6 ஜூலை, 2009

SSR பங்கஜம் - நாடோடிகள்

சமீபத்தில் வடபழனியில் உள்ள SSR பங்கஜம் தியட்டரில் "நாடோடிகள்" படம் பார்க்க நான், நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் மற்றும் நண்பன் வர்கோத்தமன் மூவரும் சென்றோம். படத்தை பற்றி சொல்வதற்கு முன் தியட்டரை பற்றி நிச்சயம் சொல்லவேண்டும்.

இந்த தியட்டர் லட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனுக்கு சொந்தமானது. உள்ளே போகும் வழியில் முன்பக்கம் கடை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். தியட்டருக்கு உள்ளே நுழைந்தபின் மூவரும் பாத்ரூம் சென்றோம், அங்கு எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, கழிவரையா அது. இலவச கழிப்பிடங்கள் போல சுத்தம் செய்யபடாமல் கிடந்தது, மேலும் பாத்ரூமில் தண்ணியே வரவில்லை. டிக்கெட் கட்டணம் ஐம்பது ரூபாய் வாங்கிவிட்டு, பாத்ரூமே இப்படி என்றால்?.

தியட்டர் உள்ளே மிக நெருக்கமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இரண்டு ஓரங்கள் வழியாக மட்டும் உள்ளே சென்று அமரவேண்டும், நடுவில் வழி ஒருஏண்டா நடுவில் சீட் கேட்டு வாங்கினோம் என நொந்துகொண்டோம். ஒருவழியாக படம் ஆரம்பித்தது. ஆரம்பித்ததில் இருந்து இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக போனதால் A/C அணைக்கப்பட்டது தெரியவில்லை.

இடைவேளைக்கு பின் படம் சுமார்தான் இயக்குனர் சமுத்திரகனி பல முடிவுகளை தந்திருக்கிறார். காதலை சேர்த்து வைத்தவர்களின் இழப்புகள் மிகுந்த சோகம், சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் பிரிந்துவிட்டனர் என்பதோடு படத்தை முடித்திருக்கலாம். மேலும் இறுதியில் மீண்டும் தொலைபேசியில் காதலை சேர்த்து வைப்பதாக சொல்லும் ஓரு நபருடன் பாதிக்கப்பட்டவர்களும் சேர்கிறார்கள் என்பது அபத்தம்.

எப்படா படம் முடியும் என்றிருந்தது, இருந்தாலும் திரைக்கதை முற்பாதியில் கச்சிதம், மேலும் சுந்தர் சி பாபுவின் இசை இரைச்சல் ரகம், ஒளிப்பதிவு மிக அருமை. அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர். ஒரு நல்ல படத்தை தர முயற்சி செய்த சமுத்திரகனிக்கு வாழ்த்துகள்.

படம் முடிந்தபின் தியட்டரைவிட்டு வெளியே வரமுடியவில்லை, காரணம் தியேட்டரின் முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். ச்சர் க்கு, கலைஞர் உடன் ஆனா நெருக்கத்தை வைத்து, அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என நினைக்கிறேன். இப்படி இருந்தால் என்றாவது தீ விபத்து ஏற்பட்டால் யாருமே தப்பிக்க முடியாது.

எனவே "அலட்சிய நடிகர் SSR இன் SSR பங்கஜம் தியட்டரில் படம் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

கருத்துகள் இல்லை: