2 மே, 2012

இந்தியா இன்று - 02.05.2012...


அக்னி - 5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தவுடன் நமது பிரதமதர் முதல் கடைக்கோடி டீக்கடை அரசியல்வாதி வரை நாம வல்லரசா மாறிட்ட்டோம் என் கூப்பாடு போடாத குறையா வெளம்பரம் பன்னாய்ங்க. ஆனா குண்டி கழுவத் தண்ணியக் கானோம், குளிக்க பன்னீரு கெடைக்குதாம்ல அப்ப்டீன்னு யோசிச்சேன். தொடர்ந்து நமது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருக்க வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பன்ற பகவான்களை தவிர்த்து மற்ற ஆளெல்லாம் மோவாய்ல கை வைச்சுகிட்டு வெட்டியா அரசியல் பேசிட்டு திரியுதுங்க. இங்க எல்லா மாநிலத்துலயும் ஒழுங்கா கரண்டக் கானும். முக்கால் ரூவா ரோடு ஒன்னெ போட்டுட்டு பத்து கிலோ மீட்டருக்கு ஒருக்கா சுங்கம் வசூலிக்கிறானுவ, இது எந்த அடிப்படையிலன்னு ஒரு வெவரமும் நமக்கு தெரியாது. பக்கத்து நாடான பாகிஸ்தான்ல கூட பெட்ரோலு அம்புட்டு வெல கெடையாது. இங்கன எக்கச்சக்கமா ஏத்திக்கிட்டே இருக்காங்க. இதுல இப்ப புதுசா டெண்டுலுகருக்கு எம்பி பதவி கொடுத்துட்டா கிரிக்கெட்டு பாக்குற அம்மாம் பேரும் ஒட்டு போட்டுருவானுக கூமுட்டைகன்னு யாரோ ஒருத்தன் ராகுலு தம்பிகிட்ட சொல்லிருப்பான் போல ஒடனே அவர ராஜ்யசபா எம்பி ஆக்கி ஒரு நாளைக்கு ரெண்டு வேளை சாப்பாடு கூட இல்லாத டெண்டுல்கருக்கு சம்பளம் கொடுப்பாங்க. அந்த வீரனும் அப்படியே பொம்பளை கொரலில் இது நாட்டுக்கு கெடச்ச பெருமைன்னு சொல்லிட்டு போய்டும். அடுத்தாப்ல பாரத ரத்னா கொடுத்தே தீரனுன்னு ஒரு கும்பல் கொடி புடிக்குது, வெளங்கிடும்!.

இப்ப தமிழ்நாட்டுல ஒரு பெரிசு டெசோன்னு ஒன்னிய தூசு தட்டிருக்கு. அதுக்கு அவருகூட நாலு பேர சேத்துகிட்டு கூடிய சீக்கிரமே தமிலீலம் தரலைன்னா “யேய் ராஜபக்குசே அப்புறம் தமிலுநாட்டுல ஒடம்பிறம்புங்க அல்லாரும் ஒனக்கு எதிரா கோசம் போடுவோன்னு” சவால் விட்டாரு. இப்ப பாருங்க இந்த ராஜபக்சே பயந்து போயி நாளே நாளுக்குள்ள ஈலம் கொடுத்துட்டுதான் மறுவேலை பாப்பான்னு பேஸ்புக்குல ஒடம்பொறப்புங்க எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுதுங்க. இதுல ஒரு குஞ்சாமணி “எங்க தலிவரு புளியங்கொம்பு, நாங்கள்லாம் புளியங்கொட்டை, அல்லாரும் இனி புளியங்கொட்டை காப்பிதான் குடிக்கனுன்னு பதிவு எளுதுது. இன்னொரு புளியங்கொட்டை கொஞ்ச நாளுக்கு முன்னாடி வீரவணக்கம் அப்படின்னு பிரபாகரனுக்கு பதிவு போடுது. புலிக்கு புளி கரைச்சு ஊத்துனா சரியாயிடுமா? அண்ணனுகளா விடுதலைபுலிகளே வீரவணக்கம் சொல்லாதபோது ஒங்களுக்கு இன்னா அவசரம். ஒங்க ஒலகமகா தலிவனுக்கு பிரபாகரனை பிடிக்காது. போவட்டும் அவருக்கு தமிழனையே பிடிக்காது அப்புறம் எப்படி எங்கள் தலைவனை பிடிக்கும். ஆனா இவரு மட்டும் தனிப்பட்ட் மொறையில ஒரு வீடியோ பாத்தாராமாம் ஒடனே வீரவணக்கம் சொல்லிட்டாரு. இப்ப தலிவனுக்கு திடீரென ஈல பாசம் பொங்கி வழிஞ்சு நாலு ஜால்ராக்கள கூப்பிட்டு கூட்டம் போட்டாரு. மக்களே இன்னும் நாளே நாளு ஈலம் கெடக்குதா? இல்லையா? பாருங்க!!!!!!!!!!!!!!!!!!. அண்ணனுகளா உங்களுக்கு நெஜாமாவே தில்லுன்னு ஒன்னு இருந்தாக்க ஒங்க ஒலக மகா தலிவனை ஒய்வு எடுக்க சொல்லிப்பாருங்க. இதுல பாருங்க ஒங்க தலிவன் செஞ்ச துரோகத்துலயே பெரீ..ய துரோகம் எது தெரியுமா சொந்தப்புள்ள ஸ்டாலினுக்கு செஞ்சதுதான். அவருக்கு நியாயமா பாத்தா செயலலிதா செஞ்ச அளவு கூட உங்க தலிவன் செய்யல. படிச்ச பய புள்ளைக நீங்க கொஞ்சமாவது மனசாட்சியோடு இனியாவது இருக்கப் பாருங்க!. 

இந்த ஐ பி எல்லுன்னு ஒன்னிய தொடங்கி வச்சு மக்கள்கிட்ட இருக்கிற காசையெல்லாம் கொல்லையடிச்சு துட்டு சேக்குது ஒரு கும்பல். ஒவ்வொரு வருசமும் தேர்வு தொடங்குற நேரமா பார்த்து ஆரம்பிக்குறானுவ, அத லீவு முடியுற வரைக்கும் டிவில போட்டு தாக்கி பசங்கள டிவி முன்னாடி குத்த வச்சு காலி பன்னுறாங்க, சின்ன பயகள்ள இருந்து பெரிசுங்க வரைக்கும் இந்தக் கும்பலால கெட்டுப் போகுதுங்க. நமக்கு கிரிக்கெட்டு தவிர வேறு வெளயாட்டுங்க இருக்குறது மறந்துரும் போல!.

இன்னொரு பக்கம் மாவோயிஸ்டுங்க மொதல்ல ஒரு எம்மெல்யேவ கடத்தி வச்சு ஏதோ ஒரு பேரம் படிஞ்சு விட்டுட்டாங்க. இப்ப மறுபடியும் கலெக்டர கடத்தி வச்சுகிட்டு பேரம் பேசுகிறார்கள். எனக்கென்னமோ வீரப்பனுக்கு நேர்ந்த கதிதான் இவர்களுக்கும் நேரும் என்று தோன்றுகிறது. மக்களுக்காக துவங்கப்பட்ட இயக்கம் எல்லாம் ஆட்கடத்தலில் ஈடுபடுவது நல்லவிசயமாக படவில்லை. ஆயுதம் ஒரு போதும் துனைவராது என்பதற்க்கு விடுதலைப்புலிகளின் அரசியல் முன்னெடுப்புகள் ஒரு நல்ல உதாரனம். மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களை களைந்துவிட்டு அரசியலுக்கு வந்தால் தங்கள் பகுதியில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம். விஜயகுமார் போன்ற திறமையான அதிகாரிகள் முன் காடு ரொம்ப நாளைக்கு பாதுகாப்பை தராது. அதேபோல் அரசாங்கமும் அங்குள்ள மக்களை மேம்படுத்த ஒன்றுமே செய்யவில்லை. அரசியல்வாதிகளின் சுயநலத்துக்கு பலியாவது அப்பாவி மக்களும், தங்கள் சம்பளத்திற்காக வேலை செய்யும் அடிப்படை காவலர்களும்தான். என்னதான் சம்பளத்திற்க்காக வேலை செய்தாலும் அவர்களுக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது. 

திடீரென மின்வெட்டு குறைந்து மக்களை ஆச்சர்யத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறார்கள். வளர்ந்த நாடு இந்தியா என பெருமை பேசித்திருகிறோம். ஆனால் மனதளவில் இன்னும் சிறுபிள்ளைதனமாகாவே இருக்கிறோம். ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் இனக்கமாக இருப்பது இல்லை. மின்சாரம், சாலை வசதி, குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் பரவலாக்கப்படவில்லை. கல்வி ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரியாக பாடத்திட்டம் வைத்திருக்கிறது. இணைய வசதிகள் இன்னும் மேம்படவில்லை. மோசமாக நகர கட்டமைப்புகள், சுகாதாரம் என நாம் உலக அளவில் மிகவும் பினதங்கி இருக்கிறோம். இதற்க்கு காரனம் சினிமா என்கிற மட்டமான பொழுதுபோக்கு ஊடகத்திற்க்கு நாம் தரும் விலை. அதனால்தான் பண்டிகை காலமாகட்டும், சுதந்திர தினமாகட்டும், தற்போதைய மே தினமாகட்டும் சினிமாவே நம் வரவேற்பறையில் நிறைந்திருக்கிறது. ஊடக ராசாமார்களும் சம்பாதிக்க வேறு என்னதான் செய்வார்கள்?

25 கருத்துகள்:

வைகை சொன்னது…

புளியங்கொட்டை காப்பி குடிச்சா ஈழம் கிடைச்சிருமாண்ணே? :-)

கோவி.கண்ணன் சொன்னது…

சூப்பர், குபீர் ஈல ஆதரவாளர்கள் வாழ்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இவ்வளவு பிரச்சனையும் ஒரேயடியா தீர,
எங்கள் ஆதினத்தை முதல்வராக்குவதுதான் ஒரே வழி...
:-)

வைகை சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...
இவ்வளவு பிரச்சனையும் ஒரேயடியா தீர,
எங்கள் ஆதினத்தை முதல்வராக்குவதுதான் ஒரே வழி...//


பட்டாவின் கருத்தை வழி மொழிகிறேன்... எழுச்சியான ஒருவர்தான் இதற்கு சரியான ஆள் :-)

Unknown சொன்னது…

"யோவ். நீ புளியந்தோப்பு பக்கம் வராமலா பூடுவ..!!! வாய்யா வாய்யா ஏரியாவுக்கு வாய்யா"

புளியங்கொட்டை ஷாப்பிங் மால்,
புளியந்தோப்பு

கூடல் பாலா சொன்னது…

செமையான பதிவு!

சிராஜ் சொன்னது…

KRP அண்ணே,

தனி ஈழம்னு ஒன்னு கிடைக்கும்னு உங்களுக்கெல்லாம் இன்னும் நம்பிக்கை இருக்கா??? எதார்த்தத்துக்கு வரவே மாட்டீங்களா?? கடைசிவரை......

சிராஜ் சொன்னது…

அண்ணே கோவி கண்ணன்,

கருணாநிதி குபீர் ஈழ ஆதரவாளரா??? உங்கள் அரசியல் ஞானம் பாத்து மெய் சிலிர்த்து போயிட்டேன்னே....
கலக்குங்க.... உண்மை தெரியாம இருக்கவன்கிட்ட விளக்கம் கொடுக்கலாம்... பொய்னு தெரிஞ்சே பேசுறவங்க கிட்ட என்ன சொல்ல???
பகல் கனவு கண்டுகிட்டே இருங்க... சீக்கிரம் இருட்டு வந்திரும்....

already வந்திருச்சு.... இன்னும் கும் இருட்டா வரும்...

சிராஜ் சொன்னது…

TM-3 னே..நட்புக்காக...

சிராஜ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிராஜ் சொன்னது…

அண்ணே கோவி கண்ணன் வகையறாக்களா,

கிளிநொச்சி இலங்கை ராணுவத்திடம் வீழ்ந்த பின்னும் எந்த கட்சி யாருக்கு எதிரா இருந்தாங்கன்னு என் மவனுக்கூட தெரியும்னே.. உங்களுக்கெல்லாம் தெரியலைன்னு நினைக்கில
உங்கள பாத்து சிரிக்கிறத தவிர வேறு வழி எனக்கு தெரியலைண்ணே... முள்ளிவாய்க்கால் ல எல்லாம் முடியப்போகுதுன்னு தெரிஞ்ச பிறகு சப்போர்ட் பண்றவங்க உங்களுக்கு பெரிய
ஆளுங்களா தெரியுறாங்க... 1980 களில் இருந்து ஏதோ விதத்தில இலங்கை மக்களுக்காக பாடு பட்டவங்க ஒரே நாள்ல துரோகி ஆகிட்டாங்க...
சபாஸ்... வாழ்க உங்கள் நேர்மை... வாழ்க உங்க நீதி....

இந்த வயதிலும் கருணாநிதி ரெண்டு தடவ டெல்லிக்கு போயிட்டு வந்தார் இது தொடர்பா...ஒரு பத்து கடிதம் எழுதி இருப்பார்....இன உணர்வாளரான நீங்க என்ன கிழிச்சீங்கன்னு
கொஞ்சம் சொல்லுங்க கோவி கண்ணன்???? தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு....

நெட்டுல உட்கார்ந்து பதிவு போட்டா?? தனி ஈழம் கிடைக்குமா??? நீங்க கக்கூஸ் போறதுக்கு சுடு தண்ணி கூட கிடைக்காது...

சிராஜ் சொன்னது…

ரொம்ப நாலா தமிழ்மணம் பக்கம் வர்றது இல்லைனே..இன்னைக்கு தான் வந்தேன்....
அதுனால மாக்காஸ் யாரும் கோச்சு காதீங்க.... இனி அடிக்கடி வர்றேன்....

Unknown சொன்னது…

//கோவி.கண்ணன் சொன்னது…
சூப்பர், குபீர் ஈல ஆதரவாளர்கள் வாழ்க//

கலைஞருக்கு அனுப்ப வேண்டிய மடலை அட்ரஸ் மாத்தி இங்க அனுப்பிட்டீங்க போல.

சிராஜ் சொன்னது…

சரிண்ணே..உங்களுக்கெல்லாம் வரலாறு சரியா தெரியாதுன்னு நினைக்கிறேன்... ரொம்ப உணர்ச்சிவசப் பட்டு இருக்கீங்க...
ஓடச்சே கேட்கிறேன்... குபீர் ஈழ ஆதரவளார் கருணாநிதியா?? இல்ல இப்ப ஆட்சில இருக்கவங்களா?????
மனசாட்சி இருந்தா பதில் சொல்லுங்க கோவி கண்ணன் அண்ட் வகையறாக்கள்????

வலையுகம் சொன்னது…

ஐரோப்பாவில் ஒக்கந்து கிட்டு வாய் சவடால் அடிப்பவய்ங்களே பற்றி ஒன்றும் சொல்லவில்லையே

1827-ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 99.24 சதவீதம். சிங்களவர்கள் வெறும் 0.53 சதவீதம்.

பிறகு 81-ல் தமிழர்கள் 74.61-ஆகக் குறைக்கப்பட்டார்கள்.

2011-ல் நிலைமை தலைகீழ்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களைச் சேர்ந்து வெறும் 34 சதவீதம் பேர்தான் இப்போது இருக்கிறார்கள். இதில், இஸ்லாமியர்கள், தனி ஈழத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை.

மொத்தத்தில், தமிழர் நிலத்தில் உள்ள 9 மாவட்டங்களையும் சேர்த்து தமிழ் மக்களின் எண்ணிக்கை 50 அல்லது அதற்கும் குறைவான சதவிகிதம் என்கிற அளவில்தான் உள்ளது.

எனவே, வாக்களிப்பில் வெற்றிபெற வேண்டுமானால் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு திரும்பவேண்டும் அல்லது தத்தமது குடியிருப்புகளில் இருந்தே வாக்களிக்கவேண்டும். கெனடாவுல விஜய் படம் பார்த்துகிட்டே வாக்களிக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை.

எனவே, வாக்களிப்பு ஈழம் கிடைக்கப்போகிறது என்றால், விஜய் படத்தை விட்டுவிட்டு, வருவார்களா அவர்கள்?

இதெல்லாம் தெரியாமல், அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல், சும்மா சும்மா கருணாநிதி சாவணும்னு கத்தினா என்ன அர்த்தம்?
கிழக்கு மாகான மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் தனி ஈழத்துக்கு எதிராக, காட்டிக்கொடுத்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும்தான் இப்போதுவரை பல்லக்குத் தூக்குகிறார்களாம்.

முதலில் இந்த 40 சதவீதம்... வேண்டாம். இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

Unknown சொன்னது…

புளியங்கொட்டை என்னங்க தப்பு பண்ணுச்சு, புளியப்பத்தி யாராவது பேசினா கொட்டை எடுக்கப்படும்.

சிராஜ் சொன்னது…

புளிக்கு அல்ரெடி --------- எடுத்தாச்சு சகோ செந்தில்....
(நீங்க பயன்படுத்திய வார்த்தையை நான் பயன்படுத்தினா, என்ன கொன்னே எடுத்துடுவாங்க இஸ்லாமிய பதிவர்கள், அதனால சென்சார்)
ஹா..ஹா..ஹா..

வவ்வால் சொன்னது…

கே.ஆர்.பி,

பெரும்பாலான கருத்துகள் ஒத்துப்போகுது,அதுவும் அக்னி ஏவுகணை அதே...அதே... நாம் இது வரைக்கும் செய்த ஏவுகணைகளை எந்த யுத்தத்திலாவது பயன்ப்படுத்தி இருக்கோமா என்றால் இல்லை பின்ன எதுக்கு அடிக்கடி ஏவுகணை சோதனை,புதிய ஏவுகணை தயாரிப்பு , ஒரு சோளக்கொள்ளை பொம்மை அளவுக்கு கூட ஏவுகணைகள் நமக்கு பயன் அளிக்கவில்லை.

இன்றைய உலக அரசியலில் எல்லாமே இராஜங்க ரீதியான பேச்சு வார்த்தைகள் மூலமே சாத்தியமாகிறது ஆயுதங்களை கொண்டு அல்ல. நாம் என்ன அமெரிக்கா போல உலக போலீஸ் ஆஹ் நிறைய ஆயுதங்களை குவித்து மிரட்ட.

அப்படி ஆயுதங்கள் இருக்குன்னு காட்டினால் தான் பயப்படுவாங்க என்றால் சாபு சிரில் ,தோட்டா தரணி போல திறமையான கலை இயக்குநர்களை கொண்டு டம்மியாக நிறைய ஏவுகணைகள் செய்து ஷோ காட்டிக்கலாம் ,எப்படியும் ஏவுகணைகளை பயன்ப்படுத்தப்போவதில்லை,அப்புறம் எதுக்கு நிஜ ஏவுகணை செய்து காசை வீணாக்க வேண்டும் :-))

குடியரசு தினம்,சுதந்திர தினங்களின் போது ஊர்வலம் போவதை தவிர ஏவுகணைகளுக்கு இந்தியாவில் என்ன வேலை இருக்கு?அதுக்கு டம்மி ஏவுகணையே போதும் :-))

இதை எல்லாம் சொன்னா நம்மை தேசவிரோதிப்போலவே பார்க்கும் மக்கள் :-))
------
சச்சின் அன்பளிப்பா கிடைச்ச காருக்கே வரிக்கட்ட மாட்டேன்னு அடம்ப்பிடிச்சவர், இனிமே எம்.பி பதவிய வச்சு அவரை நல்லா பார்த்துப்பார் :-))
-----
கலைஞர் விடுமுறைக்கால பொழுதுப்போக்கு திட்டங்கள் என சிலது வைத்திருக்கிறார் ,எப்போ எல்லாம் அவருக்கு ஓய்வு கொடுக்கிறாங்களோ அப்போ எல்லாம் ஈழ முரசுக்கொட்டுவார், பாவம் அவர் தான் ஓய்வறியா சூரியன் ஆச்சே அவர போய் ஓய்வா உட்கார சொன்னா எப்படி ரொம்ப கஷ்டமா இருக்கும்ல அதான் அறிக்கை விளையாட்டு இதுல இலவச இணைப்பாக அவரது அல்லக்கைஸ் அடிக்கிற கூத்து தான் கொடுங்கூத்து , புளியங்கொம்பு புதுசா வாங்கின சொம்புனு ஓவரா பினாத்துறாங்க.

கலைஞருக்கு வாய்த்த அடிமைகள் திறமையானவர்கள் என்ன வாய் தான் காது வரைக்கும் கிழிகிறது :-))

இலங்கைக்கு சென்று திரும்பிய குழுவில் இருந்த காங்கிரஸ் எம்பி.விருதுநகர் மாணிக் தாகூர் , ராச பக்சே போட்ட ஓசி பிரியாணியை சாப்பிட்டுவிட்டு விசுவாசத்துடன் , ஈழப்பிரச்சினை தீராமல் இருப்பதற்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள்னு பேட்டிக்கொடுத்து இருக்கார், எல்லாம் ஒரு முடிவோட இருக்கிறாப்போல தெரியுது,

காங் எம்பியின் விஷமப்பேட்டி
-------
மேலும் மின்வெட்டு குறைவதையும் அதற்கான காரணங்களையும் இப்பதிவில் காணலாம்

குறையும் மின்வெட்டு
------

அஞ்சா சிங்கம் சொன்னது…

தேவை படும்போது சேலையை பார்த்துகொண்டிருன்தவன் . செத்த பிறகு சிரைக்க வந்தானாம்..

இறுதி போர் நடக்கும் பொது அந்த மூன்று நாள் புளியமரம் தில்லியில்தான் இருந்தது ...
என்ன கொடுமை என்றால் தன் புதல்வர்களுக்கு இந்த இந்த இலாக்காக்கள் வேண்டும் என்று கேட்க சக்கர நாற்காலியில் .
சுற்றிகொண்டிருதது ........ இதுல காமடி வேற புளியமரத்துக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று நமக்கு தெரியும் .தீ குளிப்பாராம்லே .....ஐயோ ஐயோ ...
இவ்வளவு பண்ணியும் மண்டைல இருக்குற கொண்டைய மறந்துட்டாரே ........
இப்போது ஜனாதிபதி தேர்தல் வருது . பேசாமல் டெண்டுல்கருக்கு அந்த பதவியை குடுத்து விடலாமே ..

MARI The Great சொன்னது…

யோசிக்க வேண்டிய விஷயங்கள் ..!

ராஜ நடராஜன் சொன்னது…

//எப்படியும் ஏவுகணைகளை பயன்ப்படுத்தப்போவதில்லை,அப்புறம் எதுக்கு நிஜ ஏவுகணை செய்து காசை வீணாக்க வேண்டும் :-))//

வவ்வால்!இதையெல்லாம் இப்ப யோசிச்சு என்ன பிரயோசனம்.சீனாக்காரன் படையெடுத்தப்போ,பங்களாதேசை பிரிக்காதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்.குளிருல சியாச்சின்ல விரைச்சு செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற மனுசங்ககிட்ட பேச்சைப் பாரு பேச்சை:)

ராஜ நடராஜன் சொன்னது…

சகோ.சிராஜ்!நலமா இருக்கீங்களா?

அடிச்சு ஆடுற மாதிரி இருக்குது:)

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வெளிநாட்டுல விசயோட படம் பார்த்தாலும் காரியத்துல கண்ணா இருக்குற மாதிரிதான் தெரியுது.எதுக்கும் ஐ.நாக்காரன் என்னதான் சொல்றான்னு பார்த்திடலாமே!

இன்னும் இண்டர்வெல்லே முடியல.அதுக்குள்ள படம் முடிஞ்சிருச்சுன்னு ஓடுறீங்களே:)

ராஜ நடராஜன் சொன்னது…

//கலைஞருக்கு வாய்த்த அடிமைகள் திறமையானவர்கள் என்ன வாய் தான் காது வரைக்கும் கிழிகிறது :-))//

ஏன்?சோனியாவுக்கு வாய்த்த அடிமைகளே திறமையானவர்களாக இருக்கும் போது கலைஞருக்கு இருக்க கூடாதா என்ன?
காது வரை கிழிந்தாலும் பேசிக் களைக்காத வாய்:)

ராஜ நடராஜன் சொன்னது…

இனிமேல் கலைஞரை நிரந்தர எதிர்க்கட்சியாக வைத்திருப்பதே தமிழகத்திற்கு நன்மை பயக்கும்.

வவ்வால் சொன்னது…

//வவ்வால்!இதையெல்லாம் இப்ப யோசிச்சு என்ன பிரயோசனம்.சீனாக்காரன் படையெடுத்தப்போ,பங்களாதேசை பிரிக்காதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்.குளிருல சியாச்சின்ல விரைச்சு செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற மனுசங்ககிட்ட பேச்சைப் பாரு பேச்சை:)//

என்ன கலாய்ச்சுட்டாராம் ராஜ நடை :-))

சீனா, பாகிஸ்தான் போரில் எப்போதும் ஏவுகணைகளை பயன்ப்படுத்தியதே இல்லை இந்தியா(பயன்படுத்தவும் முடியாது)

சும்மா டுப்பாக்கி, பீரங்க்கினு சுட்டுக்கிறதோட சரி ... முதலில் பீரங்கிக்கு குண்டு வாங்கிப்போடுங்கய்யா ...குண்டு தீந்து ஆறு மாசம் ஆச்சுன்னு ராணுவ தளபதியே பொலம்புறார்... வெத்து பீராங்கி வச்சு சுட்டா காத்து தேன் வரும், அதை விட்டுப்புட்டு ஏவுகணைய விடுறாங்களாம் :-))

அப்படியே எவனாவது சண்டைக்கு வந்தா "தமிழின கட்டுமரக்காரர் மஞ்சள் துண்டு சாணக்கியர் கலிஞர்" பீச்சுல ஹால்ஃப் டே உண்ணாவிரதம் இருந்து போரை முடிச்சு வச்சுடுவார் பின்ன என்னாத்துக்கு தேவை இல்லாம ஏவுகணை :-))
-----
என்னாது சோனியா அன்னைக்கு வாய்த்த அடிமைகளும் திறமையானவர்களா சொல்லவேயில்லை... காமாசாஸ்திரம் ஒரு திறமை எனக்கொண்டால் அபிஷேக் சிங்க்வி வேண்டுமானால் திறமையானவர்னு சொல்லிக்கலாம் மற்றபடி எல்லாம் சோளக்கொள்ளை பொம்மை அளவுக்கு கூட தேறாதவர்கள் ;-))
----
கே.ஆர்.பி வந்து இங்கே என்ன சத்தம் போய் அவங்க அவங்க வீட்டுல வச்சுக்கோங்க இதெல்லாம்னு தொறத்தி விடுறதுக்கு முன்ன நான் நடைய கட்டுறேன் :-))