26 ஏப்., 2011

பேய்க்கதைகள்...


நிசப்த இரவுகளின்
தனித்த பயணங்களில் 
எதிர்ப்படும் பேய்கள் ஒவ்வொன்றிடமும்
இருக்கின்றன ஆயிரம் கதைகள்..

துணைக்கு வரும் அவற்றின் 
துயரங்கள்
கண்ணீராலும்.. ரத்தத்தாலும் 
எழுதப்பட்டவை..

சமயங்களில்
வழியை மறிக்கும் ரத்தக் காட்டேரிகள் 
நம்மை கட்டாயப் படுத்தி 
சொல்லும் புனைவுகளில்
வீர வரலாறுகள் 
மிகுதியாக இருக்கும்..

சுடுகாட்டில் 
அப்போதுதான்  சாம்பலான 
பிசாசுகள் 
சொந்தங்களின் துரோகம் சொல்லி 
ஆறுதல் தேடிக்கொள்ளும்..

புளியமரப் பேய்களோ 
தூக்கில் தொங்கும் அவஸ்தை பற்றி 
வெளித்தள்ளிய நாக்குடன் குழறும்..

விபத்தில் மரணமுற்றவை கதைகள் 
பயங்கரமானவை
கடைசி வினாடியில் ஒரே வலி..

எப்போதும் துரத்துகின்றன 
கொலையான பேய்கள் 
செய்தவன் கனவுகளில்...

கொள்ளிவாய்ப் பிசாசிடம் மட்டும் 
கவனம் வேண்டும்
பிரித்தாளும் சூழ்சிகள் கொண்டவை..

எப்போதாவது அபூர்வமாய் 
தனித்த பயணத்திலோ, 
நடுநிசிக் கனவிலோ வரும் 
பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்..

22 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>நடுநிசிக் கனவிலோ வரும்
பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்..

அண்ணன் யார் கிட்டயோ மாட்டிக்கிட்டாரு போல ஹி ஹி

பெயரில்லா சொன்னது…

அண்ணே செம சூப்பர்..
வலியும் துரோகமும் தெறிக்குது..

Unknown சொன்னது…

இதுக்கு தான் அயோத்தியா மண்டபம் பக்கமா நைட்ல போகாதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ஹிஹி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்..//

அருமை.

”இந்த நன்றி கெட்ட பேமாளிகளைவிட
பேய்கள் மேலடா”
என்று பாடத்தோணுது.

பேய்களிடம் இருந்து வந்த பயம் சற்றே தெளிந்தது, தங்கள் கவிதையால்.

இருப்பினும், தனியாக உள்ள என் முதுகை யாரோ சொறிவது போலத் தெரிகிறதே. பேய் நண்பராக இருக்குமோ!

Philosophy Prabhakaran சொன்னது…

அண்ணே... அன்னைக்கு ஒரு பதிவரை கிண்டலடிச்சீங்களே... அவரை மாதிரியே எழுத ட்ரை பண்ணியிருக்கீங்க போல...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

காக்கை குருவி நம் ஜாதி...

இப்ப பேய் பிசாசு மட்டு என்ன பண்ணிச்சி...

//////
பேய்களிடம் சிநேகமாக இருந்து பாருங்கள
///////

கண்டிப்பாக இருப்போம்..
பெண் பேய்தான் எனக்கு பிடிக்கும்..

அஞ்சா சிங்கம் சொன்னது…

எப்போதாவது அபூர்வமாய்
தனித்த பயணத்திலோ,
நடுநிசிக் கனவிலோ வரும்
பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்../////////
////////////////////////////////////////////////////////////////////

சத்தியமாக அனுபவித்திருக்கிறேன் பாவம் இந்த பேய்கள் எல்லாம் மனிதர்களிடம் மாட்டிகொண்டு ரொம்ப கஷ்ட படுகிறது ................................

vasu balaji சொன்னது…

காலிருக்கிற பேயா?:))

ஹேமா சொன்னது…

மீள்பதிவா செந்தில் இது?வானொலியில் உங்கள் பெயரில் கேட்ட ஞாபகம் !

ஜோதிஜி சொன்னது…

பட்ம் சொல்லும் கவிதை ஆயிரம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சுடுகாட்டில்
அப்போதுதான் சாம்பலான
பிசாசுகள்
சொந்தங்களின் துரோகம் சொல்லி
ஆறுதல் தேடிக்கொள்ளும்..///

ஆஹா அருமை அருமை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>>நடுநிசிக் கனவிலோ வரும்
பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்..

அண்ணன் யார் கிட்டயோ மாட்டிக்கிட்டாரு போல ஹி ஹி///


ஆமாய்யா செமையா மாட்டி இருக்கார் போல ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//விக்கி உலகம் கூறியது...
இதுக்கு தான் அயோத்தியா மண்டபம் பக்கமா நைட்ல போகாதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ஹிஹி!///

ஓ இது வேற நடக்குதா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
//பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்..//

அருமை.

”இந்த நன்றி கெட்ட பேமாளிகளைவிட
பேய்கள் மேலடா”
என்று பாடத்தோணுது.

பேய்களிடம் இருந்து வந்த பயம் சற்றே தெளிந்தது, தங்கள் கவிதையால்.

இருப்பினும், தனியாக உள்ள என் முதுகை யாரோ சொறிவது போலத் தெரிகிறதே. பேய் நண்பராக இருக்குமோ!///


ஹா ஹா ஹா ஹா ஹா இது சூப்பரு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
காக்கை குருவி நம் ஜாதி...

இப்ப பேய் பிசாசு மட்டு என்ன பண்ணிச்சி...

//////
பேய்களிடம் சிநேகமாக இருந்து பாருங்கள
///////

கண்டிப்பாக இருப்போம்..
பெண் பேய்தான் எனக்கு பிடிக்கும்..//


யாரங்கே, இவரை கிழவி செத்த சுடுகாட்டுக்கு அனுப்புங்கய்யா....

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தலைவரே....நேத்து மயானம் பக்கம் போனீரோ

ராஜ நடராஜன் சொன்னது…

//பெண் பேய்தான் எனக்கு பிடிக்கும்..//


யாரங்கே, இவரை கிழவி செத்த சுடுகாட்டுக்கு அனுப்புங்கய்யா...//

விடுகதைக்கு விடை கண்டு பிடிக்க வந்தா இப்படிக் கிச்சு கிச்சு மூட்றீஙளேய்யா.

ஈரோடு கதிர் சொன்னது…

ஆஹா!!!! :))

பனித்துளி சங்கர் சொன்னது…

உண்மை நிலையை அழகாக கவிதை நடையில் சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . அதற்காக பேய்க் கதை எல்லாம் சொல்லி பயமுருத்தக் கூடாது ஆமா !

Yaathoramani.blogspot.com சொன்னது…

பேய்களிடம் சினேகிதமாய் இருந்தால்
அதன் புனிதம் தெரிந்தால் சரி
மனிதனின் அசிங்கமும்
தெரியத் துவங்கினால்
என்ன செய்வது
இந்த ஆட்டைக்கு நான் வரலை
ஆளைவிடுங்கள்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

காமராஜ் சொன்னது…

ரொம்ப பிடிச்ச கவிதை செந்தில்.
சொல்லாத கதைகளை பேய்களிடத்தில் கேட்கிற காதுகள் படைத்த கவிதை.

Satheesh சொன்னது…

என்ன செந்தில், ராஜபக்சே பத்தின கவிதையா? இன்றைக்கு கை/கால் உள்ள உயிரோட நம்ம பிரதமர் வரை வந்து கை கொடுத்திட்டு ஊர்ல போயி கால் நீட்டி உட்காரும் ஒரே பேய், எனக்கு தெரிந்தவரை ரத்தக்காட்டேரி ராஜபக்சே தான்..