12 செப்., 2012

நகரும் நதி...

நாம்
ஒருவரை
ஒருவர்
விழுங்கிக் கொண்டிருந்தபோது
நீர்ச்சுழலில் இழுக்கப்பட்ட
சருகென
சட்டென
உச்சம் தொட்ட
வினாடியில்
களைத்து சுருங்கிய
என்னை
இருக்கத்தை விடாத
உன் அழுத்தும் காமம்
என் உடலில் பரவும்
வெப்ப ஆவி
அதீதமாய் சூடேற்ற
மீண்டும்
உன் உதடுகளில் இருந்து
துவங்குகிறேன்
சிரிக்கும் உனது கண்கள்
கிறங்கி மூட
நீர்ச் சுழல் தள்ளிய
சருகென
மிதக்கத் துவங்குகிறோம்
இருவரும்...

3 கருத்துகள்:

yuvanika சொன்னது…

என்ன பதிவுலகில் குழப்ப கவிதைகள் வாரமா.
தயவு நீங்க என்ன சொல்ல வாரிங்கனு கொஞ்சம் விவரமா சொல்லிடுங்களேன், புண்ணியமா போய்டும்.

அ. வேல்முருகன் சொன்னது…

காவேரியானாலும்
காமமானாலும்
அப்படிதான் போலும்

Unknown சொன்னது…

DEar Senthil, Please try to write mote posts about malaysia. I am waiting for that.

Regards,
Raj Kumar
www.comicsda.com