தமிழ் இணைய உலகில் முதன் முதலாக துணிச்சலாக அரசுக்கு எதிரான கட்டுரைகளையும், தகவல்களையும் தருவது சவுக்கு இணைய தளம்தான். வெகு ஜன ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு பயந்து அல்லது அவதூறு வழக்குகளுக்கு பயந்து தங்களுக்கு தெரிந்த செய்திகளைக் கூட எழுத தயங்கும் சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சி அதிகார வர்க்கத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை கேள்வி கேட்க ஆரம்பித்தது. பொது வாழ்க்கையில் இயங்கும் யாரையும் விமர்சிக்கும் உரிமை ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் இருக்கிறது. தங்கள் மேல் குற்றம் இல்லை என்றால் விளக்கம் கேட்கலாம், வழக்கு தொடுக்கலாம். ஆனால், அதிகாரத்தை பயண்படுத்தி கைது செய்வதும், தளத்தை தடை செய்ய உத்தரவிடுவதும் எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.
இது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசாங்கம், ஆள்பவர்களும், அதிகாரிகளும், நீதித்துறையும் மக்களுக்காகத்தான். மக்கள் இதற்கு முன் வாய் மூடி நீங்கள் என்ன செய்தாலும் பொறுமையாக இருந்தார்கள். இப்போது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி எல்லோர் கைகளிலும் இருக்கிறது. அவர்களுக்கு கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் உரிமை இருக்கிறது. இவைகள் வரவே கூடாது என தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தனி மனிதன் சுதந்திரத்தில், அரசோ, அமைப்புகளோ தலையிட கூடாது.
காவல் துறையும், நீதித்துறையும்தான் சாமானியன் தனது இறுதி நம்பிக்கையாக நினைக்கிறான். ஆனால் காவல் துறை அரசை ஆள்பவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எத்தகைய நேர்மையான அதிகாரிகளும் ஒரு சூழ்நிலையில் ஆள்பவர்களின் தொல்லையால் தங்களை மாற்றிக்கொண்டு விடுகின்றனர். காவல்துறையின் மீதான நம்பிக்கை இப்போது சாமானியர்களுக்கு போய்விட்டது. ஆனால் அவர்கள் தனது கடைசி நம்பிக்கையாக நீதித்துறையை மட்டுமே கருதுகிறார்கள்.
சவுக்கு தளத்தில் நீதிதுறையில் இருக்கும் குளறுபடிகளையும், ஊழலையும் எழுதி வருகிறார்கள். மேலும் அதிகாரத்தின் உச்சத்தில் இருபவர்களின் ஊழல்களையும், தவறுகளையும் வெளிக்கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு அந்த கட்டுரைகள், செய்திகள் மேல் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் மக்கள் மன்றத்தில் வையுங்கள். அல்லது, வழக்கு தொடருங்கள் அதை விடுத்து தடை செய்ய உத்தரவிடுவது எந்த விதத்தில் நியாயம் என நினைக்கிறீர்கள்.
சவுக்கு தளத்தினை தடை செய்து விட்டால் அவர் வெளியிட்ட செய்திகள் உண்மை இல்லை என்று மாறிவிடுமா?. ஒரு தனி மனிதனாக நின்று அதிகார வர்க்கத்தினை கேள்வி கேட்கும் அவருக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. பொது மக்களின் கூட்டு மனசாட்சியே சவுக்கு.
கூடன்குளம், மீத்தேன் திட்டம் , கெயில் திட்டம், என நிறுவனங்களுக்கு துணை போகும் மத்திய அரசை மக்கள் தூக்கி எறியப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வரும்வரை கும்பிடு போடுகிறார்கள். அதிகாரம் கிடைத்தபின் லஞ்சம் கொடுத்தவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கேள்வி கேட்காதவரைக்கும்தான் எல்லாம். இப்போது கேள்வி கேட்கும் காலம்.
பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு குழந்தைகளுக்கு அரசியல் அறிவு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட பள்ளிகளில் படித்துவிட்டு தொழில்நுட்ப அறிவில் உயர்ந்து விளங்கியவர்களால்தான் ஊழல்வாதிகளின் முகத்திரை கிழித்து எறியப்படுகிறது.
அரவிந் கேஜ்ரிவால், மேதா பட்கர், சுப.உதயகுமார், சிவ.இளங்கோ, ஆச்சிமுத்து சங்கர் எல்லாம் தனி மனிதர்கள் அல்ல.
15 கருத்துகள்:
ஆதரவு உண்டு.
//சவுக்கு தளத்தினை தடை செய்து விட்டால் அவர் வெளியிட்ட செய்திகள் உண்மை இல்லை என்று மாறிவிடுமா?. //
சவுக்கு பெரும்பாலும் கிசு கிசு போன்ற செய்திகளைக்கூட ஆதாரம் இருக்காப்போலவே எழுதுவாரே அவ்வ்!
மேலும் நடுநிலையாக என்றும் எழுதியதில்லை.
தடை சட்டப்பூர்வமா செய்ததா இல்லை எப்படினு சொல்லலையே,விவரம் படிச்சுப்பார்க்கனும்.
//கூடன்குளம், மீத்தேன் திட்டம் , கெயில் திட்டம், என நிறுவனங்களுக்கு துணை போகும் மத்திய அரசை மக்கள் தூக்கி எறியப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை//
ஏன் மத்திய அரசை மட்டும் தூக்கிப்போடனும்,இதில் எல்லாம் மாநில அரசுக்கு பங்கேயில்லையா?
ரெண்டுப்பேருமே கூட்டுக்களவாணிங்க தான்!
மாநில அரசின் விருப்பத்துக்கு மாறாக எந்த மத்திய அரசு திட்டமும் வரவே முடியாது.
மாநில அரசு ஒத்துழைக்காததால் பல மத்திய திட்டங்கள் முடங்கி இருக்கே, அதுப்பத்திக்கூட கழக சொம்புகள் புலம்பினார்கள்.
அரவிந் கேஜ்ரிவால், மேதா பட்கர், சுப.உதயகுமார், சிவ.இளங்கோ, ஆச்சிமுத்து சங்கர் எல்லாம் தனி மனிதர்கள் அல்ல.
மக்கள் கேள்வி கேட்க்க துவங்கிவிட்டார்கள் அதர்க்கான பதிலையும் மக்களே முன்னெடுத்து செல்வார்கள் காலமும் வாய்ப்பும் கனிந்துள்ளது சரியாக பயன்படுத்தினால் நல்லதுதான்.
விளக்கமான பதிவு!
எதையும் தடை செய்வதால் நிறுத்திவிட முடியாது. அதிகமாக வளர்ந்து கொண்டுதான் போகும். சவுக்கு தளத்தின் எல்லா செய்திகளையும் ஆதரிக்க முடியாது. ஆனால் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டி எழுதியதை பாராட்டலாம்! நல்ல பதிவு. நன்றி!
சவுக்கை யாரும் பிடுங்கிக் கொள்ள முடியாது !
த ம +1
மிக அழகான அற்புதமான நேர்மையான கட்டுரை தந்த செந்திலுக்கு என் வாழ்த்தும் வணக்கமும்.
வலைதளம் நடுத்துறவங்க எல்லாருமே யோக்கியர்கள் கெடையாது. தனிப்பட்ட அவர்கள் வாழ்வில் குறையுள்ளவர்கள் தான். பெரிய புத்தனும் காந்தியும் இல்லை.
அரசாங்கத்தை எதிர்த்து எழுதுவதெல்லாம் சரிதான். ஒரு அரசியல்வாதி ஆதாரம் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை அரசாங்கத்தின் மேல் வைப்பது வேறு. அதேபோல் தக்க ஆதாரம்க்கள் இல்லாமல் சவுக்கு வினவெல்லாம் வைத்தால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.
சவுக்குத்தளத்தை இன்றுகூட என்னால் வாசிக்க முடிந்தது. முடக்கப் போறாங்கனு சொல்லி விமர்சனம் தேடிக்கிறாங்களா? அதற்கு நீங்கள் உதவுறீங்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
முடக்கிய பிறகு பேசலாமே? சட்டம், சட்டப்பிரிவுனு காரணம் காட்டாமல் முடக்க முடியாது. என்ன காரணம்னு பார்ப்போம். பிறகு விவாதிப்போம்.
///A Shankar, a suspended special assistant in the vigilance and anti-corruption department, has been running Savukku (means whip) since 2009. Last month,
Murugaiyan, who designed the website, was arrested in connection with a defamation and woman harassment case filed against the website. Shankar had gone underground since.
Passing an interim order on a petition filed by advocate and news reader Mahalakshmi, the HC on Friday instructed that the website be blocked immediately. ///
சவுக்கு தளம் நடத்தும் சங்கர் ஏன் ஓடி ஒளிந்து கொண்டார்?
துணிவே துணைனு சொல்றீங்க? ஏன் ஓடி ஒளிஞ்சுக் கிட்டாரு?
யார் அந்தப் பெண்? ஒரு அரசியல்வாதியா? இவர்கள் அந்தப் பெண் பற்றி என்ன எழுதினார்கள்?
வலைதளம் நடத்துறவனுகளும் அரசியல்வாதிகள் போலதான், மொதல்ல நல்லெண்ணத்தில்தான் ஆரம்பிக்கிறானுக. கொஞ்ச நாள் ஆகும்போது "தொய்வு விழக்கூடாது"னு எதையாவது சேர்த்து காரசாரமா எழுதிட்டு இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது. வெப்சைட் டிசைனர் பலிகடாவாகிவிட்டான் போல! :(
//Sun News Reader Complaints Against Puthiya Thalaimurai News Reader | Mahalakshmi Case Report
Mahalakshmi, former VJ of Raj TV and currently working as a Tamil newsreader in Sun News, has given a complaint against PuthiyaThalaimurai News Reader Panimalar and Achimuthu Shankar of Savukku.net. In the complaint she had mentioned that these two people are taking all the effort to defame my family members and me... I am ready to withdraw the complaint against Savukku.net if they prove what they have written is right. They are doing this false propaganda using Facebook and Savukku.net because I helped Mr.Raja, Sun News editor.///
Why can not they PROVE what they accused her of instead of running away and hiding?
Don't they have enough evidence to do so?
If they dont have enough evidence, then why are they opening your big mouth so wide?
வருண் மாமா,
அறைகுறையாக சொல்லலாமா?
சவுக்கு சங்கர் "டெலிபோன் ஒட்டுக்கேட்பு கேசுல" உள்ளப்போனவர், அவரை ஜாபர் ஷெரிப் பலிகடாவா புடிச்சு உள்ளப்போட்டார்னு தான் காண்டா பேசிட்டு இருக்கார்.
ஒரு அமைச்சரை சிக்க வைக்க கேடிபிரதர்ஸ் ஆசைப்பட்டு டேப் வெளியானதால் கே.டி பிரதர்ஸ்கும் ஆகாம போனவர் சவுக்கு ,எனவே தான் இதெல்லாம்.
சவுக்கு ஒன்னும் உத்தம புத்திரன் இல்லை ஆனால் பலரும் செய்த வேலைக்கு அவர் மட்டும் மாட்டினார் என்பதால் கொஞ்சம் பரிதாபம் உண்டு.
கோர்ட் ஆர்டர் படி முடக்கப்பட்டால் அதை எதுக்கு என்னமோ சர்வாதீகார தடைனு பேசுறாங்க? முழு விவரம் சில நாளில் தெரியும் பார்ப்போம்.
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
கருத்துரையிடுக