12 நவ., 2012

காத்திருப்பு...

நகரமெங்கும் பரவியிருக்கும்
வெயிலின் உச்சம்
வியர்வையாய் பெருக்கெடுக்க,
சாலையின் ஓரம்
கால்களற்ற ஒருவன்
பிச்சைக்கரங்களால்
பொருளீட்ட,
யாரோ
தவறவிட்ட பணத்தை
நான்
கவனிப்பதை பார்த்ததும்
ஒருவன்
யோசித்தபடி எடுக்க,
மணிக்கட்டு பார்த்து
பூத்து போன கண்களில்
உக்கிரமான காற்று
புழுதியை வீசிச் சென்ற
தருணத்தில்
தூரத்தில் வருகிறாய்
நீ...

உன் தாமதத்துக்கான
காரணத்தை யோசித்தவாறே...

6 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்... அழகு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தீபாவளி நால்வாழ்த்துக்கள்... தலைவரே...

அஜீம்பாஷா சொன்னது…

wish you a happy deepavali .

rajasundararajan சொன்னது…

ஆ! கோடிட்ட இடங்களை நிரப்புகிற கருக்கல் தீற்றல்கள்! உணர்கிறேன்!

SNR.தேவதாஸ் சொன்னது…

எனது இதயங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான அழகான கவிதை.