8 ஏப்., 2013

இன்றும்..நேற்றும்..முந்தைய நாட்களும்...

Photo: KRP Senthil
எடைபோடும்
தராசின் தட்டுகளாய்
அந்தரத்தில்
கீழ் மேலாய்
தினசரி வாழ்க்கை..


விருந்தினர் வராத
நகரத்து வீட்டில்
தொடர்ந்து கத்துகிறது
ஒற்றைக்கால்
காகம்..

வெக்கை இரவுகளில்
குளிர்விக்கும்
மின் வெட்டு முத்தங்கள்
வியர்வை பிசுபிசுப்பில்..

பாதி நிலவு
மொட்டை மாடி
வானத்தில்
நாளைய வாழ்வு
ஒர்
எரி நட்சத்திரமாய்
வீழ்ந்து மடிகிறது..

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நகர வாழ்க்கையின் முகவரி.....
எளிமையான கவிதையில்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

நரக(நகர) யதார்த்தம் சொல்லும்
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3