17 ஆக., 2013

இயக்குனர் ஆவது எப்படி?...

Photo : KRP Senthil
திரைக்கதை எழுதுவது எப்படி?, உலக சினிமா, தமிழ் சினிமாவில் இலக்கியம்!, வாங்க சினிமா எடுக்கலாம்!, இப்படியாக ஏராளமான பேர் எண்ணற்ற தலைப்புகளில் புத்தகம் எழுதிவிட்டனர். ஒப்பு நோக்கினால் சுஜாதா போன்ற ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் சினிமாவில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது மாதிரியான சந்தேகங்கள் ஏதும் இல்லாமல் தமிழன் தனக்கான தலைவனை திரையில் இருந்தே தேர்ந்தெடுக்கும் அதாகப்பட்டது அட்டைகத்திகள் தேர்ந்தெடுத்த தெர்மக்கோல் கத்திகள் என  வரலாறு ஆணித்திரமாக நெஞ்சில் இறங்கிவிட்டதாலும், சென்னை நோக்கி படையெடுக்கும் லட்சத்தில் ஒரிருவர் குறைவாக மற்றவரெல்லாம் சினிமாவை காப்பாற்றும் உன்மத்தம் பிடித்தே வந்து சேர்கிறார்கள்.

சமீபமாக சமூக தளங்களின் உதவியாலும் தொழில்நுட்பம் தன் பரினாம வளர்ச்சியை செல்போன் கேமராவரை கொண்டு வந்துவிட்டதாலும் சினிமா என்பது ரெண்டே நிமிடத்தில் அல்வா செய்வது எப்படி? என்பது மாதிரியான இன்ஸ்டண்ட் சமாச்சாரம் ஆகிவிட்டது. அதிலும் என்னை மாதிரி ஒலகத்தை புரட்டும் கடப்பாரை சுமந்தவர்கள் கூட அரசியல், சமூகம் என்பதை தாண்டி சினிமா விமர்சனம் எழுத வந்துவிட்டேன். அதற்கு ஒரு காரன காரியம் எனக்கு தனியாக இருந்தாலும், இருக்கிற அதிலும் எப்போதும் ஃபேஸ்புக், ட்விட்டர் என பழியாய் தவம் கிடந்து விரல் தேய்க்கும் முன்னூத்தி சொச்சம் (நெஜமாவே அவ்வளவு பேர்தான் தமிழில் இருக்காங்க) பேர்களையும் தாண்டி ஆதியில் தோன்றிய பதிவுலகில் இன்னும் விமர்சனத்தில் கேபிளின் இடத்தை இட்டு நிரப்ப  சிலர் முப்பது ரூவா திருட்டு டிவிடியில் (காசு கொடுத்தாலும் திருட்டு டிவிடிதான்) பாத்துட்டு படம் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வருவதற்கு முதல் நாளுக்குள்ளாவது விமர்சனம் எழுதும் ரேங்கோளாறு ஆட்களும் உண்டு. அதிலும் ஸ்பீல் ஃபெர்க்கிற்கே யோசனை, இந்தப்படத்தை நான் இயக்கினால் என புதிய பரிணாமங்களில் விமர்சனம் எழுதும் திரை விமர்சன மேதைகளும், படம் பார்க்க போன கதைகளை தொகுப்பாக போடும் அளவுக்கு எழுதும் விமர்சனங்களும் நம்மை சினிமா எனும் மாயவலை எப்படியெல்லாம் வீசப்பட்டு அமுக்கப்படுகின்றன எனும் சொற்ப உதாரணங்கள் ஆகும்.

எங்களுடைய தலைவன் கேபிள் படம் இயக்கப்போகிறார்  என்றதும், அது வரைக்கும் கூடவே சுற்றிய செவ்வாழையாக இருந்த எனக்கு கண்டிப்பாக அவர் ஏதாவது வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்த்தது ஒரு குத்தமாங்க!?.  அப்பதான் தெரிந்தது கேபிள் ஒரு பாவப்பட்ட ஆத்மான்னு மனுசனுக்கு அண்டார்டிகாவிலிருந்து கூடவா ரெகமெண்டேஷன் வரும். நடிக்க, உதவி இயக்குனர் ஆக இன்னும் பலப்பலவாக தினம் நூறு வின்னப்பங்கள் அதற்கான பரிந்துரைகள் என பதிவுலகம், முகநூல் மற்றும் தெரிந்த தெரியாத ஆட்கள் அவரின் படத்தில் பணிபுரிய தவம் கிடக்க மனுஷன் ஒரே ஒரு ஆளை மட்டும் கூட வச்சுகிட்டு படத்தை எடுக்க கிளம்பிட்டார். பொறவு நான் எப்புடி வாய்ப்பு கேட்பேன். அதனால அவருக்கு இருக்கும் MAASS பாத்து எனது சகல மயிர்கால்களும் இயக்குனர் ஆகியே தீர்வது என லட்சியத்தின் உச்சத்தை நோக்கி நீண்டு விட்டது. என்ன அதற்குள்ளாகவே ஓடுறீங்க இன்னும் ஒரு பாரா மட்டும்தான் இருக்கு அதையும் படிச்சிருங்க அப்பதான் என்மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை ஒங்களுக்கு புரியுன்றேன்.

அதாகப்பட்டது சுமாராக 2000 ஒலகப்படங்கள் பார்த்திருக்கிறேன். இப்பவும் கேபிள் மற்றும் சிவாவுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், என சகல மொழிப்படங்களையும் தினசரிக்கு ஒன்று எனும் ஆர்வகோளாறால் பார்க்கிறேன். அப்படியிருக்க உதவி இயக்குனராக பணியாற்ற வந்த நண்பர் ஒருவரின் சினிமா அனுபவம் என்னை ஆச்சர்யத்தின் நடு மண்டையில் கொட்டோ கொட்டோ என கொட்டி தீர்த்தது. அதாகப்பட்டதுங்க  படம் பார்க்கிற வழக்கமெல்லாம் அவருக்கு கெடயவே கெடயாதுங்க, எப்பயாச்சும் பொழுது போவலன்ன படம் பார்க்கிற குரூப்பாம் அவரு. அதிலும் ஒலகப்படங்கள் என்றால் ஜாக்கிசான் நடிச்சதுதானாம்!!!. சரி நீங்க எதுக்காக சினிமாவுக்கு வந்தீங்கன்னு கேட்டா “சொம்மா டைம் பாசுக்குதான்” னு சொன்னதும் அப்படியே ஷாக்காயிட்டேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் நம்ம பதிவுலக சக ஒருத்தரு சினிமா விமர்சனம் எழுதுனா இயக்குனர் ஆகலாம் என சொல்லிருந்தாரு. இப்ப டைம் பாசுக்கே இயக்குனர் ஆகலான்னு ஒருத்தர் சொல்றாரு. அப்ப இவ்ளோ படத்தையும் பார்த்த நான் இயக்குனர் ஆவதில் என்ன தவறு இருக்க முடியும். ஆகவே நண்பர்களே யாராவது படம் தயாரிக்க ஆசைப்பட்டால் உடனே அனுகவும்:
                                                     
                                                கவுண்டமணி - செந்தில் ஃஃபேன்ஸ் கிளப்,
                                                             மன்னார் அண்டு கம்பேனி,
                                                             கோடம்பாக்கம், சென்னை.
                                              கிளைகள்: வட பழநி, தி.நகர், மாம்பலம்
   தொடர்புக்கு : கப்பல் யாவரி “மெட்ராஸ் பவன் ஓனர், சிவக்குமார் (மேனேஜர்)

11 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா.. ஹ...

அப்ப கேபிள் அண்ணன் உங்களுக்கு வாய்ப்புத் தரலையா...

ஆமா முகவரி கேக்ரான் மேக்ரான் கம்பெனி முகவரி மாதிரியே இருக்கே...

விரைவில் சினிமா எடுக்க வாழ்த்துக்கள் அண்ணா...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

மன்னாரன் கம்பேனி ஓனர் கே.ஆர்.பி. எழுதிய கட்டுரை அருமை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அண்ணே நீங்க இயக்குனர்னா நான்தான் ஹீரோ அப்புறம் மெட்ராஸ் பவன் தான் கண்ணாடி இல்லாத வில்லன், ஹீரோயின் அமலாபால் வேண்டவே வேண்டாம், அனுஷ்கா அண்ணே அனுஷ்கா ஹி ஹி...

Unknown சொன்னது…

KRP பாலுமகேந்திராவை, சார் டைட்டானிக் படம் பாத்திங்களா..?அப்படின்னு கேட்டா பாக்கலை நல்லாயிருக்குன்னு சொன்னாங்க என்பார்,பிச்சுக்கிட்டு ஓடுற படத்தைப் பற்றி கேட்டா நான் பாக்கல நல்லா இயக்கியிருக்கறதா பசங்க சொன்னாங்க என்பார்...அதனால நாவலோ சினிமாவோ பார்க்காதவங்க படிக்காதவங்கதான் பட்டையக் கிளப்பியிருக்காங்க......நீங்க இனிமே இவங்களோட சினிமா பாக்குறத வுடுங்க அடுத்த தென்னிந்தியாவின் ஸ்பீல்ட் பெர்க் YOU தான்....:))

arasan சொன்னது…

உங்களின் மைண்டில் நானும் இருப்பதாய் நம்புகிறேன் அண்ணே ...

செங்கோவி சொன்னது…

அண்ணே, கலக்கிட்டீங்க...நான்கூட நிறைய மல்லு பட போஸ்டர் பார்த்திருக்கேன். அந்த குவாலிஃபிகேசனை வச்சே, இயக்குநர் ஆகலாமா?

Sivakumar சொன்னது…

தொடாமலே தொடரும்னு ஒரு படம் எடுத்தா போச்சி. விடுங்க.

a சொன்னது…

என்னே கே.ஆர்.பிக்கு வந்த சோதனை???

வவ்வால் சொன்னது…

என்னக்கொடுமை சார் இது!!!

ஸ்பீல்பெர்க்குக்கே மெயில் அனுப்பின நானே சும்மா இருக்கேன்,இங்கே ஆள் ஆளுக்கு டயரடக்கர் ஆகுறேன்னு கிளம்பிட்டாங்களே... நானும் படம் எடுக்கிறேன் "பனகல் பார்க்னு" , சும்மா பேரக்கேட்டாலே அதிருதுல்ல :-))


பதிவர்கள் எல்லாருக்கும் நான் வாய்ப்பு தாரேன்,

ஓபனிங்க் ஷாட்ல ,

ஓடுங்க எல்லாம் ஓடுங்க ,அந்த கொடிய மிருகம் நம்மள பார்த்து தான் வருனுனு சொல்லிட்டு எல்லாம் ஓடுறாங்க, இந்த சீன்ல ஓடுறாப்போல நடிக்க எல்லா பதிவர்களும் தயாரா ?

குட்டிபிசாசு சொன்னது…

உங்களுக்கு நல்ல முகவெட்டு(முகத்தில் இல்ல) நீங்க ஏன் நடிக்கக் கூடாது.

சேக்காளி சொன்னது…

இயக்குநர் ஆவது எப்படிங்கறது இருக்கட்டும்.அதுக்கு முன்னாடி "தமிழ்நாட்டில் திரைப்படத்தை வெளியிடுவது எப்படி" ங்கற புத்தகத்தை படிச்சீங்களா.
ஆன்லைனில் வாங்க
http://www.sekkaali.blogspot.com/2013/08/blog-post.html