு மாதிரி ஜெர்க் ஆனதும் “அண்ணே இங்க இப்படித்தான்” என்றார். இன்னொரு வார்த்தையும் சொன்னார் “ அண்ணே நீங்க இப்ப தங்கப் போறதே இவங்க ஏரியாவுலதான்” என்றார். எனக்கு வயிற்றில் பசி அமிலம் கூடியது.

அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து பேரூந்தில் கிள்ளானில் இருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். இன்னும் இரண்டு நிறுத்தம் கடந்தால் இறங்கனும் என்பதற்காக படிக்கட்டு அருகே நின்றுகொண்டிருந்தேன். என்மேல் எரிச்சலான ஒரு மலாய் இளைஞன் “அபாங் மானா மாவ் துரூன்?” ( அண்ணே நீ எங்க இறங்கனும்?) என்றான். நான் “தாமான் செந்தோசா” என்றேன். அவன் உடனே பதட்டமாகி “சாரி அபாங்!!!!”  என அந்தக் கூட்டத்திலும் இரண்டடி தள்ளி நின்றான். நான் இறங்கும் வரை அவன் கண்கள் என்னை பயத்துடன் பார்த்தன. வீட்டிற்கு வந்து தம்பியிடம் ”என்னடா இப்படி ஒரு எடத்துல வீடு எடுத்துருக்கே?” என்றால். “அண்ணே இங்க நமக்கு எதுவும் பிரச்சினை இல்லை, பாதுகாப்பு அதிகம்!!! “ என்றான்.  அதன்பிறகு ஒரு மாதம் ஆகியும் அப்பகுதிக்கு இணைய இணைப்பு வாங்க முடியவில்லை. அதனால் அதனையே காரனமாக்கி மீண்டும் டவுன் பக்கம் வீடு பார்க்க சொல்லிவிட்டேன். வியாபாரம் செய்ய வந்தால் வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுமோ என கவலையாக இருக்கிறது!.

கேபிள் சங்கர், அப்துல்லா ...


அண்ணன் அப்துல்லா மற்றும் தோழர் கேபிளுக்காக ஒரு மீள்பதிவு. 

இன்று இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


கேபிள் - அப்துல்லா பிறந்த நாள் சிறப்பு மலர்


பதிவுலகின் No.1 பிளாக்கரான கேபிள் சங்கரை எனக்கு கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாகத்தான் தெரியும். நான் தி.நகரிலும், அவர் சைதாப்பேட்டையிலும் இருந்தாலும் நான் அவரை பதிவுகளில் பார்ப்பதுடன் சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அந்த சமயங்களில் நான் அதிகம் சிங்கப்பூர், மலேசியா என சுற்றிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு சிங்கப்பூரில் இருந்து வந்தபிறகு அவர் சிங்கப்பூர் சென்றபோது அவர் BUZZ ல் தன் சிங்கப்பூர் வருகையை பகிர்ந்துகொண்டபோதுதான் அவருக்கு போனினேன். அங்கு மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் எனக்குப் போனும்படி சொன்னேன். ஆனால் சிங்கை நண்பர்களின் அமோக கவனிப்பால் ( கேலாங் உள்ளிட்ட) என் உதவி அவருக்கு தேவைப்படவில்லை. அதன்பிறகு அவர் டைகர் ஏர்வேஸில் ஊருக்கு வந்த அதே நாள் என் நண்பனும் அதே ஏர்வேஸில் எனக்காக GLENFIDDICH விஸ்கியுடன் வருவதாக சொன்னதும் அவனை முக்கியமாக அந்த விஸ்கிக்காய்  ஏர்போர்ட் சென்றபோது நமது பதிவுலக தானைதலைவன் (அ) தானே தலைவன் வந்தார். அவரை அடையாளம் கண்டு ஒரு அலோ சொன்னதும் என்ன ஆட்டோகிராஃப் வேனுமான்னார். அண்ணே நானும் பிளாக்கர்தான்னு சொல்லி என் பேரை சொன்னதும் அவர் கையிலிருந்த பாட்டிலின்மேல் என் பார்வை சென்றதும் இன்னொரு நாள் பார்க்கலாம் தலைவா என விடைபெற்றார்.

அதன்பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு பாரில்வைத்து பரஸ்பரம் அறிமுகமாகி அதன்பிறகு ஒருநாள் இரவு எனக்கு போனியபோது இன்னோரு முக்கியமான நபர் என்னுடன் பேச விரும்புவதாக சொன்னார். அவர் பதிவுலக பஸ்ஸுலக அண்ணன் ( இன்னும் புரியலியா?) அப்புறம், அண்ணனுக்கு நேரம் கிடைக்கும்போதும் ஸ்ரீதேவி ஓட்டலில் சந்திப்புகள் தொடர்ந்து அண்ணன் அண்ணன் அல்ல தம்பி என்று தெரிந்தபின்னும் அவரை அண்ணன் என்றே அழைத்து வருவது தனிக்கதை. இதற்கு மேல் எழுதினால் அண்ணன் அப்துல்லா அவர்கள் என் நட்பினை (மறு)பரீசலனை செய்யக்கூடும் என்பதால் மறுபடியும் தானைத்தலைவன் பற்றி...

அதன்பிறகு தினசரி இரவு 9.30 க்கு எங்கைய்யா இருக்கேன்னு போனுவார். ரெண்டு பேரும் சினிசிட்டி போயி கையில் இருப்பு வைத்திருந்த கடைசி சொத்து அழியும்வரை குடித்து இருக்கிறோம். அதன்பிறகு கிடைத்த நூறு  ரூவாய்க்கு ஒரு குவாட்டர் வாங்கி வீட்டு மொட்டைமாடியில் அடிப்போம் அதன்பிறகு புரவலர்கள் அழைக்காத நாட்களில் மட்டும் குடிப்பதை நிறுத்தி வைத்தோம்.

இத்தனை மாதங்களில் கேபிளின் ஆளுமையை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். எத்தகைய ரகசியத்தையும் அவரிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம். அவைகள்  அவரது சிறுகதைகளில் மறைமுகமாக வருமே தவிர நம்பிக்கைகு உரிய ஆள் அவர். தனக்கு இருக்கும் சிரமங்களை நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லமாட்டார். ஒரு சம்பவத்தை சிறுகதையாக்கும் அபாரமான லாவகம் அவரிடம் இருக்கிறது. அவர் எடுக்க முடிவுசெய்திருக்கும் மூன்று படங்களின் திரைகதையும் நான் முழுவதும் கேட்டிருக்கிறேன். அதனால் அது கண்டிப்பாக வெற்றிபெறும் என எனக்குத்தெரியும்.

ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என நினைத்து இவரின் ”மீண்டும் ஒரு காதல் கதை” யை வெளியிட்ட போதுதான் அவரின் உண்மையான மதிப்பீடு தெரிந்தது. அதற்குபிறகு நான்கு புத்தகங்கள் வெளியிட்டு நாங்கள் பதிப்பக துறையில் நுழையும்போதே லாபத்துடன் நுழைந்ததற்கு கேபிள்தான் காரனம். எந்தவொரு விசயத்தையும் வியாபார நோக்கத்தில் அனுகும்போது வரக்கூடிய பிரச்சினைகளை முன் கூட்டியே கணிக்கக் கூடிய புத்திசாலி, அதேபோல் அவரை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், கோபித்துக்கொள்ளவே மாட்டார்.

அவர் மட்டும் சினிமா தவிர்த்து வேறு வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தால் இன்னேரம் வெற்றிக்கொடி நாட்டியிருப்பார். ஆனாலும் சினிமாவின் வீச்சு அவருக்கு தெளிவாக தெரியும் என்பதால் ஓடு மீன் ஓட காத்திருக்கிறார். தமிழ்  சினிமா வரலாற்றில் கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயணுக்கு நிச்சயம் ஒரு  இடம் உண்டு.

இவரின் சமீபத்திய வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரனம் யுடான்ஸ்  திரட்டி ஆரம்பித்த சில வாரங்களில் அதன் வளர்ச்சி அபாரமானது. அதில் மற்ற திரட்டிகளில் இல்லாத அனேக அம்சங்கள் இருக்கிறது. குறிப்பாக டி.வி மற்றும் வீடியோ பிளாக்கிங் வசதிகள் பதிவுலகிற்கு புதியது. இன்னும் ஏகப்பட்ட அம்சங்களை அதில் கூடுதலாக வைக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்.

இத்தனை பன்முக திறமைகள் வாய்ந்த அவர் எப்போதும் கர்வமின்றி இருப்பதுதான் அவரின் பெருமையே. . அதேபோல் புதிதாக வருகிற பிளாக்கராக இருக்கட்டும், எந்த நேரத்தில் போனுகிற ஒரு வாசகனாக இருக்கட்டும் அந்த நேரத்தில் அவர்களுடன் பேச முடியாவிட்டாலும் நேரம் கிடக்கும்போது அவர்களுடன் பேசிவிடுவார்.

என் நெருங்கிய நண்பரும் சீனியர் பிளக்கருமான நரேன் கேபிளைப்பற்றி சொன்னார் : “ கேபிள் தி.மு.க வில் இருந்த எம்.ஜி.ஆரைப்போல, அவரின் பலம் அவருக்குத் தெரியல” என்றார். அதுதான் உண்மையும் கூட....