7 செப்., 2012

தினசரிகளை கழிக்கும் நாட்காட்டி...

ஊருல இருந்தாக்க இந்நேரம் கேபிள் எங்கய்யா இருக்கேன்னு ஒரு போனை போட்டிருப்பாரு. இங்க மலேசியால இப்ப நேரம் ம்ணி 11.30 PM. ஊரில 9.00 PM தான். ரெண்டரை மணிநேரம் வித்தியாசம். மூனே முக்கால் மணி நேரம் பறந்தா நம்ம ஊரை அடஞ்சிடலாம். அதாவது ஊருல இரவு பத்து மணிக்கு விமானத்த புடிக்கும்போது இங்க மலேசியாலயோ, சிங்கப்பூரிலயோ மறுநாள் காலை 4.15 க்குத்தான் தரையிறங்குவோம். ஆனா மலேசியால இருந்து இரவு 8.00 மணிக்கு ஏறினா சென்னையில் இரவு 9.30 மணிக்கே இறங்கிடலாம். வெறும் நாலு மணி நேரப் பயணத்தில் குடும்பத்தைப் பார்த்துடலாம். டிக்கெட்டும் முன் கூட்டியே எடுத்தா போக வர அதிகபட்ச்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் ஆகும். ஆனா மூனு மாசமா இந்த வாரம், அடுத்த வாரன்னு பசங்க கிட்ட பொய் சொல்றேன், அவனுங்களும் இப்ப கேக்குறத விட்டுட்டானுக. எங்க விட்டேன் கேபிள் போன்ல கூப்பிட்டு இருப்பாருன்னு சொன்னேன் இல்லையா?.

ஊரில் இருக்கும்போது கேபிள் இந்த நேரத்துக்குத்தான் கூப்பிடுவாரு. அப்படியே என் வீட்டுக்கு வந்து என்னை பிக்கப் பன்னுவாரு. வீட்டம்மா மறக்காம சாவிய எடுத்துட்டு போங்கன்னு ஞாபகப்படுத்தும். காரனம் இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்புவோம்ன்னு எங்களுக்கே தெரியாது. கெளம்பினோன்னா கேபிள் பைக்கு இப்ப நானோ அதுவாவே கெழமைக்கு தக்கபடி சினி சிட்டிலயோ, ஸ்ரீ தேவிலயோ (கடைசி ரெண்டு மாசம் அங்க போகல) லஷ்மன் ஸ்ருதிக்கு எதிர்ல இருக்குற பார்லயோ, அல்லது எதிர்கால இயக்குனர்கள் வீட்டுக்கோ கூட்டிட்டுப் போகும். அதுக்கப்புறம் பேச்சு பேச்சு பேச்சுதான் குடி என்பது எப்போதும் அளவாகத்தான் இருக்கும். நான் மலேசியா வருவதற்கு முன்னரான கடைசி மாசம் அது கூட இல்ல. அப்புறம் புறப்பட்டு எங்காவது சாப்பிடப் போவோம். அதன்பிறகு ரோட்டோரம்  எதாவது ஒரு டாபிக் ஓடும். வீட்டுக்கு வரும்போது. மணி அதிகாலை 2 க்கு மேல்தான் இருக்கும். சமயங்களில் 12.30 க்கு வருவோம். இந்தப் படம்தான் என்றில்லாமல் சகல மொழிப் படங்களையும் பார்ப்போம். இப்ப தலைவர் நான் இல்லாமல் சிரமப்படுகிறார்.

இங்க மலேசியால நான் இருக்கிற இடத்துல இருந்து   டவுன் 4 கி.மீ என்பதால். நண்பர் வெங்கட் காலையில் பேப்பர் போடும் வேலைகளை முடித்துவிட்டு எனக்காக வருவார். அவர் வந்தபின் தினசரி ஒரு இண்டஸ்ட்ரியல் ஏரியா அல்லது எனக்கான சில சந்திப்புகளுக்காக அவர் பைக்கில் ஊர் சுற்றுவோம். அப்படியே மதிய சாப்பாடு ஒரு முழு சாப்பாடும் கூடுதலாக ஒரு வெள்ளிக்கு சோறும் பார்சல் வாங்கி வந்து இருவரும் சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு அவரின் கதைகளைக் கேட்பேன்.

இந்த வெங்கட் ஒரு சுவாரஸ்யமான மனிதர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அதீத ஆர்வம் அவரை உலகின் புரதான தொழிலில் இறங்கச் செய்துவிட்டது. அவர் ஊரில் இருந்து இரண்டு பெண்களை அழைத்து வந்து தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று ஒரு மாததிற்குள்ளாகவே இன்னொரு ஆளை செட் பண்ணிட்டு இவர் பாஸ்போர்ட்டையும் தூக்கிட்டு ஓடிருச்சு. இன்னொரு பொண்ணு புதுசு என்பதால் இவரிடமே இருந்தது. ஆனால் அவர்களை இங்கு அழைக்க மட்டுமே ஒன்றரை லட்சம் செலவு செய்திருக்கிறார். சென்ற வாரம் இன்னொரு பெண்ணை ஊருக்கு அனுப்பிவிட்டு இந்தத் தொழிலால் 30 ஆயிரம் நஷ்டமாச்சு அண்ணே என வருத்தப்பட்டார். சுவாரஸ்யமான கதைகளுக்கு சொந்தக்காரர். இவர் கதைகளை ஒரு தொடராக எழுதலாம். ஆனால் தம்பி ரமேஷ் தான்தான் எழுதுவேன் என அவரிடம் ரைட்ஸ் வாங்கிவிட்டதால் அவனே எழுதக் கூடும். அதனால் அவரைப் பற்றி நான் அதிகம் சொல்ல முடியாது. ஆனாலும் மலேசிய சூழலை பயண்படுத்திக் கொண்டு நேர்மையாக சம்பாதிக்கும் உத்திகளை அவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். சமீபமாக நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.

மலேசிய பதிவர் சந்திப்பு நடந்த நாள்களுக்கு முன்னர் ஒரு வாரமும் அதன் பின்னரும் மது தேவைப்படவில்லை. இணையம் வந்துவிட்டதால் இடைவிடாத வியாபாரத் தேடல் என்னை ஆட்கொண்டுவிட்டது. இங்கு என் பக்கத்து வீட்டில் சில மலேசிய நண்பர்கள் குடியிருந்தனர். அவர்கள் மலேசியாவின் வேறு மாநிலத்தவர்கள். பொதுவாக இரவு நேரங்களில் வீட்டில் இருக்க மாட்டார்கள். சென்ற மாதத்தில் ஒரு நாள் பகலில் என் வீட்டு கதவைத் தட்டினார் ஒருவர். “அண்ணே உங்க போன் கொஞ்சம் கொடுங்க, என் போனில் பேட்டரி தீந்துடுச்சு” என்றார். எனது மொபைலில் முயற்சித்தபோது அவர் நண்பரின் மொபைல் ‘not reachable, ஆக இருந்தது. அவர் முகம் மிகவும்  வாடியிருப்பதை பார்த்ததும். “அண்ணே ஏதாவது பிரச்சனையா?” என்றேன். அவர் “ ஆமாண்ணே எனக்கு கேஸ் ச்ட்ரிக் இருக்கு காலையில் இருந்து கையில் காசு இல்லாததால் எதுவும் சாப்பிடலை, அதான் கூட்டளிய கூப்பிட்டேன்” என்றார். உடனடியாக பத்து வெள்ளிகளை கொடுத்து போய் சாப்பிட்டு வாங்க என்றேன். அதை தயக்கமாக வாங்கிக் கொண்டு “அண்ணே இந்த உதவிய நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். பின்பு பதினைந்து நாளில் வீட்டை காலி செய்தனர். அப்போது அவர் வந்து என்னிடம் ஒரு போனைக் கொடுத்தார். நான் “எதுக்கு அண்ணே” என்றேன். அவர் “அன்னைக்கு எனக்கு பத்து வெள்ளி கொடுத்தீங்களே அதுக்காகத்தான்” என்றார். அது விலையுள்ள போன் என்பதால் நான் மறுத்து விட்டேன். வேனுன்னா அந்த பத்து வெள்ளிய மட்டும் திருப்பிக் கொடுங்க என்றதும், அவர் இல்லண்ணே இது வாங்கிக்கங்க இல்லன்னா இன்னொரு நாள் பெரிதாக உங்களுக்கு ஏதாவது செய்வேன் என சொல்லிவிட்டு போனை எடுத்துக்கொண்டு விடை பெற்றார்.

ஒரு பத்து வெள்ளி என்பதைவிட பசி போக்கிய ஒருவனுக்கு திரும்ப ஏதாவது செய்யனுமே எனும் அவரின் செண்டிமெண்ட்தான் மலேசியத் தமிழர்களுக்குள் இருக்கும் ஈரத்தை எனக்கு உணர்த்தியது. 

9 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

ஒரு பத்து வெள்ளி என்பதைவிட பசி போக்கிய ஒருவனுக்கு திரும்ப ஏதாவது செய்யனுமே எனும் அவரின் செண்டிமெண்ட்தான் மலேசியத் தமிழர்களுக்குள் இருக்கும் ஈரத்தை எனக்கு உணர்த்தியது.

///

mmm

iniyavan சொன்னது…

தலைவரே,

நான் இல்லாமல் மலேசிய பதிவர் மாநாட்டை நடத்தியது முதல் குற்றம்.

தினமும் என்னுடன் பேசுவதை கட்டுரையில் குறிப்பிடாதது அடுத்த குற்றம்.

Unknown சொன்னது…

//நான் இல்லாமல் மலேசிய பதிவர் மாநாட்டை நடத்தியது முதல் குற்றம்.

தினமும் என்னுடன் பேசுவதை கட்டுரையில் குறிப்பிடாதது அடுத்த குற்றம்.//

இந்த இரண்டு குற்றத்துக்கும் சர்வதேச மன்னிப்பு தினமான இன்றைக்கு எனக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :))

CS. Mohan Kumar சொன்னது…

எங்கே இருந்தாலும் பாசக்கார பய புள்ளைன்னு நிரூபிச்சுடுறார் நம்ம KRP .

கேபிள் இப்போ படு பிசி. பட வேலைகளில் மூழ்கிட்டாறு

ராஜன் சொன்னது…

Krp sir ., what type visa u holding in malaysia

rajamelaiyur சொன்னது…

//
மலேசியத் தமிழர்களுக்குள் இருக்கும் ஈரத்தை எனக்கு உணர்த்தியது.
//

ஆனால் எனக்கு போனாலும் தமிழனுக்கு யாரும் இறக்கம் காட்ட மறுக்கின்றனர்

rajamelaiyur சொன்னது…

இன்று
Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..

Unknown சொன்னது…

ராஜன்:

நான் professional visit pass ல் இருக்கிறேன்..

சுரேகா.. சொன்னது…

ரசனையான வாழ்க்கை..!!

கலக்குங்க! நல்ல மனிதர்களுக்கு ..எப்போதும் நல்லவர்களே சுற்றிலும் அமைவார்கள். நீங்கள் நல்லவர்..!

பேசி ரொம்ப நாளாச்சே தலைவரே..!