19 டிச., 2009

குற்ற உணர்ச்சி


ஒரு பிற்பகல் வேளையில்
அவர்கள் என்னை அழைத்து சென்றனர்..
தொடர்ந்து விசாரித்தனர்...

நான் குற்றமற்றவன்
என தெரிந்தாலும்
தேடிவந்தவன் கிடைக்காத காரணத்தால்
என் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது..

எல்லாம் முடிந்து
வெளியில் வந்துவிட்டேன்.,
எல்லோருக்கும்
ஒரு காரணம் இருக்கிறது.,
இந்த விசயத்தில்
ஏன் உதவ முடியவில்லை என..,

இதற்க்கு முன்
அலுக்க அலுக்க
மற்றவர்களுக்காக
பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன்.,

முன்பை போலவே
இம்முறையும்
எதுவும் கேட்கவில்லை
என் மனைவி .....

4 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

ரொம்ப நல்ல இருக்குங்க...
வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

நன்றி திரு. கமலேஷ்,
உங்களது கவிதைகளை இன்றுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது,
நீங்கள் ரசித்தவற்றையும் பதிவேற்றியிருப்பது நல்ல நோக்கம்.

உங்கள் கவிதைகள் மிகவும் தேர்ந்த எழுத்து நடை,
உங்கள் கவிதைகளை விகடனுக்கு அனுப்பி வையுங்கள்
நிச்சயம் பிரசுரிப்பார்கள்

vinthaimanithan சொன்னது…

//எல்லோருக்கும்
ஒரு காரணம் இருக்கிறது.,
இந்த விசயத்தில்
ஏன் உதவ முடியவில்லை என..,//
அனுபவம் ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப ஜாஸ்தியோ..?
இங்கிட்டும் அதே கதைதான்

தமிழ். சரவணன் சொன்னது…

உங்க​ளுக்கு யாரும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியா​தென்பது தங்களுடன் பழகியவர்கள் அ​னைவருக்கம் ​தெரியும் இருந்தாலும் இது​போல் சில ​செயல்களுக்கு அண்ணி ​கேள்வி ​கேட்காமல் இருப்பதால் தான் தங்களுக்கு அணுவளவும் ​தே​வையில்லாத "பல" விசயங்களில் சிக்கி​கொள்கின்றிர்கள்...

தங்கள் சிரமப்படுத​லை கண்டு அதிகம் வருந்துவது நாங்கள் தான்.. ஆனால் என்ன ​செய்வது யாரும் தங்க​ளை ​கேள்வி ​கேட்ட இயலாது