6 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் - 19

நான் ரமேஷ் பற்றி சொல்லுமுன் என் தோழி கண்மணியை பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். எனக்கு கிடைத்த அற்புதமான நட்புகளுள் என் வாழ்நாள் மறக்கமுடியாத நட்புகளில் கண்மணியும் ஒருவர். மிகுந்த அறிவாளி, கவிஞர், இரக்க மனப்பான்மை மிக்கவர், நான் சிங்கபூரில் இருந்தபோது தமிழ்முரசில் கவிதைகள் எழுதுவேன். அப்போது கண்மணியும் கவிதைகள் எழுதுவார், ஆனால் நாங்கள் இருவரும் சந்தித்தது கிடையது. அப்போது அண்ணன் பாலா ஒரு பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள செல்ல அங்கு கண்மணி என்னைப்பற்றி விசாரிக்க, பாலா அண்ணன் என்னிடம் வந்து உங்களை ஒருவர் மிகவும் விசாரித்தார் என்று சொன்னார். அப்புறம் தொலைபேசியில் பேசிகொண்டதில் ஒரு நல்ல தோழியை பெற்ற திருப்தி எனக்கு. அப்போது நான் முன் அத்தியாயங்களில் வந்த நண்பன் ராஜாவுடன் இருந்தேன், அவனை ஏனோ கண்மணிக்கு பிடிக்கவில்லை, அதனால் ஒரே ஒருமுறை மட்டும் அண்ணன் பாலாவுடன் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.

அதன்பிறகு நான் ஊருக்கு வந்து ராஜாவுடன் பிரிவு ஏற்பட்டு, திருமணம் முடிந்து, வீட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது, கண்மணியுடன் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நானும் அப்போது மற்றவர்களுடன் ஏற்பட்ட மிகுந்த மனகசப்பால் யாரிடமும் பேசாமல் இருந்தேன். கண்மணியுடன் மட்டும் ஏன் வருத்தங்களை பகிர்ந்துகொள்வேன், அப்போது எனக்கு எல்லா நாட்களும் வேலை அதுவும் பனிரெண்டு மணிநேர வேலை அதனால் போனில் மட்டும் பேசுவோம். ஒரு வருடம் கடந்தபின் என் கடன்களை அடைத்தபின் நான் மீண்டும் ஊருக்கு கிளம்பு தயாரானேன். அப்போது மரியாதை நிமித்தமாக கண்மணி வீட்டிற்கு சென்றேன். அங்கு ஊருக்கு சென்று என்ன செய்யப்போகிறீர்கள் என என்னைகேட்க்க, நான் சிறிய அளவில் ஒரு உணவகம் அல்லது பரிசு பொருட்கள் கடை ஒன்று வைக்கபோகிறேன் என சொன்னேன், அதற்க்கு அதுவும் பங்குதாரர் ஆக வருகிறேன் என்றது, ஆனால் ராஜாவுடன் ஏற்பட்ட மனவருத்தம் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நான் மறுத்தேன், ஆனால் பிடிவாதமாக தானும் பங்குதாரர் ஆவேன் என்றது, அப்போது அதன் பிரச்சினைகளை நான் அறிவேன் என்பதால் நான் மிகுந்த தயக்கத்துக்கு பின் சம்மதித்தேன். அப்போதும் நமக்குள் ஏதாவது பிரச்சினை வந்தால் நான் அப்படியே போய்விடுவேன் என்றேன். அதற்க்கு அது தனக்கென்று ஒரு நியாயம் இருக்கிறது, உங்களுக்கு சேர வேண்டிய பங்கை நான் கொடுத்துவிடுவேன் என்றது.

சொன்னபடி ஊர் வந்து ட்ரவல்ஸ் ஆரம்பித்தேன். நன்றாக போய்க்கொண்டிருந்தது, அந்த நேரத்தில் வந்து சேர்ந்தவன்தான் ரமேஷ், இவன் வந்தவுடன் இவன் குணத்தை அறியாமல் இவனை என் சொந்த அண்ணனாக நினைத்து பழகினேன். இவன்தான் உனக்கு ட்ரவல்ஸ் பிசினஸ் வேண்டாம். எக்ஸ்போர்ட் செய்யலாம் என் சொல்லி ஆரம்பித்தான். நானும் இதைப்பற்றி முன்பு ஒரு அத்தியாயத்தில் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். அதன்பின் இவனை சிங்கப்பூர் அழைத்து வந்து தோழி கண்மணியிடம் அறிமுகப்படுத்திவைத்தேன். அதன்பின் நாங்கள் மலேசியா சென்று தேங்காய் வாங்கி மொரிசியஸ் அனுப்பினோம்.

கண்மணி வீட்டில் சுத்த சைவம், ரமேஷும் சைவமாக மாறினான், மேலும் அடிப்படையில் கண்மணி மிகுந்த இரக்க குணம் கொண்டது. ரமேஷ் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தான், செவ்வாயன்று சாப்பிடமாட்டான், இவன் மேல் மிகுந்த இறக்கம் கொண்டு அவனை தன் சொந்த சகோதரனாக மதித்தது, அதை பயன்படுத்திக்கொண்டு தன்னை இத்தனை வருடம் காப்பாத்திய நெடுவாக்கோட்டை மாரிமுத்து அண்ணன் குடும்பத்திற்கு பத்து பைசா கூட செய்யாத ரமேஷ், கண்மணிக்கு, அதன் மாமியாருக்கு என்னவெல்லாம் வேண்டும் எனக்கேட்டு அதனை ஊரில் அவனே சென்று வாங்கி அவர்களுக்கு அனுப்பி வைப்பான், இடையில் நான் சிங்கபூரில் இருந்தபோது அவர்களுக்கு காய்கறி முதற்கொண்டு ஊரில் இருந்து வாங்கி அனுப்பிவைத்திருக்கிறான், எனக்கு தெரிந்தால் நான் திட்டுவேன் என்று அவர்களிடம் சொல்லி எனக்கு தெரியாமல் வாங்கி செல்லும்படி அவர்களிடம் சொல்லியிருக்கிறான், அவர்களும் அப்படியே செய்ய மெல்ல அவர்களை தன் வசம் மாற்றி விட்டான்.

அப்போது நான் கண்மணியை மிகுந்த கிண்டல் செய்வேன், பொதுவாகவே அதன் கணவரைத்தான் நான் தொழில் செய்ய கொண்டு வரவேண்டும் என விரும்பினேன், அதனால் கண்மணி எது சொன்னாலும் என்னை நன்றாக புரிந்துகொண்டவர் என்ற கோணத்தில் நான் கிண்டல் செய்வேன், சிங்கபூரில் அலுவலகம் திறந்தபோது அங்கு கணபதி பூஜை செய்யவேண்டும் என சொன்னது, ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியாமலே ஊரில் இருந்து ரமேஷ் சொல்லி பூஜைக்கு நாள் குறித்து சாமி படங்களை அனுப்பிவைக்க அதற்க்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன், அதனால் கண்மணிக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு இடைவெளி விழுந்தது, இந்த இடைவெளியை பயன்படுத்தி ரமேஷ் என்னைப்பற்றி போட்டுகொடுக்க, கண்மணி நீங்கள் நண்பர்களுடன் பீர் குடிப்பீங்கலாமே என என்னை ஒருநாள் கேட்டது, அதற்கு நான் ஆமாம் அது என் சொந்த விஷயம் என்றேன்.
அது மிக பெரிய பிரச்சினை ஆகி எங்களுக்குள் அஆன இடைவெளி இன்னும் பெரிதானது. அதன்பின் நடந்தவை அடுத்த அத்தியாயத்தில்,
ஆனால் நமக்குள் எந்த பிரச்சினை என்றாலும், உனக்கு உண்டான பங்கு உன்னிடம் வந்து சேரும் என்ற தோழி கண்மணி, அந்த பங்கு பற்றி இன்றுவரை பேசவில்லை.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது

கருத்துகள் இல்லை: