21 டிச., 2009

பூனை படித்த கதை

அந்த நெடுங்கதையின்
அறுபதாவது பக்கத்தில்
ஒரு
திருப்பத்தை வைத்திருந்தேன்,
தேனீருக்காக இறங்கிப்போன
என்
கதாநாயகனை காணவில்லை ...

கதையின் வில்லனை
நாயகனாக்கி
கதையை தொடங்கினேன்.,
வில்லனை பிடிக்காமல்
நாயகி ஓடிப்போனாள்..

தொடர முடியா கதையை
தூரத்தில் வைத்து
விட்டத்தை பார்த்தபோது
தன்
கடைசி பூனைக்குட்டியை
கவ்விசென்ற பூனை
கதையின் மேல் சிறுநீர் கழித்தது...

4 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

அடடா கவிதை பேசுதே...
மிக மிக நன்றாக இருக்கிறது நண்பரே....
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது....
வாழ்த்துக்கள்....

Unknown சொன்னது…

உங்கள் வருகைக்கும் , பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

vinthaimanithan சொன்னது…

எட்டாங்கிளாஸில் நானும் என் நண்பனும் சேர்ந்து எழுதிய நாவல் நினைவுக்கு வந்து தொலைக்கிறதண்ணா

தமிழ். சரவணன் சொன்னது…

உங்க​ளுக்கு யாரும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியா​தென்பது தங்களுடன் பழகியவர்கள் அ​னைவருக்கம் ​தெரியும் இருந்தாலும் இது​போல் சில ​செயல்களுக்கு அண்ணி ​கேள்வி ​கேட்காமல் இருப்பதால் தான் தங்களுக்கு அணுவளவும் ​தே​வையில்லாத "பல" விசயங்களில் சிக்கி​கொள்கின்றிர்கள்...

தங்கள் சிரமப்படுத​லை கண்டு அதிகம் வருந்துவது நாங்கள் தான்.. ஆனால் என்ன ​செய்வது யாரும் தங்க​ளை ​கேள்வி ​கேட்ட இயலாது