இம்முறை மலேசியாவில் பிசினஸ் வாய்ப்பினை தேடலாம் என முடிவு செய்து இப்பயணத்துக்கு முன்பாக ஒரு முறை அதற்கான வாய்ப்புகளை சென்று கண்டறிந்து அதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு வந்தேன். அதனை இரண்டு மாதங்களுக்குப் பின்தான் கிடைக்கப்பெற்றேன். என்னுடைய நண்பர் மூலமாக ( இவர் ஒரு டிராவல் ஏஜெண்ட்) சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்தில் அதற்கான விசாவை ஸ்டம்பிங் செய்ய கொடுத்திருந்தேன். ஆனால் விசா காப்பி ஒரிஜினல்தான் வேணும் இல்லையெனில் ரூ.3500 ஆகும் என்றார். திரும்பவும் மலேசியாவுக்கு பேசினால் அங்குள்ள நண்பர் அண்ணே ஒரிஜினல் காப்பி அனுப்பினால் வந்து சேர ஒரு வாரம் ஆகும் பரவாயில்லையா என்றார். எதற்கும் ஒரு விசாரனையை செய்து பார்க்கலாம் என நானே நேரடியாக மலேசிய எம்பசிக்கு போனேன். அங்கு போனால் வெறும் ரூ.800 க்கு டி,டி எடுத்து அப்ளை செய்யுங்கள் ஒரிஜினல் காப்பி தேவையில்லை என்று சொன்னார்கள். மறுநாள் அப்துல்லா அண்ணனின் சகோதரி மகள் திருமணத்துக்கு அதிகாலையே கிளம்பத் திட்டமிட்டதால் (அதிலும் பாண்டிச்சேரி வழியாகப் போவதாக திட்டம்) வேறு யாரையாவது அப்ளை செய்ய சொல்லலாமா என அங்குள்ள அதிகாரியிடம் கேட்டேன். ஒன்னும் பிரச்சினையில்லை என்றார். நண்பரிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு கேபிள்,மற்றும் ஸ்பான்சர் ஓ.ஆர்.பி ராஜாவுடன் வண்டி கட்டிவிட்டேன். ஆனால் விதி வலியது. அதற்கடுத்து ஒரு வாரம் கழித்துதான் பாஸ்போர்ட் கிடைத்தது. முக்கியமாக அதற்கான காரனங்களை இங்கு எழுத முடியாது!!!
வரிசையாக மூன்று முறை டிக்கெட்டை கேன்சல் செய்தாகிவிட்டது. கைவசம் வைத்திருந்த பணம் கரைந்துவிட்டது. டிக்கெட் திடீரென எக்கச்சக்கமாக விலையேறிவிட வழக்கம்போல் சிங்கை நண்பன் பணம் அனுப்பி பிரச்சினையை தீர்த்தான் என்றாலும் வீட்டு செலவுக்கு கொஞ்சமாவது பணம் கொடுக்க வேண்டுமே என யோசித்து இன்னும் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்குமா என ஆராய ஸ்ரீ லங்கன் விமானத்தில் வாய்ப்பு இருக்கு ஆனா மறுநாள்தான் போய்ச்சேருவீங்கன்னு நண்பன் சொன்னான். இறுதிக்கட்ட ஈழப்போருக்குப் பின் அவ்விமானத்தில் பயணம் செய்வதில்லை என்றபோதிலும் கையிருப்பு லட்சியத்தை கைவிட வைத்தது. இதற்கிடையில் நான் தற்காலிகமாக பதிவுலகத்தை விட்டு தற்காலிகமாக நீங்கியது தனிக்கதை.
ஏப்ரல் 13 அன்று மாலை 4.50 க்கு சென்னை டு கொழும்பு மாலை ஆறு மணிக்கு இறங்கினேன். அடுத்த விமானம் நள்ளிரவுதான் எனவே ட்ரான்சிஸ்ட் லாஞ்சில் ஓரமாக ஒரு இருக்கையை தேடி ஒரு புத்தகத்தை தொடர்ந்தேன். இரவு 9 மணிக்கு டின்னர் வவுச்சர் தந்தனர். ஒரு சாண்ட்விச் மற்றும் ஒரு கேக்குடன் ஸ்ப்ரைட். அப்போதுதான் எனது விமானத்தின் சக பயணிகள் சிலரை சந்தித்தேன். அவர்களிடம் அளவளாவியதில் நேரம் விரைவாக கடந்தது. அவை அனைத்தும் பத்து பதிவுகள் எழுதலாம் அவ்வளவு சுவாரஸ்யம் ஆனால் மற்றவர்களின் அந்தரங்கம் கருதி அதனை வெளியிட முடியாது.
ஆனால் அங்கு ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது துபாயில் இருந்து வந்த கேரள பயணி ஒருவர் போதையில் தன் சென்னை விமானத்தை தவற விட்டுவிட்டார். அவர் அதிகாரிகளை மிக மோசமாக அலைகழித்தார். அங்குள்ளோர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் மட்டையாகிவிட்டார். அதிகாரிகள் அவரது உடமைகளை எடுத்து சென்றுவிட்டனர். நாங்கள் கிளம்பும் நேரம் அவர் போதை தெளிந்து உடமைகளை தேடினார். அதிகாரிகள் கைவிரித்தனர் யாரும் அவருக்கு உதவவில்லை. ஒரு மலையாளிக்கும், சிங்களர்களுக்கும் நடந்த அந்த விளையாட்டை அதற்கு மேல் ரசிக்க முடியவில்லை.
அங்கிருந்து தாமதமாக கிளம்பிய விமானம் மறுநாள் காலை 7மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தது. ஒரு மணி நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூர் வந்தடைந்தது. இமிக்ரேசனில் நீண்ட வரிசை. 11 மணிக்கு சுமாராக வெளியே வந்து லக்கேஜை தேடினால் கிடைக்கவில்லை. அதிகரினியின்(பெண்) உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு பேரூந்து நிறுத்தம் வந்தால் பந்திங் பஸ்சுக்கு இன்னும் அரைமணி நேரம் என்றார்கள். விமானத்தின் மட்டமான உணவு பசியைக் கிளப்பியது. ஆனால் நிலையத்தில் இருந்த உணவகம் மூடிகிடந்தது.
பந்திங் பஸ் அரை மணித்தியாலங்கள் கழித்து வந்து இன்னொரு பத்து நிமிடம் காத்திருந்து புறப்பட்டது. எனது லக்கேஜை சரியாக வைக்க முடியாமல் அவதிப்பட்டேன். ஒரு தமிழ் பேரிளம்பெண் இடிக்காமல் வைய்யுங்கண்ணே! என்றார். பந்திங் வருவதற்குள் ஒரு தூக்கம் முடிந்தது. பந்திங் பேரூந்து நிலையத்திலும் உணவு கிடைக்கவில்லை பிசாங் கொரிங் ( வாழைப் பழ வருவல்) வாங்கி சாப்பிட்டுவிட்டு கிள்ளான் பேரூந்தில் தொற்றிக்கொண்டேன். மதியம் 2 மணிக்கு கிள்ளான் வந்தேன். அங்கிருந்து தம்பியின் வீட்டிற்கு கூட்டிப்போக நண்பர் வெங்கட் தனது வாகனத்துடன் தயாராக இருந்தார். கிராமத்தின் உள்ளே நுழையும்போது ஒரு பக்க சாலையை அடைத்தவாறு நூறுக்கும் மேல் மோட்டார் சைக்கிள்களிலும், ஐம்பதுக்கும் மேல் கார்களும் அணிவகுத்துச் சென்றன. மோட்டார் சைக்கிள்கள் அனைத்திலும் இரண்டு நபர்கள். யாரும் ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் அமர்ந்திருந்தவர்கள் கைகளில் ஒரு மஞ்சள் கொடி அதில் 80 எனப் பெரிதாக எழுதியிருந்தது. அதன் நடுவில் ஒரு அலங்கார வண்டி. கடைசியாக ஒரு போலீஸ் கார். நண்பர் வெங்கட் மற்றும் எதிர்வரிசை வாகனம் அனைத்தும் ஓரங்கட்டிக் கொண்டன. வெங்கட்டிடம் விசாரித்தால் ”அது ஒரு தமிழ் டானின் மரண ஊர்வலம். அவர்களின் அடையாள எண் கோசம் எட்டு(08)” என்றார். ”அண்ணே அவங்க 80 ந்னுதானே எழுதிருக்காங்க?” அவரோ “அது நாம் பாக்கும்போதுதான் 80, அவங்க சைடுலேர்ந்து பாத்தா 08” என்றார். நான் ஒரு மாதிரி ஜெர்க் ஆனதும் “அண்ணே இங்க இப்படித்தான்” என்றார். இன்னொரு வார்த்தையும் சொன்னார் “ அண்ணே நீங்க இப்ப தங்கப் போறதே இவங்க ஏரியாவுலதான்” என்றார். எனக்கு வயிற்றில் பசி அமிலம் கூடியது.
அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து பேரூந்தில் கிள்ளானில் இருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். இன்னும் இரண்டு நிறுத்தம் கடந்தால் இறங்கனும் என்பதற்காக படிக்கட்டு அருகே நின்றுகொண்டிருந்தேன். என்மேல் எரிச்சலான ஒரு மலாய் இளைஞன் “அபாங் மானா மாவ் துரூன்?” ( அண்ணே நீ எங்க இறங்கனும்?) என்றான். நான் “தாமான் செந்தோசா” என்றேன். அவன் உடனே பதட்டமாகி “சாரி அபாங்!!!!” என அந்தக் கூட்டத்திலும் இரண்டடி தள்ளி நின்றான். நான் இறங்கும் வரை அவன் கண்கள் என்னை பயத்துடன் பார்த்தன. வீட்டிற்கு வந்து தம்பியிடம் ”என்னடா இப்படி ஒரு எடத்துல வீடு எடுத்துருக்கே?” என்றால். “அண்ணே இங்க நமக்கு எதுவும் பிரச்சினை இல்லை, பாதுகாப்பு அதிகம்!!! “ என்றான். அதன்பிறகு ஒரு மாதம் ஆகியும் அப்பகுதிக்கு இணைய இணைப்பு வாங்க முடியவில்லை. அதனால் அதனையே காரனமாக்கி மீண்டும் டவுன் பக்கம் வீடு பார்க்க சொல்லிவிட்டேன். வியாபாரம் செய்ய வந்தால் வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுமோ என கவலையாக இருக்கிறது!.
11 கருத்துகள்:
நீண்ட நாள் கழித்து உங்கள் அனுபவக் கட்டுரை மகிழ்ச்சி. மலேசியாவுல எப்படிண்ணே. எல்லாம் சவுகரியமாக இருக்கிறதா? சென்ற வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு திரும்புங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். அதுபோல இந்த மலேசிய பயணத்தையும் தொடராக வெளியிட்டு வரும் ஆண்டு புத்தக திருவிழாவில் நாங்கள் புத்தகமாக பார்க்க வேண்டும்.
என்ன தான் இருந்தாலும் நீங்கள் எழுதும் பயணக்கட்டுரையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது. உங்களது பணம் புத்தகத்திலும் அப்படித்தான். இந்த மலேசிய கட்டுரையும் அப்படித்தான் இருக்கிறது.
தல ஆவலுடன் காத்திருக்கேன்....
தொடர் கட்டுரைக்கு.....
@ ஆரூர் மூனா செந்தில் கூறியது...////
வரும்போது தருவார்யா....காத்திருக்கவும்....
இந்த படம் எல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க...?????????
தெரிஞ்சி கேக்கலை...புரியாம கேக்குறேன்....
:-))))))))
நன்றி செந்தில்,
நிறைய சம்பவங்கள் இருக்கின்றன, நேரம் கிடைக்குமா என தெரியவில்லை!
ஒரு சுவாரஸ்யமான புத்தகத்துக்கு அவைகள் உதவும் என்பதால் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்!!
நக்கீரன் இந்தப்படமெல்லாம் அமெரிக்காவுல இருந்து ஒருத்தர் அனுப்பிவைக்கிறார்..
#gapingvoid art...
ரொம்ப நாள் ஆச்சு அண்ணே இந்த பக்கம் வந்து....
பயணக்கட்டுரை வழக்கம் போல்...
பயணக்கட்டுரை... கொஞ்சம் தெளிஞ்ச பின்ன அடிக்க கூடாதா??
//NAAI-NAKKS கூறியது...
இந்த படம் எல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க...?????????
தெரிஞ்சி கேக்கலை...புரியாம கேக்குறேன்....//
தெரிஞ்சா கேக்க முடியாது. புரியலன்னாதான் கேக்க முடியும். இல்ல தெரியாமத்தான் கேக்கறேன். இதெல்லாம் தெரிஞ்சே கமன்ட் போடறீங்களா சித்தப்பு??
//அதுபோல இந்த மலேசிய பயணத்தையும் தொடராக வெளியிட்டு வரும் ஆண்டு புத்தக திருவிழாவில் நாங்கள் புத்தகமாக பார்க்க வேண்டும்.//
பயணம் செல்ல எண்ணம் உருவான விதம் - அதையும் புத்தகமா போடுங்கண்ணே!!
hi
i know senthur in ipoh road. it is correct in your words. i was stayed in 1979 nearby.
கருத்துரையிடுக