Design by : Sukumar Suwaminathan |
சமீப காலமாக சரிந்துவரும் இந்திய ரூபாய் மதிப்புக்கு யாரும் பெரிதாக கவலைப்படவேண்டாம் என சிதம்பரம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது ஏன் டாலர் மதிப்பில் 65 ரூபாய் ஆனதற்கே இப்படி கூவுறீங்க அது இன்னும் கீழே, கீழே போகப்போகிறதே அப்போது கூவிக்கொள்ளலாம் என்பதுதான் காரனம்.
சென்ற வருடம் அத்தனை அரசியல் கட்சியையும் சரிக்கட்டி FDI எனும் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தார்கள். ஆனால் இன்று வரைக்கும் யாரும் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் தனது அறிக்கையில் மக்கள் இதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதாவது ஏற்றுமதி செய்பவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் இது நல்ல விசயம் என்கிறார். இதைக்கேட்டு அழுவதா? சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஏற்கனவே மன்மோகன் சிங் என்னும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரைத்தான் நாம் கடந்த பத்து வருடங்களாக ஒட்டு மொத்த இந்தியாவையும் நிர்வாகிக்க கொடுத்த அப்பாவிகள் நாம்.
பொருளாதரத்தை உயர்த்தும் ஒரு வழிமுறையாக சிதம்பரம் அறிவித்த திட்டம் என்ன தெரியுமா? அப்பாவிகள், ஏழைகள் தங்கம் வாங்கினால் 10% வரி, வெளிநாட்டில் இருந்து டிவி கொண்டு வந்தால் 35% வரி. இந்த ஆள் அடுத்த பிரதமர் வேட்பாளர் பட்டியலில் வேறு இருக்கிறார் மக்களே!.
பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வரியில்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்வதாக சொல்லிக்கொண்டு அநியாய வரியில், விலையில் நாம் உபயோகப்படுத்துவதால்தான் விலைவாசி இப்படி ராக்கெட் வேகத்தில் உயர்கிறது என்று சாமானியனே பொருளாதாரம் பேசவைத்த பெருமை காங்கிரஸ் அறிவு ஜீவிகளையே சாரும். இன்னொரு வல்லுனர் மாண்டேக் சிங் அலுவாலியா வறுமைக்கோட்டை வரைந்த விதம் உலக பொருளாதார நிபுணர்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு நாறியது.
லட்சம் கோடிகளில் ஊழலும், அதன் கோப்புகள் கானாமல் போவதும். இங்கே சாதரனமாகிவிட்டது. ஒரு பிரச்சனை பெரிதாக வெடித்தால் இன்னொரு பிரச்சனையால் அதனை மூடிவிடும் தந்திரம்தான் இவர்கள் கையாள்வது. நிலக்கரி ஊழல் பெரிதாக வெடித்தபோது டெல்லி பாலியல் சம்பவம் மூன்று மாதங்கள் தொடர்ந்து பேசப்பட்டு அது அமுக்கப்பட்டது. சாதாரன ஒருவர் பாலியல் வண்கொடுமையில் சிக்கினாலே மீடியா அவர்களின் சொந்தபந்தம், உறவினர், நண்பர் என ஒருத்தர் விடாமல் பேட்டி எடுத்து தள்ளும், ஆனால் இன்றுவரை டெல்லி பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்ணின் விபரங்கள், ஏன் பெயர் கூட யாருக்கும் தெரியாது? அதன்பிறகு கிரிக்கெட் சூதட்ட புகரின் மூலம் டெல்லி சம்பவத்தை அமுக்கினார்கள். இப்போது உணவு மசோதாவுக்காகவும், நிலக்கரி ஆவணங்களுக்காகவும் பாகிஸ்தான்காரன் சுடுவதை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று மத்திய உளவுத்துறை மயிலாடுதுறையை தீவிரவாதிகள் தாக்குவார்கள் என அறிக்கை வெளியிடுகிறது. காமன்வெல்த் மாநாட்டுக்கு நீங்க போங்க, அங்க ராஜபக்சே போடும் பிச்சையை வாங்கி தின்னுங்க, ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள், மூன்று லட்சம் பேர் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டார்கள் அப்போதே இங்கிருக்கும் தமிழன் டாஸ்மாக்கில் சரக்கடித்து மானாட மயிலாட பார்த்து ரசித்தான். எனவே மீனவனையும் ஒட்டு மொத்தமாக இனி தீவிரவாதி வரப்போறான் என பூச்சாண்டி காட்டியே வேறு தொழில் பாக்க அனுப்பிட்டு, ஒட்டு மொத்தமாக கடலையும் இனி தனியாருக்கு குத்தகைக்கு விடலாம். இங்க எவன் கேள்வி கேட்பான்?.
அடுத்து டீசல் மற்றும் பெட்ரோல் விலையை உயர்த்தப்போகிறீர்கள் டாலர் விலை 80 ரூபாய்க்கு மேல் போனதும் வெளிநாட்டு கம்பெனிகள் உள்ளே வந்து இங்கு முதலீடு செய்ய ஆரம்பிக்கும். பொருளாதார மேதைகளே காலம் இப்படியே போகாது. அப்பாவிகளின் அடிப்படை வாழ்விலும் கைவைக்கும் உங்கள் சந்ததிகள் அவர்களின் சாபத்தில்தான் இனி வாழ்வார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
9 கருத்துகள்:
மனதில் நிலைநிறுத்திக் கொண்டோம்...!
காமன்வெல்த் மாநாட்டுக்கு நீங்க போங்க, அங்க ராஜபக்சே போடும் பிச்சையை வாங்கி தின்னுங்க, ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள், மூன்று லட்சம் பேர் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டார்கள் அப்போதே இங்கிருக்கும் தமிழன் டாஸ்மாக்கில் சரக்கடித்து மானாட மயிலாட பார்த்து ரசித்தான். எனவே மீனவனையும் ஒட்டு மொத்தமாக இனி தீவிரவாதி வரப்போறான் என பூச்சாண்டி காட்டியே வேறு தொழில் பாக்க அனுப்பிட்டு, ஒட்டு மொத்தமாக கடலையும் இனி தனியாருக்கு குத்தகைக்கு விடலாம். இங்க எவன் கேள்வி கேட்பான்?.
--------
நீங்கள் சொல்லியிருப்பது மறுக்க முடியாத உண்மை அண்ணா...
விரைவில் நாம் அந்நியர்களிடம் அடிமைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...
ஒரு தமிழன் மத்தியில் சொல்லி கொள்ளும் பதவியில் இருப்பதால் தமிழனுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஓட்டு மொத்த இந்தியனுக்கும் ஆப்பு வைதுவிட்டானே..
உங்கள் சந்ததிகள் அவர்களின் சாபத்தில்தான் இனி வாழ்வார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Pa.Si yaal ellorukkum pasi vanthathu thaan micham.
KRPJI,
//சாதாரன ஒருவர் பாலியல் வண்கொடுமையில் சிக்கினாலே மீடியா அவர்களின் சொந்தபந்தம், உறவினர், நண்பர் என ஒருத்தர் விடாமல் பேட்டி எடுத்து தள்ளும், ஆனால் இன்றுவரை டெல்லி பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்ணின் விபரங்கள், ஏன் பெயர் கூட யாருக்கும் தெரியாது?//
ம்க்கும் ரொம்ப முக்கியமான கேள்விகள் பதில் தெரியலைனா மண்டை வெடிச்சிடும் பாருங்க?
உங்களுக்கு தெரியாதுனு சொல்லிட்டு போங்க, அது என்ன ஒருவருக்கும் தெரியாதுனு பொத்தாம் பொதுவா சொல்லுறது, மானாடுதா,மாராடுதானு பார்த்துக்கிட்டே இருந்தா ,வீட்டுக்கு தபால் போட்டு சொல்லுவாய்ங்களோ?
அந்த துன்பியல் சம்பவத்தின் முழுவிவரம் ,பேருலாம் அப்போவே வெலாவாரியா காட்டிட்டாங்க, என்ன எல்லாம் வட ஒந்திய சேனல்கள் என்பதால் , கண்டுக்காம போயிருப்பிங்க :-))
பாலியல் வண்புனர்வு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள்.
Jyothi singh Pandey, D/O Badri Singh Pandey,
Boy friend name- Awindra Pandey.
இப்போ ரூபாய் மதிப்பு கவலைக்கூடா போயிருக்குமே அவ்வ்!
நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் அவ்வ்!
ஜீவன் சுப்பு://ஒரு தமிழன் மத்தியில் சொல்லி கொள்ளும் பதவியில் இருப்பதால் தமிழனுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஓட்டு மொத்த இந்தியனுக்கும் ஆப்பு வைத்து விட்டானே//.
தெறம. தெறம. அத பாத்து ஒங்களுக்கு பொறாமை.
ருபாயின் வீழ்ச்சிக்கு காரணத்தை ஆராய்ந்தால் மேல் கூறப்பட்டுள்ள வரிகள் ஓரளவிற்கு உதவக் கூடியதே. அடிப்படையில் டாலரின் தேவையை இன்னும் அதிகரிக்கும் அந்நிய இறக்குமதியைக் குறைக்க நினைப்பது சரிதானே! தொழிற்துறையில் முதலீடாக வேண்டிய பணத்தை எல்லாம் தங்கத்தில் முதலீடு என்று செய்து சாதித்தது ஒன்றுமில்லை என நினைக்கிறேன்
வவ்வாலு ....அப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடந்ததா?
ஏதாவது ஆதாரம் இருக்கா?
இந்தியாவில் எதை வேண்டுமானாலும் நடந்ததாகக் கதைவிடமுடியும்.
கருத்துரையிடுக