14 அக்., 2010

கையெழுத்து...

கையெழுத்துக்களால் தலை எழுத்தை
மாற்ற முடியுமென,
தொலைக்காட்சியில் வியாபாரம் செய்பவன் 
தெரிந்து வைத்திருக்கிறான் 
கையெழுத்தினால் வரும் தொல்லைகளை..

இதயத்தை துடிக்கவைக்கும்
ஜாமீனுக்கு இடும்போது 
மீளாக் கடனுக்கு தாம் வட்டிகட்ட 
நேரிடலாம் என..

சொத்து விற்கும்போது 
நடுங்கும் கை 
வாங்கும்போது நளினமாக 
விளையாடும் பத்திரத்தில்..

பிராக்ரஸ் கார்டில் 
அப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..
மகன் கேட்கும்போது
முதுகில் அறைகிறான்..

சகல இடங்களில் 
தேவையாகும் ஒரு கையெழுத்து 
தனித்தனி எழுத்தாகவோ 
கோணல் மானலாகவோ 
ஒற்றை எழுத்தில் சுழித்தோ 
படங்களைப்போல் அழகாகவோ..

எத்தனை முறை போட்டிருப்போம் 
ஓவ்வொரு முறையும் 
ஒவ்வொரு கதை இருக்கும்..

பிரபலங்களிடம் வாங்கியவை 
சில பரணிலும்,
சில வரவேற்ப்பறையிலும்,
சில குப்பையிலும்..

காதலை சொல்கிற கடிதம் 
காதலியைவிடவும் அழகானது..

பதிவு அலுவலகத்தில் 
எழுதப்பட்ட திருமண ஒப்பந்தங்களின் 
கையெழுத்து 
சமயங்களில் குடும்ப நல மன்றங்களில் 
முடிவடையும்..

சமயங்களில் நம் தலையெழுத்து
ஒரு கையெழுத்தால் தீர்மானிக்கப்படலாம்..  

அப்படித்தான்,
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு 
ஒளிந்து வாழ்கிறேன் நான்..

32 கருத்துகள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வெறும் கையெழுத்தால் மாறிப்போன கதைகள் பல உள்ளன...

Prathap Kumar S. சொன்னது…

சூப்பர்...

எல் கே சொன்னது…

உங்கள் கவிதைகளின் தரம் கூடிக் கொண்டே செல்கிறது தலைவரே

NaSo சொன்னது…

கையெழுத்து சில சமயம் வரலாறு கூட ஆகும் சார்.

Unknown சொன்னது…

//ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு
ஒளிந்து வாழ்கிறேன் நான்..//

இனிமேலாவது திருந்து ... :)

vinthaimanithan சொன்னது…

என்னதிது இப்படியெல்லாம் கலக்குறீங்க! நல்லாருக்கு... இன்னும் கொஞ்சம் ஸ்லிம்மா இருந்திருக்கலாமோ?!

செல்வா சொன்னது…

//பிராக்ரஸ் கார்டில்
அப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..
மகன் கேட்கும்போது
முதுகில் அறைகிறான்..
//

இந்த வரிகள் கலக்கல் அண்ணா ..!!

Unknown சொன்னது…

அருமை

Chitra சொன்னது…

காதலை சொல்கிற கடிதம்
காதலியைவிடவும் அழகானது..

... :-)

Chitra சொன்னது…

சொத்து விற்கும்போது
நடுங்கும் கை
வாங்கும்போது நளினமாக
விளையாடும் பத்திரத்தில்..


....very nice....

Chitra சொன்னது…

அப்படித்தான்,
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு
ஒளிந்து வாழ்கிறேன் நான்..


.... பாவம்!

இளங்கோ சொன்னது…

கையெழுத்தைப் போலவே அழகு வரிகள் .

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

super

தினேஷ்குமார் சொன்னது…

கையொப்பம் இட்டுவிட்டு
கடலை கொறிக்கும்
அலுவலகம்......

க ரா சொன்னது…

அண்ணே என்ன சொல்லி பாராட்டறது...அருமை அருமை அருமை... இன்னும் சில நாட்களுக்கு மனசுக்குள்ள ஒடிக்கிட்டே இருக்கும் இந்த கவிதை...

ஜெயந்தி சொன்னது…

ஆமாமாம் கையெழுத்துத்தான் தலையெழுத்தையே தீர்மானிக்கிறது.

அம்பிகா சொன்னது…

உங்கள் கையெழுத்து (கவிதை)
மிக அழகு.
கையெழுத்து நல்லாயிருந்தா, தலையெழுத்து நல்லாயிருக்காதாமே, உண்மையா?

ராஜ நடராஜன் சொன்னது…

கையெழுத்துல இத்தனை இருக்கிறதா?

நான் அப்பா கையெழுத்தும் ஹெட்மாஸ்டர் கையெழுத்தும் சேர்த்துப் போட்ட வில்லன்!

Bibiliobibuli சொன்னது…

பள்ளி நாட்களில் அழகாய் குண்டு, குண்டாய் எழுதிய கையெழுத்து, வாழ்க்கையின் ஓட்டத்தில், வேலைத்தளத்தில் இப்போதெல்லாம் கோழிக்கிறுக்கலாய் எகத்தாளமாய் சிரிக்கிறது.

தமிழ் உதயம் சொன்னது…

இனி கையெழுத்து போடும் ஒவ்வொரு முறையும், உங்கள் கவிதை ஞாபகத்தில் வரும்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

அருமை.

vasu balaji சொன்னது…

அட்டஹாசம் செந்தில்.

சிவராம்குமார் சொன்னது…

\\சொத்து விற்கும்போது
நடுங்கும் கை
வாங்கும்போது நளினமாக
விளையாடும் பத்திரத்தில்..///

அருமை தல!

வினோ சொன்னது…

/ அப்படித்தான்,
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு
ஒளிந்து வாழ்கிறேன் நான்.. /

:(

கவிதை அருமை அண்ணே...

பெயரில்லா சொன்னது…

அண்ணா கலக்கல்..

GSV சொன்னது…

Nice na... :(

RVS சொன்னது…

கையெழுத்து நல்லா இல்லைனா தலையெழுத்து நல்லா இருக்கும்னு ஊர் கோடியில ரெண்டு பேர் பேசிக்கிட்டாங்க.....

உங்கள் தட்டெழுத்தில் வந்த கையெழுத்துக் கவிதை நன்றாக இருந்தது செந்தில்.

சுபத்ரா சொன்னது…

//காதலை சொல்கிற கடிதம்
காதலியைவிடவும் அழகானது..//


அருமை.. உண்மை.. மிகவும் ரசித்தேன். கவிதையை :-)

ரோஸ்விக் சொன்னது…

ஆஹா பார்த்தப்போ கையெழுத்து வாங்காம வந்துட்டனே! வடை போச்சே.... :-)))

Tirupurvalu சொன்னது…

Your Poet tells about you.Be brave to face your life

Sriakila சொன்னது…

கையெழுத்து நல்லாருக்கு....

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

பிராக்ரஸ் கார்டில்
அப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..
மகன் கேட்கும்போது
முதுகில் அறைகிறான்..
//

ஹ ஹ ஹா!

என்ன செய்ய வாழையடி வாழை!