3 ஏப்., 2011

தமிழக தேர்தல் - 2011- ஒரு அலசல் - பகுதி - 2


இந்த தேர்தலில் தி.மு.க மேல் இருக்கும் வெறுப்பில்தான் மக்கள் அ.தி.மு.க கூட்டனிக்கு வாக்களிக்கிறார்களே தவிர யாருக்கும் அ.தி.மு.க கூட்டணியை பிடித்து வாக்களிக்கவில்லை. இந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டும் மூன்றாவது அணி அமைத்து இருந்தால் கணிசமான வெற்றி வாய்ப்புகளைப் பெற்று அடுத்த 2016 தேர்தலில் தமிழக முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். மனைவி சொல்லே மந்திரம் என மதித்து கூட்டணி வைத்துக்கொண்டதால் அது அ.தி.மு.க வுக்கு லாபம். ஆனால் தே.மு.தி.க வுக்கு நஷ்டம். 

அ.தி.மு.க மக்கள் நலனில் காட்டிய அக்கறை 
கடந்த ஐந்தாண்டில் தங்களின் மிடாஸ் நிறுவனத்துக்கு எந்தப் பிரச்சினையும் வராத ஒரே காரணத்துக்காக தி.மு.க அரசை 'கடிதோச்சி மெல்ல எறிந்தார்' ஜெ. ஒரே டயலாக்கை திரும்பத் திரும்ப ஐந்து வருடமாக வாசித்தார். அது 'மைனாரிட்டி தி.மு.க அரசு' எனும் தேய்ந்த ரெகார்டாக மாறியது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த வரலாறு. கொடநாட்டில் இருந்துகொண்டே எதிர்கட்சியாக போராட்டம் நடத்தியவர். மீனவர் பிரச்சினைக்கோ, மக்கள் பிரச்சினைக்கோ குரல் கொடுக்காமல், தேர்தல் நெருங்குகிற வேளையில் தெருமுனை போராட்டங்களை நடத்தச் சொல்லி அ.தி.மு.க வின் இருப்பை காட்டச்சொன்னவர். இவர் ஆட்சிக்கு வந்தால் சினிமா உலகம் மறுமலர்ச்சி அடையும். நாட்டில் சுபிட்சம் நிலவும் என ஒரு வதந்தி ஓடுகிறது. 

உண்மையை சொன்னால் ஆட்சிக் கட்டிலில் துயில அம்மாவே விரும்பவில்லை. ஒரு எதிர்க்கட்சியாக வந்தால் போதும் என்றுதான் வைகோவை தனிமைப்படுத்தியது முதல் வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தது வரை ஏகப்பட்ட குழப்படிகள் பண்ணிப்பார்த்தார். மக்களுக்கும் வேறு வழியில்லை எரிகிற இரண்டு கொள்ளியுமே தப்பானது என்றாலும் மாற்றி மாற்றியாவது தலையில் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்ததால் அடுத்த ஐந்தாண்டில் வேறு மாதிரியான சுவாரஸ்யமான நாடகங்களை மக்கள் காண்பார்கள். 

தே.மு.தி.க 
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது முதல் தி.மு.க வுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதைத்தான் விரும்பினார். சொல்லப்போனால் கலைஞர் இருக்கும்வரைக்கும் கட்சி வேண்டாம் என தள்ளிப்போட்டவர். தொடர்ந்து மக்களுடன்தான் கூட்டணி என முழக்கமிட்டவர் கிச்சன் கேபினட்டால் இப்போது அ.தி.மு.க வின் கூட்டணியில் 41 ல் நிற்கிறார். கணிசமான தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு இருந்தாலும், இவர் மனைவி அளவுக்கு பேச்சாற்றல் இல்லை. எப்போதும் நிதானமில்லாமல் இருக்கிறார். ஒரு நல்ல மாற்று அரசாங்கத்தை அமைப்பார் என பொதுவான மக்கள் இவர்மேல் வைத்த நம்பிக்கையை இவரே கெடுத்துக் கொண்டார். குடும்ப அரசியலை முன்னிறுத்துவதால் இந்த தேர்தலுக்குப்பிறகு மக்களிடம் செல்வாக்கு குறைய ஆரம்பிக்கும். மேலும் தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்கு கடந்த ஐந்தாண்டில் குரல் எழுப்பாதது. மீனவர் மற்றும் ஈழப் பிரச்சினையில் கள்ள மவுனம் சாதித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தன்னைக் காட்டிக்கொண்டது என தமிழ் உணர்வாளர்களின் கோபத்தையும் சம்பாத்தித்தும் உள்ளதால் இந்த கட்சியும் ம.தி.மு.க போல காணாமல் போகலாம். 

வலது, இடது சாரிகள் 
அ.தி.மு.க கூட்டணியின் பெரிய பலமே இவர்கள்தான். வைகோ, நாஞ்சில் சம்பத் போன்ற ஸ்டார் பேச்சாளர்களை அ.தி.மு.க இழந்த பிறகு, மக்களிடம் செல்லக்கூடிய கருத்துகளை இவர்கள்தான் எடுத்துச்செல்வார்கள். மேலும் கணிசமான இடங்களை வென்று கூட்டணிக்கு பலம் சேர்ப்பார்கள்.

இந்த தேர்தலில் இருக்கும் அபத்தங்களையும், தேர்தல் ஆணையத்தின் சிறந்த நடவடிக்கைகளையும் நாளை மறுநாள் அலசுவோம்..   

12 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

எப்படியோ காங்கிரஸ் தோற்றால் நிம்மதி..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அது அ.தி.மு.க வுக்கு லாபம். ஆனால் தே.மு.தி.க வுக்கு நஷ்டம். ////
என்னை பொறுத்தவரை இந்த கூட்டணியால் விஜயகாந்திற்க்குத்தான் லாபம்....
பார்க்க....
http://ragariz.blogspot.com/2011/03/vijayakanth-admk-gain-or-loss.html

பாட்டு ரசிகன் சொன்னது…

ம்.. சரியாக அலசியுள்ளீர்கள்..

ராஜ நடராஜன் சொன்னது…

வாய் பொத்திகிட்டு நிற்கிற ஆள் படத்தைப் பார்த்ததும் பிரஷர் ஜிவ்வுன்னு ஏறுது:(

எப்படியோ இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழன் அடிமைப் பட்டா எழுதிக் கொடுத்து விட்டுத்தான் எந்தக் கட்சிக்கென்றாலும் ஓட்டு.

ஜோதிஜி சொன்னது…

அடுத்த பதிவை பார்த்து விட்டு என் கருத்தை பதிவு செய்கின்றேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாம சொல்லுறதை சொல்லிப்புட்டோம் பார்ப்போம் மக்கள் என்ன செயுராங்கன்னு...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//மக்களுக்கும் வேறு வழியில்லை எரிகிற இரண்டு கொள்ளியுமே தப்பானது என்றாலும் மாற்றி மாற்றியாவது தலையில் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்ததால் அடுத்த ஐந்தாண்டில் வேறு மாதிரியான சுவாரஸ்யமான நாடகங்களை மக்கள் காண்பார்கள்...//

தலை தொடர்ந்து சுடுகிறது.

பெயரில்லா சொன்னது…

/வலது, இடது சாரிகள் //

ஆகவே மக்களே இந்த இரு புது டிசைன் சாரிகளை வீட்டுக்கு நாலு டஜன் இலவசமாக தருவோம் என்பதை...

பெயரில்லா சொன்னது…

எச்சரிக்'கை' அறிக்'கை':

செந்தில் அவர்கள் சென்ற வாரம் ஏகப்பட்ட 'பணம்' பதுக்கி வைத்துள்ளதை தன் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளார். நம்பிக்'கை' இல்லாமல் ஏது வாழ்க்'கை' என்பது அவருக்கே தெரியும். நாங்கள் தொடுவோம் எங்கள் இலக்'கை'. அய்யய்யோ..எவன்டா என் வேஷ்டிய உருவிட்டு ஓடுறது....புடிங்கடா அவனை.

Sriakila சொன்னது…

என்ன நடக்கப்போகுதோ...ரொம்ப சஸ்பென்ஸாதான் இருக்கு...

Bibiliobibuli சொன்னது…

படம் சொல்லுதே தமிழகத்தில் இவரின் ஆட்சி எப்படி இருக்கும் என்று.

Unknown சொன்னது…

கேப்டம் விசயத்திலும், ஜெயலாலிதா விசயத்திலும் தங்கள் கருத்துக்களோடு 100 சதவிகிதம் ஒத்து போகிறேன்