4 ஏப்., 2011

நொடிகளில் வரம் தரும் கடவுள்...


நல்லசேதி கெட்ட சேதி
நாட்டுநடப்பு நாலு விஷயம்
எல்லாத்துக்கும் 
நாலே வழி கெராமத்துல..

பஞ்சாயத்து ரேடியோபொட்டி
பகுமானமா சேதி சொல்லும்
"செய்திகள் வாசிப்பது
சரோஜு நாராயணசாமி"ன்னு..

மேவெவரம் வேணுமின்னா
வடக்குத் தெரு ஓட்டுவூட்டு
நாட்டுவக்கீல் காசிநாத தேவரு
நாசூக்காவும் சொல்லுவாரு
நடுமண்டைல தட்டியும்கூட..

"சதக் சதக்" வெட்டுங்களுக்கும்
"விடிவெள்ளியே வருக" வெளம்பரங்களுக்கும்
நடுவாப்புல நீட்டிக்கிட்டு
நாலு வரில ஒலகச் சேதி
தெனத்தந்தி பேப்பரு 
நம்ம பேப்பருடா!..

ஊளைமூக்கன் டீக்கடையில
பொங்கப்பொழிய தேத்தண்ணி
பவுசா இருக்கும் உளுத்தம்வடை
தாஜ்மகால் பீடிப்பொகையில
தங்கவேலு படிப்பான் சேதி..

"என்னதாம் சொல்லு
இந்திராம்மா போல வருமா?
பெரட்டி அடிச்சதுல 
பேதி புடுங்கிச்சில்ல 
பாகிஸ்தானுக்கு?"..

சாம்பூ பாக்கெட்டும், பாண்ட்சு பவுடரும்
சனியம் புடிச்ச டிவி பொட்டியும் 
அடுக்கடுக்கா வந்தாச்சி- ஊரு
ஆமை பூந்த வூடாச்சி..

வெதவெதமா சீரியலு, 
வெவஸ்தகெட்ட கள்ளக்காதலு
விஸ்தாரமா சொல்லித்தர
வீட்டுக்குள்ளயே வில்லங்கம்..

பேரபுள்ளை 
வச்சிருக்கிற கம்ப்யூட்டர்ல
என்ன கேட்டாலும் நொடில வருது..

எப்புடின்னு கேட்டாக்க
எல்லாம்
கூகுலாண்டவன் மகிமன்றான்..

20 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் முதலாக...
நானே வந்தேன்..

தமிழ் உதயம் சொன்னது…

நாகரீக உலகின் நவீன கடவுள் - கூகுள்.

Chitra சொன்னது…

எப்புடின்னு கேட்டாக்க
எல்லாம்
கூகுலாண்டவன் மகிமன்றான்..


..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சரியா போச்சு!

சக்தி கல்வி மையம் சொன்னது…

நாகரீக உலகின் நவீன கடவுள் - கூகுள் --- உண்மைதான்..

சக்தி கல்வி மையம் சொன்னது…

அசத்தலான , யதார்த்தமான கவிதை..

சக்தி கல்வி மையம் சொன்னது…

கிராமத்து தமிழ் படிக்க நல்லாயிருக்கு..

Unknown சொன்னது…

உண்மை தானுங்களே தலைவரே!

அஞ்சா சிங்கம் சொன்னது…

என்ன இருந்தாலும் டீ கடையில் விவாதித்து தெரிந்து கொள்ளும் அரசியலின் சுவை கொஞ்சம் அதிகம்தான் .....................

பொன் மாலை பொழுது சொன்னது…

//எப்புடின்னு கேட்டாக்க
எல்லாம்
கூகுலாண்டவன் மகிமன்றான்..//


ரசித்தேன்.
நான் கவிதை என்றாலே காதூரம் ஓடும் ரகம்.
ஆனா உங்க இந்த கவிதை மிக எளிமை, அழகு, எதார்த்தம் எல்லாம் நிறைத்த ஒரு வடிவம்.

நல்லா இருக்கு கே.ஆர்.செந்தில்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சரோஜ் நாராயணஸ்வாமிக்கு முன்பு, ”விஜயம்” ன்னு ஒரு சூப்பர் செய்தி வாசிப்பாளர் இருந்தாங்க, அவங்களைப்போய் மறந்துட்டீங்களே!

அந்த விஜயம் அவர்களின் மறைவுச்செய்தியை, இந்த சரோஜ் நாராயணஸ்வாமி அவர்கள் வாசித்ததும், செய்தி கேட்டுக்கொண்டிருந்த அனைவர் கண்களிலும், கண்ணீர் கொட்டோ கொட்டெனக் கொட்டியதை நான் அறிவேன்.

Anisha Yunus சொன்னது…

/எப்புடின்னு கேட்டாக்க
எல்லாம்
கூகுலாண்டவன் மகிமன்றான்..//

he he he .....
intha generation.... vera enna ethirpaarkka....he he he :)))

Sivakumar சொன்னது…

மானாட மயிலாட கலா மாஸ்டர் சார்பாக இந்த பின்னூட்டத்தை பொன்னூட்டமாக அளிக்கிறோம்:

"கிழி கிழி கிழின்னு" கிழிச்சிட்டீங்க.

சசிகுமார் சொன்னது…

ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ப ஊரு பேச்சை கேட்க முடியுது நன்றி சார்.

vasu balaji சொன்னது…

இல்லையா பின்ன:))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட்டகாசமா வித்தியாசமா எழுதி அசத்திட்டீங்க போங்க மக்கா....

Jana சொன்னது…

கலக்கல்... எல்லாமே கூகுல் தெய்வத்தின் மகிமைதானே பின்ன என்ன!

பெயரில்லா சொன்னது…

தலைப்பு கலக்கல் அண்ணே! :)

ராஜவம்சம் சொன்னது…

கல்லை கடவுள் என்றான் மண்ணைக்கடவுள் என்றான்
அறியாமை என்றோம்.

இப்போது கணினி உலகத்தில்
கூகிலாரும் கடவுளாகிப்போனாரே!!!

ஹேமா சொன்னது…

காலமாற்றம் சொன்னது வித்தியாசமான அழகு !

Philosophy Prabhakaran சொன்னது…

கலக்கல்...