30 ஜூலை, 2012

கேபிள் சங்கர், அப்துல்லா ...


அண்ணன் அப்துல்லா மற்றும் தோழர் கேபிளுக்காக ஒரு மீள்பதிவு. 

இன்று இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


கேபிள் - அப்துல்லா பிறந்த நாள் சிறப்பு மலர்


பதிவுலகின் No.1 பிளாக்கரான கேபிள் சங்கரை எனக்கு கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாகத்தான் தெரியும். நான் தி.நகரிலும், அவர் சைதாப்பேட்டையிலும் இருந்தாலும் நான் அவரை பதிவுகளில் பார்ப்பதுடன் சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அந்த சமயங்களில் நான் அதிகம் சிங்கப்பூர், மலேசியா என சுற்றிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு சிங்கப்பூரில் இருந்து வந்தபிறகு அவர் சிங்கப்பூர் சென்றபோது அவர் BUZZ ல் தன் சிங்கப்பூர் வருகையை பகிர்ந்துகொண்டபோதுதான் அவருக்கு போனினேன். அங்கு மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் எனக்குப் போனும்படி சொன்னேன். ஆனால் சிங்கை நண்பர்களின் அமோக கவனிப்பால் ( கேலாங் உள்ளிட்ட) என் உதவி அவருக்கு தேவைப்படவில்லை. அதன்பிறகு அவர் டைகர் ஏர்வேஸில் ஊருக்கு வந்த அதே நாள் என் நண்பனும் அதே ஏர்வேஸில் எனக்காக GLENFIDDICH விஸ்கியுடன் வருவதாக சொன்னதும் அவனை முக்கியமாக அந்த விஸ்கிக்காய்  ஏர்போர்ட் சென்றபோது நமது பதிவுலக தானைதலைவன் (அ) தானே தலைவன் வந்தார். அவரை அடையாளம் கண்டு ஒரு அலோ சொன்னதும் என்ன ஆட்டோகிராஃப் வேனுமான்னார். அண்ணே நானும் பிளாக்கர்தான்னு சொல்லி என் பேரை சொன்னதும் அவர் கையிலிருந்த பாட்டிலின்மேல் என் பார்வை சென்றதும் இன்னொரு நாள் பார்க்கலாம் தலைவா என விடைபெற்றார்.

அதன்பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு பாரில்வைத்து பரஸ்பரம் அறிமுகமாகி அதன்பிறகு ஒருநாள் இரவு எனக்கு போனியபோது இன்னோரு முக்கியமான நபர் என்னுடன் பேச விரும்புவதாக சொன்னார். அவர் பதிவுலக பஸ்ஸுலக அண்ணன் ( இன்னும் புரியலியா?) அப்புறம், அண்ணனுக்கு நேரம் கிடைக்கும்போதும் ஸ்ரீதேவி ஓட்டலில் சந்திப்புகள் தொடர்ந்து அண்ணன் அண்ணன் அல்ல தம்பி என்று தெரிந்தபின்னும் அவரை அண்ணன் என்றே அழைத்து வருவது தனிக்கதை. இதற்கு மேல் எழுதினால் அண்ணன் அப்துல்லா அவர்கள் என் நட்பினை (மறு)பரீசலனை செய்யக்கூடும் என்பதால் மறுபடியும் தானைத்தலைவன் பற்றி...

அதன்பிறகு தினசரி இரவு 9.30 க்கு எங்கைய்யா இருக்கேன்னு போனுவார். ரெண்டு பேரும் சினிசிட்டி போயி கையில் இருப்பு வைத்திருந்த கடைசி சொத்து அழியும்வரை குடித்து இருக்கிறோம். அதன்பிறகு கிடைத்த நூறு  ரூவாய்க்கு ஒரு குவாட்டர் வாங்கி வீட்டு மொட்டைமாடியில் அடிப்போம் அதன்பிறகு புரவலர்கள் அழைக்காத நாட்களில் மட்டும் குடிப்பதை நிறுத்தி வைத்தோம்.

இத்தனை மாதங்களில் கேபிளின் ஆளுமையை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். எத்தகைய ரகசியத்தையும் அவரிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம். அவைகள்  அவரது சிறுகதைகளில் மறைமுகமாக வருமே தவிர நம்பிக்கைகு உரிய ஆள் அவர். தனக்கு இருக்கும் சிரமங்களை நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லமாட்டார். ஒரு சம்பவத்தை சிறுகதையாக்கும் அபாரமான லாவகம் அவரிடம் இருக்கிறது. அவர் எடுக்க முடிவுசெய்திருக்கும் மூன்று படங்களின் திரைகதையும் நான் முழுவதும் கேட்டிருக்கிறேன். அதனால் அது கண்டிப்பாக வெற்றிபெறும் என எனக்குத்தெரியும்.

ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என நினைத்து இவரின் ”மீண்டும் ஒரு காதல் கதை” யை வெளியிட்ட போதுதான் அவரின் உண்மையான மதிப்பீடு தெரிந்தது. அதற்குபிறகு நான்கு புத்தகங்கள் வெளியிட்டு நாங்கள் பதிப்பக துறையில் நுழையும்போதே லாபத்துடன் நுழைந்ததற்கு கேபிள்தான் காரனம். எந்தவொரு விசயத்தையும் வியாபார நோக்கத்தில் அனுகும்போது வரக்கூடிய பிரச்சினைகளை முன் கூட்டியே கணிக்கக் கூடிய புத்திசாலி, அதேபோல் அவரை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், கோபித்துக்கொள்ளவே மாட்டார்.

அவர் மட்டும் சினிமா தவிர்த்து வேறு வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தால் இன்னேரம் வெற்றிக்கொடி நாட்டியிருப்பார். ஆனாலும் சினிமாவின் வீச்சு அவருக்கு தெளிவாக தெரியும் என்பதால் ஓடு மீன் ஓட காத்திருக்கிறார். தமிழ்  சினிமா வரலாற்றில் கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயணுக்கு நிச்சயம் ஒரு  இடம் உண்டு.

இவரின் சமீபத்திய வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரனம் யுடான்ஸ்  திரட்டி ஆரம்பித்த சில வாரங்களில் அதன் வளர்ச்சி அபாரமானது. அதில் மற்ற திரட்டிகளில் இல்லாத அனேக அம்சங்கள் இருக்கிறது. குறிப்பாக டி.வி மற்றும் வீடியோ பிளாக்கிங் வசதிகள் பதிவுலகிற்கு புதியது. இன்னும் ஏகப்பட்ட அம்சங்களை அதில் கூடுதலாக வைக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்.

இத்தனை பன்முக திறமைகள் வாய்ந்த அவர் எப்போதும் கர்வமின்றி இருப்பதுதான் அவரின் பெருமையே. . அதேபோல் புதிதாக வருகிற பிளாக்கராக இருக்கட்டும், எந்த நேரத்தில் போனுகிற ஒரு வாசகனாக இருக்கட்டும் அந்த நேரத்தில் அவர்களுடன் பேச முடியாவிட்டாலும் நேரம் கிடக்கும்போது அவர்களுடன் பேசிவிடுவார்.

என் நெருங்கிய நண்பரும் சீனியர் பிளக்கருமான நரேன் கேபிளைப்பற்றி சொன்னார் : “ கேபிள் தி.மு.க வில் இருந்த எம்.ஜி.ஆரைப்போல, அவரின் பலம் அவருக்குத் தெரியல” என்றார். அதுதான் உண்மையும் கூட.... 

18 கருத்துகள்:

Cable சங்கர் சொன்னது…

நன்றி தலைவரே.. எங்களுக்காக மீண்டும் உங்கள் ப்ளாக்கை திறந்தது அதை விட மகிழ்ச்சியாய் இருக்கிறது.:))

Unknown சொன்னது…

ஆமாம் தலைவரே!

Unknown சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கேபிள் & அப்துல்லா இருவருக்கும்...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Title lil abdulla annan perai pottu avarai patri sollaathathai kandikkiren. Ithukku cable kitta evlo kaasu vaankineenga

Cable anna abdullaa anna happy birthday

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Title lil abdulla annan perai pottu avarai patri sollaathathai kandikkiren. Ithukku cable kitta evlo kaasu vaankineenga

Cable anna abdullaa anna happy birthday

Unknown சொன்னது…

தம்பி சிரிப்பு 'இது ஒரு மீள் பதிவு' !

அப்புறம் கேபிள் வாங்கித் தந்த 'பிரியாணி' பத்தில்லாம் சொல்லமாட்டேன்!!

Sivakumar சொன்னது…

கேபிள்: நன்றி தலைவரே

கே.ஆர்.பி: ஆமாம் தலைவரே

தொண்டன் இல்லாத ஒரே கட்சி. ஸ்ட்ரைட்டா டெல்லிதான்!!

CS. Mohan Kumar சொன்னது…

இருவரும் வயதில் எனக்கு சிறியவர்கள் ஆனால் எழுத்துலக அனுபவத்தில் அண்ணன்கள் தான். அப்துவை அண்ணே என்றும், கேபிளை தலைவரே என்றும் அழைப்பது வழக்கம் (அவர்கள் இருவரும் மற்ற எல்லாரையும் அப்படி தான் கூப்பிடுவார்கள்)

அண்ணனுக்கும் தலைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்

Prabu Krishna சொன்னது…

அண்ணன்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

புதுகை அண்ணா ஒரு முறை பஸ்ஸில் என்னையும் அண்ணன் என்றே அழைத்தார். நீங்கள் சொல்வதை பார்த்தால் அவருக்கு என் அப்பா வயது இருக்கும் போலவே :-)

கோவி.கண்ணன் சொன்னது…

என்ன ஆச்சு ?

வவ்வால் சொன்னது…

இரு முதுபெரும் யூத் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

சரக்குல நீச்சல் அடிச்சு முடிச்சாச்சா?

//அதேபோல் அவரை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், கோபித்துக்கொள்ளவே மாட்டார்.
//

போங்க தலைவரே உங்களுக்கு எப்படி கலாய்க்கிறதுண்ணே தெரியலை :-))

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

வருங்கால தமிழ்சினிமாவை புரட்டிப்போட காத்திருக்கும் கேபிளார் மற்றும் தி.மு.க.,வின் இளைய போர்வாள் அப்துல்லாஜி ஆகிய இரு இமையங்களுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..

ஜானகிராமன் சொன்னது…

சக பதிவர்களின் பிறந்தநாளுக்கு தனியாக ஒரு பதிவை போட்டு அவர்களை வாழ்த்திய விதம், தமிழ் பதிவர்களிடையே இருக்கும் ஆரோக்கியமான நட்பை வெளிக்காட்டுகிறது. நன்றி + வாழ்த்துக்கள் செந்தில்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

மிக்க நன்றி செந்தில் அண்ணே.


// முதுபெரும் //

வவ்வால் அண்ணே, அடி வேணுமா? :))

ராஜ நடராஜன் சொன்னது…

கேபிளுக்கும்,ஊருக்கும் கூடவா பிறந்த நாள் வாழ்த்து சொல்வாங்க:)

சங்கருக்கும்,அப்துல்லாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வவ்வால் சொன்னது…

அப்துல்லா அண்ணே,

//// முதுபெரும் //

வவ்வால் அண்ணே, அடி வேணுமா? :))//

என் வாழ் நாளில் போட்ட சின்னம் சிறிய பின்னூட்டங்களை விரல் விட்டு எண்ணிடலாம், இருக்கிறதே ஒரு வரி அதையும் பாதிமட்டும் படிக்கிறிங்களே,

முழுசா பாருங்கண்ணே..

//இரு முதுபெரும் "யூத்" //

யூத்துன்னு சொல்லி இருக்கேன் ,அதாவது "இளமையான சீனியர் பிலாக்கர்ஸ்" அப்படினு அர்த்தம் ...

அட கண்ணுக்கு தெரியாத கடவுளே , ஒரு வரி பின்னூட்டத்துக்கு எல்லாம் பத்து வரி விளக்கம் கொடுக்க வைக்குறியே ...நீ மட்டும் என் கையில மாட்டினே கொத்து பரோட்டா தான் கடவுளே ..கடவுளே ...ஒரு நாத்திகனையும் ஆத்திகன் ஆக்கும் சதியா இது :-))

கோவை நேரம் சொன்னது…

தலைகள் இருவருக்கும் வாழ்த்துகள் ..

நாய் நக்ஸ் சொன்னது…

இருவருக்கும்...பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

@செந்தில்....

மீண்டும் ப்ளாக் வந்ததில் மகிழ்ச்சி....