21 ஆக., 2013

பலியாடுகள்...

Photo : KRP Senthil
ஆனைமுகனுக்கு
அருகம்புல், தோப்புக்கரணம்
அளவாய்ப் பிடித்த கொழுக்கட்டை
ஆண்டி முருகனுக்கு
பஞ்சாமிர்தக்காவடி 
அம்மனுக்கு கூழும், வேப்பிலையும்
திருப்பதிக்குப்
போனா மொட்டை காணிக்கை
குலசாமிக்கு
கவிச்சி மணக்க
கெடாவெட்டு
, சாராயமும்

முப்பெரும் கடவுளுக்கு
சமஸ்கிருதம் தாய்மொழியாம்
சில்லறைகள் தீர்மானிக்கும்
சிதறும் மந்திரங்களை..
அல்லாவுக்கு ஜும்மா கட்டாயம்
ஏசுவுக்கு ஞாயிறு பிரார்த்தனை,
 
அப்புறம்
வசதிக்கு தக்க விரதமோ,
நேர்த்திக்கடனோ 
இல்லாவிட்டாலும் இருக்கின்றன
வழிநெடுக மரங்கள் 
மஞ்சள் குளித்தபடி...
எப்போதும் மிச்சமிருக்கும்.

ஏதேனும் ஒரு வேண்டுதலும்
ஏதேனும் ஒரு காணிக்கையும்
எந்தக்கடவுளும் கொடுத்ததே இல்லை
எதையும் இன்றுவரைக்கும் ..
ஆனாலும் சொல்கிறோம்
"
எல்லாம் அவங் கொடுக்குறது!"

அதன்பிறகும்
ஆனந்தாக்களின் கைகளும்
கால்களும் நீளும்
சாம்பல் பூசிவிடவும்
பாதம் கழுவப்படவும்...
"
சிவாய நம!"
பெறும் ()சாமிகள்
தருவதில்லை எப்போதும்...
நம்பிடவும்
தாள்பணியவும்
மந்தைகள் எப்போதும்
மேய்ப்பனைத் தேடி....

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு...

கவியாழி சொன்னது…

புரிகிறது