7 அக்., 2010

பயோடேட்டா - காந்தீயம்..

பெயர்                                  : காந்தீயம்
இயற்பெயர்                       :சத்தியம், நேர்மை, அகிம்சை இன்ன பிற,
தலைவர்                            : புத்தர், ஜைனர்கள்,காந்தி இறுதியாக தெரசா  
துணை தலைவர்கள்       : பெரியார், ஜீவா, காமராஜ், என்.எஸ்.கிருஷ்ணன் 

                                                       (தமிழகத்தில்)
மேலும்
துணைத் தலைவர்கள் 
   :நல்லகண்ணுவை தவிர யாராவது இருக்காங்களா 

                                                என்ன ?
வயது                                  : தொண்டு கிழமாகி விட்டது
தொழில்                             :  மக்கள் சேவை மட்டும்
பலம்                                   : நேர்மை 
                      
பலவீனம்                           : பிடிவாதம்  
நீண்ட கால சாதனைகள்        :தர்ம சிந்தனைகளை விதைத்தது
சமீபத்திய சாதனைகள்          : எதுவுமில்லை
நீண்ட கால எரிச்சல்                : அரசியல்வாதிகள்
சமீபத்திய எரிச்சல்                  : மக்கள் சுயநலம் மேலோங்கி வாழ்வது 

மக்கள்                                             : எல்லா உரிமைகளும் நேரடியாக பெற 

                                                              வேண்டியவர்கள்
சொத்து மதிப்பு                         :  எதுவுமே இல்லை..( பெரியாரின் சொத்துக்கள் 

                                                             மட்டும் இப்போது சுயநலவாதிகளிடம்)
நண்பர்கள்                                 : சத்தியம் கடை பிடிப்பவர்கள்
எதிரிகள்                                     :சேவை செய்வதாக சொல்லிக்கொண்டு 
                                                           அரசியல்வாதியாகி திருடுபவர்கள்
ஆசை                                          : உலக அமைதி
நிராசை                                       : அவர்கள் பெயரிலேயே திருடுவது
பாராட்டுக்குரியது                     : மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தித்தது
பயம்                                            : இல்லவே இல்லாதவர்கள் 
கோபம்                                        : கலப்படம் செய்பவர்கள் மீதும், மூட 
                                                            நம்பிக்கையாளர்கள் மீதும்
காணாமல் போனவை             : இவர்களைப்போல் இப்போது யாருமே இல்லை
புதியவை                                    : சாமியார்கள், மத போதகர்கள் மலிந்தது மக்களை 
                                                            சிந்திக்க விடாமல் செய்வது
கருத்து                                         : உலகம் முழுவதும் பணக்காரர்களும், 
                                                            அரசியல்வாதிகளும் பங்கு போட மற்ற 
                                                            மக்கள் அனைவரும் இனி அடிமை வாழ்வுக்கு 
                                                            தயாராக வேண்டியதுதான்.
டிஸ்கி                                          : எனக்கு என்னன்னு வாழ்றதுதான் மக்கள் 
                                                            மனநிலை ஆனதற்கு காரணம் என்ன?

29 கருத்துகள்:

வினோ சொன்னது…

/ எனக்கு என்னன்னு வாழ்றதுதான் மக்கள் மனநிலை ஆனதற்கு காரணம் என்ன? /

காசும், அதில் விளைந்த சுயநலமும் தான்..

செல்வா சொன்னது…

அடடா , முதல் கமெண்ட் போடலாம்னு பார்த்தா, அதுக்குள்ள இவரு வந்திட்டாரு ..!!

செல்வா சொன்னது…

//எதிரிகள் :சேவை செய்வதாக சொல்லிக்கொண்டு
அரசியல்வாதியாகி திருடுபவர்கள்//

இது உண்மைதாங்க ., இந்த திருடர்களின் தொல்லை தாங்க முடியல ..

பெயரில்லா சொன்னது…

//சமீபத்திய எரிச்சல் : மக்கள் சுயநலம் மேலோங்கி வாழ்வது //

இனி எப்போதும் இந்த எரிச்சல் இருக்கத்தான் செய்யும்.

ஜோதிஜி சொன்னது…

செந்தில் இதற்கு நிச்சயம் மணிமகுடம் கிடைக்கும்.

பாராட்ட வார்த்தைகளை தேடிக் கெர்ண்டு இருக்கின்றேன்.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

பயோடேட்டா உங்கள் கருத்துகளை தாங்கியே நிற்கிறது....மார்க்ஸ், காந்தீயம் ஐக்கியம் ஆகிவிட்டதா....

சசிகுமார் சொன்னது…

super sir

பெயரில்லா சொன்னது…

//உலகம் முழுவதும் பணக்காரர்களும்,
அரசியல்வாதிகளும் பங்கு போட மற்ற
மக்கள் அனைவரும் இனி அடிமை வாழ்வுக்கு
தயாராக வேண்டியதுதான்//

கொடுமை :(

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//எனக்கு என்னன்னு வாழ்றதுதான் //
super

ஹேமா சொன்னது…

சொத்து...இன்றுவரை அவர் உலகின் சொத்துத்தானே !எந்த நாட்டிலும் எவரும் காந்தித்தாத்தா பெயர் சொன்னால் தெரியாதவர்கள் இல்லை !

மார்கண்டேயன் சொன்னது…

//எனக்கு என்னன்னு வாழ்றதுதான் மக்கள் மனநிலை ஆனதற்கு காரணம் என்ன?//

சர்வைவல் செந்தில், சர்வைவல்,

இன்றைய வணிகமய உலகில், நாம் தான் நமக்கு பாதுகாப்பு, இதனை உணர்ததனால் தான், வெளிநாடு செல்வது, எப்படியாவது சம்பாதிப்பது என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுவிட்டது,

இதில் முக்கிய பங்கு அமெரிக்காவிற்கு உண்டு என்று சொன்னால் மிகையாகாது

vasan சொன்னது…

அந்நிய‌ பொருள் ப‌கீஷ்க‌ரிப்பு, சுத‌ந்திர‌த்திற்கு அடித்த‌ள‌ம் என்று, காசு போட்டு வாங்கிய‌ அவ‌ற்றை தீயிட்டு கொழுத்தினார். இன்று இந்திய‌ பொருளே க‌டைகளில் காணோம். சீனா,தைவான்,ம‌லாய், சிங்க‌ப்பூர்,கொரியா, யுஎஸ், யுரோப்பிய‌ன் பிராண்ட், ஐடி, பிபீஓ கூலி/அடிமை வேலை. இந்தியாவிலேயே பெஸ்ட் க‌ம்ப‌னி "இன்போசிஸ்'தாண்டான்னு சொல்றாங்க‌, அமெரிக்காக் கார‌ன், அதையே "காய்லாங் க‌டை"ங்கிறான். காந்திய‌முன்ன‌ என்ன‌ங்க‌? சுத‌ந்திர‌ம் வாங்கி த‌ந்த‌ ஸ்லோக‌ன்னா? சுத‌ந்திர‌முன்னா? (இப்புடி எழுத‌ முடிய‌ற‌துதான்னு ம‌ட்டும் சொல்லிராதிங்க‌)

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

"மனைவி" அப்டீங்கிற டைட்டீல்ல ஒரு பையோடேட்டா போட முடியுமா?

அருண் பிரசாத் சொன்னது…

டிஸ்கி டாப்பு அண்ணா

மங்குனி அமைச்சர் சொன்னது…

இனி காந்தீயத்தை இப்படித்தான் பார்க்கவேண்டி இருக்கும்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...
வாழ்த்துக்கள் .

Chitra சொன்னது…

//சமீபத்திய எரிச்சல் : மக்கள் சுயநலம் மேலோங்கி வாழ்வது //

..... :-(

Bibiliobibuli சொன்னது…

கார்பரேட் அரசியல் மற்றும் தேசியவாதம், போலி ஜனநாயகம், அடிமை மக்கள் (இந்த சொற்களை பாவிப்பதை தவிர்க்க வேண்டுமென்று நினைத்தாலும் ஏனோ முடிவதில்லை) இவையெல்லாம் தான் யதார்த்தம். காந்தீயம் virtual reality ஆகி நாளாகிவிட்டது.

எனக்கு என்னான்னு வாழ்கிற கூட்டுமனோநிலைக்கு நாம் எல்லோரும் தள்ளப்பட்டுவிட்டோம் என்பது நிறையவே சுடுகிறது.

நன்றி செந்தில்.

vinthaimanithan சொன்னது…

//நல்லகண்ணுவை தவிர யாராவது இருக்காங்களா என்ன ?//

காந்தியமும் மார்க்ஸியமும் ஒன்றல்ல.... வேறு வேறு... காந்தியம் ஒரு உட்டோப்பியன் சித்தாந்தம். மக்கள் நலன் என்ற கொள்கையில் இவை இரண்டையும் ஒரே தட்டில் வைத்தால் மக்கள் நலனை முன்வைக்கும் அனைத்து சித்தாந்தங்களையுமே ஒன்றாகப் பார்க்கவேண்டிய சூழல் வரும்... ஆனால் நிதர்சனம் வேற்.

தத்துவார்த்தப் பாதையிலும், வழிமுறைகளிலும் எப்போதுமே காந்தியமும் மார்க்ஸியமும் முரண்பட்டவையே.

நல்லக்கண்ணுவை காந்தியராகச் சொன்னால் அவரே ஏற்க மாட்டார்.

அன்பரசன் சொன்னது…

//பலம் :நேர்மை
பலவீனம் : பிடிவாதம்//

உண்மை

ஜெயந்தி சொன்னது…

//தத்துவார்த்தப் பாதையிலும், வழிமுறைகளிலும் எப்போதுமே காந்தியமும் மார்க்ஸியமும் முரண்பட்டவையே.//
:)

ஜெயந்தி சொன்னது…

//தத்துவார்த்தப் பாதையிலும், வழிமுறைகளிலும் எப்போதுமே காந்தியமும் மார்க்ஸியமும் முரண்பட்டவையே.//
:)

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//உலகம் முழுவதும் பணக்காரர்களும்,
அரசியல்வாதிகளும் பங்கு போட மற்ற
மக்கள் அனைவரும் இனி அடிமை வாழ்வுக்கு
தயாராக வேண்டியது//

ப்ச்..!

சௌந்தர் சொன்னது…

நிராசை : அவர்கள் பெயரிலேயே திருடுவது////

இது ரொம்ப சூப்பர் அண்ணா

raja சொன்னது…

மிகப்பெரிய கட்டுரையை பயோடேட்டா எனும் தலைப்பில்... மிக சுருக்கமாகவும் அற்புதமாகவும்.. எழுதியிருக்கிறீர்கள்...விஞ்ஞானம் மக்களின் மனதில் ஆசைகளை ஏற்படுத்திவிட்டது,அரசியல் அந்த ஆசைகளை பயன்படுத்திகொள்கிறது,தலைவன் குடும்பத்தை காப்பற்றிக்கொள்கிறான்.ஆன்மீகம் அனுபவிக்கும் இடமாகிவிட்டது,மக்கள் மண்ணாங்கட்டி ஆகிப்போனார்கள் அவ்வளவே.

மோகன்ஜி சொன்னது…

நீங்க வேணா பாருங்க! மீண்டும் காந்தி வரத்தான் போறார்! நம்பிக்கை தானே வாழ்க்கை நபர்!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///சமீபத்திய சாதனைகள் : எதுவுமில்லை
நீண்ட கால எரிச்சல் : அரசியல்வாதிகள்////

பயோடேட்டா அருமை...
நெடுநாள் எரிச்சல் ......... ஹ்ம்ம்ம் சரியா சொல்லிருக்கீங்க..செந்தில் :-))

காமராஜ் சொன்னது…

செந்தில் டச்.இன்னொருஅருமை