28 ஜூன், 2011

சுமாரானவள்...


நகரத்தை கடந்துகொண்டிருந்த 
முன்னிரவில் 
தன் முகத்திரையை மெல்ல 
மூடிக்கொண்டிருந்த
நகரம் 
சோம்பலாய் நகர்ந்த 
கூட்டம் குறைவான ஆம்னியின் 
பின்னிருந்து கையாட்டிக் கொண்டிருந்த 
ஒரு குழந்தையின் தூக்கத்தை 
திருடியபடி..

பாக்கெட் தண்ணீர் விற்ப்பவன் 
குரல் வழியே 
தாகத்தை நினைவுக்கு கொண்டுவந்தபோது 
வாங்க மறந்த நீர் பாட்டில் 
தூரத்துக் கடையில் 
தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த 
கண்களின் நொடிகளில் 
"இந்த பஸ் தஞ்சாவூர் போகுங்களா?"
என்றொரு குயில் குரல் 
நகரத்து சோம்பலை 
என் முகத்தில் இருந்து 
அகற்றியிருந்தது..

இனி தஞ்சாவூர் 
வரைக்கும் வரும் 
குயிலும் குரலும் ..

சுமாரானதுதான் பேரூந்து 
சுமாரானதுதான் குயில் 
சுமாரானவன்தான் நானும்..

9 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

நானும் சுமாராகத்தான் கருத்தும் போடுவேன்.

vinthaimanithan சொன்னது…

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை. :)))

THOPPITHOPPI சொன்னது…

அண்ணே ஆனா போட்டோ சுமார் இல்லை ஹஹா........

Riyas சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஆனா, கவிதை சூப்பராயிருக்கு :-)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//"இந்த பஸ் தஞ்சாவூர் போகுங்களா?"
என்றொரு குயில் குரல்
நகரத்து சோம்பலை
என் முகத்தில் இருந்து
அகற்றியிருந்தது..

இனி தஞ்சாவூர்
வரைக்கும் வரும்
குயிலும் குரலும் ..//

அவள் சுமாரானவளாகவே இருந்துவிட்டுப்போகட்டும். அதனால் என்ன, குயிலின் குரல் கூட வரும் பயணம் சூப்பராக இருக்கும், தங்களின் இந்தக் கவிதை போலவே.

ராஜ நடராஜன் சொன்னது…

//கண்களின் நொடிகளில் //

அழகான வார்த்தைப் பிரயோகம்.நொடிகளில் கண்களில் விழுவதை பெரும்பாலும் கடந்தே போகிறோம்.இந்த கவிதை மட்டுமே அதனை படம் பிடிக்கிறது.

கடைல பலசரக்கு வியாபாரம் குறையற மாதிரி இருக்குதே!என்ன காரணம்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

kavithai arumai...

சசிகுமார் சொன்னது…

அருமை ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் ஒரு சூப்பரான கவிதையோட வந்திருக்கீங்க