9 அக்., 2010

வியாபாரம் - ஊக வணிகம் ( Future Trading ) சாதக,பாதகங்கள் ஒரு எளிய பார்வை...

இன்றைக்கு எல்லா பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவிட்டது. ஒரு வகையில் இது மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருக்க உதவுகிறது.. முன்பெல்லாம் இந்தியாவில் எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் நடக்கும், பைசா பெறாத விசயங்களுக்கு உடனே ஒன்று கூடுவார்கள். ஆனால் இப்போது நாட்டில் பிரச்சினைகள் மலிந்து ஊழலும் மலிந்து பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆக ஏழை தங்கள் வயிற்றுபாட்டுக்கு குடும்பத்துடன் உழைக்க வேண்டியிருக்கிறது. தண்டகாரண்யா மக்களுக்கு தேவைகள் குறைவு என்பதால் இன்னும் தங்கள் வாழ்வாதாரங்களை காக்க துப்பாக்கிகள் தூக்குகின்றனர். தென் இந்தியாவில் தொலைக்காட்சி ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வந்தபின் கிராமங்களும் நகரங்களைபோல் தீவு வீடுகளாக மாறிவிட்டன.

இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது விளையும் பொருட்களை வாங்கும் நேரடி சந்தை முறை ஒழிக்கப் பட்டதுதான் . இது இப்போது நடந்தது அல்ல பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானியர்கள் தங்கள் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஊக வணிக வியாபாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்காவில் அறிமுகபடுத்தபட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது. காட் ஒப்பந்தம் அறிமுகபடுத்தபட்ட பிறகு தாராளக்கொள்கையால் இன்றைக்கு கடைகோடி இந்தியன் வரைக்கும் இதன் தாக்கத்தை அனுபவிக்க வேண்டி வந்துவிட்டது.

அன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விளைச்சல் அதிகமான நேரங்களில் குறைவான விலைக்கு வாங்கும் வியாபாரிகள் அதனை சேமித்து வைத்து விளைச்சல் குறைவாக இருக்கும்போது அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கவே. இந்த லாபம் விவசாயிகளுக்கு போகவேண்டி ஊக வணிகத்தை அறிமுகபடுத்தினார். அதன்படி இன்றைய நிலவரத்தில் சொல்வதென்றால் ஒரு மூட்டை நெல் (50 kilo) Rs.600 இன்றைய விலை என்று வைத்துகொண்டால் அது ஆறு மாதங்களில் Rs. 1000 ஆக வாய்ப்பிருக்கும். இப்போது வியாபாரிகள் விவசாயிக்கு Rs.600 கொடுத்துவிட்டு ஆறு மாதங்கள் கழித்து மீதம் Rs.400 கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த ஒப்பந்தத்தை மட்டும் விற்பார். இன்னொரு வியாபாரி அதனை Rs.420 க்கோ அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ கொடுத்து வாங்குவார். ஒப்பந்தம் இப்படியே கைமாறும். வெறும் பேப்பரில் மட்டுமே நடக்கும் வியாபாரம் ஒவ்வொருவராக கைமாறி கடைசில் பொருளின் டிமான்ட் பொறுத்து லாபத்தை தரும். இதற்குள் பொருள் தட்டுபாடு இல்லாமல் கிடைத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆறுமாத காலத்தில் கடைசியாக வாங்கிய வியாபாரி அன்றைய சந்தை விலை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் சந்தை விலை மற்றும் முன் கொடுத்த RS.600 கழித்துக்கொண்டு மீத தொகையை விவசாயிக்கு கொடுத்து பொருளை யாரிடமாவது விற்றுகொள்ள சொல்வார். இப்படி நெல்லுக்காக ஆரம்பித்த வியாபாரம் நல்ல லாபத்தை தரகர்கள் பார்க்க ஆரம்பித்ததும் தங்கம், கரன்சி, உலோகங்கள்,    பெட்ரோலிய பொருட்கள் என விரிவாகி இப்போது பருப்பு, சர்க்கரை அளவுக்கு வந்து நிற்கிறது.

பங்கு வர்த்தகமும் ஊகத்தை அடிப்படியாக வைத்துதான் விலை மாறுகிறது. இது ஒரு அப்பட்டமான சூதாட்டம் என்றாலும் இதற்கான வரிவிதிப்பில்தான் இன்றைக்கு அரசாங்கம் செயல்படுவதாலும் இந்த சூதாட்டத்தால் பண முதலைகள், அரசியல்வாதிகள் மட்டும் பயன்பெருவதால் யாரும் இதற்க்கு இனி தடை விதிக்க வாய்ப்பில்லை.

ஒரு வாதத்துக்கு இன்றைக்கு பணக்காரர்கள் விகிதம் பெருகிவிட்டதற்க்கு இதுவும் காரணம் என வைத்துக்கொண்டால் போலி நாகரிக ஆசையில் மக்கள் தங்களை தொலைப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் இதில் அதிகம் நிம்மதி இழக்கின்றனர். அரசு ஊழியர்கள் இன்றைய தேதிக்கு லஞ்சம் வாங்காத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கின்றனர். அவர்கள் வாங்கும் லஞ்சம் தவறான வழிகளில் அவர்களின் வாரிசுகளை கொண்டுபோய் அதனை பார்க்கும் நடுத்தர குடிமக்களின் வாரிசுகளும் தவறான பாதையை விரும்ப ஆரம்பிக்கின்றனர். சாதரண கூலி வேலை பார்க்கும் மக்களை ஒரு ரூபாய் அரிசி மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் சோம்பேறியாகி தங்கள் வாரிசுகளையும் அதற்கு தயார் படுத்துகின்றனர்.

நாம் மேற்குலக நாட்டைபோல் வாழவேண்டும் என ஆசைபடுகிறோம். ஆனால் நமக்கென்று இருக்கும் இயற்கை வளம் உலகின் வேறெங்கும் இல்லாத ஒன்று. மாறுபட்ட சீதோஷ்ண நிலையைக்கொண்ட நமது தேசத்தில் இயற்கை விவசாயம் மூலம் உலகிற்கே தரமான உணவு வகைகளை கொடுக்க முடியும். முன்பு M.S. சுவாமிநாதன் விவசாய புரட்சி செய்கிறேன் என தரமற்ற இந்தியாவை உருவாக்கினார். இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளால் தடை விதிக்கப்பட்ட விதைகளை இந்திய நிலங்களில் பயிரிட்டு நாம் அனைவரையும் ஆண்மையற்றவர்களாக ஆக்க முயற்சிக்கிறது இந்திய அரசு.

ஆனால் கர்நாடகாவில் பாலேக்கரும், தமிழகத்தில் நம்மாழ்வாரும், இயற்கை விவசாயத்தை வளர்க்கின்றனர் . இந்த விசயத்தில் இயற்கை விவசாயத்தை மட்டும் எழுதும் பசுமை விகடனுக்கும் பாராட்டுக்கள். எதிர்காலத்தில் நல்ல உணவுக்கும், தண்ணீருக்கும் நாம் அதிக விலை கொடுக்க வேண்டிவரலாம். 

பொதுவாகவே பங்கு சந்தையில் பணத்தை இழப்பது புதிதாக அதில் வர்த்தகம் செய்பவர்கள்தான். சும்மா வீட்டில் இருந்துகொண்டே கோடிஸ்வரன் ஆகும் ஆசையில். இருக்கும் பணத்தையும் இழக்கின்றனர். சமீபத்தில் ஜோதிடம் மூலம் இதில் பணம் சம்பாதிக்க முடியும் என பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதை நடத்தியது ஒரு ஆன்மீகவாதி என்பதுதான் காமெடியின் உச்சம். ஒரு காலத்தில் உணவு விற்பவனை கேலி பேசினார்கள். காரணம் அப்போது சாப்பாடு போட தர்ம சத்திரங்கள் மிகுதியாக இருந்தாலும் பசிக்கிறது என்று சொன்னால் யார் வீடு என்றாலும் உணவு தருவார்கள். இன்று தண்ணீர் வாங்கி குடிக்கிறோம். ஒழுங்கான மின்சாரம் தர வக்கில்லாத அரசு இலவச தொலைகாட்சிகளை வழங்குகிறது. அதுவரை தங்கத்தை வாங்கி குவிக்கலாம். சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தள்ளி ஒரு மனையை நூறு மடங்கு அதிக விலைக்கு வாங்கி அதனை இன்னொரு நூறு மடங்கு விலை ஏறும்போது விற்கலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள் ...

ஊக வணிகத்தின் வேறு பாதிப்புகளை அல்லது நன்மைகளை உங்கள் கருத்துக்களாக வரவேற்கிறேன்...

28 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

படிச்சிட்டு வரேன்

வயாமா சொன்னது…

pathivu super !!!
manasu niraya varutham!!!!
karanam !!!
Nanum vivasaya kudumbam than!!!

செல்வா சொன்னது…

ஊக வணிகம் பற்றி தெரிந்து கொண்டேன் அண்ணா .,
நன்றி .. ஊக வணிகத்துல இவ்வளவு இருக்கா ..?
அதே மாதிரி தொலைகாட்சி கொடுப்பது , மின் மோட்டார் கொடுப்பது இது போன்ற விசயங்களை விட தட்டுப்பாடில்ல மின்சாரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் .. ஏனென்றால் நானும் விவசாய குடும்பத்த்டை சேர்ந்தவன் தான் . அதைவிட எங்க கிராமத்துல இருக்குற எல்லோரது கிணற்றிலும் மின்மோட்டார் இருக்கு. அப்புறம் எதுக்கு இன்னொன்னுனு தெரியல ..?

dheva சொன்னது…

Very useful article.....!

Hope no one will miss this....!

LOVELY SENTHIL...!

Unknown சொன்னது…

நல்ல பதிவு இதை பற்றி இன்னும் விரிவாக அலசலாம் என்று நினைக்கிறேன்.நன்றிகள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு

vasu balaji சொன்னது…

superb article.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

nalla pathivu...

மங்குனி அமைச்சர் சொன்னது…

////பங்கு வர்த்தகமும் ஊகத்தை அடிப்படியாக வைத்துதான் விலை மாறுகிறது////

ஒரு பங்கின் விலை அந்த கம்பனியின் வருடாந்திர லாபத்தை பொறுத்து ஏற்ற இறக்கம் இருக்க வேண்டும் , இங்கு நீங்கள் சொன்னது போல் மிகப்பெரிய சூதாட்டம் நடக்கிறது . போன வருடம் ஜூன் மாதம் 370 ரூபாயில் இருந்த AXIS BANK பங்கின் விலை தற்போது 1571 அதாவது 400 சதவிகிதம் அதிகம் ,ஒரு வருடத்தில் அந்த அளவு லாபம் ஈட்டியுள்ளத அந்த வங்கி ?? இல்லை , எல்லாம் ஒருமாயை

ஈரோடு கதிர் சொன்னது…

நெத்தியடிங்க செந்தில்

சுவாமிநாதன் ஆரம்பித்த பாவத்தை சொரணையில்லாமல் நாமும் பின்பற்றுகிறோம்

பெயரில்லா சொன்னது…

நல்ல விஷயம் அண்ணே.. இன்னும் கொஞ்சம் விரிவா அல்லது ஒரு தொடரா எழுதினீங்கன்னா இன்னும் நிறைய தெரிஞ்சுப்போம்!

ஜோதிஜி சொன்னது…

தெளிவான பார்வை

தமிழ் உதயம் சொன்னது…

ஊக வணிகம் என்பது சாமானியனை கொல்வது.
அரசு இதற்கு ஆதரவாக இருப்பது வேதனை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஊக வணிகம் பற்றிய உங்கள் பார்வை அருமை....
உங்களது மற்ற பகிர்வுகளையும் இன்றுதான் படித்தேன்... எல்லாம் அருமை... வாழ்த்துக்கள் செந்தில்.

vinthaimanithan சொன்னது…

இன்னும் கொஞ்சம் கனமாக இருந்திருக்கலாம். அவசியமான, தேவையான (ரெண்டும் ஒண்ணுதானே?!) பதிவு.

ஊகவணிகத்தால்தான் பதுக்கலும், விலைவாசியும் விண்ணைமுட்டி நிற்கின்றது

Jerry Eshananda சொன்னது…

useful ...write up,and thought provoking too.

ராஜன் சொன்னது…

Commodity என்ற ஊக வணிகம் முழுக்க முழுக்க விவசாயி பயன் பெற அறிமுகபடுதபட்டது , ஆனால் விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியதர்வர்கள் தான் இதில் பயன் அடைகின்றனர் , இதில் உள்ள நன்மை உண்மையில் விவசாயி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் , உதாரணம் : இன்று ஒரு விவசாயி ஒரு முட்டை மிளகாய் 1000௦௦௦ ரூபாய் என்று விற்றுவிட்டால் அவருக்கு நிச்சயம் 1000௦௦௦ ரூபாய் கிடைக்கும் , மிளகாய் சந்தை 500ரூபாய் என விழுச்சி கண்டாலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அத்வசிய பொருள்கள் சிலவற்றி வணிகம் செய்ய தடை செய்துஉள்ளது , என் உடைய கருத்து
இதை ஸ்டாக்கிஸ்ட் ( Stockist) மற்றும் விவசாயம் செய்பவர்கள் மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் .

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது ,அதிக லாபம் எதிர்பார்க்காமல் ( பேராசை அடையாமல் )) செயல்பட்டாள் வெற்றி
வாய்ப்பு அதிகம் . எந்த தொழில் செய்தாலும் அனுபவம் மற்றும் பயிற்சி இல்லாமல் செய்தால் அது சூதாட்டம் தான்.
பங்குச்சந்தையில் பணம் போட்டால் அது பல மடங்கு ஆகும் என்பது தவறான கருத்து. அப்படி ஆகும் வாய்ப்பு உள்ளது, ஆனால் உத்திரவாதம் இல்லை. பங்குச்சந்தை இயல்பு ஏற்றம்/ இறக்கம் உதாரணம் : பங்குச்சந்தை 2008 ஆண்டு 20,000௦௦௦௦ புள்ளிகள் இரூந்து 8000௦௦௦ புள்ளிகள் சென்றது , இன்று மீண்டும் 20,000௦௦௦௦ வந்துள்ளது , இதை கணிக்க தொழில் நுட்பம் (techincal analysis/ indicators) உள்ளது , அதை பயன்படுத்தி வெற்றிபெறலாம் . இதை விளையாட்டு என்ற நோக்கில் உள்ள வந்தால் இழப்பு உறுதி .நல்ல நிறுவன பங்குகளை BHEL போன்ற பங்கு Long Term Investment இல் நஷ்டம் வர வாய்ப்பு குறைவு

சூதாட்டம் என்றால் என்ன ?

உதராணம் ஒரு குதரை ஜெயிக்கும் என்று அதின் மீது 1000௦௦௦ ரூபாய் கட்டி அது தோல்வி அடைத்தால் உங்களுக்கு இழப்பு1000 ரூபாய். இதில் வெற்றி அல்லது தோல்வி முடிவு உங்கள் கையில் இல்லை குதிரை சரியாக ஓடவில்லை என்றால் நஷ்டத்தை தடுக்க முடியாது .ஆனால் பங்குசந்தையில் 1000 ரூபாய் பங்கு ஒன்று வாங்கி அது விலை இறக்கம் கண்டால் 995 வந்தால் இங்கு முடிவு உங்கள் கையில் வெறும் 5ரூபாய் நஷ்டத்தில் பங்கைவிட்டு வெளிய வரமுடியும் , உங்களக்கு நஷ்டம் 5ரூபாய் மட்டும் தான். ஆனால் குதிரை மீது பணம் கட்டினால் கட்டியது தான் நஷ்டத்தை தடுக்க முடியாது . அதே வேளையில் பங்குச்சந்தையில் 1000௦௦௦ ரூபாயை முழுவதும் இழக்க வாய்ப்பு மிகவும் குறைவு ௦ என்றும் 0 ஆகாது.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சபாஷ் ....சபாஷ் ...........எதனை சபாஷ் வேண்டும்னாலும் போடலாம் அருமையான பதிவு .............
அனைத்தும் உண்மை ................

பனித்துளி சங்கர் சொன்னது…

இன்றைய நிலையில் ஏற்பட்டிருக்கும் சீர்கேடுகளை மிகவும் தகுந்த விளக்கத்துடன் சொல்லும் இந்தப் பதிவும் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது நண்பரே . பக்கத்துவிட்டுக்காரன் செய்கிறான் அதுதான் நானும் செய்கிறேன் என்ற நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்து நம்மை நாமே சீரழித்துக் கொண்டிருக்கிறோம் . விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தங்களின் பதிவு அமைந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . பகிர்வுக்கு நன்றி

அருண் பிரசாத் சொன்னது…

அருமையான பதிவு அண்ணா! கலக்கல்

கவி அழகன் சொன்னது…

சூப்பர இருக்குங்க

நல்ல தெளிவான விளக்கம்

ஜெயந்தி சொன்னது…

அருமையான பதிவு. விவசாயத்தில் நமது பரம்பரை விதைகளை மாற்றி வேறு விதைகளை கொண்டு வந்து மாற்றிய விஷயம்தான் இந்தியாவிற்கு கொடுமையான ஒன்று.

ம.தி.சுதா சொன்னது…

சமுதாயத்திற்கு கட்டாயம் தேவையான ஒரு விடயத்தைத் தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

//M.S. சுவாமிநாதன் விவசாய புரட்சி செய்கிறேன் என தரமற்ற இந்தியாவை உருவாக்கினார்.//

அப்போ புடிச்ச சனியன், இன்னும்...

//இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளால் தடை விதிக்கப்பட்ட விதைகளை இந்திய நிலங்களில் பயிரிட்டு நாம் அனைவரையும் ஆண்மையற்றவர்களாக ஆக்க முயற்சிக்கிறது இந்திய அரசு.//

நாமதான் சோதனை எலிகள் ஆச்சே?

//ஆனால் கர்நாடகாவில் பாலேக்கரும், தமிழகத்தில் நம்மாழ்வாரும், இயற்கை விவசாயத்தை வளர்க்கின்றனர்//

எத்தனை பேர் இதனை பின்பற்றுகிறார்கள்? அவர்கள் இருவரையும் இன்னும் நிறைய பேர் பயன்படுத்திக்கணும்.

//இந்த விசயத்தில் இயற்கை விவசாயத்தை மட்டும் எழுதும் பசுமை விகடனுக்கும் பாராட்டுக்கள்//

சினிமா, அரசியல் கூத்துக்கள் இல்லாத ஒரு அருமையான பத்திரிகை. என் வாழ்த்துக்களும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமையான கருத்துக்கள் தல. ஆனால் பங்குச்சந்தையை அப்படியே பொத்தம்பொதுவில் சூதாட்டம் என்று கூறிவிடமுடியாது என்றே நினைக்கிறேன். அதை ஸ்திரத்தன்மையற்ற வணிகங்கள் நிறைந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனால் குறுகிய கால லாபநோக்கில் முதலீடு செய்பவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். நல்ல தரமான கம்பெனிகளின் பங்குகளில் செய்யப்படும் நீண்ட கால முதலீடுகள் நிச்சயம் லாபத்தைத் தருகின்றன. பங்குச் சந்தையில் நஷ்டங்கள்தான் ஏற்படும், முழுதும் திவாலாகும் நிலை ஏற்படுவதில்லை. பரஸ்பர நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள் நேரடியாக பங்குச் சந்தையில் ஈடுபடுவதில் இருக்கும் ரிஸ்க்கை மிகவும் குறைக்கின்றன.
ஸ்திரத்தன்மை குறைவான கமோடிட்டி வணிகம், ஊகவணிகம் போன்றவற்றிர்க்கு பங்குச் சந்தையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொள்ளும் லாவகமும், அனுபவமும் தேவை. அதனாலேயே ரிஸ்க்கும் அதிகம்! பொருட்களின் அதீத விலை உயர்வுக்கு நிச்சயமாக இவையும் ஒரு காரணமே!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

பாராட்டுகள் மாம்ஸ்! சிற் தொழில்கள் தொடங்குவது குறித்தான முறைகள்,கருத்துகளையும் தங்களிடம் எதிர்பார்க்கிறேன்!

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நல்ல பதிவு ....

Tirupurvalu சொன்னது…

share trade, commodity trade ,only 2 persons profitable in India .Anybody know the persons Chidambaram & Karthick .
This both earned more than ambani's

Dr.swaminathan is a person spoiled natural cultivation .He is a Representative for artificial cultivation and spoiled all peoples health,farmers land .From now every farmers not sale country cows to kill .For nature fertilize country cow is must .Any govt servant not re command to ban country cow to kill .All farmers peoples in Tamil nadu please ask parties for vote to give country cows .You tell to govt servants that you no need motor or t.v you need country cow that only save after 20 years tamil nadu peoples