27 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் - 24


தேவதை கதைகள் "அலமேலு" பாகம் -2


அதன்பிறகு இரண்டு வாரம் கழித்துதான் நான் தனஞ்செய் வீட்டுக்கு போனேன். அங்கு அந்த பெண் அலமேலுவை அன்றுதான் பார்த்தேன். அந்த பெண்ணின் பெயர் அலர்மேல் மங்கை சுருக்கமாக அலமேலு ஆகிவிட்டது. முகத்தில் எப்போதும் ஒரு அமைதி குடிகொண்டிருந்தது. உங்களுக்கு இந்த வீடு வசதியாக இருக்கிறதா என கேட்டேன். ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே என்றது. எனக்கும் அது புரிந்தது ஏனென்றால் அந்த வீட்டை அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தது. எனக்கு நிறைய ஆடைகள் எடுத்து தந்தார் என எடுத்து வந்து காட்டியது. அவ்வளவும் நல்ல விலை உயர்ந்த ஆடைகள். வேறு குறைகள் இருக்கிறதா என்றேன். அவர் தினமும் தண்ணி அடிக்கிறார் தயவு செய்து அதை குறைக்க சொல்லுங்கள், மற்றபடி என்னிடம் மிக குறைவாகத்தான் பேசுவார். எனக்கு இங்கு இருப்பதில் பிரச்சினை எதுவும் இல்லண்ணே என சமைக்க போய்விட்டது. அன்று இரவு அங்குதான் சாப்பிட்டேன், அருமையாக சமைத்திருந்தது.


ஆஸ்திரேலியாவில் இருந்து பேசிய கருணாமூர்த்தியும் அங்கு இந்திய பணிபென்னை அழைத்துகொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் தான் தனன்ஜெயிடமும், அலமேலுவிடமும் பேசியாதாகவும், அந்த பெண் அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.


ஒரு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் தனஞ்செய் என்னை அழைத்தார், நானும் வேலைப்பளு காரணமாக அதன்பிறகு அவரை சந்திக்கவில்லை. சரி வீட்டுக்கு வருகிறேன் என்றேன். ஆனால் அவரோ கோவிலுக்கு வாருங்கள் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றார். அங்கு போனவுடன் தனக்கு அலமேலுவை மிகவும் பிடித்திருக்கு எனவும் அவளை தான் தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இதில் அலமேலுவுக்கு விருப்பமா என்றேன். இல்லை நண்பா அதை நீங்கள்தான் கேட்டு சொல்லவேண்டும் என்றார். இன்னைக்கே முடிவு பண்ணிடலாம் வாங்க வீட்டுக்கே போவோம் என வீட்டுக்கு வந்தோம். வரும் வழியில் எதனால் இந்த முடிவை எடுத்தீங்க என்று கேட்டேன். இடையில் அலமேலுவுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை, கடுமையான காய்ச்சல் இருந்தது, நான்தான் மருத்துவமனைக்கு கூட்டிசென்றேன். வீட்டிற்கு வந்தும் அவளால் வேலை ஏதும் செய்ய முடியவில்லை, நான்தான் அவளுக்கு கஞ்சி வைத்து கொடுத்தேன், அந்த நாட்களில் நான் வீட்டை வழக்கம்போல் குப்பையாக்கி விட்டேன். அப்போதுதான் தெரிந்தது, எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன் மேலும் அந்த நாட்களில்தான் அவளின் கதையை கேட்டேன் அது என்னை மிகவும் பாதித்தது. நான் ஏன் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளக்கூடாது என முடிவு செய்தேன். என்னால் அவளிடம் நேரிடையாக கேட்கமுடியவில்லை. அதனால்தான் உங்களை கேட்க சொல்கிறேன் என்று அலமேலுவின் கதையை சுருக்கமாக சொன்னார்.


அலமேலுவும் தாயை இழந்த பெண், சொந்த சித்தியே அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாழ்கைபட்டாள். ஆரம்பத்தில் மிகவும் பாசமாக இருந்த சித்தி தனக்கு இரண்டு குழந்தைகள் வந்ததும், பாசம் குறைந்து போனது அலமேலு நன்றாக படிக்கும் பெண். ஆனால் வெட்டு வேலை மற்றும் காணி வேலைகளை அலமேலுதான் செய்யவேண்டும். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் பெண்ணுக்கு படிப்பெதுக்கு என நிறுத்திவிட்டனர், மேலும் அப்போது தன தூரத்து உறவினர் பேச்சை கேட்டு தன்னை பணிபென்னாக சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டனர். காசு அனுப்பினால் போதும் நன்றாக இருக்கிறாயா என கேட்டதில்லை. வந்து இரண்டு வருடம் ஆகிறது இதுவரை ஊருக்கு வரச்சொல்லி சொன்னதில்லை. மேலும் தான் சந்தோசமாக இருந்தது இந்த உடம்பு சரியில்லாத நேரத்தில்தான், இத்தனை வருட காலத்தில் தன்னை பாசமாக பார்த்து கொண்டது நீங்கள்தான் என அழுதாள். எனக்கு என்னமோ போலாகிவிட்டது அப்போதே அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என்றார்.


வீட்டிற்கு வந்து அலமேலுவிடம் கேட்டதும் உடனே தனஞ்செய் காலில் விழுந்து அழுதது. எனக்கு அதன் சந்தோசம் புரிந்தது, தனன்ஜெயிடம் அதுக்கு சம்மதம்தான். எனக்கு அவசரமாக ஒரு வேலை இருக்கு நான் மறுபடி வந்து பார்த்துக்கொள்கிறேன் என கிளம்பினேன். ஒரு காதல் பூக்கும்போது நமக்கென்ன வேலை? உடனே அலமேலு அண்ணே என ஏன் காலிலும் விழ முயற்சி செய்ய, நான் பதறி தடுத்தேன், உங்களால்தான் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது என என் கையை பிடித்துக்கொண்டு அழுதது. இல்லம்மா உங்க நல்ல மனசுக்கும், தனன்ஜெய்யின் நல்ல மனசுக்கும் அமைந்த வாழ்க்கை. நான் அடுத்தவாரம் வாரேன் என பிடிவாதமாக சாப்பிட்டு போக சொல்லி வற்புறுத்தியபோதும் கிளம்பிவிட்டேன். இப்போது அவர்களுக்கு தேவை தனிமைதான்............


அதன்பிறகு இரண்டே வாரங்களில் தனஞ்செய் ஊருக்கு கிளம்பிவிட்டார். அங்கு சென்று தந்தையிடம் பேசியதில் அவர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் பிடிவாதமாக இருந்து அவர் சம்மதம் கேட்கவே. தான் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டேன் எப்படியாவது போய்க்கோ என பத்து லட்ச ரூபாயை கையில் தந்து அனுப்பி இருக்கிறார். அதனை கொண்டு பொய் அலமேலு வீட்டில் கொடுத்து பெண் கேட்டிருக்கிறார். பணம் கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை உடனே சம்மதித்து விட்டார்கள். அப்புறம் நான்தான் அலமேலுவை ஊருக்கு அனுப்பி வைத்தேன். கோவிலில் வைத்து தாலிகட்டி இரண்டே வாரங்களில் கூட்டி வந்துவிட்டார்.


வந்து மறுமாதத்திலேயே அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்து அவர்கள் அதற்கடுத்த ஆறு மாதத்தில் அமேரிக்கா சென்று விட்டனர். எப்போதாவது மெயில் அனுப்புவார்கள். அதன்பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெயில் வந்தது, அதன்பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக தொடர்பு இல்லை.


இந்த கதையில் அவர்களின் உண்மையான பெயர்களே பயன்படுத்தி இருக்கிறேன். படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்குமானால் தொடர்பு கொள்வார்கள் என நம்புகிறேன்..

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வருகிறது .......

ராமசாமி அத்தியாயம் - 23


தேவதை கதைகள் "அலமேலு"


இந்த அத்தியாயம் எனக்கு தெரிந்த பெண்களின் கதைகளை சொல்ல போகிறேன்....


அன்று இரவு எனக்கொரு அழைப்பு வந்தது, தொலைபேசியில் தனக்கு அவசரமாக ஒரு உதவி வேண்டும் என்றார் கருணாமூர்த்தி, இவர் சிங்கப்பூர்காரர் தான் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு மாற்றலாகி போவதாகவும், அவசரத்திற்கு தன் வீட்டு பணிபென்னை கூட்டி செல்ல முடியவில்லை என்றும் அதனால் ஒரு மாதத்திற்கு எங்காவது தங்க வைக்க முடியுமா? என்றார். நாளை இரவுக்குள் ஏற்பாடு செய்கிறேன் என சொன்னேன், ஆனால் மறுநாள்வரை யாரும் தனக்கு பணிப்பெண் வேண்டாம், அதிலும் ஏதாவது பிரச்சினை வரும் என பயந்தனர்.


எனக்கு உடனே தனஞ்செய் நினைவுக்கு வந்தார், அவர் திருநெல்வேலியை சேர்ந்தவர், சிறுவயதில் தாயை இழந்தவர் சின்ன வயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்தவர், பின்னாளில் தந்தை மறுமணம் செய்துகொண்டது பிடிக்காமல், கல்லூரி படிப்பு முடிந்தவுடன், தன் நண்பன் மூலமாக சிங்கபூர் வந்து விட்டார், தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார், எனக்கு ஒரு நண்பர் மூலமாக அறிமுகமான அவர் மிகவும் நல்லவர், அவரிடம் எனக்கு பிடிக்காத ஒன்று வீட்டை குப்பை கூடமாக ஆக்கி வைத்திருப்பார். என்றாவது சனிக்கிழமை இரவுகளில் அவர் வீட்டுக்கு செல்வேன், அங்கு சென்று விடிய விடிய பீர் குடிப்போம். ஒருமுறை என்னிடம் சமைக்க தெரிந்த பையன் இருந்தால் சொல்லுங்கள் என்னுடன் தங்கிகொள்ளட்டும், வாடகை எதுவும் தரவேண்டாம், சமைத்துவைத்த்தால் போதும், வீட்டை கொஞ்சம் சுத்தபடுத்தினால் போதும், கொஞ்சம் சிரமபடுகிற வேலை அனுமதியில் வந்திருக்கும் பையனை அனுப்பி வையுங்கள் என்றார். அவர் சொல்லி மூன்று மாதங்கள் இருக்கும், இருந்தாலும் கேட்டு பார்க்கலாமே என அன்று இரவு தொலைபேசியில் பிடித்தேன்.


அவரோ நான் பையன்தான் கேட்டேன் பெண் என்றால் வேண்டாம் என்றார். நான் பிடிவாதமாக அது வயதான பெண்மணி, ஒரு மாதத்திற்கு மட்டும் இருந்தால் போதும் , இல்லை தற்சமயத்துக்கு மட்டும் உங்கள் வீட்டில் இருக்கட்டும், வேறொரு வீடு கிடைத்தால் நான் அங்கு அனுப்பிவிடுகிறேன், கொஞ்சம் உதவி பண்ணுங்க என்றேன். அரைமனதாக சரி என்றார்.
மறுநாள் கருனாமூர்த்தியிடம் நண்பர் தனஞ்செய் உங்கள் வீட்டிற்கு வந்து அழைத்து போவார் என்றேன். அவரும் நாளை மாலை வரசொல்லுங்கள், நாங்கள் நாளை இரவுதான் கிளம்புகிறோம், அவரும் வந்தால் அப்போதே அழைத்து போகட்டும் என்றார்.


மறுநாள் இரவு மீண்டும் கருணாமூர்த்தி பேசினார், என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க என்றார் கோபமாக, என்னன்னே ஆச்சு அவர் வரலியா? என்றேன். இல்ல தம்பி அவர் வந்துட்டார், ரொம்ப சின்ன பையனா இருக்கார், அதுவும் அவர் மட்டும்தான் தனியாக இருக்காராம்! அவர நம்பி எப்படி அனுப்ப முடியும் என்றார். நானோ அண்ணே, இப்போதைக்கு இரண்டு நாளைக்கு இருக்கட்டும், அதன்பிறகு வேறு வீடு பார்த்து அனுப்பி வைக்கிறேன், மேலும் தனஞ்செய் மிகவும் நல்லபைய்யன் அவரை நம்பி அனுப்புங்கள் என்றேன்
அதற்குள் தம்பி அவர் உங்ககிட்டே பேசனுமாம் என்று தொலைபேசியை அவரிடம் கொடுத்தார். தனன்ஜெய்யும் என்னங்க நீங்க வயசானவங்கன்னு சொன்னீங்க, ஆனா சின்ன பொண்ணா இருக்கு, என்னால கூட்டிட்டு போக முடியாதுங்க என்றார். எனக்கோ குரங்கு அசைத்த ஆப்பின் கதைதான் நினைவுக்கு வந்தது, என்னடா உதவி செய்யபோய் கெட்டபேர் ஆகிவிட்டதே எப்படியாவது இத்தனை சரி செய்ய வேண்டுமே என தனன்ஜெய்யிடம், மன்னிச்சுகங்க நண்பா அவங்க பேரு "அலமேலு"ன்னு சொன்னதும் வயசானவங்களா இருக்கும்ன்னு நம்பிட்டேன், தயவு செஞ்சு நாளை மாலை வரை உங்கள் வீட்டில் இருக்கட்டும் அதன்பிறகு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்தேன்.


அதன்பிறகு விமான நிலையம் சென்று அங்கிருந்து கருணாமூர்த்தி தம்பி உங்கள நம்பித்தான் போறேன். அது சின்னபொன்னு ரொம்ப பாவம் ஒரு பிரச்சினையும் வராம பாத்துக்கணும் என்றார். தனன்ஜெயோ வீட்டிற்கு சென்றவுடன் நண்பா உங்களுக்காதான் அழைச்சிகிட்டு வந்தேன், நாளை மாலை வந்து கூட்டி போய்விடுங்கள், இல்லன்ன அவங்கள வெளில அனுப்பிவிடுவேன், அப்புறம் வருத்தபடாதீங்க என டொக்கென தொலைபேசியை வைத்தார்.


எனக்கோ வடிவேலு மாதிரி ஆகிட்டோமே, உனக்கு வேணுண்டா... இனிமே யாரவது உதவின்னு கேட்டா பண்ணுவியா என என்னையே திட்டிகொண்டேன், அன்று இரவு எனக்கு தூக்கமற்று கழிந்தது. மறுநாள் வேலைக்கு போகவில்லை, அந்த பெண்ணிற்கு ஏதாவது வழி பன்னவேண்டுமே.. முகமறியாத அந்த பெண்ணிற்க்காக நான் அன்று அவ்வளவு அலைந்தேன்.


மாலைவரை ஒருவரும் வேண்டாம் என சொல்லிவிட்டனர், எப்படியாவது தனன்ஜெய்யிடம் சொல்லி இன்னொரு நாள் கேட்க்கவேண்டும் என முடிவு செய்தேன். அன்று இரவு எட்டுமணி வாக்கில் தனன்ஜெயிடம் இருந்து அழைப்பு வந்தது, என்ன சொல்வாரோ என கலவரமாகவே வணக்கங்க எப்படி இருக்கீங்க என்றேன், அவரோ உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் பேச முடியுது, ஏன் வரலை என்றார்? மன்னிச்சுகங்க இன்னைக்கு வேலை அதிகம் எனவே நாளை மாலை நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன். அவரோ பரவயில்லைங்க அவங்க இங்கேயே ஒரு மாதம் இருக்கட்டும், அத சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றார், எனக்கோ அப்பாடா என்றிருந்து ஆவலை அடக்கமுடியாமல் என்ன ஆச்சுங்க எதனால அப்படி ஒரு முடிவு எடுத்தீங்க என்றேன்.


அவரோ நான் வீட்டுக்கு வந்து பார்த்தா, வீடு மாறி வந்திட்டோம்ன்னு நெனெச்சேன், ஒரு நாளைக்குள்ள ஏன் வீட்டை தலைகீழ மாத்திட்டாங்க, வீடே இப்பதான் பார்க்கிற மாதிரி இருக்கு, சமைச்சு வேற வச்சுருக்காங்க.. சரி இங்கேயே இருக்கட்டும்ன்னு முடிவு செய்தேன், எதற்கும் அவங்களிடம் இங்க இருப்பதில் சங்கடம் இருக்கன்னு கேட்டு சொல்லுங்க என தொலைபேசியை அந்த பெண்ணிடம் கொடுத்தார். அந்த பெண்ணும் நீங்க சொன்னா இருக்கிறேன் என்றது, நானும் பிரச்சினை தீர்ந்ததே என்ற சந்தோசத்தில் நீ அங்கேயே இரும்மா, நான் வரும் சனிக்கிழமை பார்க்கிறேன் என சொன்னேன்.


அன்று எனக்கு தெரிந்தவில்லை நான் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கிறேன் என்று. அதனை அடுத்தவாரம் சொல்கிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி
இணைய இதழில் தொடராக வருகிறது ........

15 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் - 22

நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நிர்பந்தகளோடு வாழ வேண்டியிருக்கிறது. நம்முடைய லட்சியங்களை சில சமயங்களில் முகவரி படத்தில் வரும் அஜித் மாதிரி ஒதுக்கி வைத்துவிட்டு வாழ வேண்டி வந்துவிடுகிறது. எல்லா சமயங்களிலும் நம் லட்சியத்தை தூக்கி பிடிக்க முடிவதில்லை. இருபத்தியொரு வயதில் நாம் காணும் கனவுகள் மெல்ல மெல்ல காலம் கடந்தபின் வெறும் கனவாகவே ஆகிவிடுகிறது.

எனக்கு மிகவும் பிடித்தமான அண்ணன் பாலா அவர்களின் வாழ்க்கை இப்படித்தான் திசை மாறிபோனது. சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என சென்னை வந்த அவர் அதன் பல்வேறு சிக்கல்களை கண்டபின் இது நமக்கு தற்சமயம் ஒத்துவராது என மீண்டும் ஊருக்கு வந்துவிட்டார், சிலருக்கு அதிர்ஷ்டம் பிறக்கும்போதே வாய்க்கும் அப்படி ஒரு சிலரில் அண்ணனும் ஒருவர், எனக்கு தெரிந்தவரை மிகவும் பாசமான அம்மா, அப்பா அவருக்கு கிடைத்தனர், தம்பி சாமிதுரை சற்று பிடிவாதமானவர் ஆனால் அவரும் மிகுந்த பாசக்காரர், இப்படி ஒரு அற்புதமான குடும்பத்தில் பிறந்துவிட்டு தன் லட்சியத்தை குடும்பத்திற்காக அவர் விட்டு கொடுத்ததால் எனக்கு இப்போதும் அவர் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.

இடையில் சிங்கபூர் வந்தார், அங்கு தன் நண்பரின் சிபாரிசில் வந்ததால் தன் நண்பரின் பெயர் கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காகவே பிடிக்காமலே அங்கு வேலை பார்த்தார். உலக அறிவு அதிகம் அறிந்தவர் ஒரு சின்ன கிராமத்திற்குள் சென்று முடங்கிவிட்டரே என்ற வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு, மேலும் அவரை சென்னையிலேயே என்னுடன் தங்கிவிடசொன்னேன் ஆனால் ஊருக்கு சென்றுவிட்டார், அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்ற வருத்தம் எனக்கு உண்டு.

அவர் அடிக்கடி சொல்வார் தன்னை யாராலும் ஜெயிக்கமுடியாது என்று, ஏன் அண்ணா என்று கேட்டால் தான் எப்போதும் தோற்றுபோக தயாராயிருக்கிறேன் என்பார். ஆனால் அவரை நிறைய நபர்கள் எதிரியாக நினைப்பது உண்டு, ஆனால் அவர் யாரையும் எதிரியாக நினைத்து கூட பார்க்க மாட்டார், அவருக்கு கோபம் வந்து நான் பார்த்தது இல்லை.

அவருடைய தம்பி குமார் என்னுடன் சென்னையில் இருக்கிறார், தன் நேர்மைக்காகவே நிறைய விசயங்களை இழந்தவர். தன் குடும்பத்தின் பெயர்கெட்டுவிடக்கூடாதே என இப்போதும் தன் நேர்மையை காப்பாற்றுபவர், ஆனால் இவர் மீதும் எனக்கு வருத்தம் உண்டு சமூகத்தின் கட்டமைப்பை நன்றாக உணர்ந்தபின்னும் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்.

அண்ணன் பாலாவுக்காக மற்றும் நண்பன் வர்கோத்தமனுக்காக நிச்சயம் நான் படம் தயாரிக்கலாம் என்றிருக்கிறேன், அனேகமாக அடுத்த வருட நடுவில் அதற்க்கான அறிவிப்பு வரலாம், எனக்கும் படம் இயக்குவதில் ஆர்வம் உண்டு என்றாலும் முதலில் நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுத்தபின் அடுத்து நான் இயக்குவேன், அது நிச்சயம் நல்ல தரமான கலை படைப்பாக இருக்கும்.

அதில் நண்பர் சிங்கப்பூர் துரைராசுக்கும் நல்ல வேடம் கொடுக்கவேண்டும், அவரும் கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக திரையுலகில் ஒரு நல்ல கேரக்டருக்காக முயற்சி செய்கிறார், ஆனால் இப்போதுதான் "நான் அவனில்லை" இரண்டாம் பாகத்தில் ஒரு சிறிய ரோல் கிடைத்திருக்கிறது, ஏற்கனவே "தோட்டா" வில் நல்ல ரோல் செய்திருந்தார் ஆனால் அது நிறைய பேருக்கு தெரியவில்லை

எனவே நானும் நண்பர் சிங்கப்பூர் ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து படம் தயாரிக்கலாம் என்றிருக்கிறோம். நல்ல தரமான படங்களை நிச்சயம் தருவோம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

ராமசாமி அத்தியாயம் -21

கடந்த மூன்று வாரங்களாக சிங்கபூரில் இருந்தேன். சிங்கபூர் எனக்கு சொந்த ஊர் மாதிரி அங்கு சென்றால் எனக்கு எந்த செலவும் இல்லை. பயண செலவுகளை தவிர்த்து அனைத்தும் நண்பர்கள் பார்த்துகொள்வார்கள். அங்கு கணேசன் அண்ணன் வீட்டில்தான் தங்குவேன். என்னை பொறுத்தவரை அது என் சொந்த அண்ணன் வீடு, அங்கு எப்போது சென்றாலும் நான் அங்குதான் தங்குவேன். கணேசன் அண்ணனின் பெண் சுஜனி எனக்கு வளர்ப்பு குழந்தை மாதிரி ஒன்றரை வயதில் இருந்து அதனை நான் பார்த்திருக்கிறேன். இப்போது மிகசிறந்த அறிவும், அன்பும் கொண்ட சுஜனி இப்போதும் எனக்கு நான்கு வயது குழந்தை மாதிரிதான். அண்ணனும் அண்ணியும் என் மேல் கொண்ட அன்பு அளவிட முடியாத ஒன்று. நான் சிரமப்பட்ட காலங்களில் இவர்களின் அன்பு மறக்கமுடியாதது. இந்தமுறை தினேஷ், மற்றும் தென்றல் இருவரின் அறிமுகம் அண்ணன் வீட்டில் கிடைத்தது, தம்பிகள் இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்தமுறை கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் சிங்கப்பூர் சென்றேன். அங்கு தற்போது என் பழைய நிறைய நண்பர்கள் ஊருக்கு வந்துவிட்டதால் சற்று போரடிக்க செய்தது, நண்பரும் நடிகருமான சிங்கப்பூர் துரைராஜ் "நான் அவனில்லை" இரண்டாம் பாகத்தில் நடிக்க ஊருக்கு வந்துவிட்டார், அதனால் அவரும் இல்லாததால் சற்று சீக்கிரமே ஊருக்கு வந்துவிட்டேன்.

சிங்கப்பூர் வழக்கமான ஊராக இல்லை, இந்தமுறை வெயில் போட்டு தாக்கியது, வியாபாரம் எங்கும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. மலேசியாவுடன் ஒப்பிட்டால் சிங்கப்பூர் இந்த பொருளாதார பின்னைடைவால் சற்று பாதிக்கபட்டுதான் உள்ளது, அதனால் சிங்கபூரில் ஒரு உணவகம் துவக்கும் முடிவில்தான் சென்றோம், ஆனால் மலேசியாவில் துவக்கலாம் என முடிவு செய்தோம்.

மலேசியா சற்று மாறியிருக்கிறது அதன் சற்று வெகுளித்தனம் கலந்த முரட்டு மக்கள் பணத்தின் தேவையும், வெளிநாட்டு மக்களின் அருமையும் உணர்ந்து நிறைய மாறியிருக்கின்றனர். அவர்கள் முன்பெல்லாம் ஏதாவது கேட்டால் அலட்சியமாக பதில் சொல்வார்கள், ஆனால் இப்போது சிங்கபூரர்கள் மாதிரி பணிவாக பேசுகிறார்கள்.

நான் ஒவ்வொரு முறை தோற்கும்போதும் சிங்கபூர்தான் ஏதாவது ஒரு வழியில் என் அடுத்த பாதையை காட்டும், அவ்வகையில் இந்தமுறை சிங்கபூரின் "Harbridge Edu College" ன் இந்திய முகவராக ஒப்பந்தம் போட்டோம், ஒரு வகையில் அதன் இந்திய பிரநிதி நான்தான், எனவே இனி சிங்கபூரில் படிக்கவேண்டும் எனில் என்னை அனுகலாம்.

சிங்கப்பூரில் என் அனுபவங்கள் மிகவும் அற்புதமானவை அதனை இப்போது என்னால் மிக விபரமாக எழுத முடியவில்லை, இந்த தொடரை புத்தகமாக வெளியிட என் நண்பரும் அண்ணனும் ஆன காந்தி அண்ணன் அனுமதி கேட்டுள்ளார், இந்த தொடர் முடிந்தவுடன் தமிழ்குறிஞ்சி அனுமதியுடன் நிறைய பகுதிகளை மீண்டும் திருத்தி வெளியிடலாம் என்றிருக்கிறேன், ஏனென்றால் இந்த தொகுப்பில் நான் சொன்னவை இருபது சதவீதம் மட்டுமே மீதம் என்பது சதவீதம் நாகரீகம் கருதி, மற்றவர் மனது புண்படக்கூடாது என்பதற்காக எழுதவில்லை. அவற்றில் முடிந்தவரை பலவற்றை சேர்க்க முயற்சி செய்கிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

6 ஜூலை, 2009

SSR பங்கஜம் - நாடோடிகள்

சமீபத்தில் வடபழனியில் உள்ள SSR பங்கஜம் தியட்டரில் "நாடோடிகள்" படம் பார்க்க நான், நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் மற்றும் நண்பன் வர்கோத்தமன் மூவரும் சென்றோம். படத்தை பற்றி சொல்வதற்கு முன் தியட்டரை பற்றி நிச்சயம் சொல்லவேண்டும்.

இந்த தியட்டர் லட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனுக்கு சொந்தமானது. உள்ளே போகும் வழியில் முன்பக்கம் கடை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். தியட்டருக்கு உள்ளே நுழைந்தபின் மூவரும் பாத்ரூம் சென்றோம், அங்கு எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, கழிவரையா அது. இலவச கழிப்பிடங்கள் போல சுத்தம் செய்யபடாமல் கிடந்தது, மேலும் பாத்ரூமில் தண்ணியே வரவில்லை. டிக்கெட் கட்டணம் ஐம்பது ரூபாய் வாங்கிவிட்டு, பாத்ரூமே இப்படி என்றால்?.

தியட்டர் உள்ளே மிக நெருக்கமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இரண்டு ஓரங்கள் வழியாக மட்டும் உள்ளே சென்று அமரவேண்டும், நடுவில் வழி ஒருஏண்டா நடுவில் சீட் கேட்டு வாங்கினோம் என நொந்துகொண்டோம். ஒருவழியாக படம் ஆரம்பித்தது. ஆரம்பித்ததில் இருந்து இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக போனதால் A/C அணைக்கப்பட்டது தெரியவில்லை.

இடைவேளைக்கு பின் படம் சுமார்தான் இயக்குனர் சமுத்திரகனி பல முடிவுகளை தந்திருக்கிறார். காதலை சேர்த்து வைத்தவர்களின் இழப்புகள் மிகுந்த சோகம், சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் பிரிந்துவிட்டனர் என்பதோடு படத்தை முடித்திருக்கலாம். மேலும் இறுதியில் மீண்டும் தொலைபேசியில் காதலை சேர்த்து வைப்பதாக சொல்லும் ஓரு நபருடன் பாதிக்கப்பட்டவர்களும் சேர்கிறார்கள் என்பது அபத்தம்.

எப்படா படம் முடியும் என்றிருந்தது, இருந்தாலும் திரைக்கதை முற்பாதியில் கச்சிதம், மேலும் சுந்தர் சி பாபுவின் இசை இரைச்சல் ரகம், ஒளிப்பதிவு மிக அருமை. அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர். ஒரு நல்ல படத்தை தர முயற்சி செய்த சமுத்திரகனிக்கு வாழ்த்துகள்.

படம் முடிந்தபின் தியட்டரைவிட்டு வெளியே வரமுடியவில்லை, காரணம் தியேட்டரின் முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். ச்சர் க்கு, கலைஞர் உடன் ஆனா நெருக்கத்தை வைத்து, அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என நினைக்கிறேன். இப்படி இருந்தால் என்றாவது தீ விபத்து ஏற்பட்டால் யாருமே தப்பிக்க முடியாது.

எனவே "அலட்சிய நடிகர் SSR இன் SSR பங்கஜம் தியட்டரில் படம் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

ராமசாமி அத்தியாயம் - 20

நான் கம்பெனியை விட்டு பிரிந்தபின் என்னை சமாதானபடுத்தும் முயற்ச்சிகள் நடந்தன அப்போதும் கண்மணி என்னிடம் ரமேஷ் சொன்னதையே நம்பி சரிவர பேசவில்லை. அதன் அப்பாவித்தனத்தை எண்ணி இன்னும் நான் வருந்துகிறேன். ஏனென்றால் எனக்கும் ஒரு குற்ற உணர்ச்சி உண்டு, ரமேஷை கண்மணியிடம் நல்லவன் என அறிமுகப்படுத்திய குற்ற உணர்ச்சிதான் அது. என்றாவது ஒருநாள் உண்மை அறிந்து என்னிடம் பேசும் என இப்போதும் நம்புகிறேன்.

கம்பெனியை விட்டு பிரிந்தபின் இன்றுவரை எனக்கான பங்குத்தொகை வந்து சேரவில்லை, அதே சமயம் கம்பெனிக்காக நான் வாங்கிகொடுத்த கடன் தொகையை மட்டும் கேட்டேன். அதன் முதல் தவணையாக ஒரு இலட்ச்சம் செட்டில் செய்ய வந்த ரமேஷ் நடந்ததை எல்லாம் மறந்துவிடுங்கள் இப்போதும் நாம் ஒன்றாக இருக்கலாம் என்றார். நான் மறுத்துவிட்டு கம்பெனிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிகொடுத்தேன். பணத்தை கொடுத்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்யபோகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் சிங்கபூர் சென்று ஐஸ்க்யுப் மெசின் வாங்கபோகிறேன் என்று சொன்னேன்.

அதனை வாங்கி சிங்கபூரில் நம் ஆபீஸில் வைத்துவிடுங்கள், நான் கொண்டுவந்து தருகிறேன் என்றார். நான் எதற்கு உங்களுக்கு வீண் சிரமம் என்றேன், இல்லை தம்பி நீங்கள் எனக்கு எனக்கு அதற்காக பணம் எதுவும் கொடுக்கவேண்டாம், உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் கழித்து கொள்ளலாம் என்றார், நானும் அவர் வலை விரிப்பதை அறியாமல் சரி அண்ணா சிங்கபூர் சென்றவுடன் உங்களுக்கு போன் செய்கிறேன் என்றேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் நான் வாங்கிய கடன் ரூபாய் நான்கரை இலட்சத்துடன் சிங்கபூர் வந்து மெசின் வாங்கிவிட்டு போன் செய்தேன். இந்த வேலையில் நண்பர் ஜமீல் எனக்காக தன் கால் வலியுடன் அலைந்து திரிந்ததை மறக்க முடியாது.

ரமேஷ் என்னிடம் நீங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள் நான் ஏற்றி அனுப்பசொல்கிறேன் என்றார், நானும் ஊருக்கு வந்துவிட்டேன் , வந்தபின் சிங்கபூரில் ஆகும் செலவு மற்றும் கப்பல் செலவை மட்டும் கொடுக்க முடியுமா என்று கேட்டார், நானும் சரியென்று மாப்பிள்ளை சார்லசிடம் சொல்லி கொடுக்க சொன்னேன், கண்டைனரும் நண்பர்களை விட்டு ஏற்றி அனுப்ப சொன்னேன்.

ஒரு வாரம் கழித்து கண்டைனர் சென்னை வந்து விட்டது டாக்ஸ் கட்ட வேண்டும் என முப்பதாயிரம் பணம் கேட்டார், பணம் குறைவாக உள்ளது என்று சொல்லி பதினைந்தாயிரம் மட்டும் கொடுத்தேன், அவ்வளவுதான் அதன்பிறகு இன்றைக்கு , நாளைக்கு, அடுத்தவாரம் என நாட்களை கடத்த ஆரம்பித்தார், இன்றுடன் ஒரு வருடம் நான்கு மாதங்கள் ஆகிறது இன்னும் பொருளை கொடுக்கவில்லை, நான் வங்கியில் வாங்கிய பணத்திற்கு மாதம் பதினேட்டயிரத்து ஐந்நூறு ரூபாய் பணம் கட்டிவருகிறேன்.

ரமேஷும் தன் போன் நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டு சென்னையில்தான் எங்கோ இருக்கிறான். இதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் எனக்கு வேண்டிய சிலரே அவனுக்கு உதவுவதுதான்.

நான் எத்தனையோ பிரச்சினைகளை கடந்து வந்துவிட்டேன், அதைப்போல இதனையும் கடப்பேன், இப்போதும் என்னுடைய நல்ல நண்பர்களால் நான் நன்றாகவே இருக்கிறேன், ஆனால் ரமேஷ் தலைமறைவாக இருக்கிறான். இன்னும் எத்தனை நாளுக்கு அவனால் அதனை செய்ய முடியும், நான் மட்டும் அல்ல, ஒரு அப்பாவி மனிதன் ஒருவரிடம் வட்டி தருகிறேன் என்று சொல்லி மூன்று இலட்சம், சிங்கபூரில் ரவி என்பவருக்கு பத்தாயிரம் சிங்கபூர் வெள்ளி என அவன் ஏமாற்றியவர்களின் பட்டியல் நீளுகிறது, இது இப்போதைய நிலைதான் இதற்க்கு முன் உள்ள விசயங்கள் நிறைய,.

எனக்கு உண்மையிலேயே உள்ள வருத்தம் என்னவென்றால் , ஒரு அப்பாவி பெண் கண்மணியை அவன் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

ராமசாமி அத்தியாயம் - 19

நான் ரமேஷ் பற்றி சொல்லுமுன் என் தோழி கண்மணியை பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். எனக்கு கிடைத்த அற்புதமான நட்புகளுள் என் வாழ்நாள் மறக்கமுடியாத நட்புகளில் கண்மணியும் ஒருவர். மிகுந்த அறிவாளி, கவிஞர், இரக்க மனப்பான்மை மிக்கவர், நான் சிங்கபூரில் இருந்தபோது தமிழ்முரசில் கவிதைகள் எழுதுவேன். அப்போது கண்மணியும் கவிதைகள் எழுதுவார், ஆனால் நாங்கள் இருவரும் சந்தித்தது கிடையது. அப்போது அண்ணன் பாலா ஒரு பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள செல்ல அங்கு கண்மணி என்னைப்பற்றி விசாரிக்க, பாலா அண்ணன் என்னிடம் வந்து உங்களை ஒருவர் மிகவும் விசாரித்தார் என்று சொன்னார். அப்புறம் தொலைபேசியில் பேசிகொண்டதில் ஒரு நல்ல தோழியை பெற்ற திருப்தி எனக்கு. அப்போது நான் முன் அத்தியாயங்களில் வந்த நண்பன் ராஜாவுடன் இருந்தேன், அவனை ஏனோ கண்மணிக்கு பிடிக்கவில்லை, அதனால் ஒரே ஒருமுறை மட்டும் அண்ணன் பாலாவுடன் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.

அதன்பிறகு நான் ஊருக்கு வந்து ராஜாவுடன் பிரிவு ஏற்பட்டு, திருமணம் முடிந்து, வீட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது, கண்மணியுடன் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நானும் அப்போது மற்றவர்களுடன் ஏற்பட்ட மிகுந்த மனகசப்பால் யாரிடமும் பேசாமல் இருந்தேன். கண்மணியுடன் மட்டும் ஏன் வருத்தங்களை பகிர்ந்துகொள்வேன், அப்போது எனக்கு எல்லா நாட்களும் வேலை அதுவும் பனிரெண்டு மணிநேர வேலை அதனால் போனில் மட்டும் பேசுவோம். ஒரு வருடம் கடந்தபின் என் கடன்களை அடைத்தபின் நான் மீண்டும் ஊருக்கு கிளம்பு தயாரானேன். அப்போது மரியாதை நிமித்தமாக கண்மணி வீட்டிற்கு சென்றேன். அங்கு ஊருக்கு சென்று என்ன செய்யப்போகிறீர்கள் என என்னைகேட்க்க, நான் சிறிய அளவில் ஒரு உணவகம் அல்லது பரிசு பொருட்கள் கடை ஒன்று வைக்கபோகிறேன் என சொன்னேன், அதற்க்கு அதுவும் பங்குதாரர் ஆக வருகிறேன் என்றது, ஆனால் ராஜாவுடன் ஏற்பட்ட மனவருத்தம் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நான் மறுத்தேன், ஆனால் பிடிவாதமாக தானும் பங்குதாரர் ஆவேன் என்றது, அப்போது அதன் பிரச்சினைகளை நான் அறிவேன் என்பதால் நான் மிகுந்த தயக்கத்துக்கு பின் சம்மதித்தேன். அப்போதும் நமக்குள் ஏதாவது பிரச்சினை வந்தால் நான் அப்படியே போய்விடுவேன் என்றேன். அதற்க்கு அது தனக்கென்று ஒரு நியாயம் இருக்கிறது, உங்களுக்கு சேர வேண்டிய பங்கை நான் கொடுத்துவிடுவேன் என்றது.

சொன்னபடி ஊர் வந்து ட்ரவல்ஸ் ஆரம்பித்தேன். நன்றாக போய்க்கொண்டிருந்தது, அந்த நேரத்தில் வந்து சேர்ந்தவன்தான் ரமேஷ், இவன் வந்தவுடன் இவன் குணத்தை அறியாமல் இவனை என் சொந்த அண்ணனாக நினைத்து பழகினேன். இவன்தான் உனக்கு ட்ரவல்ஸ் பிசினஸ் வேண்டாம். எக்ஸ்போர்ட் செய்யலாம் என் சொல்லி ஆரம்பித்தான். நானும் இதைப்பற்றி முன்பு ஒரு அத்தியாயத்தில் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். அதன்பின் இவனை சிங்கப்பூர் அழைத்து வந்து தோழி கண்மணியிடம் அறிமுகப்படுத்திவைத்தேன். அதன்பின் நாங்கள் மலேசியா சென்று தேங்காய் வாங்கி மொரிசியஸ் அனுப்பினோம்.

கண்மணி வீட்டில் சுத்த சைவம், ரமேஷும் சைவமாக மாறினான், மேலும் அடிப்படையில் கண்மணி மிகுந்த இரக்க குணம் கொண்டது. ரமேஷ் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தான், செவ்வாயன்று சாப்பிடமாட்டான், இவன் மேல் மிகுந்த இறக்கம் கொண்டு அவனை தன் சொந்த சகோதரனாக மதித்தது, அதை பயன்படுத்திக்கொண்டு தன்னை இத்தனை வருடம் காப்பாத்திய நெடுவாக்கோட்டை மாரிமுத்து அண்ணன் குடும்பத்திற்கு பத்து பைசா கூட செய்யாத ரமேஷ், கண்மணிக்கு, அதன் மாமியாருக்கு என்னவெல்லாம் வேண்டும் எனக்கேட்டு அதனை ஊரில் அவனே சென்று வாங்கி அவர்களுக்கு அனுப்பி வைப்பான், இடையில் நான் சிங்கபூரில் இருந்தபோது அவர்களுக்கு காய்கறி முதற்கொண்டு ஊரில் இருந்து வாங்கி அனுப்பிவைத்திருக்கிறான், எனக்கு தெரிந்தால் நான் திட்டுவேன் என்று அவர்களிடம் சொல்லி எனக்கு தெரியாமல் வாங்கி செல்லும்படி அவர்களிடம் சொல்லியிருக்கிறான், அவர்களும் அப்படியே செய்ய மெல்ல அவர்களை தன் வசம் மாற்றி விட்டான்.

அப்போது நான் கண்மணியை மிகுந்த கிண்டல் செய்வேன், பொதுவாகவே அதன் கணவரைத்தான் நான் தொழில் செய்ய கொண்டு வரவேண்டும் என விரும்பினேன், அதனால் கண்மணி எது சொன்னாலும் என்னை நன்றாக புரிந்துகொண்டவர் என்ற கோணத்தில் நான் கிண்டல் செய்வேன், சிங்கபூரில் அலுவலகம் திறந்தபோது அங்கு கணபதி பூஜை செய்யவேண்டும் என சொன்னது, ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியாமலே ஊரில் இருந்து ரமேஷ் சொல்லி பூஜைக்கு நாள் குறித்து சாமி படங்களை அனுப்பிவைக்க அதற்க்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன், அதனால் கண்மணிக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு இடைவெளி விழுந்தது, இந்த இடைவெளியை பயன்படுத்தி ரமேஷ் என்னைப்பற்றி போட்டுகொடுக்க, கண்மணி நீங்கள் நண்பர்களுடன் பீர் குடிப்பீங்கலாமே என என்னை ஒருநாள் கேட்டது, அதற்கு நான் ஆமாம் அது என் சொந்த விஷயம் என்றேன்.
அது மிக பெரிய பிரச்சினை ஆகி எங்களுக்குள் அஆன இடைவெளி இன்னும் பெரிதானது. அதன்பின் நடந்தவை அடுத்த அத்தியாயத்தில்,
ஆனால் நமக்குள் எந்த பிரச்சினை என்றாலும், உனக்கு உண்டான பங்கு உன்னிடம் வந்து சேரும் என்ற தோழி கண்மணி, அந்த பங்கு பற்றி இன்றுவரை பேசவில்லை.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது