3 ஆக., 2013

பயோடேட்டா - நரேந்திர மோதி...


பெயர்                         : மோடி (மஸ்தான்)
இயற்பெயர்             : நரேந்திர மோதி
தலைவர்                   : இந்தியா முழுமைக்கும்
துணைத் தலைவர் : இந்துத்துவாக்களின்
மேலும் துணைத் தலைவர்கள் : காவி கட்டியவர்கள் மட்டும்
வயது                           : பிரதமர் ஆகும் வயது
தொழில்                    : மதத்தை காப்பாற்றுவது
பலம்                            : No. 1 மாநிலம்
பலவீனம்          :  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், பார்ப்பனர் அல்லாதது 
நீண்ட கால சாதனைகள் : ஊழல் குற்றசாட்டுகள் இல்லாத முதல்வர், 
                                                         நல்ல நிர்வாகி
சமீபத்திய சாதனைகள்   : அத்வானியை பின்னுக்கு தள்ளியது, RSS-ன் 
                                                        நம்பிக்கையை பெற்றது
நீண்ட கால எரிச்சல்        : காங்கிரஸ்காரர்கள், 
சமீபத்திய எரிச்சல்            : கட்சிக்குள் குழி பறிப்பவர்கள்
மக்கள்                                      : இந்துக்கள் மட்டும்
சொத்து மதிப்பு                    : கட்டை பிரம்மச்சாரி என்பதால்
                                                  சொத்து சேர்க்கும் அவசியம் இல்லாது போய்விட்டது
நண்பர்கள்                      : சாமியார்கள் மட்டும்
எதிரிகள்                          : முன்பு இஸ்லாமியர்கள்
ஆசை                                : பிரதமர் பதவி
நிராசை                           : காவியை மறைக்க முடியாதது
பாராட்டுக்குரியது    : பூகம்பத்துக்குப் பின் குஜராத்தை கட்டமைத்தது 
பயம்                                 :  உள் கட்சிப்பூசல்
கோபம்                            : அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு
                                              தள்ளப்பட்டது
காணாமல் போனவை : குஜராத்தில் VHP
புதியவை                       : குஜராத்தில் இஸ்லாமியர் சந்தோசமாக இருக்கிறார்கள்
                                              எனக் காட்டிக்கொண்டே, கோத்ரா சம்பவத்தில்
                                              இறந்தவர்களை நாய்க்குட்டி என கிண்டலடிப்பது.
கருத்து                             : மதச்சார்பற்ற இந்தியா இவரால் பின்னுக்கு 
                                               தள்ளப்படலாம்
டிஸ்கி                               : காங்கிரஸ் மீதான வெறுப்பு இவரை பிரதமர்
                                               ஆக்கலாம். கூடவே இருக்கும் பார்பனர்கள் 
                                               இப்போதும் வெறுக்கிறார்கள்.

.
                

8 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

தங்களின் புதிய தொழில் சிறப்புற நடக்கவும் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்.

ஜோதிஜி சொன்னது…

உங்களால் கூட மோதி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று சொல்ல முடியலையே? இலை மறை காயாகத்தானே சொல்லி இருக்குறீங்க செந்தில்.

பெயரில்லா சொன்னது…

மோதி நீங்க நல்லவரா கெட்டவரா? தெரியலியே, அவ்வ்வ் !

Robin சொன்னது…

//மக்கள் : இந்துக்கள் மட்டும்// குஜராத் இந்துக்கள் மட்டும். சமீபத்தில் கேதார்நாத்தில் சரியாக 15,000 குஜராத்திகளை அலேக்காக தூக்கிக்கொண்டு வந்தார்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// மதச்சார்பற்ற இந்தியா இவரால் பின்னுக்கு
தள்ளப்படலாம் //

சத்தியமாக சொல்லுங்க செந்தில் இந்த " மத சார்பற்ற இந்தியாவை " நம்புகிறீர்களா?
மேலும் "இவரால் " என்பதுவும் பொருந்தாது
நான் சத்தியமாக பா.ஜா க. இல்லை. காங்கிரஸ் எதிர்பாளன் (நேர்மையாக )

சென்னை பித்தன் சொன்னது…

மதச்சர்பின்மை என்பது என்ன?இப்போது இருப்பது போலி மதச்சார்பின்மை--pseudo secularism

'பரிவை' சே.குமார் சொன்னது…

பயோடேட்டா நல்லா இருக்கு....

'பரிவை' சே.குமார் சொன்னது…

பயோடேட்டா நல்லா இருக்கு....