23 ஏப்., 2011

மேய்ப்பர்களின் ஆட்டுக்குட்டிகள்...

தவிர்க்க முடியாத காரணத்தால்!
எனக் காரணம் சொல்கிறோம் 
தவிர்க்க வேண்டி..

நினைவில் இருந்தே 
விலக்கி வைக்க நினைத்தவர்களை 
காணும்போது 
அவசியம் தேவைப்படுகிறது
ஒரு 
முறைப்போ! சிரிப்போ!..

பொய்யாய் துவங்கி 
பொய்கள் நிரம்பி 
உண்மையில் முடிந்தது 
ஒரு நட்பு..

சாமியை வைத்து 
வியாபாரம் செய்தால் 
சில்லறைகள்தான் தேறுதுன்னு 
சாமியாராய்ப் போனான் ஒருவன்..

வீட்டை பூட்டிவிட்டு 
நான்குமுறை இழுத்துப் பார்த்தான் 
அருள்வாக்கு சொல்பவன்..

மனிதன் கடவுளாக 
கடவுளிடம் வேண்டுகிறான்
மந்தைகளாய் இருப்பதைத்தான் 
கடவுளரும், மேய்ப்பர்களும் 
எப்போதும் விரும்புகின்றனர்.. 

19 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சாட்டையடி கவிதை தலைவரே....
இன்று நம்ம பதிவு
கேபிள் சங்கரை மேற்கோள் காட்டி பதிவர்களை பெருமைபடுத்திய அரசு
http://ragariz.blogspot.com/2011/04/cable-sankar-and-kumudam.html

Unknown சொன்னது…

வாவ் சார் சான்சே இல்லை, நல்லா உறைக்குற மாதிரி சொல்லி இருக்கீங்க

Yaathoramani.blogspot.com சொன்னது…

சாமியாராகப் போதலுக்கான காரணம் மிக அருமை
மன நிறைவு தந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Sivakumar சொன்னது…

செந்தில்...Red Brave…என மாறுமா? கடவுளே!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//வீட்டை பூட்டிவிட்டு
நான்குமுறை இழுத்துப் பார்த்தான்
அருள்வாக்கு சொல்பவன்..//

மிகவும் அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆட்டு மந்தைகள் நாம்

அஞ்சா சிங்கம் சொன்னது…

மந்தைகளாய் இருப்பதைத்தான்
கடவுளரும், மேய்ப்பர்களும்
எப்போதும் விரும்புகின்றனர்.. //////////////
//////////////
இது வெறும் கடவுளருக்கு மட்டுமா ?
அல்லது அரசுக்கும் பொருந்துமா?

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சமூகத்திற்காக சவுக்கடி....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நம்ம கவிதை வீதிப்பக்கம் வராததற்கு காரணம் சொல்ல முடியுமா..?

சசிகுமார் சொன்னது…

//வீட்டை பூட்டிவிட்டு
நான்குமுறை இழுத்துப் பார்த்தான்
அருள்வாக்கு சொல்பவன்..//

இந்த வரிகள் நச்

சசிகுமார் சொன்னது…

//வீட்டை பூட்டிவிட்டு
நான்குமுறை இழுத்துப் பார்த்தான்
அருள்வாக்கு சொல்பவன்..//

இந்த வரிகள் நச்

பெயரில்லா சொன்னது…

///சாமியை வைத்து
வியாபாரம் செய்தால்
சில்லறைகள்தான் தேறுதுன்னு
சாமியாராய்ப் போனான் ஒருவன்..////உண்மை தான் )))))

சுதர்ஷன் சொன்னது…

//மனிதன் கடவுளாக கடவுளிடம் வேண்டுகிறான்
மந்தைகளாய் இருப்பதைத்தான் கடவுளரும், மேய்ப்பர்களும்
எப்போதும் விரும்புகின்றனர் !!!!!!//

மிகவும் பிடித்திருக்கிறது இந்த வரிகள் :-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எல்லாமே அசத்தல்...

vasu balaji சொன்னது…

/மந்தைகளாய் இருப்பதைத்தான் கடவுளரும், மேய்ப்பர்களும் எப்போதும் விரும்புகின்றனர்.. /

இது சொல்லுது மொத்தம்:)

ஷர்புதீன் சொன்னது…

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

ராஜ நடராஜன் சொன்னது…

வந்தேன்!

கடவுளரும்,மேய்ப்பர்களும்,ஆட்டுமந்தைகளும் அடுத்த மாசம் உண்மையாகிப் போகுமா:)

ஹேமா சொன்னது…

மனுசனைப் படைச்ச கடவுளுக்கே திண்டாட்டம்தான் !

ஈரோடு கதிர் சொன்னது…

சாமியாரும் செத்துப் போறாங்களே!!!