22 ஆக., 2011

நாட்டு நடப்பு 22/08/2011


அன்ன ஹசாரே 

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் இவருக்கு நாடெங்கும் உள்ள படித்த மேல்தட்டு வர்க்கத்தின் ஆதரவு சிலிர்க்க வைக்கறது ( Incredible India ). ஆனால் திருட்டுக்கு எதிராக இருக்கும் ஏனைய சட்டங்கள் போலத்தானே இதுவும் ஆகும். நியாயமாகப் பார்த்தால் லஞ்சம் கொடுக்காத சீரோ ரூபி (zero rupee) இயக்கம் போல லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்கிற இயக்கமாகதானே உருவாகியிருக்க வேண்டும்.

மத்திய அரசே இவருக்கு அனுமதி தர மறுத்து, அதன்பின் அனுமதி தந்து, மேடை போட்டுக் கொடுத்து, பாதுகாப்பு கொடுத்து நடத்தும் நாடகமாகத்தான் இது இருக்கிறது. உலகெங்கும் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது, லாரிகள் வேலை நிறுத்தம் செய்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஆரம்பிக்கப் போகிறது. மேலும் 2G விவகாரம் பற்றிய பேச்சே காணும். மக்களின் அநியாய விழுப்புணர்ச்சியை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. இன்னமும் டாஸ்மாக்கில் பில் கொடுப்பதில்லை, விலையைவிட ஐந்து ரூபாய் கூட வாங்குகிறான். இதை தட்டிக்கேட்க யாராவது ஒன்னு கூடுங்கப்பா!
# என் கவலை எனக்கு.

தமிழ் வாழ்க 

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவும் மணிக்கு கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டைஎன்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நம்ம மக்களோட ஆங்கில அறிவை பார்த்து சிரிச்சு மாளலை. மேலும் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்சிகளில் உச்சரிக்கப்படும் தூய தமிழ் வார்த்தைகளை வெகுஜன ஊடகங்களில் பயன்படுத்தினால் யாரும் புரிந்துகொள்ள முடியாதா? என்ன!. அதிலும் இசையருவி. சன் மியூசிக் தொகுப்பாளர்களின் தமிழ் சகிக்கலை. நான்தான் தமிழ், தமிழ்தான் நான் என வாய் கிழிய பேசும் கருணாநிதி தன் சொந்த தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்ப்பது இல்லை போல. 

தூக்கு தண்டனை 

பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு வழக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் போராடிவரும் வேளையில் அவர்களையும் அப்சல் குருவையும் ஒப்பிட்டு வாதம் நடத்தும் நம்மவர்கள் சிலருக்கு அப்சல்குருவாகட்டும், மற்றவர்களாகட்டும் அவர்களின் செயலுக்கு காரணமாக இருந்திருக்கக் கூடிய ஏதோ ஒரு கோபம் பற்றிய தார்மீக நியாயம் ஏன் புரியவில்லை. 

யார் குற்றம் செய்திருந்தாலும் அதற்காக மரணதண்டனை தேவையில்லை என்றுசொல்லும் வி.ஆர். கிருஷ்ண ஐயரை நான் ஆதரிக்கிறேன்.

புத்தகம் 

நண்பர்கள் நேசமித்திரன் மற்றும் கார்த்திகை பாண்டியன் இருவரின் முயற்சியால் வெளிவந்திருக்கும் காலாண்டிதழ் வலசை ஒரு வித்தியாசமான முயற்சி. வழக்கமான வார , மாத இதழ்கள் போலல்லாது புத்தக வடிவில் பதிப்பித்து இருக்கிறார்கள். இதனால் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடாமல் நம் புத்தக சேமிப்பில் ஒன்றாக மாறிவிடும். வெளிநாட்டு அறிஞர்களின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்த இதழ் பெண்ணின் உடல்மீது நடத்தும் அரசியல் மற்றும் வன்முறைகளைப் பற்றி பேசுகிறது. நமது சக பதிவர்களின் அருமையான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. ஆசிரியர் இருவருக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்தும். புத்தகம் அதி தீவிர இலக்கியவாதிகள் மட்டும் படித்துப் புரிந்துகொள்ளும் நிலையில் இருப்பதுதான் ஒரு சிறுகுறை.

எங்களது  பதிப்பக வெளியீடுகளான, வீணையடி நீ எனக்கு, கொத்து பரோட்டா, சாமானியனின் கதை, பணம் ஆகிய புத்தகங்கள் சிங்கப்பூரின் அனைத்து நூலகங்களிலும் கிடைக்கிறது.  

ஈழம் 

ஆனந்த விகடனில் தொடராக வெளிவரும் சி.மகேந்திரன் எழுதும் வீழ்வே னென்று நினைத்தாயோ? கண்ணில் நீர் வரவைக்கிறது. ஈழம் பற்றிய அதன் அவசியம் பற்றிய புரிதல் இல்லாதோர் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.

ஜெ vs கருணா 

முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று ஜெ அறிவித்ததும் முதலில் வரவேற்ற கருணா பின்னர் மறுப்பது ஏன்?.

 ஒருவகையில் கருணா அன் கோ வை நாம் பாராட்டியே ஆகவேண்டும் தமிழகத்தில் போடுவது பொய்வழக்கு என மேடைக்கு மேடை முழங்கும் இவர்கள் மத்தியில் போட்ட வழக்குகளைப் பற்றி பேசாமல் அதன் உண்மைத்தன்மையை ஒத்துக் கொள்ளும் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. 

பதிவர் சண்டை 

சமீபமாக ஜாக்கி சேகரை கிண்டல் செய்து வெளிவரும் சாம் மார்த்தாண்டன் பதிவுகள் பரபரப்பாக பேசப்படுகிறது. அதில் ஜாக்கியை மட்டுமல்லாது சிபியையும் கிண்டல் செய்திருக்கிறார்கள். நகைச்சுவையாக இன்னொருவர் எழுதிய விசயத்தை எழுதுவது தப்பில்லை ஆனால் சமயங்களில் உருவத்தைக் குறித்த நக்கல்கள் தனிமனித தாக்குதல். அதனை தவிர்ப்பது நல்லது. 

ஜாக்கி இதற்காக கோபப்பட்டார் எனக்கேள்விப்பட்டேன். இதற்காக கோபப்படத் தேவையில்லை. பிரபலம் ஆகிவிட்டாலே இதுபோன்ற விசயங்கள் வரத்தான் செய்யும். எனக்கென்னமோ ஒரிஜினலை மிஞ்சும் அளவுக்கு சாம் மார்த்தாண்டன் எழுதவில்லை என்றே தோன்றுகிறது. 

கொஞ்சம் கேபிளையும் கவனிங்கப்பா! ரொம்பத்தான் துள்ளுறார் தில்லுதுர!

16 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கொஞ்சம் கேபிளையும் கவனிங்கப்பா! ரொம்பத்தான் துள்ளுறார் தில்லுதுர!//

நீரல்லவா உண்மையான நண்பர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இதற்காக கோபப்படத் தேவையில்லை. பிரபலம் ஆகிவிட்டாலே இதுபோன்ற விசயங்கள் வரத்தான் செய்யும்.//

அப்போ நான் இன்னும் பிரபலம் ஆகவில்லையா? அய்யகோ என்ன கொடுமை இது!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டைஎன்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது//

மக்கள் தொலைகாட்சியில் இது ரொம்ப நல்லா இருக்கும்!!!

அஞ்சா சிங்கம் சொன்னது…

சாம் மார்த்தாண்டன் பதிவில் பின்னூட்டம் போட்டதற்காக .எனக்கு கெட்டவார்த்தை அபிஷேகம் நடக்கிறது .....
நீங்களும் கொஞ்ச ஜாக்கிரதையாக இருங்க .............

shortfilmindia.com சொன்னது…

கே.ஆர்.பி.. எனக்கு அந்த ப்ளாக் வேணாம் தனி ப்ளாக் ஓப்பன் பண்ணி எழுத சொல்லுங்க..

settaikkaran சொன்னது…

//உலகெங்கும் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது, லாரிகள் வேலை நிறுத்தம் செய்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஆரம்பிக்கப் போகிறது.//

அது மட்டுமல்ல; இந்த லோக்பால் சர்ச்சையால் கல்வி உரிமை, உணவு பாதுகாப்பு போன்ற பல முக்கியமான சட்டங்களும் கிடப்பில் போடப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. :-(

//யார் குற்றம் செய்திருந்தாலும் அதற்காக மரணதண்டனை தேவையில்லை என்றுசொல்லும் வி.ஆர். கிருஷ்ண ஐயரை நான் ஆதரிக்கிறேன்.//

+1

பெயரில்லா சொன்னது…

அன்னா ஹசாரே போராட்டத்தால் பல செய்திகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன...என்பது ஒரு சோகம்..ஒரு மாதம் போராடினாலும்,மத்திய அரசு ஏமாற்றத்தான் போகிறது என நினைக்கிறேன்

kumar சொன்னது…

சாம் மார்த்தாண்டன் லிங்க் ப்ளீஸ்.

Philosophy Prabhakaran சொன்னது…

அப்போ, கொத்துபரோட்டா, சான்ட்வேஜ் வரிசையில் இனிமே வாராவாரம் நாட்டுநடப்பு வருமா...? ஆமா, அடல்ட் கார்னர் எங்கே...?

Philosophy Prabhakaran சொன்னது…

செந்தில்... ஏனென்று தெரியவில்லை... இந்த இடுகை உங்கள் வழமையான நடையில் இருந்து மாறுபட்டு, பதிவில் ஒரு அமேச்சூரிட்டி தெரிகிறது... அவசரத்தில் எழுதினீர்களா...

Philosophy Prabhakaran சொன்னது…

// எனக்கென்னமோ ஒரிஜினலை மிஞ்சும் அளவுக்கு சாம் மார்த்தாண்டன் எழுதவில்லை என்றே தோன்றுகிறது. //

நல்லா பாத்துக்கோங்க ஜாக்கி...

பெயரில்லா சொன்னது…

/வழமையான நடையில்//

நாக்கு சுளுக்கிருச்சி. இந்த "வழமையான, வாழ்வியல், ஏகாந்தம்"....வேண்டாம். வெறி ஏத்தாதீங்க பிரபா.

பெயரில்லா சொன்னது…

//பதிவில் ஒரு அமேச்சூரிட்டி தெரிகிறது... அவசரத்தில் எழுதினீர்களா...//

விடுங்க. பாவம். நம்ம லெவலுக்கு வர நாள் ஆகும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கொஞ்சம் கேபிளையும் கவனிங்கப்பா! ரொம்பத்தான் துள்ளுறார் தில்லுதுர!//////

இது பக்கத்துல இலைக்கு பாயாசம் போடுங்க மாதிரியாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இதற்காக கோபப்படத் தேவையில்லை. பிரபலம் ஆகிவிட்டாலே இதுபோன்ற விசயங்கள் வரத்தான் செய்யும்.//

அப்போ நான் இன்னும் பிரபலம் ஆகவில்லையா? அய்யகோ என்ன கொடுமை இது!!!//////

கீழ கெடக்குற நட்டுவாக்காளிய எடுத்து உள்ளவிட்டுக்க ஆசப்படுறான்....

அம்பாளடியாள் சொன்னது…

/////கொஞ்சம் கேபிளையும் கவனிங்கப்பா! ரொம்பத்தான் துள்ளுறார் தில்லுதுர!//////

ஆகா இப்படிக்கூட யோசிப்பீர்களா சகோ .நல்ல நண்பன் ஹி..ஹி .ஹி ......