8 செப்., 2012

கிளிகள் அமரும் கிளைகள்...

நீ யாரோ
நானும் யாரோ...

நீ
எனக்கு  முதல் பெண் அல்ல,
நானும்
உனக்கு  முதல் ஆணாக
இல்லாமல் இருக்கலாம்..


நம்மை
சந்தர்ப்பங்கள்
சந்திக்க வைத்தன
பின்
நீயும்,
நானும்
பல
சந்திப்புகளை உருவாக்கினோம்..

நீ
எனக்காகவும்,
நான்
உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிகொண்டது
மாதிரி
நடித்தோம்..

நீ
என்னை மிகவும் நேசித்தாய்
நானும்
அப்படிதான்.,
உயிருக்கு உயிராக
என்று
வைத்துக் கொள்ளலாம்..

நீ
பேச,
சாப்பிட,
உடுத்த,
பரிசளிக்க
என்
பணம் கரைந்தது..

பின்
சந்திப்புகளில்
நாம்
நேரம் தவறினோம்
நீ
சில காரணங்களை சொன்னாய்
நானும் அவ்வாறே,
நான் பொய்யன் என்றாய்
அடிக்கடி கோபப்பட்டாய்..
நான்
விலகிச்செல்ல ஆரம்பித்தேன்..

நீ
யாரையோ
திருமணம் செய்துகொண்டாய்,
நானும்
ஒருத்தியுடன் வாழ்கிறேன்..

இப்போது..

நீ யாரோ எனக்கு
நானும்
அப்படியாகத்தான்
இருப்பேன் உனக்கு..

இப்படியாக
நீயும்
நானும்
இன்னும் பலரும்..

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நிதர்சனமான உண்மை, படிக்கும் ஒவ்வொருக்கும் அவர்களுடைய கடந்த காலம் நினைவில் வந்து போகும்.

எப்பண்ணே திரும்ப இந்தியா வர்றீங்க.

Unknown சொன்னது…

//எப்பண்ணே திரும்ப இந்தியா வர்றீங்க.//

அடுத்த வாரம் கண்டிப்பா சந்திக்கிறோம் தம்பி:)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஒவ்வொறுவரின் ஆட்டோகிராப்...

அழகிய கவிதையில்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///////
பிளாகர் கே.ஆர்.பி. செந்தில் கூறியது...

//எப்பண்ணே திரும்ப இந்தியா வர்றீங்க.//

அடுத்த வாரம் கண்டிப்பா சந்திக்கிறோம் தம்பி:)
//////////


அப்படி சந்திக்க வருபவர்களுக்கு என்னண்ண தருவீங்க..

அப்புறம் ”மலேசிய அனுபவங்கள்” -ன்னு தலைப்பை போட்டு அனுபவக்கட்டுரை பரிசுன்னு சொல்லக்கூடாது...

Unknown சொன்னது…

//அப்படி சந்திக்க வருபவர்களுக்கு என்னண்ண தருவீங்க..//

நேர்ல சந்திக்கும்போது கொடுக்குறேன் தலைவரே:)

குட்டன்ஜி சொன்னது…

அண்ணே,நல்லாருக்கீங்களா?பழைய நினைவெல்லாம் வருதாக்கும்!

வில்லவன் கோதை சொன்னது…

தொடர்ந்து எழுதும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
வில்லவன் கோதை

வருணன் சொன்னது…

நண்பா, கவிதை அழகு. ஆனால் இக்கவிதைக்கு தங்கள் ஓஷோவின் புகைப்படத்தை ஏன் தேர்ந்தீர்கள் என்பது தான் விளங்கவில்லை!